என் மலர்
நீங்கள் தேடியது "பாஸ்போர்ட்"
- ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் ஷர்மிளா தாபா
- இவர் மீது தற்பொழுது காவல் அதிகாரிகள் FIR பதிவு செய்துள்ளனர்.
ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து அதன் பின் அந்த புகழை வைத்து விஸ்வாசம் , வேதாளம், சகலகலா வல்லவன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ஷர்மிளா தாபா. மேலும் இவர் சின்னத்திரையில் நடித்து வந்தார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். இவர் மீது தற்பொழுது காவல் அதிகாரிகள் FIR பதிவு செய்துள்ளனர்.
நேபாளத்தை சேர்ந்த இவர் நடன் உதவி இயக்குனர் ரகு என்பவரை திருமணம் செய்துக் கொண்டு சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவர் மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு அளித்த முகவரியில் முறைகேடு இருப்பதாக கூறி வழக்கு பதிவு. முதலில் இவர் இந்தியா பாஸ்போர்டில் 10 ஆண்டுகளுக்கு மேல் அவரது அண்ணாநகர் முகவரியை கொடுத்துள்ளார். தற்பொழுது மீண்டும் பாஸ்போர்ட் புதுபிக்கும் போது வியாசார்பாடியில் உள்ள முகவரியை கொடுத்ததால் இதில் முறைகேடு இருப்பதாக கூறி உள்துறை அமைச்சகம் பாஸ்போர்ட் மோசடி வழக்கை இவர் மீது அளித்துள்ளனர். அதனை விசாரித்த காவல் அதிகாரி நடிகை தாபா மீது 3 பிரிவுகளிலன் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
- போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்.
- காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
நேபாளத்தில், 2007-ம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, 2008-ம் ஆண்டு குடியரசு உருவானது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

இதனையடுத்து முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவின் ஆதரவாளர்கள் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். போலீசார் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்.
இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது. கலவரம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ஞானேந்திராவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. போராட்டங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஞானேந்திரா நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் பாதுகாப்பை அரசாங்கம் குறைத்துள்ளது. அவரது வீட்டிற்கான பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 25-ல் இருந்து 16 ஆக குறைக்கப்பட்டது.
ஞானேந்திராவின் பாதுகாப்பு வீரர்களின் குழுவையும் அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதாகவும், அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வன்முறைகளுக்கு முன்னாள் மன்னர் ஞானேந்திரா பொறுப்பேற்கவேண்டும் என நேபாள காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மன்னராட்சிக்கு ஆதரவான நடவடிக்கைகள், இந்து ஆதரவு போராட்டக்காரர்களின் பின்னணியில் ஞானேந்திரா இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹால் குற்றம்சாட்டினார்.
- தொழுகைகளை உள்ளூர் மசூதிகளில் நடத்த வேண்டும்.
- நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை பெறுவது கடினமாகிவிடும்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னதாக, சாலைகளில் தொழுகை நடத்துபவர்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. எச்சரிக்கையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மீரட் எஸ்.பி. ஆயுஷ் விக்ரம் சிங் கூறுகையில், தொழுகைகளை உள்ளூர் மசூதிகளில் நடத்த வேண்டும் என்றும், யாரும் சாலைகளில் தொழுகை நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். எச்சரிக்கையை மீறுபவர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் தலைவருமான ஜெயந்த் சிங் சவுத்ரி கூறுகையில்,
தனிநபர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், அவர்களின் பாஸ்போர்ட்டுகள் மற்றும் உரிமங்கள் ரத்து செய்யப்படும். நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை பெறுவது கடினமாகிவிடும்.
நீதிமன்றத்தால் தனிநபர்கள் விடுவிக்கப்படும் வரை அத்தகைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மீரட் மூத்த காவல் கண்காணிப்பாளர் விபின் தடா கூறுகையில், மாவட்ட மற்றும் காவல் நிலையங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியதன் அடிப்படையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பதட்டம் மிக்க பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமைதியைப் பேணுவதற்கும், வரவிருக்கும் பண்டிகைகளை சீராகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும், நிர்வாகம் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
- 1,400-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சிறப்பு முகாமில் கையாளப்பட உள்ளது.
- இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னை :
பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை அனுமதி சான்றிதழ் (பி.சி.சி.) பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே, பொதுமக்களின் வசதிக்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட சாலி கிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி பாஸ்போர்ட் சேவை மையங்கள் நாளை (சனிக்கிழமை) சிறப்பு முகாம் செயல்படுகிறது.
1,400-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இந்த 4 பாஸ்போர்ட் சேவை மையங்களிலும் நடைபெறும் சிறப்பு முகாமில் கையாளப்பட உள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.கோவேந்தன் தெரிவித்துள்ளார்.
- கேரளா மற்றும் மராட்டியத்தில் ஒரு கோடி பேருக்கு மேல் பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.
- நாட்டில் டிசம்பர் 2வது வாரம் வரை மொத்தம் 9.6 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.
நாட்டில் 9.6 கோடி பேரிடமும், தமிழ்நாட்டில் 97 லட்சம் பேரிடமும் பாஸ்போர்ட் இருக்கிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் சில மாதங்களில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 10 கோடியாகும். நாட்டின் மக்கள் தொகையில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 7.2 சதவீதமாகும். டிசம்பர் 2-வது வாரம் வரை மொத்தம் 9.6 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.
கேரளா மற்றும் மராட்டியத்தில் ஒரு கோடி பேருக்கு மேல் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராகுல் காந்தி மீது பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
- வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தனது ராஜதந்திர பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ள அவர் புதிதாக சாதாரண பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு டெல்லி கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக சுப்பிரமணியசாமி பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டு இன்று விசாரணை நடைபெறும் என்று தெரிவித்து இருந்தது.
ராகுல் காந்தியின் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணை நடைபெறும் என்று கோர்ட்டு தெரிவித்தது.
- ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதையடுத்து தனது ராஜதந்திர பயண பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.
- தடையில்லா சான்றிதழ் தொடர்பான வழக்கில் சுப்பிரமணியசாமி பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு அனுமதி அளித்தது.
புதுடெல்லி:
பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தனது ராஜதந்திர பயண பாஸ்போர்ட்டை ஒப்படைத்த அவர் புதிதாக சாதாரண பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் சுப்பிரமணியசாமி பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட்டு அனுமதி அளித்ததுடன், ராகுல் காந்தியின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது. அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக ராகுல் காந்திக்கு தடையில்லா சான்று வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்பதாகவும், ஆனால் அவர் கேட்ட 10 வருடங்களுக்கு அல்லாமல் 3 வருடங்களுக்கு தடையில்லா சான்று வழங்குவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
- கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1.60 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
- 1.57 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
திருப்பூர் :
பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு வசதியாக கோவையில் பாஸ்போர்ட் சேவை மையமும் சேலம், ராசிபுரம், குன்னூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களும் செயல்படுகின்றன.
2022-23ம் ஆண்டில் கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1.60 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1.57 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது 2021ம் ஆண்டை விட 35 சதவீதம் அதிகம்.நடப்பாண்டு மே மாதம் வரை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 78 ஆயிரத்து914 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 76 ஆயிரத்து 134 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பூபதி கணேஷ் கூறுகையில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். பாஸ்போர்ட் குறித்த சந்தேகங்களுக்கு 1800 258 1800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
- பாகிஸ்தானுக்கு கீழ் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளது
- சிங்கப்பூர் பாஸ்போர்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் என்பது உலகின் அனைத்து அசல் பாஸ்போர்ட்டுகளில், அதனை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டியலிடப்படும் ஒரு அதிகாரப்பூர்வ தரவரிசையாகும். இந்த பட்டியல் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் பிரத்தியேக தரவுகளின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது.
உலகின் 199 பாஸ்போர்ட்டுகளில் அந்த பாஸ்போர்ட்டின் உரிமையாளர்கள் முன் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின்படி கணக்கிடப்பட்ட 2023-க்கான ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் பட்டியல் வெளியாகியிருக்கிறது.
இதன்படி பாகிஸ்தானிய பாஸ்போர்ட் 'நான்காவது மோசமானது' என்று தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை மட்டுமே பாகிஸ்தான் மிஞ்சி பட்டியலில் மேலான இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் பாஸ்போர்ட் 33 மாநிலங்களுக்கு விசா இல்லாத அணுகலை அனுமதிக்கிறது.
சிரியாவின் பாஸ்போர்ட் 30 இடங்களுக்கும், ஈராக் 29 இடங்களுக்கும் மற்றும் ஆப்கானிஸ்தான் 29 இடங்களுக்கும் இது போன்ற அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குடிமக்களுக்கு 192 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும் சிங்கப்பூர் இந்த பட்டியலில் முதல் இடம் பெறுகிறது.
190 இடங்களுக்கு செல்ல அனுமதிப்பதால் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய 3 நாடுகளும் இந்த பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளன.
முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளில், கடந்த பத்தாண்டுகளை ஒப்பிடும்போது, அமெரிக்கா தனது தரவரிசையில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது. 2-வது இடத்தில் இருந்த அமெரிக்கா 8-வது இடத்திற்கு விழுந்துள்ளது.
2022-ம் வருடம் இப்பட்டியலில் 85-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 80-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. உலகின் 57 இடங்களுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க முடியும். டோகோ மற்றும் செனகல் ஆகிய நாடுகளும் இந்தியாவை போல 80-வது இடத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது.
- நமது இந்தியாவின் பாஸ்போர்ட் மூலம் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டை அதாவது பாஸ்போர்ட்டை கொண்ட நாடுகளின் புதிய தரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கடந்த சில வருடங்களாக முதலிடத்தில் இருந்த ஜப்பானை மூன்றாம் இடத்திற்கு பின் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது
எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது.
சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருந்தால்192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
அடுத்து ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
மூன்றாவதாக ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்சு, ஜப்பான், லக்சம்பர்க், தென் கொரியா, சுவீடன் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
இங்கிலாந்து, அயர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 188 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
பெல்ஜியம், மால்டா, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, செச்ரிபப்ளிக் நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
ஆஸ்திரேலியா, ஹங்கேரி, போலந்து நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 186 நாடுகளுக்கு செல்லலாம்.
கனடா, கிரீஸ் - 185 நாடுகள்.
8வது இடத்தில் உள்ள அமெரிக்கா , லிதுவேனியா- 184 நாடுகள்.
லேத்வியா, சுலோவாக்கியா, சுலோவேனியா- 183 நாடுகள்.
10வது இடத்தில் உள்ள எஸ்டோனியா, ஐஸ்லாந்து - 182 நாடுகள்.
மலேஷியா 11 ஆம் இடம் 180 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
தாய்லாந்து 64 ஆம் இடம் - 79 நாடுகள்.
80வது இடத்தில் உள்ள நமது இந்தியாவின் பாஸ்போர்ட் மூலம் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
இலங்கை 95 ஆம் இடம் - 41 நாடுகள்.
100 வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் பாஸ்போர்ட் மூலம் - 33 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
-தனுராஜன்
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த அபுதாகிர் என்பவரே போலி பாஸ்போர்ட்டை தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.
- முக்கிய குற்றவாளியான அபுதாகிரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட்டுகளை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அந்தோணிசாமி என்பவர் போலி பாஸ்போர்ட்டுடன் வந்திருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக குடியுரிமை அதிகாரிகள் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரிடம் புகார் அளித்தனர். இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது. உதவி கமிஷனர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் எமர்சன் ஆகியோர் நடத்திய விசாரணையில் கோவிந்தசாமிக்கு போலி பாஸ்போர்ட் வழங்கியது ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரை சேர்ந்த புரோஷ்கான் என்பது தெரியவந்தது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். புரோஷ்கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த அபுதாகிர் என்பவரே போலி பாஸ்போர்ட்டை தயாரித்து கொடுத்தது தெரியவந்தது. அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது அபுதாகிர் தப்பி ஓடிவிட்டார். அவரது வீட்டில் இருந்து 100 பாஸ் போர்ட்டுகள் போலி ஆவணங்கள், மலேசியா சிம்கார்டுகள், ரூ.57 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வெளிநாடு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் புரோஷ்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முக்கிய குற்றவாளியான அபுதா கிரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- திருச்சி விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்து சிங்கப்பூர் செல்ல இருந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- ஏர்போர்ட் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டார்
கே.கே. நகர்,
திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் செல்லும் பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தெலுங்கன் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது33) என்பவர் தான் ஏற்கனவே சிங்கப்பூரிலிருந்து வந்த தேதியை மாற்றி போலியான சீல் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக ஏர்போர்ட் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் ஹரிஹரன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.