search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆத்தூர்"

    • ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
    • மணிக்கூண்டு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆத்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை இழிவாக பேசியதாக கூறி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆத்தூர் பஸ் நிலையம் மணிக்கூண்டு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அர்த்தனாரி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான காங்கிரசார் கலந்துகொண்டு அண்ணாமலைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    மேலும் ஆட்டுக்குட்டியுடன் திடீரென அவர்கள் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். மேலும் அண்ணாமலையின் உருவப்படத்தையும் எரிக்க முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
    • அதிக பட்சமாக ஆத்தூரில் 96.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 5-வது நாளாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், கரியகோவில், நத்தகரை, சங்ககிரி, மேட்டூர் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது.

    குறிப்பாக ஆத்தூரில் நேற்றிரவு 9 மணிக்கு தொடங்கிய மழை இன்று அதிகாலை 2 மணி வரை கன மழையாக கொட்டியது. 5 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இன்று காலையும் மழை தூறிய படியே இருந்தது.

    இதே போல நத்தக்கரை சங்ககிரி, கரியகோவில், மேட்டூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய சாரல் மழை இன்று காலையிலும் தூறலாக நீடித்தது.

    மழையை தொடர்ந்து சேலம் மநாகர் மற்றும் புறநகர் பகுதிகளில குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்கள் நிம்மதியாக தூங்கினர். மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆத்தூரில் 96.4 மி.மீ. மழை பெய்துள்ளது. நத்தக்கரை-31, கரியகோவில்-26, சங்ககிரி-20, சேலம்-3.7, ஏற்காடு-4.4, ஆனைமடுவு-19, கெங்கவல்லி-6, தம்மம்படடி-10, ஏத்தாப்பூர்-2, வீரகனூர்-9, எடப்பாடி-4, மேட்டூர்-18.2, ஓமலூர்-4.2, மி.மீ. என மாவட்டம் முழுவதும் 253.9 மி.மீ. மழை பெய்துள்ளது., இன்று காலையும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை தூறிய படியே இருந்தது.

    • நாளை சோமாஸ்கந்தர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • 10-ம் திருநாளான (செவ்வாய் கிழமை) திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    2-ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) சோமாஸ்கந்தர் புறப்பாடும், 4-ம் நாளான (புதன்கிழமை) சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது.

    பங்குனி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 7-ம் திருநாளான (சனிக்கிழமை) அதிகாலை நடராஜர் அபிஷேகமும், அதிகாலை 4.15 மணிக்கு நடராஜர் உருகு சட்டசேவையும், இரவு 9 மணிக்கு நடராஜர் முதலாம் கால ருத்ர அம்ச சிவப்பு சாத்தியும், 8-ம் திருநாளான (ஞாயிற்றுகிழமை) அதிகாலை 6.30 மணிக்கு நடராஜர் 2-ம் கால பிரம்ம அம்ச வெள்ளை சாத்தியும், பிற்பகல் 2 மணிக்கு 3-ம் கால விஷ்ணு அம்ச பச்சை சாத்தியும் நடைபெறுகிறது.

    10-ம் திருநாளான (செவ்வாய் கிழமை) காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர் ஹரிஹரசுப்ரமணிய பட்டர், மணியம் அய்யப்பன், ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன், மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், மண்டகப்படிதாரர் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார், ஜோதிடர் ராஜாமணி, அ.பி.வை.அண்ணாமலை, சுப்ரமணியன் மற்றும் தேவஸ்தான நிர்வா கத்தினர், மண்டகப்ப டிதாரர்கள் மற்றும் உபய தாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆத்தூரில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி நடைபெற்றது.
    • தற்காப்புக் கலைப்பயிற்சியின் அவசியம் குறித்து மாணவிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.

    ஆத்தூர்:

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவின் பெயரில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டரின் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி, ஆழ்வார்திருநகரி ஒன்றியம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆத்தூரில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியில் மாணவிகள் தாங்கள் வெளியே செல்லும் பொழுதும், வரும்பொழுதும் தங்களை தாமே தற்காத்துக் கொள்வதற்காக உரிய பயிற்சி வழங்கப்பட்டது.

    மேலும் பயிற்சி மூலம் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, எவற்றையும் எதிர்கொள்ளும் விதம், வகுப்பறையில் பாடங்களை உற்று நோக்கி கவனித்தல் போன்ற திறன்கள் வளரும் என்று தற்காப்புக் கலைப் பயிற்றுனர் வேல்முருகன் கருத்துக்கள் வழங்கி பயிற்சியினை மேற்கொண்டார்.

    பெண் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் தலைமையிலும், பள்ளி தலைமை ஆசிரியர் அன்னலட்சுமி முன்னிலையிலும் பயிற்சி நடைபெற்றது. தற்காப்புக் கலைப்பயிற்சியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் எடுத்துரைத்தார். பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பயிற்சியின் போது ஆசிரியர் புனிதா உடன் இருந்தார்.

    • தூத்துக்குடிமாவட்டம் முழுவதும் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வனராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தனிப்படையினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆத்தூர் பகுதியில் தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி சென்றார். மற்றொறுவரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர் அதில், அவர் ஆத்தூர் புல்லாவெளியை சேர்ந்த அய்யப்பன் (வயது21) என்பதும், தப்பி ஓடியவர் அதேபகுதியை சேர்ந்த அதிபன் (25) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் 2 செல்போன்கள், 64 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சாயர்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கூட்டாம்புளியை சேர்ந்த வனராஜ் (21) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து செல்போன் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • தலைவன்வடலி சேது ராஜா தெருவை சேர்ந்தவர் கார்த்திக் ஒப்பந்த தனியார் தொழிற்சாலையில் தொழிலாளராக வேலை பார்த்து வந்தார்
    • நேற்று மதியம் ஆத்தூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்

    ஆறுமுகநேரி:

    ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி சேது ராஜா தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கார்த்திக் (வயது21). தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று மதியம் ஆத்தூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். தண்ணீர் பந்தல் அருகே வரும்போது எதிரே திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் பஸ்ஸின் அடியில் சிக்கிக் கொண்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த குரும்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் உயிரிழந்த கார்த்திக்கின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், அப்பகுதியை சேர்ந்த பொது மக்களும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் தலைவன்வடலி விலக்கு அருகே இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். அப்போது உயிரிழந்த கார்த்திக் குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் அசுர வேகத்தில் செல்லும் தனியார் பஸ்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

    இதனால் அங்கு சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அவர்க ளுடன் பேச்சு வார்த்தை நடத்தி னர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

    • தாமிரபரணி ஆற்றோரங்களில் பனை மர விதைகள் நடும் பணி நடைபெற்றது.
    • டாக்டர் கென்னடி பனை விதைகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்தபூமங்கலத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தாமிரபரணி ஆற்றோரங்களில் பனை மர விதைகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி தலைமை தாங்கினார். சேர்ந்தபூமங்கலம் ஊராட்சி மன்ற செயலர் ரூபஸ்டா முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் கென்னடி கலந்து கொண்டு பனை விதைகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    மதர் சமூக சேவை நிறுவன சட்ட ஆலோசகர் வக்கீல் ரமேஷ், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தென்மண்டல ஒருங்கிணைப்பாளரும் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான ராஜ்கமல் மற்றும் சேர்ந்தபூமங்களம் ஊராட்சி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து பனைமர விதைகளை விதைத்தனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணித்தள பொறுப்பாளர் லட்சுமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க நிர்வாகிகள் செய்தனர்.

    • தெற்கு ஆத்தூர் முஹியத்தீன் ஜீம்ஆ பள்ளிவாசலில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • சுமார் 500 பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள தெற்கு ஆத்தூர் முஹியத்தீன் ஜீம்ஆ பள்ளிவாசலில் கே.எம்.டி. மருத்துவமனை மற்றும் தெற்கு ஆத்தூர் ஐ.ஒய்.ஏ. சமூக சேவை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் கே.எம்.டி. மருத்துவமனை பொது மருத்துவர், குழந்தைகள், மகப்பேறு, மயக்கவியல்,காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள், அகர்வால் கண் மருத்துவ மனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர்

    இதில் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் 500 பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து. மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்பவர்களுக்கு சலுகைகளும் வழங்கப்பட்டது

    • பள்ளி தலைமை ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
    • அரசுப் பள்ளியின் பெருமைகளை விளக்கும் வகையில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

    ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் கமால்தீன் , பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் முத்துலட்சுமி, முன்னாள் ஆசிரியர் நாராயணன், வார்டு உறுப்பினர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பேரூராட்சி மன்றத் தலைவர் ஊரின் அனைத்து பகுதிகளும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியம் என்பதையும் எடுத்துக் கூறினார்.

    பள்ளி தலைமை ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம் மற்றும் செயல் பாடுகள் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்க வேண்டும் என்பதை விளக்கிக் கூறினார். அரசுப் பள்ளியின் பெருமைகளை விளக்கும் வகையில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் ரகுபதிராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் 7-வது குறுக்குத்தெரு காயிதே மில்லத்நகரை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் (வயது56). இவரது மகன் செய்யது முஸ்தபா ஆரிப் (19).

    மெக்கானிக்

    இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கம்பெனியில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பைக்கை அவருடன் வேலை பார்க்கும் காயல்பட்டினம் மேலநெசவு தெருவை சேர்ந்த ரகுபதிராஜா (25) என்பவர் ஓட்டி சென்றார். ஆரிப் பின்னால் அமர்ந்து சென்றார்.

    பஸ் மோதி விபத்து

    அவர்கள் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சென்ற போது எதிரே வந்த ஒரு அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

    வாலிபர் பலி

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு ரகுபதிராஜா பரிதாபமாக உயிரிழந்தார். ஆரிபுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக பஸ்சை ஓட்டிவந்த விளாத்திகுளம மீனாட்சிபுரத்தை சேர்ந்த ரவி (43) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆத்தூர் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. காா்த்திகேயன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது.
    • டாஸ்மாக் கடையை வருகிற 15-ந் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுமென்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள குமராபண்ணையூர், செல்வன்புதியனூர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும், ஆத்தூர் புன்னைக்காயல் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூர் மெயின் பஜாரில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதனால் திருச்செந்தூர்- தூத்துக்குடி போக்குவரத்து முடங்கியது. ஏரல், குரும்பூர் வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று மாலை வரை போராட்டம் தொடர்ந்தது. இதனையடுத்து ஆத்தூர் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. காா்த்திகேயன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது.

    ஆத்தூா்-புன்னைக்காயல் சாலையிலுள்ள டாஸ்மாக் கடையை வருகிற 15-ந் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுமென்றும், அதுவரை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போலீஸ் பாதுகாப்புடன் தற்காலிகமாக இயங்குமென்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

    மேலும் சாலை அமைப்பதற்கான பணிகள் ஜூலை 15-ந் தேதி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • குமரன் என்பவர் வழிமறித்து அவதூறாகப் பேசி மகாலிங்க காந்தியை அரிவாளால் வெட்டினார்.
    • அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் குமரன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தொழிலாளி மகாலிங்க காந்தி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.

    இந்நிலையில் மகாலிங்ககாந்தி, ஈஸ்வரி ஆகியோர் ஆத்தூர்- புன்னக்காயல் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரேவதியின் உறவினரான குமரன் (வயது39) என்பவர் வழிமறித்து அவதூறாகப் பேசி மகாலிங்க காந்தியை அரிவாளால் வெட்டினார்.

    இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்

    கூச்சலிட்டதால் குமரன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.காயமடைந்த மகாலிங்க காந்தி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது குறித்து ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×