என் மலர்
நீங்கள் தேடியது "ஜன்னல்"
- குமரி மணிமாறனுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- அப்போது 4 பேரும் அங்கு வந்து வீட்டு கதவை தட்டி உள்ளனர்.
கன்னியாகுமரி :
குளச்சல் சாஸ்தான்கரையை சேர்ந்தவர் குமரி மணிமாறன் (வயது 45).
சமூக ஆர்வலரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சந்தன குமார், சதன்வி, சங்கர், அனீஸ் ஆகியோருக்குமிடையே வெள்ளியாக்குளம் கோவில் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இரவு குமரி மணிமாறன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது 4 பேரும் அங்கு வந்து வீட்டு கதவை தட்டி உள்ளனர்.
தொடர்ந்து வெளியில் வந்த குமரி மணிமாறனுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் 4 பேரும் கற்களை எடுத்து வீசியதில் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாக குமரி மணிமாறன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 4 பேர் மீது வழக்குப்பதிவு செய் துள்ளனர்.
- பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக விமானத்தின் கதவை அடைத்த போது அது உள்பக்கமாக லாக் ஆகிவிட்டது.
- புகைப்படங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அமெரிக்காவில் சாண்டியாகோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சாக்ரமெண்டோவுக்கு செல்ல தயாராக நின்ற ஒரு விமானத்தில் ஜன்னல் வழியாக 'பைலட்' ஏறிக்குதித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த படத்தை எடுத்த மேக்ஸ் ரெக்ஸ்ரோட் என்ற பயணி, இது ஜோக் இல்லை, பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக விமானத்தின் கதவை அடைத்த போது அது உள்பக்கமாக லாக் ஆகிவிட்டது. எனவே வேறு வழியின்றி 'பைலட்' ஜன்னல் வழியாக விமானி அறைக்குள் ஏறிக் குதித்தார் என பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
- காவல்நிலையத்தில் உள்ள ஒரு ஜன்னலில் ஒருவர் கட்டிவைக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
- இந்த விவகாரம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சுனில் சரேயம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள முல்டாய் காவல்நிலையத்தில் உள்ள ஒரு ஜன்னலில் ஒருவர் கட்டிவைக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் போலீஸ் எஸ்பியை சந்தித்து புகார் அளித்தார்.
அவரது புகாரில், "நான் மல்டெய்ல் பேருந்து நிலையத்தில் தேநீர் மற்றும் சிற்றுண்டிக் கடை நடத்தி வருகிறேன். சில ஆட்களுக்கு முன்பு எனது கடையில் போதைப்பொருள் விற்பனை செய்தேன் என்று குற்றம் சாட்டி போலீசார் என்னை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு ஜன்னலில் என்னை கட்டி வைத்து போலீசார் அடித்தனர்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுனில் சரேயம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள எஸ்பி, விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- பெண்கள் கல்வி கற்கவும், பொது இடங்களுக்கு செல்லவும் தடை.
- பெண்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் பெண்கள் பொது இடங்களில் பாடுவதற்கும், கவிதைகள் வாசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தற்போது தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் பெண்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
சமையல் அறைகளில் , முற்றங்களில் வேலை செய்யும் பெண்களை பார்ப்பது ஆபாசமான செயல்களுக்கு வழி வகுக்கும் என அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளர் ஜபி ஹில்சா முசாஹித் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உள்ள வீடுகளில் ஜன்னல்கள் இருந்தால் அதனை மறைக்கும் விதத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும், புதிய கட்டிடங்களில் ஜன்னல்கள் இருக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்டை வீட்டாரிடம் இருந்து தொல்லையை தவிர்க்க சுவர் கட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிதாக கட்டப்படும் கட்டுமான தளங்களை பார்வையிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவின் சியாங் மாகாணத்தில் உள்ள ஹூனன் நகரில் 2 வயது குழந்தை வீட்டில் தனியாக இருந்தது.மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்து விட்டது. அவனது தலை கம்பிகளுக்கிடையில் சிக்கிக் கொள்ள அபாயகரமான நிலையில் குழந்தை தொங்கிக் கொண்டிருந்தது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் படிக்கட்டுகள் வழியே சென்றால் கால தாமதமாகி விடலாம் என்று எண்ணி கட்டிடத்தின் வெளிப்புற ஜன்னல்கள் வழியே படபடவென ஏறி சென்று குழந்தையை மீட்டார்.
முன்னாள் ராணுவ வீரரான அவர் மிகவும் தாழ்மையுடன், நான் ஒரு ராணுவ வீரன், இந்த நிலைமையில் எந்த ராணுவ வீரரானாலும் நான் செய்ததைத்தான் செய்திருப்பார் என்கிறார்.
ஷாங்கையும் சீன இணையதளம் ஒரு ஹீரோ என பாராட்டி, நீங்கள் எங்கள் சீன ஸ்பைடர்மேன் உங்களுக்கும் பரிசு கொடுக்க வேண்டும் என புகழாரம் சூட்டியுள்ளது. இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதேபோல் பிரான்ஸில் கசாமா என்ற வாலிபர் நான்காவது மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை மீட்டதற்காக பிரான்ஸ் குடியுரிமை பெற்றது நினைவிருக்கலாம்.