என் மலர்
நீங்கள் தேடியது "நெடுஞ்சாலை துறை"
- நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க வேண்டும்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் பகுதியில் சாலையோரம் படவேடு செல்லும் இடத்துக்கு வழிகாட்டி பலகை சாலையோரம் சாய்ந்த நிலையில் உள்ளது.
இதனை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டுவதற்காக வைக்கப்படும் பெயர் பலகை மற்றும் எச்சரிக்கை பலகைகளை திருடி செல்வது அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.
- மதுபோதை ஆசாமிகள் திருட்டுகளில் ஈடுபடலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருமானூர்-புள்ளம்பாடி, முடி கொண்டான்-கல்லக்குடி, கீழ காவட்டாங்குறிச்சி-கீழப்பழுவூர், திருமானூர்-ஏலாக்குறிச்சி ஆகிய சாலைகளில் வைக்கப்பட்ட ஊர் பெயர் பலகைகள், எச்சரிக்கை பலகைகள் சமீபத்தில் திருட்டுப் போனது. இதேபோன்று கிராம சாலைகளில் வைக்கப்பட்ட சிறிய எச்சரிக்கை பலகைகளும் காணாமல் போயின ஆகவே அந்த இடங்களில் பலகை இல்லாமல் சட்டங்களாக அவை காட்சியளிக்கின்றன. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டி கள் வழி தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்படுகிறது.
இந்த எச்சரிக்கை மற்றும் பெயர் பலகைகள் அலுமினியத்தால் ஆனவை. இதனை மர்மநபர்கள் குறிவைத்து திருடிச் செல்வது நெடுஞ்சாலை துறை மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருடர்கள் சிக்கவில்லை. தொடக்கத்தில் அந்த பெயர் பலகைகள் காணாமல் போனபோது காற்றில் விழுந்திருக்கலாம் என கருதப்பட்டது.
ஆனால் பல்வேறு இட ங்களில் மாயமானதால் இது திட்டமிட்ட திருட்டு என்பது உறுதி செய்யப்பட்டது. பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத, சி.சி.டி.வி. கேமரா வசதி இல்லாத ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் இந்த பலகைகள் திருடப்பட்டுள்ளது. மதுபோதை ஆசாமிகள் இது போன்ற திருட்டுகளில் ஈடுபடலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த வகை திருட்டு புதுவிதமாக இருப்பதாக காவல்துறையினரும் நெடுஞ்சாலை துறையினரும் தெரிவித்தனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டுவதற்காக வைக்கப்படும் பெயர் பலகை மற்றும் எச்சரிக்கை பலகைகளை திருடி செல்வது அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.
- புது டெல்லியில் ஒரு சந்திப்பில் நிதின் கட்கரி உரையாற்றினார்
- சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுகின்றன
இந்தியாவின் ஆளும் பா.ஜ.க. அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி (66).
இந்திய தலைநகர் புது டெல்லியில், "க்ரிசில் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கான்க்லேவ் 2023" எனும் இந்தியாவின் உள்கட்டமைப்பில் பங்கு பெறும் நிறுவனங்களுக்கான ஒரு சந்திப்பில் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது;
அரசாங்கம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தாலும் உள்கட்டமைப்பு அமைப்பதில் பங்கு பெறும் நிறுவனங்கள் தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு மாற தயங்குகின்றன. இதனால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது திட்டங்களுக்கு டிபிஆர் எனும் 'விரிவான திட்ட அறிக்கைகள்' (Detailed Project Reports) தயாரிக்க மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றன. இது மட்டுமின்றி சிமெண்ட் மற்றும் எக்கு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குள் 'ரகசிய கூட்டமைப்பு' ஒன்றை உருவாக்கி விலை குறையாமல் பார்த்து கொள்கின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளன. நிலையின்றி அடிக்கடி உயரும் விலையினால் டிபிஆர் உருவாக்குவது மிக கடினமாக உள்ளது. எங்குமே ஒரு முழுமையான டிபிஆர் உருவாக்கப்படுவதில்லை. தயாரிக்கப்படும் திட்ட அறிக்கைகளிலும் பல தவறுகள் இடம்பெறுகின்றன. சரக்கு போக்குவரத்திற்கான செலவினங்கள் இந்தியாவில் 14லிருந்து 16 சதவீதம் உள்ளது. ஆனால் சீனாவில் 8லிருந்து 10 சதவீத அளவிலேயே உள்ளது. இதனால் திட்டங்களுக்கான செலவுகள் வரையறுக்கப்பட்டதை விட அதிகமாகி விடுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.
- 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளது.
அம்பத்தூர்:
சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி சி.டி.எச்.சாலை (சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை) மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றன. மேலும் விபத்துக்களும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் முக்கிய சாலையான இந்த சாலையில் பாடியில் இருந்து திருநின்றவூர் வரை சாலை மிக குறுகலாக இருப்பதால் இதனை 200 அடி சாலையாக விரிவு படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து சி.டி.எச்.சாலை 200 அடி அகலத்தில் விரிவுபடுத்த அறிவிப்பு வெளியான நிலையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் நில எடுப்பு பணிகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இந்த திட்டம் 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்கான நில எடுப்பு பணிகளுக்கு ரூ.168 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இது குறித்து அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் கூறியதாவது:-
தேசிய நெடுஞ்சாலையாக இருந்த இந்த சி.டி.எச். சாலை கடந்த 2011-ம் ஆண்டிற்கு பிறகு மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலையில் பொதுமக்கள் கோரிக்கையின்படி சாலை விரிவுபடுத்தும் திட்டம் 160 அடி சாலையாக குறைக்கப்பட்டு 6 வழிச்சாலையாக அறிவிப்புகள் வெளியாகின. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நில எடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இறுதியாக இந்த திட்டம் 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்படுகிறது. நில எடுப்புக்கு ரூ.168 கோடி ஒதுக்கீடு செய்ய நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் கொரட்டூர் சந்திப்பில் இருந்து மண்ணூர்பேட்டை வரை ஒரு உயர் மட்ட மேம்பாலமும் , அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலைய சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலமும், அம்பத்தூர் டன்லப் தொழிற்சாலை சந்திப்பில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று உயர் மட்ட மேம்பாலமும் வர உள்ளது.
விரைவில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை 100 அடி அகலத்தில் 6 வழிச்சாலையாக 3 உயர் மட்ட மேம்பாலங்களுடன் மாற இருக்கிறது. இதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்க இருக்கின்றன. இந்த பணிகள் முடிவடையும் போது தொழிற்பேட்டை நிறைந்த இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் இன்றியும், விபத்துக்கள் ஏற்படாத வகையிலும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
