என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209749"

    • ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி 29-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மேயர் மகேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    கவுன்சிலர் மீனாதேவுடன் செட்டி தெருவில் இருந்து தனது ஆய்வு பணியை தொடங்கினார். கணேசபுரம் ரோடு கேபி ரோடு உள்பட 29-வது வார்டுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மோட்டார் சைக்கிளில் சென்று நடந்து சென்றும் ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு இடங்களில் கழிவுநீர் ஓடைகள் சேதம் அடைந்து காணப்பட்டது

    அதை உடனடியாக சீரமைக்க அவர் உத்தரவிட்டார். மேலும் அலங்கார தரைக் கற்கள் சேதமடைந்து இருந்ததை சீரமைக்கவும் நடவடிக்கையை மேற்கொண்டார்.

    இதுகுறித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஒவ்வொரு வார்டாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். முதற்கட்டமாக சுகாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. 29-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. ஏற்கனவே போடப்பட்ட அலங்கார கற்கள் சேதமடைந்துள்ளது.

    ஆக்கிரமிப்புகள் பல இடங்களில் உள்ளது. வீடுகள் கடைகள் பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டி உள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் . மேலும் 29-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து கவுன்சிலரிடம் கேட்டு அறிந்து உள்ளேன்.

    சில இடங்களில் குடிநீர் தொட்டி சேதம் அடைந்து காணப்படுகிறது. அந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாத குடிநீர் தொட்டிகளை அகற்றவும் உத்தரவிட்டுள்ளேன்.

    நாகர்கோவில் மாநகராட்சி முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதற்கு கவுன்சிலர்கள் அனைவரும் மட்டுமின்றி பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார் .ஆய்வின் போது தி.மு.க. மாநகரச் செயலாளர் ஆனந்த் தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து செயற்பொறியாளரிடம் கேட்டறியப்பட்டது.
    • சானல் தூர்வாரும் பணியையும் பார்வையிட்டார்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பள்ளி கட்டிடங்களை மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார். சானல் தூர்வாரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதி களில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. நாகர் கோவில் மாநகராட்சிக்குட்பட்ட நாகர்கோவில் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் 20 ஆண்டு களுக்கு மேல் கட்டப்பட்ட வகுப்பறையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்த பகுதிகளை சீரமைக்குமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இடலாக்குடி அரசு தொடக்கப் பள்ளி வகுப் பறை கட்டிடத்தினை யும் பார்வையிட்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து செயற்பொறியாளரிடம் கேட்டறியப்பட்டது.

    ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட ஆத்திக்காட்டுவிளை ஊராட்சி, சீயோன்புரம் அரசு தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம், கணியாகுளம் ஊராட்சி புளியடி அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறை கட்ட டம், புத்தேரி அரசு தொடக் கப்பள்ளி கட்டடத்தினை ஆய்வு மேற்கொண்டு அக் கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து தலைமை யாசிரியர்கள், ஆசிரியர்கள், துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. வட கிழக்கு பருவமழை பெய்து வருவதால் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பழுதடைந்த கட்டிடங்களை விரைந்து சரிசெய்யவும், மிகவும் பழுதடைந்த கட்டிடங்களை உடனடியாக அப்புறப்ப டுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து தர்மபுரம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட் டத்தின்கீழ் அத்திக்கடை கால்வாயினை தூர்வாரும் பணியினை நேரில் பார் வையிட்டு, வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரை வீணாக்காமல் விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • 50 மாணவர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்- மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் ஆனந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் தோணுகால் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், வழங்கப்பட்டு வரும் காலை உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தனர்.

    பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர்களின் வருகை பதிவு, கல்வி கற்பிக்கும் முறை குறித்து கேட்டறிந்தும், சமையலறை கூடத்திற்கு சென்று உணவு சுகாதாரமாகவும், சுத்தமாகவும் சமைக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

    மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், ஜோகில்பட்டி கிராமத்தில் பயன்பெறும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று இந்த திட்டத்தின் பயன்கள், மருத்துவர்களின் வருகை, சிகிச்சை முறை, மருந்துகள் குறித்தும் கேட்டறிந்ததுடன், பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினர்.

    இரும்பு பெண்மணி திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களின் இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்ய இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கினர்.

    காரியாபட்டி ஊராட்சி சுரபி உண்டு, உறைவிடப் பள்ளியில் படிக்கும் நரிக்குறவர் சமுதாய மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, மாணவர்கள் மின்னணு தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் வகையில், அந்த பள்ளிக்கு மின்னணு தொலைக்காட்சியை வழங்கினார்கள்.

    மேலும் 50 மாணவர்க ளுக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    பின்னர், வளையங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பிரதமரின் சிறு, குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம்- 35 சதவீதம் மானியத்தில் பெறப்பட்ட கடனுதவி மூலம் செயல்பட்டு வரும் மோனா சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில், சிறுதானிய மற்றும் கேக் வகைகள் தயாரிக்கும் முறைகள், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    • மழை பாதிப்புள்ள பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • கண்மாய் வரத்துக்கால் கலுங்குத்துறை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், முத்தனேந்தல் உள்வட்டம், குவளைவேலி குருப், குவளைவேலி கண்மாய்க்கு தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமாகி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதையடுத்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில், குவளைவேலி கண்மாய் வரத்துக்கால் கலுங்குத்துறை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    மேற்கண்ட இடங்களில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்களுடன் கலுங்கில் இருந்த அடைப்பை தண்ணீர் வெளியேறும் வகையில் கிராமத்தினர் உதவியுடன் சரி செய்யபட்டது.

    மேலும், தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் மேற்கு புறத்தில் கருவக்குடி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குவளைவேலி கண்மாய் கழுங்கை அடைக்கக்கூடாது என குவளைவேலி கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவறுத்தப்பட்டு, குவளைவேலி கண்மாயின் நீர் நிலைமை, விளத்தூர் காலனி குடியிருப்பில் இருந்த வீடுகளைச் சுற்றி உள்ள தண்ணீர் ஆகியவை குறித்து கலெக்டர் ஆய்வு செய்து, அந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறி யாளர் (சருகனியாறு வடிநிலைக் கோட்டம்) பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், உதவிப் பொறியாளர்கள் செந்தில்குமார், பூமிநாதன், மானாமதுரை வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஜினிதேவி, சங்கர பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார்.
    • பழைய பள்ளிபாளையம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி ஆகிய பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

    குமாரபாளைம்:

    குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார். அவர் அறிவு சார் மையம், தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணி, கோம்பு பள்ளம் சீரமைப்பு பணி, பழைய பள்ளிபாளையம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி ஆகிய பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். வாரச்சந்தை சீரமைப்பு பணி, பேருந்து நிலைய சீரமைப்பு பணி, தூய்மை பணியாளர்கள் புதிய குடியிருப்பு கட்டுதல், பாதாள சாக்கடை திட்டம், 33 வார்டுகளில் வடிகால் மற்றும் தார்சாலை வசதி ஆகியவற்றிற்கான கோரிக்கை மனுவினை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் வழங்கினார். இந்த ஆய்வில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ராஜேந்திரன், கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • வளர்ச்சித் திட்ட பணிகள் நேரில் ஆய்வு செய்தார்
    • சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில், திருமானூர் ஒன்றியம், வாரணவாசி சமத்துவபுரத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.46.90 லட்சம் மதிப்பீட்டில் 95 வீடுகள் பழுது பார்க்கும் பணியையும், ரூ.12.54 லட்சம் மதிப்பீட்டில் 3 வீடுகள் மீண்டும் கட்டும் பணியையும், ரூ.27.06 லட்சம் மதிப்பீட்டில் 14 எண்ணிக்கையிலான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணியையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரம், பணிகள் தொடங்கிய காலம், திட்ட மதிப்பீடு, கட்டுமானப் பொருட்களின் விபரம் மற்றும் தரம், பணிகள் முடிவடையும் காலம் போன்றவை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பணிகளை தரமாகவும், சரியான நேரத்தில் செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக, அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட கலெக்டர் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் அரசின் திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன், தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுருத்தினார்.

    • மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.எம்.கருணாகரன் திருப்பூர் மாவட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆலம்பாளையத்தில் ரூ.20,000 மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு தெளிப்பான்களை வழங்கினார்.

    திருப்பூர் :

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர்- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.எம்.கருணாகரன் , மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.அந்த வகையில் குண்டடம் ஊராட்சி ஒன்றியம், புள்ளகாளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுவரும் காலை உணவினை ஆய்வு மேற்கொண்டு பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், கன்டியன் கோவில் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.0.807 லட்சம் மதிப்பீட்டில் ஆலம்பாளையத்தில் குட்டை தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு ரூ.20,000 மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு தெளிப்பான்களை வழங்கினார்.தொடர்ந்து, திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தினை ஆய்வு செய்தும், திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 மற்றும் மண்டலம்-4 ஆகிய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டுதிருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு இ-சேவை மையத்தின் மூலம் வழங்கப்படும் சாதிச்சான்றுகள், வருமானச் சான்றுகள், வாரிசு சான்றுகள் மற்றும் பட்டா மாறுதல் போன்ற சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு, புதிய வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர்-திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் பங்கேற்றார்.இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார்பாடி,திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன் , மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், துணை இயக்குநர் (வேளாண்மை ) சுருளியப்பன், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) சுரேஷ்ராஜா, திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
    • மாவட்ட கண்காணிப்பு அலுவர் மேற்கொண்டார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான அனில் மேஷ்ராம், கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பெரம்பலூர் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தையும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தையும், பாடாலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.1.45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அவர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பெரம்பலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

    • உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    • ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

     உடுமலை:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர்-மாவட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.எம்.கருணாகரன் தலைமையில், மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அந்த வகையில் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சின்னவீரம்பட்டி ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.81.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளி கட்டடத்தினையும், உடுமலைப்பேட்டை நகராட்சியில் ரூ.14லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நூலகம் கட்டடத்தினையும், பொதுநிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் தூர்வாரும் பணியினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.191 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்:13 யூ.கே.சி. நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் பொது அறிவு மையத்தினையும், தூய்மை பாரத் இயக்கத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பறை கட்டடம் கட்டும் பணியினையும்,

    உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாலப்பம்பட்டி ஊராட்சி கண்ணமநாயக்கனூரில் ரூ.108.27 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமத்துவபுரம் புனரமைக்கும் பணியினையும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தினையும், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவ முகாமினையும் ஆய்வு செய்தார்.

    மேலும் மருள்பட்டி ஊராட்சியில் பட்டுவளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.1.7 லட்சம் பட்டுப்புழு வளர்ப்பு கொட்டகை மற்றும் மல்பரி சாகுபடியையும், மொடக்குப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் கழிப்பறை கட்டடம் கட்டும் பணியினையும் மற்றும் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.444.82 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு, புதிய வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி (கிராம ஊராட்சிகள்), உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மக்காச்சோள தோட்டங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • பயிர்களை பாதுகாப்பது குறித்த தொழில் நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள வானரமுட்டியில் தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் மக்காச்சோளம் பயிரிடப்பட்ட விவசாயிகளின் தோட்டங்களில் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் வராமல் தடுப்பதற்கு, விதைப்பதற்கு முன் கோடை உழவு செய்தல், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுதல் ,தையோமீத்தாக்கம் 4 மில்லி மருந்தை ஒரு கிலோ விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்தல், சரியான இடைவெளியில் விதைத்தல், வரப்பு பயிராக நாற்றுச் சோளம் பயிரிடுதல் மூலமாகவும் விதைத்தவுடன் இனக்கவர்ச்சிப் பொறி வைத்தல், 15 முதல் 20 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு புழு பெண்டியாமைட் 5 மில்லி, 35 முதல் 40 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு மெட்டாரைசியம், அனிசோப்பிலே 80கிராம், 40 முதல் 60 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு மெக்டின்பென்சோயட் 4 கிராம்,60 நாட்களுக்கு மேல் வயது உடைய பயிர்களுக்கு நவலூரான் 10 மில்லி அல்லது ஸ்பிலோ டோராம் 5 மில்லி மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து படைப்புழு தாக்குதலில் இருந்து மக்காச்சோள பயிர்களை பாதுகாப்பது உள்ளிட்ட தொழில் நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.

    • பரிசல் ஓட்டிகள் மற்றும் மீன் வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • மாவட்ட பொருளாளர் தங்கமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    ஒகேனக்கல்,

    தருமபுரி கிழக்கு மாவட்டம் பென்னாகரம் தெற்கு ஒன்றியம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் காவிரியில் அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்படுவதை அடுத்து தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி நேரில் பார்வையிட்டு அங்குள்ள பரிசல் ஓட்டிகள் மற்றும் மீன் வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மடம்.முருகேசன் , மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் , மாவட்ட அவை தலைவர் செல்வராஜ் , மாவட்ட பொருளாளர் தங்கமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • ஆற்று நீர் தடையின்றி செல்ல தூண்களுக்கிடையே 21 மீ., இடைவெளியில் ஏழு கண்மாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • ரோட்டில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும், சில இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டும் உள்ளன.

    மடத்துக்குளம்:

    கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமராவதி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் உள்ளது. திருப்பூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இப்பாலத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்த பாலம் 1986ல், 12 தூண்களுடன் 152 மீ., நீளம், 10 மீ., அகலத்துடன் கட்டப்பட்டது. ஆற்று நீர் தடையின்றி செல்ல தூண்களுக்கிடையே 21 மீ., இடைவெளியில் ஏழு கண்மாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    பாலம் கட்டப்பட்ட போது, எதிர்பார்க்கப்பட்ட வாகன போக்குவரத்தையும் தாண்டி, வாகனங்கள் தற்போது அவ்வழியாக சென்று வருகின்றன.பயன்பாட்டுக்கு வந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் பாலத்தின் உறுதித்தன்மை குறித்துஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கனரக வாகனங்கள் பாலத்தை கடக்கும் போது பாலத்தில் அதிர்வுகள் ஏற்படுகின்றன.பாலத்தின் தடுப்பு சுவர்கள் பல இடங்களில் உடைந்துள்ளன. ரோட்டில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும், சில இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டும் உள்ளன.

    நடைபாதையில் உள்ள சிமென்ட் தளங்கள் பெயர்ந்து போயுள்ளன.தடுப்பு சுவரை ஒட்டி செடிகள் முளைத்துள்ளன. மேலும் பாலத்தின் இரு நுழைவாயிலை ஒட்டி அமைக்கப்பட்ட தடுப்புகள் சரிந்து புதருக்குள் மறைந்துள்ளது.இதனால் இரவு நேரத்தில், வாகன ஓட்டிகள் தடுமாற வேண்டியுள்ளது. போதிய எச்சரிக்கை பலகைகளும் இல்லை. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, அடிப்படை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×