search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிசிடிவி"

    • திடீரென அங்கு தோன்றிய கட்டம் போட்ட சட்டை அணிந்த நபர் நாதிரை நோக்கி சுட்டுள்ளான்.
    • சுடுவதற்கு முன்னர் அந்த ஏரியாவில் 1 மணி நேரமாக அவர்கள் நோட்டம் விட்டுள்ளதாகத் தெரிகிறது.

    டெல்லியில் ஜிம் ஓனர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அமைத்துள்ள SHARX ஜிம் வாசலில் வைத்து நேற்று இரவு அந்த ஜிம்மின் உரிமையாளரான ஆபிகானிய வம்சாவளியை சேர்ந்த நாதிர் ஷா [35 வயது] துப்பாக்கி ஏந்திய நபரால் 11 முறை சுடப்பட்டார். அதில் 8 குண்டுகள் அவரது உடலைத் துளைத்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக கிடைத்த சிசிடிவி காட்சியில், நாதிர் ஷா இரவு வேலையில் தனது கருப்பு suv காரின் அருகே நின்றுகொண்டு மற்றொரு நபருடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது திடீரென அங்கு தோன்றிய கட்டம் போட்ட சட்டை அணிந்த நபர் நாதிரை நோக்கி சுட்டுள்ளான். 11 முறை சுட்டதும் தன்னுடன் வந்த மற்றொரு நபருடன் பைக்கில் ஏறி தப்பினான். சுடுவதற்கு முன்னர் அந்த ஏரியாவில் 1 மணி நேரமாக அவர்கள் நோட்டம் விட்டுள்ளதாகத் தெரிகிறது.

    கொலை செய்யப்பட்ட நாதிர் ஷா குற்றப் பின்னணி கொண்ட நபர் ஆவர். கொலை நடந்த பகுதியில் சமீப காலமாக கேங் வார் நடந்து வருவதால் போலீசார் விசாரணை நடத்த திணறி வருகிறனர். இந்த கொலைக்கு லாரன்ஸ் பிசினாய் கேங் உடன் தொடர்புடைய ரோகித் கோத்ரா என்ற கேங்ஸ்டர் சோசியல் மீடியாவில் பொறுப்பேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • அடகுக்கடையில் இருந்து நகைகளை மீட்டுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும்போது பேரனுக்கு வடா பாவ் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
    • தங்க நகைகளை ஒருவன் திருடிக்கொண்டு ஓடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புனேவில் பேரனுக்கு வடா பாவ் வாங்க வண்டியை நிறுத்திய வயதான தம்பதியிடம் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ. 4.95 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை ஒருவன் திருடிக்கொண்டு ஓடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில், தசரத் பாபுலால் -ஜெயஸ்ரீ என்ற மூத்த தம்பதியினர் அடகுக்கடையில் இருந்து ரூ.4.95 மதிப்புடைய தங்களது தங்க நகைகளை மீட்டுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும்போது பேரனுக்கு வடா பாவ் வாங்குவதற்காக புனே -சோலாப்பூர் சாலையில் உள்ள கடை ஒன்றின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

    பாபுலால் வடா பாவ் வாங்கச் சென்ற நிலையில் வாகனத்தின் அருகே நின்றுகொண்டிருந்த ஜெயஸ்ரீ சற்று அசந்த நேரம் பார்த்து அவ்வழியாக வந்த ஒருவன் வண்டியின் முன்புறம் இருந்த நகைகள் அடங்கிய பையை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தான். ஜெயஸ்ரீ அவனை துரத்தியும் பிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி தொலைக்காட்சி காட்சிகளின் அடிப்படையில் திருடனைத் தேடி வருகின்றனர். 

    • இந்த விபத்தில் 4 பேர் படுகாயம்
    • விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து HSR லே-அவுட்டுக்கு சென்று கொண்டிருந்த வால்வோ பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் சென்றுகொண்டிருந்த பைக் மற்றும் கார்கள் மீது சரமாரியாக மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பாஜக தலைவர் பிர்பால் சிங் மகன் அபினவ் சிங், வயதான தம்பதியை தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    • சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த முதியவரின் மனைவியை அபினவ் மிரட்டும் காட்சிகளும் அந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது

    உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பாஜக தலைவர் பிர்பால் சிங். இவரது மகன் அபினவ் சிங், வயதான மூத்த தம்பதியை தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இணையத்தில் பரவி வரும் அந்த சிசிடிவி வீடியோவில், முதியவரை மிரட்டும் அபினவ் அவரது கன்னத்தில் ஓங்கி அறைகிறார். இதனால் அந்த முதியவர் நிலை தடுமாறுகிறார்.

    சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த முதியவரின் மனைவியை அபினவ் மிரட்டும் காட்சிகளும் அந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது. முதிய தம்பதிக்கும் அபினவுக்கும் என்ன பிரச்சனை என்ற தகவல் வெளியாகவில்லை.

    கடந்த ஜூலை 23 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி கண்டனங்களை குவித்து வருகிறது. ஆனால் வீடியோ ஆதாரம் இருந்தும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஆளும் கட்சித் தலைவரின் மகன் என்பதால் போலீசார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவதாக நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

    • அப்பார்ட்மெண்ட், கோயில்கள் என பல இடங்களில் இவர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
    • திருடப்பட்ட ஷூக்களை சுத்தம் செய்து ஊட்டி, புதுச்சேரி போன்ற சுற்றுலா தளங்களில் அவர்கள் விற்றுள்ளனர்.

    பெங்களூரு நகரில் கடந்த 7 ஆண்டுகளாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிராண்டட் ஷூக்களை திருடிய 2 திருடர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    திருடர்களை கைது செய்த பின்பு அவர்களது வீட்டை காவல்துறையினர் சோதனை செய்தனர்.அப்போது, 715 -ற்கும் மேற்பட்ட பிராண்டட் ஷூக்களை காவல்துறையினர் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் ஆகும். 

    இரவு நேரங்களில் ஆட்டோவில் வந்து அப்பார்ட்மெண்ட், கோயில்கள் என பல இடங்களில் இவர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.

    திருடப்பட்ட ஷூக்களை சுத்தம் செய்து ஊட்டி, புதுச்சேரி போன்ற சுற்றுலா தளங்களில் அவர்கள் விற்றுள்ளனர்.

    அண்மையில், வித்யாரண்யபுரா நகரில் உள்ள ஒரு வீட்டில் ஷூக்கள் மற்றும் 2 கேஸ் சிலிண்டர்களை இவர்கள் திருடியுள்ளனர். இது தொடர்பாக வீட்டுக்காரர் புகார் கொடுக்க அங்குள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது குற்றவாளிகள் பயன்படுத்திய ஆட்டோ விவரங்களை கண்டறிந்து 2 திருடர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    • அந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும்.
    • மருத்துவமனை நிர்வாகம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    சீனாவில் 5 மாதங்களுக்கு முன்பு கோவா என்ற பெண்ணுக்கு மார்பகத்தை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

    இந்நிலையில், இந்த அறுவை சிகிச்சையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. அந்த வீடியோவில் கோவாவின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்து கோவா அதிர்ச்சியடைந்துள்ளார்.

    என்னுடைய தனியுரிமையை மருத்துவமனை நிர்வாகம் மீறியுள்ளதாக கூறியுள்ள கோவா, அந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவரின் கோரிக்கையை மறுத்துவிட்டது. இந்த வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை எனவும், மருத்துவமனையில் உள்ள 3 மாதங்களுக்கு மேலான சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளது. ஆகவே யார் இந்த வீடியோவை எடுத்தார்கள் என்று கண்டுபிடிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

    மேலும், இந்த அறுவை சிகிச்சை வீடியோவை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்குவதற்கு வேண்டுமானால் உதவி செய்ய முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த பதிலை கோவா ஏற்கவில்லை. "ஆபரேஷன் தியேட்டருக்குள் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதனை கண்டிப்பாக வெளியில் உள்ளவர் எடுத்திருக்க முடியாது. மருத்துவமனையில் உள்ள ஒருவர் தான் எடுத்திருக்க வேண்டும். ஆகவே அந்த வீடியோவை எடுத்தவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து அந்த வீடியோவை எடுத்தவர் வேலையை விட்டு சென்று விட்டதாகவும் அவரது தகவல்கள் தங்களிடம் இல்லை என்றும் கடைசியாக மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

    பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    • டிராகில் இறங்கி உள்ளுர் ரயில் வந்துகொண்டிருக்கும் மற்றொரு டிரக்கிற்கு மாறி கை கோர்த்தபடி இருவர் ரயிலின் முன்னே அப்படியே கீழே அமர்ந்துள்ளனர்.
    • கைகோர்த்தபடி ரயில் முன் செல்வதும், அவர்கள்மீது ரயில் ஏறுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

    மகாராஷ்டிராவில் தந்தையும் மகனும் கை கோர்த்தபடி ரெயிலின் முன் படுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாயாந்தர்  ரெயில் நிலையத்தில் நேற்று முன் தினம் திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பிளாட்பாமில் நடந்து சென்று ரெயில்வே டிராகில் இறங்கி உள்ளுர்  ரெயில் வந்துகொண்டிருக்கும் மற்றொரு டிரக்கிற்கு மாறி கை கோர்த்தபடி  இருவர் ரெயிலின்முன்னே அப்படியே கீழே அமர்ந்துள்ளனர்.

    மிகவும் அருகில் இருந்ததால் நிறுத்தமுடியாமல் அவர்கள் மீது REYILஎறியுள்ளது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் நலசோபாரா பகுதியைச் சேர்ந்த ஹர்ஷித் மேத்தா[60], ஜே மேத்தா[35] என்பதும் அவர்கள் தந்தை மற்றும் மகன் என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது. அவர்கள் பிளாட்பாமில் நடந்து சென்று, டிராக்கில் இறங்கி, கைகோர்த்தபடி  ரெயில் முன் செல்வதும், அவர்கள்மீது  ரெயில் ஏறுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மனதை உருக்கும் அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் தந்தை மகனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும். 

    • சக ஊழியர்களுடன் ராஜேஷ் குமார் லேப்டாப் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • திடீரென மாரடைப்பால் அவதிப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், மஹோபா நகரத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க மேலாளர் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தனியார் வங்கியின் கிளை மேலாளர் ராஜேஷ் குமார் ஷிண்டே கடந்த 19ம் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார்.

    அங்கு சக ஊழியர்களுடன் ராஜேஷ் குமார் லேப்டாப் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென நாற்காலியில் சரிந்து கண்கள் மேலே சென்றவாரு மூச்சு பேச்சின்றி ஆனார்.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் ராஜேஷ் குமாரை காப்பாற்ற முயன்றனர். அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தும், சிபிஆர் கொடுத்து காப்பாற்றவும் முயன்றனர்.

    பிறகு, அவரது உடல்நலம் மோசமடைந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ராஜேஷ் குமார் இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    அவர் திடீரென மாரடைப்பால் அவதிப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், 30 வயது மதிக்கத்தக்க நபர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம், இளம் இந்தியர்களிடையே இதய நோய்கள் குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

    • சம்பவத்தின் வீடியோ வெளியாகி காண்போரை திடுக்கிடச் செய்து வருகிறது.
    • விபத்தில் சமையலறை முழுவதுமாக வெடித்துச் சிதறியது.

    சமையலுக்கு பயன்படும் LPG சிலிண்டர் மூலம் அவ்வப்போது ஏற்பட்டு வரும் விபத்துகள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் LPG சிலிண்டர் இருப்பதால் அதை கவனமாக கையாளும் விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படுவது அவசியம்.

    இந்த கூற்று 100 சதவீதம் உண்மை என நிரூபிக்கும் வகையில் மும்பையில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ வெளியாகி காண்போரை திடுக்கிடச் செய்து வருகிறது. அந்த, சிசிடிவி வீடியோவில் பெண் ஒருவர் வீட்டின் சமயலறையில் நின்றுகொண்டு பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென அவரது அருகில் இருந்த சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடிக்கிறது.

    அந்த அதிர்வில் தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்த அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். ஆனாலும் அந்த சமையலறை முழுவதுமாக வெடித்துச் சிதறியது. சிலிண்டரில் கொஞ்சமான அளவே கேஸ் இருததால்தான் பெரிய அளவில் விபத்து ஏற்படாமல் அந்த பெண் உயிர்தப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    • இளம் பெண் ஒருவர் மார்கெட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அத்துமீறல்.
    • பொது மக்கள் வருவதை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் சாலையோரம் இருந்த மதுபானக் கடை அருகே கடந்த செவ்வாக்கிழமை இரவு 8 மணியளவில் இளம் பெண் ஒருவர் மார்கெட்டுக்கு சென்றுவிட்டு தெருவோரமாக சென்றுக் கொண்டிருந்தார்.

    அப்போது, மதுபோதையில் இருந்து நபர் ஒருவர் திடீரென பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டார். பெண்ணை கீழே தள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    அப்போது அந்த பெண் அலறி சத்தம் போட்டதை அடுத்தும், அந்த வழியாக பொது மக்கள் வருவதை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதை அடுத்து, ராவத்பூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.

    • மழையால் 210 கேமராக்களில் 2 கேமராக்கள் பழுதானதாக தகவல்.
    • வாக்கு எண்ணும் மையத்தில் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதாகியுள்ளது.

    சென்னையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 210 கேமராக்களில் 2 கேமராக்கள் பழுதானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் பழுதான கேமராக்கள் அகற்றப்பட்டு புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • யுபிஎஸ்-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், விழுப்புரம் தொகுதி வாக்கு என்னும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் சுமார் 30 நிமிடங்கள் வேலை செய்யாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை 9.28 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் ஸ்ட்ராங் ரூமுக்கான சிசிடிவி கேமராக்கள் திடீரென நின்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மீண்டும் 9.56 மணிக்கு மீண்டும் சிசிடிவி செயல்பட தொடங்கியது.

    யுபிஎஸ்-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவரும், ஆட்சியருமான பழனி விளக்கம் அளித்துள்ளார்.

    ×