என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் மாயம்"

    • வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் திடீரென மாயமானார்.
    • புகாரின் பேரில் போலீசார் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம் காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் மனைவி லதா (வயது 33).

    இவர் தனியார் கார்மென்சில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3 மாதங்களாக கேரளாவுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த லதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது கணவர் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • சத்யா தனது மகளை அழைத்து கொண்டு மார்க்கெட்டுக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய் -மகளை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை நெகமம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 34). கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்யா (28). இவர்களது மகள் ஷாதனய் (2). சம்பவத்தன்று சத்யா தனது மகளை அழைத்து கொண்டு மார்க்கெட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார்.

    ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் அவர்களை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

    இதையடுத்து முருகேசன் நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய் -மகளை தேடி வருகின்றனர். 

    • மல்லிகாவும் அவரது கணவன் மூர்த்தியும் கட்டிட வேலைக்கு சென்று விட்டனர்.
    • மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சினேகாவை காணவில்லை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்–தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). இவரது மனைவி மல்லிகா(40 ).

    இருவரும் கட்டிடம் கட்டும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சினேகா(19 ) என்ற மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தபோது, மல்லிகாவும் அவரது கணவன் மூர்த்தியும் கட்டிட வேலைக்கு சென்று விட்டனர். மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சினேகாவை காணவில்லை.

    இதையடுத்து உறவி–னர்கள், நண்பர்கள் வீடு என பல்வேறு பகுதிகளில் தேடியும், சினேகா கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மல்லிகா மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சினேகாவை தேடி வருகின்றனர்.

    • இரண்டு குழந்தைகள் உள்ளனர்
    • செல்போனில் அழைக்கும் போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது

    குனியமுத்தூர்,

    சுந்தராபுரம் அருகே மாச்சம்பாளையம் குட்டியப்ப கோனார் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது 19 வயது மகள் சுந்தராபுரத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். தற்போது ஒரு மாத காலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது பள்ளி சான்றிதழ், ஆதார் கார்டு மற்றும் அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அவரது தந்தை நடராஜன் மகளை எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.

    போத்தனூர் அருகே வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் கார்த்தி (35) இவர் ஏசி மெக்கானிக். தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேரி பிரியங்கா (27). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வேலைக்கு சென்று இருந்த கணவன் வீடு திரும்பாததால், செல்போனில் அழைக்கும் போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.  

    • இளம்பெண் பட்டப்படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தின் வேலை செய்து வந்தார்.
    • 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50,000 பணம் காணாமல் போயிருந்தது.

    கோவை

    கோவை கணபதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். பட்டப்படிப்பை முடித்துவிட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வேலை செய்து வந்தார். இளம் பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்ப்பதற்காக இளம்பெண் வீட்டிற்கு வர முடிவு செய்தனர்.

    சம்பவத்தன்று இரவு அந்த இளம்பெண் அறையில் தூங்குவதற்காக சென்றார். மறுநாள் காலை அந்த இளம் பெண்ணின் தாயார் அவரை எழுப்புவதற்கு அறைக்கு சென்றார். அப்போது அந்த இளம்பெண் மாயமாகி இருந்தார்.

    மேலும் வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50,000 பணம் காணாமல் போயிருந்தது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது எடுத்து அந்த இளம் பெண்ணின் தாயார் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்துடன் மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மணியரசு மனநலம் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • புவனேஸ்வரி கடந்த 5ம் தேதி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே தட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணியரசு. இவரது மகள் புவனேஸ்வரி (வயது 29)திருமணம் ஆகாதவர். மணி யரசு மனநலம் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே மனவேதனையில் இருந்த புவனேஸ்வரி கடந்த 5ம் தேதி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. இதைக் கண்டு அதிர்ந்து போன குடும்பத்தினர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது சித்தப்பா பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்.இன்ஸ்பெக்டர் தங்க வேல்ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன இளம் பெண்ணை தீவிர மாக தேடி வருகின்றனர்.

    • ஜெயப்பிரியா திருநாவலூர் அன்னை தெரசா கல்லூரியில் என்ஜினியரிங் படித்து முடித்து வீட்டில் இருந்தார்.
    • இரவு 11மணி அளவில்வீட்டிலிருந்து திடீரென்று காணாமல் போனார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் புதுதெரு மகாலிங்கம் இவரது மகள் ஜெயப்பிரியா (23) இவர்,திருநாவலூர் அன்னை தெரசா கல்லூரியில் என்ஜினியரிங் படித்து முடித்து வீட்டில் இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (11ம்தேதி) இரவு 11மணி அளவில்வீட்டிலிருந்து திடீரென்று காணாமல்போனார். பல இடங்களில் தேடி எங்கும கிடைக்தாததால் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் இவரது அண்ணன் பிரகாஷ் புகார் கொடுத்தார்.புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவுசெய்து தீவிரமாக தேடி வருகிறார்.

    • இவர்களுக்கு தேவதர்சினி என்ற பெண் குழந்தை உள்ளது.
    • வீட்டை விட்டு வெளியே சென்ற நித்யா அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகேயுள்ள ஒபினி நாயக்கன் அள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி நித்யா (வயது 35). இவர்களுக்கு தேவதர்சினி என்ற பெண் குழந்தை உள்ளது.

    கடந்த 15-ந்தேதி அன்று குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற நித்யா அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.

    பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து கடத்தூர் போலீசில் ரவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் மாயமான நித்யாவை தேடி வருகின்றனர்.

    • இளம்பெண் கடலூர் முதுநகரில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வந்தார்.
    • அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் அவரை எல்லா இடத்திலும் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடலூர் முதுநகரில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல் அந்த பெண் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் அவரை எல்லா இடத்திலும் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • கடந்த 24ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திடீரென மாயமானார்.
    • பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் கோபால் இவரது மகள் சரண்யா (வயது 20). இவர் கடந்த 24ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திடீரென மாயமானார். இவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இவரை பாளையம் தர்கா கோவில் தெருவை சேர்ந்த சூர்யா (20) கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    • மதுரை அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானார்.
    • இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை பைக்காரா, மின்வாரிய பிரதான சாலை துரைப்பா ண்டி கா ம்பவு ண்டை சேர்ந்தவர் லாவண்யா (வயது23). இவ ரது கணவர் ஆறுமுகம். இவர்களுக்கு ஆதி(4), அர்ஜூன்(3) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

    ஆறுமுகம் இறந்த பிறகு லாவண்யா, 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடத்தொழிலாளி சண்முகபாண்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் குழந்தைகளுடன் பைக்காராவில் வசித்து வந்தனர். கடந்த 24-ந் தேதி லாவண்யா தனது இரு மகன்களுடன் மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து கணவர் சண்முகபாண்டி கொடுத்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சுனிதா கடந்த 14-ந்தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
    • சுனிதாவை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    சென்னை:

    சென்னை வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையைச் சேர்ந்தவர் பென்சிலையா. இவரது மகள் சுனிதா (வயது18). பிளஸ்-2 முடித்து விட்டு வளசரவாக்கத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். வருகிற மே மாதம் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் சுனிதா கடந்த 14-ந்தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது தந்தை பென்சிலையா வளரசவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிதாவை தேடி வருகிறார்கள்.

    ×