என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாடத்திட்டம்"

    • ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • பாடத்திட்டத்தை மாற்றுவது மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் கடும் எதிர்ப்பு எழுந்தது.

    திருப்பூர் :

    கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பி.காம்., முதலாமாண்டு மாணவர்களுக்கு எம்.எஸ்., ஆபிஸ் பாடம் இருந்தது. இப்பாடம் மாற்றப்பட்டு அதற்கு பதில் ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    தேர்வுக்கு 20 நாட்களே இருந்த நிலையில், பாடத்திட்டத்தை மாற்றுவது மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் பாடத்திட்டத்தை மாற்றும் முடிவை பல்கலைக்கழக நிர்வாகம் கைவிட்டுள்ளது. முதல் செமஸ்டரில் புதிய பாடங்கள் பின்பற்றப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்த தகவல் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முருகவேல் கூறுகையில், பி.காம்., மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றுவது நிறுத்தப்பட்டது. முதல் செமஸ்டர் தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டமே பின்பற்றப்படும். இரண்டாவது செமஸ்டருக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்துவது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்படும். ஒப்புதல் கிடைத்தால் அமல்படுத்தப்படும் என்றார்.

    • தமிழின துரோகியாக தமிழிசை இருக்க முடியாது.
    • தமிழ் என் உயிரிலும் இருக்கிறது. என் பெயரிலும் இருக்கிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் தேசிய கல்விக் கொள்கை 3-வது ஆண்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால், அங்கு சில குறை இருந்தால் சொல்வேன். தமிழ்நாடு பாட திட்டத்துக்கு பதிலாக சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தை அமல்படுத்திய தமிழிசை தமிழின துரோகி என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் கூறியுள்ளார்.

    தமிழின துரோகியாக தமிழிசை இருக்க முடியாது.

    தமிழ் என் உயிரிலும் இருக்கிறது. என் பெயரிலும் இருக்கிறது.

    ஆனால் தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்து புதுச்சேரி பாடத்திட்டத்தை தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் விமர்சித்துள்ளார்.

    22 மொழிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று தெரியாமல் பேசியுள்ளார். தமிழகத்தில் 47 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழிலும், பிளஸ்-2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வை எழுதவில்லை.

    ஆனால், நாங்கள் தமிழை வளர்த்துதான், வருகிறோம். எனவே, தமிழை வைத்து எங்களுக்கு மதிப்பெண் போட தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருக்கு உரிமை இல்லை.

    புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதில் அரசியல் கிடையாது. இதில் அரசியல் இருப்பதாக முன்னாள் முதல்வர் கூறுகிறார்.

    அவருக்கு நான் பதில் சொல்வதாக இல்லை. 22 ஆண்டுகளாக பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன்.

    மக்கள் பணத்தை எடுத்து என்னுடைய வசதிக்காக செலவு செய்யமாட்டேன் என்றார்.

    • மாணவர்கள் கிருஷ்ணரின் நிர்வாக மந்திரங்கள் அடங்கிய பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.
    • அஷ்டாங்க யோகா வகுப்பும் மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கிறது.

    அலகாபாத் பல்கலைக்கழத்தில் புதிய பட்டப்படிப்பு துவங்கப்பட்டு இருக்கிறது. ஐந்து ஆண்டுகள் கொண்ட புதிய பாடத்திட்டத்தில் BBA-MBA படிப்பை மாணவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு படிக்க முடியும். இந்த பட்டப்படிப்பை வர்த்தக பிரிவு ஆசிரியர்கள் துவங்கி உள்ளனர்.

    புதிய ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் மாணவர்கள் பகவத் கீதை, ராமாயணம் உள்ளிட்ட புராணங்களில் இருந்து கிருஷ்ணரின் நிர்வாக மந்திரங்கள் அடங்கிய பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். கிருஷ்ணர் மட்டுமின்றி ஜெ.ஆர்.டி. டாடா, அசிம் பிரேம்ஜி, திருபாய் அம்பானி, நாராயண மூர்த்தி, சுனில் மிட்டல் மற்றும் பிர்லா போன்ற முன்னணி தொழிலதிபர்கள் பற்றியும் நிர்வாக ரீதியிலான பாடங்களை கற்கவுள்ளனர்.

    இதோடு அஷ்டாங்க யோகா வகுப்பும் மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கிறது. தற்போது இந்த ஆண்டிற்கான பாடத்திட்டத்தில் மொத்தம் 26 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த படிப்பில் மொத்தம் 10 செமஸ்டர்கள் உள்ளன. புதிய படிப்பில் பல்வேறு வழிமுறைகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

    அந்த வகையில் ஐந்து ஆண்டுகள் பாடத்திட்டம் கொண்ட இந்த பாடத்திட்டத்தில் மாணவர்கள் முதலாம் ஆண்டிலேயே படிப்பை நிறுத்திக் கொண்டால் அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாவது ஆண்டில் படிப்பை நிறுத்திக் கொண்டால் டிப்ளோமா படிப்புக்கான சான்றும், மூன்றாவது ஆண்டில் நிறுத்திக் கொண்டால், BBA பட்டமும், ஐந்து ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்தால் MBA பட்டமும் பெற முடியும்.

    • சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
    • அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படும் மாநிலத்தில் ஒன்றாக கேரளா இருக்கிறது.

    தகவல் தொழில் நுட்பத்தில் நாளுக்குநாள் வளர்ச்சி கண்டுவரும் காலக்கட்டத்தில் வாழ்ந்து வரும் நாம், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கிடைக்கப் பெறுகிறோம். இதன் காரணமாக எந்த ஒரு விஷயத்தையும் நாம் எளிதாக செய்து முடிக்க முடிகிறது.

    இதுபோன்ற வளர்ச்சிகளை கண்டு வியக்கும் நாம், சில விஷயங்களை கண்டு அதிர்ச்சியடைய வேண்டி இருக்கிறது. அதில் ஒன்று தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள். சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

    அதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த போதிலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடரத்தான் செய்கின்றன. ஆகவே அதனை கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டம் தான் போக்சோ சட்டம்.

    சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகளின் பாதுகாப்பு மசோதா (POCSO)-2011 நம் நாட்டு நாடாளுமன்றத்தில் 2012-ம் ஆண்டு மே 22-ந்தேதி நிறைவேற்றப்பட்டது.

    2019-ம் ஆண்டில், போக்சோ சட்டம் திருத்தப்பட்டு மேலும் கடுமையாக்கப்பட்டது. இந்த திருத்தம் குறைந்தபட்ச தண்டனையை 7 முதல் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் வரை உயர்த்தியது. பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், குற்றத்தில் ஈடுபட்டவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும். தீவிர தாக்குதலுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.

    போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டதில் இருந்து அனைத்து மாநிலங்களிலும் அது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையும் கிடைத்துள்ளது. ஆனால் போக்சோ வழக்குகள் அதிகரித்ததே தவிர, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்ததாக தெரியவில்லை.

    அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படும் மாநிலத்தில் ஒன்றாக கேரளா இருக்கிறது. குட் டச், பேடு டச் என அனைத்து தொடுகைகளின் விவரத்தையும் சிறு குழந்தைகள் இன்று எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் பெரும்பாலான குழந்தைகளுக்கு தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றி அறிந்து கொண்டுள்ளனர் என்றால் அதை மறுக்கமுடியாது. இருந்தபோதிலும் போக்சோ சட்டம் பற்றி பள்ளி குழந்தைகள் எளிதில் தெரிந்துகொள்வதற்காக கேரள மாநில பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம் சேர்க்கப்படுகிறது.

    வருகிற கல்வியாண்டில் 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் பற்றிய பாடம் இடம்பெற உள்ளது. இந்த தகவலை கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார். அது பற்றி அவர் கூறியதாவது:-

    போக்சோ சட்டம் பற்றிய பாடம் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் கற்பிக்கப்படும். இது அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலும் சேர்க்கப்படும்.

    மேலும் 5 முதல் 10-ம் வகுப்பு வரை தொழிற்கல்வி சேர்க்கும் வகையில் பாடத்திட்டம் முழுமையாக திருத்தப்படும். 1,3,5,7,9 ஆகிய வகுப்பு பாடப் புத்தகங்களும் அடுத்த கல்வியாண்டில் மாற்றப் படும். 4,6,8,10 வகுப்புகளிலும் பாடத்திடம் அடுத்த ஆண்டு மாற்றப்படுகிறது.

    1-ம் வகுப்பில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் செயல்பாட்டு புத்தகங்கள் உள்ளன. ஆசிரியர்களுக்கான புத்தகங்களும் தயாராகி வருகின்றன. மேலும் நாட்டிலேயே முதன்முறையாக பெற்றோருக்கான புத்தகங்களும் தயாராகிறது.

    புதிய பாடத்திட்டத்தில் விளையாட்டு, கழிவு பிரச்சினை, தூய்மை, குடிமை உணர்வு, சமநீதியுடன் கூடிய பாலின விழிப்புணர்வு, அறிவியல் உணர்வு, விவசாயம், மதச்சார்பின்மை உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. பாட சாலைகள் திறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள மாநிலத்தில் இதற்கு முன்பு விரிவான பாடத்திட்ட திருத்தம் 2007-ம் ஆண்டு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.
    • இன்று திறக்கப்படும் அரசு பள்ளிகள் வருகிற 30-ந் தேதி வரை இயங்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரில் நடப்பு கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகிறது.

    கடந்த 23-ந் தேதியுடன் முழு ஆண்டு தேர்வு முடிந்து, சி.பி.எஸ்.இ. வழிகாட்டுதலின்படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.

    இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பெங்களூருவில் இருந்து என்.சி.ஆர்.டி. பாடபுத்தகம் வாங்கப்பட்டது. இந்த பாடபுத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் வாகனம் மூலம் தங்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று வருகின்றனர். மிக குறைவாகவும், ஒரு சில பாடங்களுக்கு பாடபுத்தகம் வராமலும் உள்ளது. 3,4,6-ம் வகுப்புகளுக்கு ஒரு பாடங்களுக்கு கூட புத்தகங்கள் வரவில்லை.

    இவற்றையும் உடனடியாக வாங்கி பள்ளி மாணவர்களுக்கு வழங்க கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. இன்று திறக்கப்படும் அரசு பள்ளிகள் வருகிற 30-ந் தேதி வரை இயங்கும். மே 1-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் 3-ந் தேதிமுதல் மீண்டும் பள்ளிகள் திறந்து செயல்படும்.

    • புதிய அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மறைக்கப்பட்டது.
    • 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு நடந்த வன்முறை பகுதி நீக்கப்பட்டுள்ளது.

    கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) பாட புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் 'முக்குவிமான கட்டிடம்' என்று குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

    கடந்த வாரம் வெளியான 12-ம் வகுப்புக்கான புதிய அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மறைக்கப்பட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து சமூகத்தாலும் கொண்டாடப்பட்டது என்று இடம்பெற்றுள்ளது.

    குஜராத்தில் இருந்து அயோத்தி வரை பாஜக நடத்திய ரதயாத்திரை, 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு நடந்த வன்முறை மற்றும் அதன் பின்பு பாஜக ஆளும் மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது போன்ற வரலாற்று தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

    இதற்கு முன்பு பழைய பாடப்புத்தகத்தில் 16 ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் பாபரின் நினைவாக அவரது தளபதி மீர் கட்டிய மசூதி தான் பாபர் மசூதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    தற்போது திருத்தப்பட்ட புதிய பாடப்புத்தகத்தில் 1528 ஆம் ஆண்டில் ராமர் பிறந்த இடத்தில முக்குவிமான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருந்தது என்று பாபர் மசூதி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முக்குவிமான கட்டிடத்தில் இந்து சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் 'மூன்று குவிமாடம் உடைய கட்டிடம்' என்று குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
    • பாபர் மசூதி இடிப்பு என்பது மிகப்பெரிய குற்றச்செயல் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) பாடப் புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் 'மூன்று குவிமாடம் உடைய கட்டிடம்' என்று குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

    கடந்த வாரம் வெளியான 12-ம் வகுப்புக்கான புதிய அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மறைக்கப்பட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து சமூகத்தாலும் கொண்டாடப்பட்டது என்று இடம்பெற்றுள்ளது.

    குஜராத்தில் இருந்து அயோத்தி வரை பாஜக நடத்திய ரதயாத்திரை, 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு நடந்த வன்முறை மற்றும் அதன் பின்பு பாஜக ஆளும் மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது போன்ற வரலாற்று தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

    இத்தகைய மாற்றங்கள் தொடர்பாக பேசிய என்.சி.இ.ஆர்.டி தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி, "இளம் மாணவர்களுக்கு கலவரங்களை கற்றுக் கொடுக்க வேண்டுமா? சமூகத்தில் அவர்கள் வெறுப்பை உருவாக்கவோ வெறுப்புக்கு ஆளாகவோ கற்றுக் கொடுக்க வேண்டுமா? வளர்ந்த பிறகு அவர்களே தெரிந்து புரிந்து கொள்வார்கள். கல்வியின் நோக்கம் வன்முறையைத் தூண்டுவதல்ல. எல்லா விஷயங்களும் பாடத்திட்டத்தில் இருக்க வேண்டியதில்லை" என்று தெரிவித்தார்.

    என்.சி.இ.ஆர்.டி தலைவரின் இந்த பொறுப்பற்ற பதில் சமூக வலைத்தளங்களில் கண்டனத்துக்கு உள்ளது. இது வரலாற்றை மறைத்து திரிக்கும் செயல் என்று விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஹைதராபாத் எம்.பி ஒவைசி, " பாபர் மசூதி இடிப்பு என்பது மிகப்பெரிய குற்றச்செயல் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் தெரிந்து கொள்ள வேண்டும். 1949 ஆம் ஆண்டு பாபர் மசூதி இழிவுபடுத்தப்பட்டு, 1992 ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டதை இந்தியாவில் உள்ள குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும். குற்ற செயல்களைக் கொண்டாடும் வகையில் குழந்தைகள் வளரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

    • 2020 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின்படி இந்திய அறிவுப் பாரம்பரியத்தை மாணவர்கள் அறியும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
    • 88 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பைத் தாமதம் இன்றி கல்லூரி நிர்வாகங்கள் விரைவில் வாங்க வேண்டும்

    2020 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின்படி இந்திய அறிவுப் பாரம்பரியத்தை மாணவர்கள் அறியும் விதமாக இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து உயர் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில்,பரிந்துரைக்கப்பட்ட 88 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பைத் தாமதம் இன்றி கல்லூரி நிர்வாகங்கள் விரைவில் வாங்கி அதைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

     

    பரிந்துரைக்கப்பட்ட அந்த 88 புத்தகங்களில், ஆர்எஸ்எஸ் தலைவர்களான சுரேஷ் சோனி, தினநாத் பத்ரா, டி. அதுல் கோதாரி, தேவேந்திர ராவ் தேஷ்முக், சந்தீப் வசேல்கர் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் அடங்கும். இவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்விப் பிரிவான வித்யா பாரதியில் அங்கம் வகித்தவர்கள் ஆவர்.

     

    இதைத்தவிர்த்து மாணவர்களுக்கு இந்த புத்தகங்கள் குறித்து விலகிச் சொல்ல, அனைத்து கல்லூரிகளிலும், பாரதிய கியான் பரம்பரா ப்ரக்சோதா [பாராபரிய அறிவை கற்றுத்தரும்] செல்களை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அம்மாநில பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிரிக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட ‘மிசா’ என்னும் நெருக்கடி நிலை ஆட்சி காலத்தை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார். #VenkaiahNaidu #Emergencysyllabus
    புதுடெல்லி:

    இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கடந்த 25-6-1975 அன்று உள்நாட்டு பாதுகாப்பின் பராமரிப்பு எனப்படும் கொடிய ‘மிசா’ சட்டம் கொண்டுவரப்பட்டது.

    இந்த சட்டத்தின்படி, வாஜ்பாய், அத்வானி, சந்திரசேகர் போன்ற நாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் மாநில கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வெளியே வர முடியாத நிலையில் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர்.

    பின்னர், 1997-ம் ஆண்டு மத்தியில் பொறுப்பேற்ற பா.ஜ.க. அரசு, 21 மாத காலம் நடைமுறையில் இருந்த இந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. மிசா சட்டத்தில் கைதாகி சிறை சென்றவர்களுக்கு ஒவ்வொரு மாநில அரசும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கி வருகின்றன.



    மிசா சட்டம் அமல்படுத்தப்பட்ட நாளை ஜனநாயகத்தின் இருண்ட தினமாக ஆண்டுதோறும் பா.ஜ.க.வினர் கடைபிடிக்கின்றனர். இதையொட்டி, நேற்று முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க.வினர் இந்த கருப்பு நாளை அனுசரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மிசா’ என்னும் நெருக்கடி நிலை ஆட்சி காலத்தை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

    நெருக்கடி காலத்தை பற்றி இந்தி, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி மொழிகளில் பிரசார் பார்தி தலைவர் சூர்ய பிரகாஷ் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய வெங்கய்யா நாயுடு, நெருக்கடி நிலை காலம் என்பது நமது வரலாற்றின் ஒரு பகுதி. அதை நாம் மறைத்துவிட முடியாது என குறிப்பிட்டார்.

    இந்திய ஜனநாயகத்தின் இருண்ட நாளான நெருக்கடி நிலையைப் பற்றி பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும். இதனால், நெருக்கடி நிலை என்றால் என்ன? அது எப்படி, ஏன் அமல்படுத்தப்பட்டது? என்பதை இந்த தலைமுறையினர் அறிந்துகொள்ள முடியும். இதைப்பற்றிய தெளிவை நாம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். #VenkaiahNaidu #Emergencysyllabus
    ‘சி.ஐ.சி.எஸ்.இ.’ என்று அழைக்கப்படுகிற இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் பாடத்திட்டத்தின் கீழான ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, ஐ.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (திங்கட்கிழமை) பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.
    புதுடெல்லி:

    ‘சி.ஐ.சி.எஸ்.இ.’ என்று அழைக்கப்படுகிற இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் பாடத்திட்டத்தின் கீழான ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, ஐ.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (திங்கட்கிழமை) பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    இந்த தேர்வு முடிவுகளை மாணவ, மாணவியர் CAREERS இணையதளத்தில் பார்க்கலாம்.

    மேலும் செல்போனில் குறுந்தகவல் வழியாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    குறுந்தகவல் வழியாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள விரும்புகிற மாணவ மாணவிகள், IC-SE அல்லது ISC என டைப் செய்து, தொடர்ந்து தங்களது 7 இலக்க ID Co-de -ஐ சேர்த்து, 092480 82883 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் குறுந்தகவலில் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

    இந்த தகவலை ‘சி.ஐ.சி.எஸ்.இ.’ தலைமை செயல் அதிகாரியும், செயலாளருமான ஜெர்ரி அராத்தூன் தெரிவித்து உள்ளார். 
    ×