என் மலர்
நீங்கள் தேடியது "சுட்டுக்கொலை"
- அடிக்கடி அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
- 5 வயது சிறுமி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
குவாயாகில்:
தென் அமெரிக்காவின் ஒரு முனையில் ஈக்வடார் என்ற குடியரசு நாடு உள்ளது.
இந்த நாட்டில் போதை பொருட்கள் கடத்தல் கும்பல்களால் குற்ற சம்பவங்கள் அதிகரித்தது. அவர்கள் அடிக்கடி அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அந்நாடு அனுமதி அளித்து உள்ளது.
இந்நிலையில் குவாயாகில் என்ற நகரில் ஆயுதம் தாங்கிய கும்பல் பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. கண்ணில் பட்டவர்களையெல்லாம் அவர்கள் குருவியை சுடுவது போல சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் குண்டுகள் பாய்ந்து இறந்தனர். 5 வயது சிறுமி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இது பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் கிடந்த துப்பாக்கி ஒன்றையும் போலீசார் கைப்பற்றினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
- கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
- சுட்டுக்கொல்லப்பட்ட அப்துல் ஜபர்ஷா, பாதுகாப்பு படை மற்றும் போலீசார் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தது. மசூதிகள், போலீஸ் நிலையங்கள் உள்ளிட்டவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து அந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த பயங்கரவாத அமைப்பினர் ஆப்கானிஸ் தான் எல்லையில் இருந்து செயல்பட்டு வருகிறார்கள். பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் இயக்க தலைவர் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் தெற்கு வஜிரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தின் எல்லையான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் இயக்கத்தின் தளபதி அப்துல் ஜபா ஷா கொல்லப்பட்டார். மேலும் இரண்டு தீவிரவாதிகள் காயம் அடைந்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட அப்துல் ஜபர்ஷா, பாதுகாப்பு படை மற்றும் போலீசார் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர். மேலும் சட்ட அமலாக்க முகவர் மதக்குழுக்களை மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதி உள்ளது.
- 2 பேரும் பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் எல்லைபாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று இரவு பாகிஸ்தானில் இருந்து அடையாளம் தெரியாத 2 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவினார்கள். இதைப்பார்த்த இந்திய வீரர்கள் அவர்களை சுட்டுக்கொன்றனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இதனால் 2 பேரும் பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவர்களை பற்றிய விவரங்களை பாதுகாப்பு படையினர் சேகரித்து வருகின்றனர்.
- ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் கொட்டத்தை அடக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
- துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் இருந்து வெடிபொருட்கள், ஏ.கே. 47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் கொட்டத்தை அடக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று காலை பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் சுட்டனர். இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் பெயர் சகீர் மஜீத்,மற்றும் அகமது என்பது தெரியவந்தது. இருவரும் லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் இருந்து வெடிபொருட்கள், ஏ.கே. 47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் நேற்று 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று மேலும் 2 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ராஜேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
- துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோலக்குத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கோதாரா. இவர் தனது வளர்ப்பு நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த டேதாத் என்பவரின் குடும்ப உறுப்பினரைக் கண்டு அந்த நாய் தொடர்ந்து குரைத்தது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு தகராறாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த டேதாத் தரப்பினர் துப்பாக்கியை எடுத்து வந்து ராஜேஷ் தரப்பினர் மீது சரமாரியாக சுட்டனர். இதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ராஜேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவரது உறவினர் கைலாஷ் கோதாரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
மேலும் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இன்னொருவரை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். பின்னர் அவரை இந்தூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது. இதைத்தொடர்ந்து சட்டம், ஒழுங்கை பாதுகாக்க மேற்கண்ட கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்த கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு மஞ்சித் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ஏழு பேர் கும்பல் இந்த கொடூரத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
அதில், டெதாத், வருண் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். நாய் குரைத்த ஒரே காரணத்துக்காக ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- முதல் கட்ட விசாரணையில் அவர்கள் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது.
- சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்றனர் என தெரிய வில்லை.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது திடீர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களை ஒழிக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சர்வதேச எல்லையான குப்வாராஜுமகுந்த் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக இன்று அதிகாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படை போலீசார் அங்கு விரைந்து சென்று அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் அவர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது. அவர்கள் ஏன் சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்றனர் என தெரிய வில்லை.
அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் நாசவேலைக்காக பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்பகுதியில் பயங்கரவாதிகள் வேறு யாரும் பதுங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
- ரத்த வெள்ளத்தில் கிடந்த சகோதரிகள் இருவரையும் அருகே உள்ள எஸ்.ஜே.மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:
டெல்லி ஆர்.கே.புரம் அருகே அம்பேத்கார் பஸ்தி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிங்கி (வயது 30), ஜோதி(29).
இன்று அதிகாலையில் மர்ம மனிதர்கள் அவர்களது வீட்டுக்கு சென்றனர். அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சகோதரிகள் இருவரையும் அருகே உள்ள எஸ்.ஜே.மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு வந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட 2 பெண்களின் சகோதரருக்கும், மர்ம நபர்களுக்கும் இடையே பணத் தகராறு இருந்து வந்தது. இந்த தகராறில் தான் அந்த பெண்களின் சகோதரருக்கு வைத்த குறியில் சகோதரிகள் இருவரும் பரிதாபமாக பலியாகி உள்ளனர் என்பது முதல் கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து டெல்லி போலீஸ் இணை கமிஷனர் மனோஜ் கூறியதாவது:-
பலியான பெண்களின் சகோதரரிடம் இருந்து அதிகாலை 4.40 மணியளவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீஸ் குழு சம்பவ இடத்துக்கு சென்றது. 2 பெண்கள் சுடப்பட்டு இருந்தனர். மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர்.
கொலையாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் சகோதரரை பின் தொடர்ந்து உள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் பணத் தகராறு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. நாங்கள் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறோம். விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைநகர் டெல்லியில் அதிகாலையில் 2 பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கனடாவின் சுரோவ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஹர்தீப்சிங் நிசார் சுட்டுக்கொல்லப்பட்டான்.
- இந்திய அரசால் வெளியிடப்பட்ட தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் ஹர்தீப்சிங் பெயரும் உள்ளது.
ஒட்டாவா:
கனடாவை சேர்ந்தவன் ஹர்தீப்சிங் நிசார். காலிஸ்தான் பயங்கரவாதியான இவன் இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தான். இது தொடர்பாக இவன் மீது பல வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் கனடாவின் சுரோவ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஹர்தீப்சிங் நிசார் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இவன் மீது பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் நடந்த இந்து மத தலைவர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இருந்ததால் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவனை தேடி வந்தனர்.
சமீபத்தில் இந்திய அரசால் வெளியிடப்பட்ட தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் ஹர்தீப்சிங் பெயரும் உள்ளது. அவன் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவனை பற்றி துப்பு கொடுத்தால் ரூ. 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என அறிவித்தனர். அவனை பயங்கரமாக தேடி வந்த நிலையில் கனடாவில் கொல்லப்பட்டு உள்ளான். அவனை சுட்டுக்கொன்றது யார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- சிறையில் பெண் கைதிகள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.
- கலவரம் பற்றி அறிந்ததும் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன்பு குவிந்தனர்.
டெகுசிகல்பா:
மத்திய அமெரிக்கா நாடான ஹோண்டுராஸ் தலைநகர் டெகுசிகல்பா அருகே உள்ள தமரா பகுதியில் பெண்கள் சிறைச்சாலை உள்ளது. இங்கு ஏராளமான பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் பெண் கைதிகள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இரண்டு குழுக்களாக பிரிந்து கைதிகள் மோதிக் கொண்டதில் கலவரம் வெடித்தது. சிறைக்குள் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர். மேலும் பலர் மீது தீ வைத்து எரித்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கைதிகள் ஆவேசத்துடன் மோதிக் கொண்டதால் உடனடியாக கட்டுக்குள் வரவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பெண் கைதிகள் உயிரிழந்தனர். இதில் 26 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டனர். மற்றவர்கள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டனர். ஏராளமான கைதிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
கலவரம் பற்றி அறிந்ததும் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன்பு குவிந்தனர்.
இது தொடர்பாக ஹோண்டுராஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோ கூறும்போது, "சிறையில் உள்ள மாரா கும்பல், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிந்தே இந்த கலவரத்தை திட்டமிட்டு அரங்கேற்றி உள்ளனர். இதில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
பெண்கள் சிறையில் மாரா கும்பலுக்கும் பாரியோ 18 கும்பலுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. அது கலவரமாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- கூச் பெஹார் பகுதியில் இன்று காலை திடீர் மோதல் ஏற்பட்டது.
- மேற்கு வங்காளத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்ட்டதில் இருந்து ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் அடுத்த மாதம் ( ஜூலை) 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதியஜனதா கட்சியினருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.கூச் பெஹார் பகுதியில் இன்று காலை திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 7 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். குண்டு காயம் அடைந்த அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பாபுஹக்கே என்பவர் இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தையொட்டி கூச் பெஹார் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் நடந்த பகுதி வங்காளதேசத்தையொட்டிய பகுதியாகும்.உள்ளூரை சேர்ந்த சில அரசியல்வாதிகள் வங்காளதேசத்தை சேர்ந்தவர்களை தங்களுடன் வைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்ட்டதில் இருந்து ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த 8-ந்தேதியில் இருந்து இதுவரை நடந்த வன்முறைக்கு 11 பேர் பலியாகி விட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த மோதலின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக பாரதிய ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.
- பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
- ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினார்கள்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் சுரால்கோட் சித்தார்க் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சூடு நடந்தது. இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் இறந்தனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினார்கள். சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
- ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடு மற்றும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
- கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஏ.கே. ரகதுப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் 32 தோட்டாக்கள் ஆகியவை அடங்கும்.
ஸ்ரீநகர்:
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடு மற்றும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஜம்மு, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை வழியாக 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திக்வார் பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதையடுத்து இந்திய ராணுவம் உஷார் ஆனது. குப்வாரா தங்தார் செக்டாரில் உள்ள டக்கேன்-அம்ரோஹி பகுதியில் ராணுவத்தினர் பயங்கரவாதிகளை சுற்றிவளைத்தனர். அப்போது நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான.
அவனிடம் இருந்து பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஏ.கே. ரகதுப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் 32 தோட்டாக்கள் ஆகியவை அடங்கும்.
இதேபோல் தங்தார் பகுதியில் இந்திய ராணுவம் குப்வாரா போலீசாருடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர். அந்த பயங்கரவாதி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த சில மணி நேரத்தில் நடந்த 2-வது ஊடுருவல் முயற்சி இதுவாகும். தொடர்ந்து இந்திய ராணுவம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.