என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள்"

    • நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றபோது தூக்கி வீசப்பட்டார்.
    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள சேரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜோசு (வயது 32), தொழிலாளி.

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பிள்ளையார் கோவிலில் இருந்து சேரமங்கலம் நோக்கி சென்றார். பெரிய குளத்தங்கரை பகுதியில் சென்ற போது, அங்கு ஓருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அவர் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஜோசு நிறுத்த முயன்றார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. மோட்டார் சைக்கிளில் இருந்து ஜோசுவும் தூக்கி வீசப்பட்டார்.

    விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் பலத்த காயம் அடைந்த ஜோசு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மோட்டார் சைக்கிள் மோதியதில் காயம் அடைந்தவர் பறையங்கோட்டையைச் சேர்ந்த பாலையன் (51) என தெரியவந்தது. அவர் சிகிச்சைக்காக திங்கள் நகரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்ப ட்டு உள்ளார். விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூவன்கோடு பகுதியில் செல்லும்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன.
    • விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே உள்ள அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 25), தொழிலாளி.

    இவர் மோட்டார் சைக்கி ளில் ஆற்றூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். பூவன்கோடு பகுதியில் செல்லும்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் விஜய் மற்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த செந்தறவிளை, ஆற்றூர் பகுதியை சேர்ந்த ஜாண் சாலமோன் (35), அவரது மனைவி ருயா, 5 வயது மகள் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

    அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஜான் சாலமோன் குடும்பத்தி னரை மீட்டு தனியார் ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் தலையில் காயம் அடைந்த விஜய் ஆசாரி ப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பல னின்றி இன்று காலை விஜய் பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடலை இன்று பிரேத பரிசோதனை செய்கி றார்கள். இது சம்மந்தமாக ஜாண்சாலமோன் கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகி றார்கள்.

    நாகர்கோவில் கீழ ஆசாரி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி குமார் ராஜ், டெய்லர். இவரது மகன் ஜெர்வின் ஸ்டார் (15). நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இவன், நேற்று விடுமுறை என்பதால் தனது தாயார் வேலை பார்த்து வரும் பழவிளை அருகே உள்ள கிளவுஸ் கம்பெனிக்கு தாயாரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றான்.

    தாயாரை அங்கு இறக்கி விட்டு அவன் நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் ரோட்டை கடந்து செல்லும் போது பருத்தி விளையில் இருந்து எறும்பு காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஜெர்வின் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெர்வின் ஸ்டார் பரிதாபமாக உயிரிழந்தான்.

    மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வேம்ப னூர் புளியடி காலனி பகுதியை சேர்ந்த மணி மகன் காட்வின் (20) அவரது நண்பர் புளியடி காலனியை சேர்ந்த ஆகாஷ் (16) ஆகியோர் முகம் மற்றும் கைகளில் லேசான காயங்களுடன் தப்பினர்.அவர்கள் இருவரும் ராஜாக்கமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் முதியவரின் பின்னால் மோதியது.
    • அங்கு சிகிட்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார். அவர் யார் ? எந்த இடத்தை சேர்ந்தவர் என தெரியவில்லை.

    கன்னியாகுமரி :

    புதுக்கடையில் இருந்து காப்புக் காடு செல்லும் சாலையில் (வயது 75) மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது குன்னத்தூர் பகுதி பொற்றவிளை என்ற இடத்தை சேர்ந்த கண்ணன் (48) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் முதியவரின் பின்னால் மோதியது.

    இதில் முதியவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிட்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார். அவர் யார் ? எந்த இடத்தை சேர்ந்தவர் என தெரியவில்லை.

    இது தொடர்பாக முஞ்சிறை கிராம நிர்வாக அலுவலர் அெலக்சாண்டர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    • முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயற்சி செய்யும் போது திடீரென பிரேக் போட்டதில் நிலை தடுமாறி சிவகுருநாதர் கீழே விழுந்தார்.
    • படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே ஆழ்வார் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவகுரு நாதர் (வயது51). பெயின்டர் வேலை செய்து வருகின்றார்.

    நேற்று மாலை சிவகுருநாதர் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் வரும் போது முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயற்சி செய்யும் போது திடீரென பிரேக் போட்டதில் நிலை தடுமாறி சிவகுருநாதர் கீழே விழுந்தார்.படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி எழில் நேச சந்தியா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • 4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மகன் ரமேஷ் (வயது 32)குளச்சலில் ஒரு கேஸ் ஏஜென்சி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் மதியம் ரமேஷ் மேற்கு நெய்யூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக தாய் ரெஜினாளை (55) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றார்.செம்பொன்விளை கடந்து பெத்தேல்புரம் கிணறு குற்றிவிளை வளைவில் செல்லும்போது வர்த்தான்விளையில் ஒரு திருமண வீட்டிலிருந்து 4 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    இந்த மோட்டார் சைக்கிள் எதிர்ப்பாராமல் நிலை தடுமாறி ரமேஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரெஜினாள் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.அப்பகுதியினர் இருவரையும் மீட்டு உடையார்விளையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குளச்சல் போலிசார் மோட்டார் சைக்கிளில் சென்ற 4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயமடைந்த சுரேஷ்கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
    • சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவினாசி :

    ஈரோடு மாவட்டம், புன்செய்புளிய ம்பட்டி சுல்தான் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் சுரேஷ்கிருஷ்ணா (24). இவா், அன்னூா் அருகே பொங்கலூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் புன்செய்பு ளியம்பட்டி யிலிருந்து அன்னூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். சேவூா், பெத்தநாயக்கன்பாளையம் அருகே வரும்போது, அன்னூரிலிருந்து, அந்தியூா் நோக்கி சென்ற லாரியும், இவரது இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து சேவூா் போலீஸாா் லாரியை ஓட்டி வந்த அந்தியூா், சின்னத்தம்பிபாளையம் புதுமேட்டூரைச் சோ்ந்த அருள் (26) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மங்கலத்தில் இருந்து தாராபுரம் நோக்கி கார் ஒன்று சென்றது.
    • திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மங்கலத்தில் இருந்து தாராபுரம் நோக்கி கார் ஒன்று சென்றது. பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் உள்ள கோவை - திருச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

    இந்தநிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து அக்கம்- பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் மீது கார் மோதும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பல்லடம் பகுதியில் வைரலாகி வருகிறது.

    • சேத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
    • படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ராஜபாளையம்,

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஜீவாநகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் காதர்ஒலி. இவரது மனைவி பஜ்ராள் பீவி (வயது 52). பஜ்ராள் பீவியின் தங்கை ரசீதா பீவி புளியங்குடியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    உடல்நிலை பாதித்திருந்த அவரை பார்ப்பதற்காக தனது மகன் முகமது அப்சல்கானுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று சென்றார்.அவரை பார்த்துவிட்டு மாலையில் தங்களின் வீட்டுக்கு இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    தென்காசி-ராஜபாளை யம் தேசிய நெடுஞ்சாலையில் தேவிபட்டினம் விலக்கு அருகே வந்து கொண்டி ருந்தபோது தனக்கு தலை சுற்றுவதாக மகனிடம் பஜ்ராள் பீவி கூறியுள்ளார்.இதையடுத்து முகமது அப்சல்கான் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றுள்ளார்.

    ஆனால் அதற்குள் பஜ்ராள் பீவி ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகி றார்.

    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தை சேர்ந்தவர் பிஜூ. இவரது மகன் லெஜி (வயது 20). இவர், ஆறுதெங்கன்விளையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் கல்லூரி முடிந்து மாலை புதுக்கடையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கிவிட்டு மறுநாள் காலை கல்லூரிக்கு வருவது வழக்கம்.

    சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து லெஜி வழக்கம்போல் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மணவாளக்குறிச்சி கடந்து பரப்பற்று சந்திப்பில் செல்லும்போது முன்னால் பெரியவிளையை சேர்ந்த மீன் பிடி தொழிலாளி வல்லேரியன் (48) மோட்டார் சைக்கிளை திடீரென வலதுபுறம் திருப்பினார். இதில் லெஜி பைக் மீது மோதியதில் இரு வரும் கீழே விழுந்து படு காயமடைந்தனர்.

    இதில் வல்லேரியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ராஜாக்கமங்கலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லெஜிக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அவர் அருகில் ஒரு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வல்லேரியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணவாளக்குறிச்சி அருகே பாணான்விளையை சேர்ந்தவர் ரெத்தினசுவாமி (வயது 73). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். சம்பவத்தன்று இவர் வீட்டு முன் உள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் ஒன்று ரெத்தினசுவாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரெத்தினசுவாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அவரது மகள் பிரதீபா (32) மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேர் படுகாயம் அடைந்தனர்
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே ஆர்சி தெரு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 48). அவருடைய நண்பர் அதே பகுதியை சார்ந்த பாஸ்கர்.

    இவர்கள் 2 பேரும் மார்த்தாண்டம் மார்க்கெட் டில் சுமை தூக்கும் தொழி லாளிகளாக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அதிகாலையிலே வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று அதிகாலை நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

    இரு சக்கர வாகனம் திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்தது.பேருந்து திருத்துவபுரம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நண்பர்கள் இருவரும் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் 2 பேரும் சாலை யில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் படுகா யமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் 2 பேரும் விபத்தில் சிக்கி படுகாய மடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 2021-ம் ஆண்டு டிசம்பர் 10-ந்தேதி வண்டி திருட்டு போனது.
    • செல்போனுக்கு நாகை போலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.

    தஞ்சாவூர் :

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வேட்டைக்குடி பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல்(வயது 40). விவசாய கூலி தொழிலாளி. இவர் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழியிடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி சிவப்பு நிறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கி ஓட்டி வந்தேன். 2021-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி இரவு விருத்தாச்சலம் காந்தி நகர் அருகே உள்ள சாவடி குப்பத்தில் உள்ள எனது அண்ணன் வீட்டின் எதிரில் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தேன்.

    மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது எனது மோட்டார் சைக்கிளை காணவில்லை. எனது மோட்டார் சைக்கிள் திருடு போனது குறித்து விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் நான் புகார் கொடுத்தேன்.

    இந்த நிலையில் கடந்த மாதம் எனது செல்போனுக்கு நாகை போலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதால் ரூ.100 அபராதம் கட்ட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தது.

    ஏற்கனவே மோட்டார் சைக்கிள் காணாமல் போனதால் மனவேதனையில் இருந்த நான் இந்த குறுந்தகவலை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இதனையடுத்து நான் எனது நண்பர்களுடன் நாகை மாவட்டத்திற்கு சென்று சில நாட்கள் எனது மோட்டார் சைக்கிளை தேடிப்பார்த்தேன்.

    அப்போது நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வருபவர் எனது மோட்டார் சைக்கிளை வைத்திருப்பதும், அவர் சிறுவன் ஒருவனுடன் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றது தெரிய வந்தது.

    அவர் போலீஸ்காரர் என்பதால் அவரிடம் எனது மோட்டார் சைக்கிள் குறித்து பேச பயமாக உள்ளது. எனவே தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து திருடு போன எனது மோட்டார் சைக்கிளை அந்த போலீஸ்காரரிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விசாரணை நடத்த டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
    • தீ வைத்ததற்கான காரணம் என்ன?என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள பரமார்த்தலிங்கபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் சுதாகர் (வயது35).இவர் மினி டெம்போ டிரைவர் ஆவார்.

    இவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் பழுதடைந்து விட்டதால்அந்த மோட்டார் சைக்கிளை கடந்த 16-ந்தேதி இரவு நேதாஜி காலனியில்நிறுத்திவிட்டு சென்றுஉள்ளார். மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அவர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் அந்த மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் அக்கம் பக்கத்தினர் தேடிப் பார்த்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சுதாகர் நேதாஜி காலனியில் உள்ள சுடுகாட்டில் சென்று பார்த்தார்.அப்போது அவரது மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து சாம்பலானநிலையில் காணப்பட்டது.

    இது பற்றி சுதாகர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    மேலும்அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர்.இதில் நேதாஜி காலனியைச் சேர்ந்த 7 பேர் அந்த மோட்டார் சைக்கிளை உருட்டி சென்று சுடுகாட்டில் வைத்து தீ வைத்து எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீசார் அந்த 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் நேதாஜி காலனியைச் சேர்ந்த வசந்தகுமார், அழகர், வசந்த், சுரேஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.

    இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கும்பல் மோட்டார் சைக்கிளை தீ வைத்ததற்கான காரணம் என்ன?என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×