என் மலர்
நீங்கள் தேடியது "தாய்"
- இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது.
- கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாக சிறுவன் தெரிவித்துள்ளான்.
சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.
இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது. 13 வயது சிறுவன் ஒருவன் அவசர சிகிச்சை மையத்தை அழைத்து, தனது 37 வார கர்ப்பிணித் தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாகவும், அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், செல்போனில் மருத்துவ உதவியாளர் சென் சாயோஷூனின் ஆலோசனையின் படி தனது தாய்க்கு சிறுவன் பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, மருத்துவ உதவியாளர்கள் வந்து தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
- யோகேஷ் குமார் என்ற 18 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
- பலத்த காயமடைந்த ரேகா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மகன் இறந்த துக்கம் தாளாமல் மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து குதித்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யோகேஷ் குமார் என்ற 18 வயது இளைஞர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
யோகேஷ் உயிரிழந்த துக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவரது தாய் ரேகா (40) மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரேகா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாயார் வீட்டில் மகனுடன் வசித்து வந்தார்.
- இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே நுள்ளிவிளையை அடுத்த மூலச்சன்விளையை சேர்ந்தவர் ராஜா (வயது 28). இவரது மனைவி சிந்து (25). இவர்களுக்கு ரெஜன் (2) என்ற மகன் உள்ளான்.
கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிந்து வடக்கு நுள்ளிவிளையில் உள்ள அவரது தாயார் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 19-ந்தேதி தாய் வீட்டில் இருந்த சிந்துவை குழந்தையுடன் காணவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிந்துவின் தாயார் ராணி இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிந்துவையும், அவரது மகனையும் தேடி வருகின்றனர்.
- இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- 4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மகன் ரமேஷ் (வயது 32)குளச்சலில் ஒரு கேஸ் ஏஜென்சி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் ரமேஷ் மேற்கு நெய்யூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக தாய் ரெஜினாளை (55) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றார்.செம்பொன்விளை கடந்து பெத்தேல்புரம் கிணறு குற்றிவிளை வளைவில் செல்லும்போது வர்த்தான்விளையில் ஒரு திருமண வீட்டிலிருந்து 4 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
இந்த மோட்டார் சைக்கிள் எதிர்ப்பாராமல் நிலை தடுமாறி ரமேஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரெஜினாள் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.அப்பகுதியினர் இருவரையும் மீட்டு உடையார்விளையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குளச்சல் போலிசார் மோட்டார் சைக்கிளில் சென்ற 4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வழக்கை வாபஸ் பெறக்கோரி தாய், மகள் மீது தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கடலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை செய்தனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் 1வது வார்டு கோம்பை ரோடு பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் மனைவி சபீனா (வயது 26). சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த ரோகித் என்பவர் பக்கத்து வீட்டு நாயை திருடிக் கொண்டு சென்றார்.
இதைப் பார்த்த சபீனா இது குறித்து நாயின் உரிமையாளரிடம் தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஆத்திரமடைந்த ரோகித் மற்றும் அவரது தாய் பேச்சியம்மாள் ஆகியோர் எங்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கிறாயா என கேட்டு அவரை அடித்து கீழே தள்ளினர். இதை தடுக்க வந்த அவரது தாய் கனிமொழியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
படுகாயமடைந்த அவர்கள் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடமலைக்குண்டு அருகே உள்ள கோவில்பாறை கிழக்குத் தெருவைச் சேர்ந்த அழகுமலை மனைவி மீனா (வயது 28). இவர்கள் குடும்பத்துக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாயவிதாகரன் (30) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இது குறித்து ஆண்டிபட்டி கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. சம்பவத்தன்று அழகுமலை வீட்டுக்கு வந்த மாயவிதாகரன் தன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறும்படி தெரிவித்தார். அதனை மறுக்கவே மீனா மற்றும் அவரது கணவரை அடித்து உதைத்து தாக்கினார். இது குறித்து கடலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயவிதாகரனை செய்தனர்.
- துக்கம் தாழாமல் அழுது கொண்டே இருந்த நிலையில் அவர் நேற்று காலை திடீரென மயங்கி விழுந்தார்.
- வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது மகன் வந்ததும் பகவதி அம்மாள் உடல் தகனம் செய்யப்படும்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் இரணி யல் அருகே உள்ள காற்றாடி மூடு பகுதியைச் சேர்ந்த வர் வேலம்மாள் (வயது 78), ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்.
இவருக்கு பகவதி அம்மாள் (57) என்ற மகளும் 2 மகன்களும் உள்ளனர். தற்போது வேலம்மாள், மகள்-மருமகன் ராதா கிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டு இருந்த வேலம்மாள் நேற்று முன் தினம் இறந்தார். அவரது உடலை மறுநாள் (நேற்று) தகனம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர். அப்போது தாயின் உடல் அருகே பகவதி அம்மாள் துக்கம் தாழா மல் அழுது கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று காலை திடீரென மயங்கி விழுந்தார். உடனடி யாக அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்ட ர்கள் பகவதி அம்மாள் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
தாய் இறந்த சோகத்தில் மகளும் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பகவதி அம்மாள் உடலை வீட்டிற்கு எடுத்து வந்த உறவினர்கள், ஏற்கனவே தகனத்திற்காக வைத்திருந்த வேலம்மாள் உடல் அருகே வைத்தனர்.
இறந்த பகவதி அம்மா ளுக்கு காயத்ரி (30) என்ற மகளும், அஜித் (27) என்ற மகனும் உள்ளனர்.
ஒரே நேரத்தில் தாய்-மகள் இறந்ததை எண்ணி அங்கு வந்திருந்த பலரும் கண்ணீர் விட்டனர். தொடர்ந்து வேலம்மாள் உடல் மட்டும் நேற்று தகனம் செய்யப்பட்டது.
பகவதி அம்மாளின் மகன் அஜித், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவர் வந்ததும் பகவதி அம்மாள் உடல் தகனம் செய்யப்படும் என உறவி னர்கள் தெரிவித்தனர்.
- அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி சகாய மாதா தெருவை சேர்ந்தவர் ராபின்ஸ்டன் (வயது 48). மீனவர். கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரேகா (வயது 40). இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இதனால் இவர்கள் தனது ஒரே மகளுடன் இங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 10-30 மணிக்கு இவர்கள் தூங்க சென்று விட்டனர். அதன் பிறகு ராபின்ஸ்டன் கோவிலுக்கு செல்வதற்காக இன்று காலை எழுந்து பார்த்தபோது தனது மனைவியை காணா ததை பார்த்து திடுக்கிட் டார். உடனே அவன் தனது வீட்டின் மேல் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்குஉள்ள ஒரு அறையில் அவரது மனைவி ரேகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். பின்னர் அவர் இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய் தார். அதன் பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தி னார்கள். அதன் பிறகு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தாயாரை ஆற்றூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே ஆற்றூர் புல்லாணிவிளை பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 32), கர்ப்பிணியாக உள்ளார். இவர் தன் தாய் வீட்டில் இருக்கும்போது இவரது அண்ணன் செந்தில் (37) வந்து கவிதாவை அவதூறாக பேசி தாக்க முயற்சித்தார். இதனை கவிதாவின் தாயார் தங்கம் தடுக்க வந்தார். அப்போது செந்தில் தன் தாயாரை தள்ளியதில் அவர் கீழே விழுந்தார். இதில் இவரது தலையில் அடிப்பட்டது. கவிதா தன் தாயாரை ஆற்றூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இதுபற்றி கவிதா கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் போலீசார் செந்தில் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- காரணம் என்ன? என போலீசார் விசாரணை
- கணவன்-மனைவிக்கு இடையில் 2 வாரம் காலமாக தகராறு ஏற்பட்டிருந்ததால் விரக்தி அடைந்த சிவலட்சுமி தற்கொலை செய்து கொண்டார்
கன்னியாகுமரி:
தக்கலை அருகே திக்கணங்கோடு கொல்லாய் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 35). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். ராஜன் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்திலிருந்து சிவலட்சுமி (33) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று 2 குழந்தை களும் பள்ளிக்கு சென்று விட்டனர். மாலையில் சிவலட்சுமியின் மகன் அஜயன் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த போது அவனது தாயார் சிவலட்சுமி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அஜயன் தாத்தாவிடம் சென்று கூறினார். மருமகளின் தற்கொலை குறித்து அவர் விசாரித்தபோது கணவன்-மனைவிக்கு இடையில் 2 வாரம் காலமாக தகராறு ஏற்பட்டிருந்ததால் விரக்தி அடைந்த சிவலட்சுமி தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அய்யப்பன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் விசாரணை நடத்தி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
வெள்ளிச்சந்தை அருகே உள்ள பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மரிய ரூபன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஆரோக்கிய ஆஸ்மி. இவர்களது 12 வயது மகள் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியை தாய் அடித்து துன்புறுத்தி, வயதிற்கு மீறிய வேலைகளை செய்ய வைப்பாராம். சில நேரங்களில் உடலில் சூடு வைத்து தலையில் அடிப்பாராம். சிறுமியின் தலையில் தையல் போட்ட தழும்பு உள்ளது.
இந்த தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து மகளிர் சப் - இன்ஸ்பெக்டர் கீதா விசாரணை நடத்தி சிறுமியை கொடுமைப்ப டுத்தியதாக தாய் ஆரோக்கிய ஆஸ்மி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார்.
தற்போது சிறுமியின் தந்தை மரிய ரூபன் ஊர் திரும்பி உள்ளார். பெற்ற மகளை சூடு வைத்து துன்புறுத்திய தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் சுசிந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்
- சுசிந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான தாய், மகளை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜோயல் (வயது 35). இவர் வங்கியில் தினசரி கலெக்சன் வேலைக்கு சென்று வருகிறார்.
கடந்த 2-ந்தேதி வேலைக்கு சென்றார். இவர் மாலை வீட்டிற்கு வந்தபோது, மனைவி ஜெர்லின் (27), மகள் ஜெர்சிகா (9), ஆகியோரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து சுசிந்திரம் போலீஸ் நிலையத்தில் ஜோயல் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான தாய், மகளை தேடி வருகின்றனர். வீட்டில் இருந்த தாய், மகள் காணாதது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காப்பகத்தில் ஒப்படைப்பு
- ஆசாரிபள்ளம் போலீசார் கேரளா சென்று மீட்டு அழைத்து வந்தனர்.
கன்னியாகுமரி:
ஆசாரிபள்ளம் அருகே பெருவிளை கோயிலடி தெருவை சேர்ந்தவர் கவிதா (வயது 28).
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவின ரான கிருஷ்ண குமார் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி 6 வயதில் ஒரு மகன் உள்ளான். கிருஷ்ணகுமார் கடந்த சில வருடங்களாக வெளி நாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும் தற்போது அவர் தனது வீட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரி கிறது.
கவிதாவுக்கும் கிருஷ்ண குமாருக்கும் ஏற்கனவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கிருஷ்ணகுமார் கவிதா வுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே கவிதா தனது 6 வயது மகனுடன் திடீரென மாயமானார்.அவரை உறவினர் வீடு களில் தேடியும் கவிதாவை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து கவிதாவின் தாயார் பார்வதி ஆசாரி பள்ளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் கவிதா கேரளாவில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் ஆசாரிபள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுனில் தலைமையில் ஏட்டு விஜி கலா ஆகியோர் கேரளா சென்று கவிதாவை மீட்டு ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா, கவிதாவிடம் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு கவிதாவும், அவரது மகனும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.