என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் சேர்க்கை"

    • மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் சேர்ந்துள்ளனர்.
    • ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர்.

    தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் 2025- 2026-ஆம் ஆண்டிற்காக மாணவச் சேர்க்கையை மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.

    சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப்பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்.

    இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    • 2021-22-ல் 103.4 சதவீதமாக இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம், 2023-24-ல் 97.1 ஆக சரிந்திருப்பதாக தெரிவித்தார்.
    • அனைத்து பிரிவு மாணவர் சேர்க்கை 57.56-ல் இருந்து 56.2 ஆகவும் சரிந்திருக்கிறது.

    புதுடெல்லி:

    மக்களவையில் நேற்று பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்த கேள்விகளுக்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி துர்காதாஸ் உய்கி பதிலளித்தார். அப்போது தொடக்கப்பள்ளிகளில் பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை விகிதம் கடந்த 2023-24-ம் கல்வி ஆண்டில் குறைந்திருப்பதாக கூறினார்.

    குறிப்பாக 2021-22-ல் 103.4 சதவீதமாக இருந்த மொத்த சேர்க்கை விகிதம், 2023-24-ல் 97.1 ஆக சரிந்திருப்பதாக தெரிவித்தார். அதேநேரம் ஒப்பீட்டளவில் அனைத்து சமூக மாணவர்களும் தொடக்கப்பள்ளிகளில் சேரும் விகிதம் 100.13 சதவீதத்தில் (2021-22) இருந்து 91.7 (2023-24) ஆக குறைந்திருக்கிறது.

    உயர்நிலைப்பள்ளிகளில் பழங்குடியின மாணவர் சேர்க்கை 78.1 சதவீதத்தில் இருந்து 76.9 ஆகவும், அனைத்து பிரிவினரின் விகிதம் 79.56-ல் இருந்து 77.4 ஆக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மேல்நிலைப்பள்ளிகளில் பழங்குடியினர் மாணவர் சேர்க்கை விகிதம் 52-ல் இருந்து 48.7 ஆகவும், அனைத்து பிரிவு மாணவர் சேர்க்கை 57.56-ல் இருந்து 56.2 ஆகவும் சரிந்திருக்கிறது.

    முன்னதாக பள்ளிகளில் சமீபத்திய ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாக நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி மக்களவையில் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக மோடி அரசை குறை கூறியிருந்த அவர், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தற்போது வரை நடந்து வருகிறது.
    • அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 ஆயிரத்து 553 அரசு பள்ளிகளில் கடந்த 1-ந்தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக தற்போது வரை நடந்து வருகிறது.

    இதில் பெரும்பாலும் 1-ம் வகுப்புக்கு தான் மாணவர் சேர்க்கை நடக்கிறது. கடந்த 1-ந்தேதி முதல் இன்று வரையிலான 20 நாட்களில் வந்த 14 வேலை நாட்களில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

    இன்று ஒரே நாளில் மட்டும் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும் மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 268 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    5 லட்சம் மாணவர் சேர்க்கை என்ற இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வழங்கியுள்ளது.

    • கொரோனாவுக்கு பிறகு பல குடும்பங்களில் நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர்.
    • மாநிலம் முழுவதும் உள்ள 58,801 பள்ளிகளில் 5,816 பள்ளிகளில் மட்டுமே கணினிகள் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 லட்சம் பேர் கூடுதலாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்ததற்கு காரணம் அதில் குறைந்த கல்வி கட்டணம் மட்டுமின்றி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் முறை படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதும் முக்கிய காரணம் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    கொரோனாவுக்கு பிறகு பல குடும்பங்களில் நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர். அதனால் பல பேர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாற்றினார்கள்.

    இப்போது நடுத்தர குடும்பத்தினரும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மாநிலம் முழுவதும் உள்ள 58,801 பள்ளிகளில் 5,816 பள்ளிகளில் மட்டுமே கணினிகள் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

    மாநில அளவில் 37,636 அரசுப் பள்ளிகளில் 81 சதவீதம் கணினிகளை கொண்டிருந்தாலும் 79 சதவீத பள்ளிகளில்தான் அவை இயங்கும் நிலையில் உள்ளது தெரிய வந்துள்ளது.

    • அமராவதி நகா் சைனிக் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • முழுமையான விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை: 

    திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகா் சைனிக் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி நிா்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

    இந்தியா முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தோ்வு 2023 ஜனவரி 8ந் தேதி நடைபெற உள்ளது. ஆன்லைனில் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி நவம்பா் 30ந் தேதி ஆகும். வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் மேலும் முழுமையான விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை 13-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • பயிற்சியின்போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிந்தது.

    மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலை யத்தில் 2022-23ம் ஆண்டிற்கான பயிற்சி மாணவர்கள் நேரடி சேர்க்கை வருகிற 13-ந் தேதி வரை நீடிக்கப்பட்டு 2-ம் கட்டமாக நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.

    மானாமதுரை அரசு தொழிற் பயிற்சி நிலை யத்தில் உள்ள தொழிற் பிரிவுகளான கம்மியர் மோட்டர் வாகனம், நில அளவையாளர், மின்சாரப் பணியாளர், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர் ஆகிய தொழிற் பிரிவுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் சேரலாம்.

    மாணவர்கள் 13-ந்தேதி வரை மானாமதுரை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், பாலிடெக்னிக் வளாகம், பாப்பாமடையில் நேரில் வருகை தந்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அவ்வாறு விண்ணப்பிக்க வரும்போது தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், அசல் சாதிச் சான்றிதழ், அசல் மாற்றுச்சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    பயிற்சியின்போது பயிற்சியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச பாடப்புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பஸ்பாஸ், உதவித்தொகை மாதம் ரூ.750 ஆகியவை வழங்கப்படும்.

    பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிந்ததும் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

    மேலும் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு 9865554672 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • நடப்பு கல்வியாண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
    • நடப்பு கல்வியாண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    கோவை,

    கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளில் நடப்பாண்டில் இளங்கலையில் காலியாக உள்ள 1,400 இடங்களை நிரப்ப உடனடி மாணவர் சேர்க்கை வருகிற 20-ந் தேதி நடக்கிறது.

    இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:-

    கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    இதில், 18 உறுப்பு கல்லூரிகளில் 2 ஆயிரத்து 567 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 4 ஆயிரத்து 413 இடங்களும் உள்ளன.இதற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 20-ந் தேதி வரை பெறப்பட்டது. மொத்தம் 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனை தொடர்ந்து கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடந்தது.

    இதில், பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் 1,400 இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களை உடனடிமாணவர் சேர்க்கையின் (ஸ்பாட் அட்மிஷன்) மூலம் வரும் 20-ந் தேதி நிரப்ப பல்கலைக்கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உடனடி கலந்தாய்வில், பொதுகலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று அதனை தவறவிட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் மற்றும் புதிதாக கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்கள் பங்கேற்கலாம். மாணவர்களின் தரவரிசையின் அடிப்படையில் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.

    மேலும், மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக் கீடு, கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், காலியிடங் களுக்கான அட்டவணை ஆகியவை பல்கலைக்கழகத்தின் www.tnau.ucanapply. com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைமுறையில் காலதாமதம் இருக்காது. ஜூலை 15-ந் தேதி முதல் 30-ந் தேதிக்குள் வகுப்புகள் திறக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தொழில்துறை 4.0 திட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • ஆசிரியர்களுக்கு உலகத்தரம் மிக்க திறனை மேம்படுத்த 120 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு சென்னை அம்பத்தூரில் உலகளாவிய திறன் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 6295 இடங்களில் 3184 இடங்கள் காலியாக உள்ளதாகவும் அந்தியூர் உறுப்பினர் வெங்கடாசலம் கேள்விக்கு பதில் அளித்தார்.

    அப்போது அவர் கூறும்போது, தொழில்துறை 4.0 திட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு உலகத்தரம் மிக்க திறனை மேம்படுத்த 120 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு சென்னை அம்பத்தூரில் உலகளாவிய திறன் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

    • ஒவ்வொரு ஆண்டும் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.
    • கடந்த ஆண்டு 70 ஆயிரம் குழந்தைகள் இலவச கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

    சென்னை:

    இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.

    2023-24-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 20-ந்தேதி முதல் தொடங்கியது. பெற்றோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஏப்ரல் 20-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    தகுதியான பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பினால் குழந்தையின் புகைப்படம், ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், பெற்றோர் ஆதார், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை ஆகிய 8 ஆவணங்கள் அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

    1-8-2019 முதல் 31-7-2020 வரை பிறந்த குழந்தைகள் இலவச கல்வி இட ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு பிரைமரி நர்சரி பள்ளிகள் சங்க மாநில தலைவர் நந்தகுமார் கூறுகையில், 'தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்வி கட்டணத்தை மட்டும் அரசு செலுத்தும்.

    புத்தகம் உள்ளிட்ட இதர கட்டணங்கள் பெற்றோர் செலுத்த வேண்டும். தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை சமீபத்தில் கொடுத்துள்ளது. நிலுவை தொகையை படிப்படியாக கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து வருகிற கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என்றார்.

    கடந்த ஆண்டு 70 ஆயிரம் குழந்தைகள் இலவச கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்டனர். விண்ணப்பிக்கும் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

    ஒரே பள்ளியில் அதிக விண்ணப்பங்கள் வரப்பெற்றால் பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

    • அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நாளை முதல் 28-ந்தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது.
    • 1 முதல் 9-ம் வகுப்புகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

    அவற்றில் சுமார் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்வியாண்டுக்கான (2022-2023) இறுதி வேலை நாள் வருகிற 28-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.

    இந்த நிலையில் தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான திட்டமிடுதல், செயல்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டுக்கான (2023-2024) அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நாளை முதல் 28-ந்தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது.

    இந்த பேரணிக்காக தயாரிக்கப்படும் பிரத்யேக வாகனத்தில் பள்ளி கல்விக்கான அரசின் திட்டங்கள், கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள், மன்ற செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறும்.

    இந்தப் பேரணியில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளனர். மாணவர் சேர்க்கை கொண்டாட்டத்துக்கான செலவுத் தொகை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தில் இருந்து மாவட்டங்களுக்கு வழங்கப்படும்.

    1 முதல் 9-ம் வகுப்புகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சிவகங்கை தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
    • rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ள தாவது:-

    2023-24-ம் கல்வியாண்டிற்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 சட்டத்தின்படி 2023-24-ம் கல்வியாண்டிற்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பிலும், 1-ம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் 1-ம் வகுப்பிலும் சேர்க்கைக்கு வருகிற 20-ந்தேதி முதல் மே 18-ந்தேதி வரை rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகையிலும் மே 21-ந்தேதி அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.இத்திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2019 முதல் 31.7.2020-க்குள்ளாகவும், 1-ம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2017 முதல் 31.7.2018-க்குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும். பெற்றோர், விண்ணப்பதாரர்கள் பிறப்புச்சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க சாதிச்சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ், நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் கீழ் உள்ள வருமான சான்றிதழ், இருப்பிடச்சான்று ஆகியவைகளை உரிய அலுவலரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    மேலும், முதன்மை கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை), மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை), வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 12 வட்டார வள மைய அலுவலங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளியில் 23.5.2023 அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தெரிவு செய்யப்படுவர். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் 24.5.2023 அன்று இணைய தளத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். சோ்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை 29.05.2023-க்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சோ்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள மாநகராட்சிப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.

    மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி , மாநகராட்சி கவுன்சிலர் மம்தா குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    பள்ளியில் மாணவர்கள் அதிக அளவு சேர வேண்டுமென பள்ளி மாணவர்களுக்கு புத்தக பைகள், புத்தகங்கள், எழுதுகோல் போன்றவைகளும் வழங்கப்பட்டது. இதில் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் அதிக அளவு பள்ளிகளில் சேர்கிறார்கள்.

    தற்போது விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டம் 85 பள்ளிகளில் செயல்படுத்தபடுகிறது. காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்துள்ளது.

    இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்:-

    தமிழக முதல் - அமைச்சரின் முயற்சியால் மாணவர்களை அதிகம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பள்ளிகளில் சேர்த்து வருகிறோம். காலை உணவு திட்டத்தால் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    தற்போது இரண்டாம் கட்டமாக விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்குவோம்.இடைநிற்றல் இதன் மூலம் குறைந்துள்ளது என்றார்.

    இதையடுத்து அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    ×