என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமதி"

    • புதுக்கடை அருகே மறுகண்டான்விளையில் அதிக அளவில் மண் எடுத்ததால் 3 வீடுகள் சேதமடைந்து, ஒரு வீடு இடிந்து விழுந்தது.
    • புதுக்கடை போலீசார் தேங்காப்பட்டணம் பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் புதுக்கடை சுற்று வட்டார பகுதிகளில் அரசு அனுமதியின்றி அதிக அளவில் மண் கடத்துவதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கடை அருகே மறுகண்டான்விளையில் அதிக அளவில் மண் எடுத்ததால் 3 வீடுகள் சேதமடைந்து, ஒரு வீடு இடிந்து விழுந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவ இடத்தை பத்மநாபபுரம் சப்- கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.

    இதையடுத்து மாவட்ட எஸ்.பி. அனுமதியின்றி மண் கடத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். உத்தரவின் பேரில் நேற்று புதுக்கடை போலீசார் தேங்காப்பட்டணம் பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். அப்போது பெரிய பள்ளி தெருவில் எந்த வித அரசு அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாமல் மண் கடத்திய டெம்போ ஒன்றை சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு யூனிட் மண் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. போலீசார் மண் மற்றும் டெம்போவை பறிமுதல் செய்து, டெம்போ ஓட்டுநர் பைங்குளம் பகுதியை சேர்ந்த மனோகரன் (வயது 56) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    • தற்காலிக சந்தை சேறும், சகதியுமாக உள்ளது.
    • காமராஜா் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய இன்று முதல் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் அரண்மனை அருகேயுள்ள காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 17.50 கோடி மதிப்பில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 304 கடைகளும், 170 இரு சக்கர வாகனங்கள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 20 லாரிகள் நிறுத்தவும் இட வசதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக இப்பணி நடைபெற்றதையொட்டி, புதுக்கோட்டை சாலையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. தொடா் மழை காரணமாக தற்காலிக சந்தை முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டதால், காமராஜா் சந்தையைத் திறக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

    இந்நிலையில், காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சாவூா் காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. மழைக்காலமாக இருப்பதால், தற்காலிக சந்தை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால், அங்குள்ள வியாபாரிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, காமராஜா் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய இன்று முதல் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்தச் சந்தையில் வியாபாரம் செய்ய ஏற்கெனவே மாநகராட்சி நிா்வாகத்திடம் அதற்கான முன்வைப்புத் தொகை செலுத்திய வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் முறைப்படி இந்தச் மார்க்கெட்டை காணொலி மூலம் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழுத் தலைவா் மேத்தா, மாநகராட்சி செயற் பொறியாளா் ஜெகதீசன், உதவி பொறியாளா்கள் காா்த்தி, ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • ஊரமைப்பு துறை இயக்குனர் உறுதி
    • ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகள், வணிக வளாகங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரா ட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் சண்முகவேல் ராஜா கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டார்.

    இன்று காலையிலும் ஆய்வுப் பணி நடந்தது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரி களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஏற்கனவே கட்ட ப்பட்ட வீடுகள், வணிக வளாகங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து புதிதாக கட்டப்படும் வீடுகள், வணிக வளாகங்கள் அரசின் விதி முறை களுக்கு உட்பட்டு கட்டினால் மட்டுமே அனுமதி அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டது.

    • சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
    • இந்து அறநிலைத் துறையால் முத்திரை இடப்பட்ட உண்டியல் துணியால் மூடப்பட்டு இருந்தது. அதன் அருகே முத்திரை இடாத 2 குட உண்டியல், 2 டிரம் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.

    நாமக்கல்:

    சேலம் நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள|

    காளிப்பட்டி கந்தசாமி கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருவிழா காலங்களில் ஏராளமான சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். கோவில் நிர்வாகம், செயல் அலுவலர், பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

    இக்கோவிலில் உண்டி யல் வசூலில் முறைகேடு நடப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அதி காரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து நேற்று குமாரபாளையம் சரக இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் அதி காரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது இந்து அறநிலைத் துறையால் முத்திரை இடப்பட்ட உண்டியல் துணியால் மூடப்பட்டு இருந்தது. அதன் அருகே முத்திரை இடாத 2 குட உண்டியல், 2 டிரம் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், 4 உண்டியலுக்கும் முத்திரை இட்டனர். மேலும் அனுமதி இல்லாமல் உண்டியல் வைத்தது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • செம்மண் கடத்தியவர்கள் தப்பி சென்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே நல்லூர் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக நல்லூர் கிராம அலுவலர் செலஸ்டின் ராஜீக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது, அங்கு செம்மண் கடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் செம்மண் கடத்த பயன்படுத்திய டெம்போ மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கமிட்டியினர் நடத்த அனுமதிக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
    • பிற சமுதாயத்தினருக்கு மரியாதை தரவில்லை என்றும் தெரிகிறது.

    மதுரை

    மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு கமிட்டியினருக்கு இடையே பிரச்சினை உருவாகி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோர்ட்டு வரை சென்றுள்ளது.

    இந்த நிலையில் அவனி யாபுரம் அனைத்து சமு தாய கிராம கமிட்டி நிர்வாகிகள் மதுரை வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, அன்புமணி ராமதாஸ் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சினையை ஆராய்ந்து பார்த்ததில் இங்கு 4-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது என்றும், பின்னர் ஒரே ஜல்லிக்கட்டாக நடத்த அரசு உத்தரவிட்ட பின்னர் கோர்ட்டு வழிகாட்டு தலின்படி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது என்றும் தெரியவந்தது.

    இந்த ஜல்லிக்கட்டில் தென்கால் விவசாய கிராம கமிட்டியினர் இருவர் பொருளாதாரம் ஈட்டும் நோக்கத்தில் ஈடுபட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை உறுப்பினராக்கிக் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டுள்ளனர். மேலும் அவர்கள் பிற சமுதாயத்தினருக்கு மரி யாதை தரவில்லை என்றும் தெரிகிறது.

    அவனியாபுரம் ஜல்லிக் கட்டு நடத்த தனி நபருக்கோ, தனி ஒரு அமைப்புக்கோ அனுமதி வழங்காமல் இந்த ஜல்லிக்கட்டை அவனியாபுரம் அனைத்து சமுதாயம் உள்ளடக்கிய பொதுமக்கள் கமிட்டியி னருக்கு போட்டியை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புகாரின்பேரில் கருங்கல் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
    • ஒலிபெருக்கியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள சகாயநகர் பகுதியில் ஏராளமான வீடுகள் நெருக்கமாக உள்ளன. அப்பகுதியில் கிறிஸ்தவ ஆலயம், இந்து கோவில் போன்றவையும் உள்ளது. இருவேறு மதத்தை சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் சகாயநகர் குன்னுவிளை பகுதியில் ஒருவர் புதிய வீடு ஒன்றை கட்டி ஜெபக்கூட்டம் நடத்தி உள்ளார். பலநாட்கள் ஜெபக்கூட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த 9-ந் தேதி முதல் வெளி ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து ஒலிபெருக்கி வைத்து ஜெபக்கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனை கண்டு கொள்ளா மல் நேற்று இரவு அந்த வீட்டில் எவ்வித அனுமதியும் இன்றி அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி வைத்து ஜெபக்கூட்டம் நடத்தி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வீட்டின் முன் அப்பகுதி பொதுமக்கள் திரண்டனர்.

    இதுகுறித்து அப்பகு தியை சேர்ந்த வக்கீல் படுவூர் எட்வின் என்ற அருள் எட்வின் ஜெகம் என்பவர் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவ்வீட்டில் அனுமதியின்றி ஜெபகூட்டம் நடத்தியதும், அனுமதி யின்றி ஒலிபெருக்கி வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததும் தெரியவந்தது. எனவே ஜெபக்கூட்டம் நடத்தியதை நிறுத்தினர். மேலும் ஒலிபெருக்கியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்ற னர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • 180 மதுபாட்டில்கள் பறிமுதல்
    • அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    திருவள்ளுவர் தினத்தை யொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந் தது.

    குமரிமாவட்டத்தில் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்ட நிலையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கன்னியா குமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப் டிவிசன்க ளுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அனுமதி யின்றி மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் அனுமதி இன்றி மது விற்பனை செய்ததாக 15 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அனுமதியின்றி மது விற்ற 24 பேரை கைது செய்த போலீசார் அவர்களி டம் இருந்து 180 மதுபாட்டில் களை பறிமுதல் செய்துள்ள னர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

    • போலீசார் அபராதம் விதித்தனர்
    • கடத்த முயன்ற மணலிக்கரை பகுதியை சேர்ந்த ஒருவர் கைது

    கன்னியாகுமரி:

    கொற்றிகோடு சப் இன்ஸ்பெக்டர் றசல் ராஜ் தலைமையில் இன்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தக்கலை அருகே கைசாலவிளை என்ற பகுதியில் அனுமதி இல்லாமல் பாறை கற்கள் உடைத்து வாகனத்தில் கடத்தபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்த போது கடத்தல்காரர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டி சென்று டெம்போவில் கருங்கல் கடத்த முயன்ற மணலிக்கரை பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது 22) என்பவரை கைது செய்தனர். அவர் ஒட்டி வந்த டெம்போவையும், கருங்கல்லையும் பறிமுதல் செய்தனர்.

    • திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதால் பரபரப்பு
    • அபிஷேக் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 22).

    இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலி டெக்னிக் கல்லூரியில் படித்த போது, சக மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகி உள்ளார். அந்த சமயத்தில் மாணவியிடம் திடீரென காதலை அபிஷேக் வெளிப்படுத்தி உள்ளார்.

    ஆனால் மாணவி அதனை ஏற்கவில்லை. எனினும் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் மாணவியிடம் நைசாக பேசிய அபிஷேக், அவரை நண்பரின் வீட்டுக்கு வரவழைத்து உள்ளார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளார். இதனை குடித்த சற்று நேரத்தில் மாணவி மயங்கிய தாக தெரிகிறது. இதனை பயன்படுத்தி மாணவியை அபிஷேக் பலாத்காரம் செய்து உள்ளார்.

    அந்த காட்சியை அவர் வீடியோவாகவும் எடுத்து உள்ளார். மயக்கம் தெளிந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த விவகாரத்தை வெளியே சொன்னால், நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோவை சமூக வலை தளத்தில் பரப்பி விடுவேன் என அபிஷேக், மாணவியை மிரட்டி உள்ளார்.

    இதனால் நடந்த விஷ யத்தை மாணவி வெளியே தெரிவிக்க வில்லை. கல்லூரி படிப்பு முடிந்த பிறகும் அபிஷேக் தொடர்ந்து மாணவியை மிரட்டி வந்து உள்ளார். எனவே வேறு வழியின்றி மாணவி தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நாகா்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு நடந்தது. இதற்கிடையே படிப்பை முடித்த அபிஷேக், மாணவி புகார் கொடுத்ததை அறிந்த தும் துபாய் நாட்டுக்கு சென்று தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

    மேலும் இந்த விவகா ரம் தெரிந்து தான், அபிஷேக்கை, அவருடைய தந்தை வில்சன்குமார் வெளிநாட்டுக்கு அனுப்பி யது போலீசாரின் விசார ணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் மீதும், அபிஷேக்கின் செய லுக்கு உடந்தையாக இருந்த நண்பர் அனீஸ் மீதும் போலீ சார் வழக்குப்பதிவு செய்த னர். இந்த நிலையில் 2½ ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேக் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வருவதாக நாகர்கோவில் மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அபிஷேக்கை கைது செய்தனர்.

    இதைத் தொடர்ந்து அவரை பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக அபிஷேக் கூறி னார்.

    இதைத் தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அபிஷேக் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • 419 மது பாட்டில்கள் பறிமுதல்
    • குடியரசு தினத்தையொட்டி மதுபானங்கள் விற்க தமிழக அரசு தடை விதித்து இருந்தது.

    கன்னியாகுமரி:

    குடியரசு தினத்தையொட்டி மதுபானங்கள் விற்க தமிழக அரசு தடை விதித்து இருந்தது.

    இதையடுத்து அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. மேலும் தனியார் மதுபான கடைகளும் திறக்கப்பட வில்லை.

    இதனால் குடிமகன்கள் மது வாங்க முடியாமல் தவித்தனர். இதனை பயன்படுத்தி சிலர் மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் குலசேகரம் போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்த 319 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கிருந்த றாபி (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல சேக்கல் பகுதியில் அனுமதியின்றி விற்பனை செய்த 55 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இதனை விற்றதாக ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    மேலும் கல்லடிமாமூடு பகுதியில் அனுமதியின்றி மது விற்ற ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 45 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 419 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நாளை ெதாடங்குகிறது.
    • மேலும் காலை 8.15 மணிக்கு பின்னரும், மதியம் 1.15 மணிக்குப் பின்னரும் வருகை தரும் தேவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 கணினி வழியில், நாளை (3-ந்தேதி) முதல் 8-ந் தேதி வரை முதற்கட்டமாகவும் (ேபட்ச்-1),இ 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 2-வது கட்டமாகவும் (ேபட்ச்-2), 2 கட்டங்களாக காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது.

    திருமாஞ்சோலை பாண்டியன் சரஸ்வதி யாதவா பொறியியல் கல்லூரி, காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா செட்டியர் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு நடைபெறும் நாளில் காலையில் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு 7.30 மணிக்கும், மதியம் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு 12.30 மணிக்கும் வருகை தர வேண்டும். மேலும் காலை 8.15 மணிக்கு பின்னரும், மதியம் 1.15 மணிக்குப் பின்னரும் வருகை தரும் தேவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×