என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்கா"

    • ஜூன் 12-ந் தேதி சந்தனம் பூசம் நிகழ்ச்சி நடைபெறும்.
    • ஜூன் 19-ந்தேதி கொடியிறக்கம் நடைபெறும்.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உலக பிரசித்தி பெற்ற மஹான் சுல்தான் செய்யது இபுராகிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சந்தனக்கூடு திருவிழா நடைபெறும்.

    விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான யாத்திரீர்கள் வந்து செல்வது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு 849-ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக மே 21-ந் தேதி தர்கா மண்டபத்தில் தர்கா ஹக்தார்கள் முன்னிலையில் மவுலீது ஷரிப் (புகழ் மாலை) தொடங்கப்பட உள்ளது.

    அதனைத் தொடர்ந்து வருகிற 31-ந் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக்கொடி யானை மேல் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா ஜூன் 12-ந் தேதி மாலை தொடங்கி ஜூன் 13-ந் தேதி அதிகாலை மேள தாளங்களுடன் யானைகள் அணிவிக்க, நாட்டிய குதிரைகள் நாட்டிய மாட, சந்தனக்கூடு பவனி வர அனைத்து சமுதாயத்தினரும் அணிவகுக்க, தர்கா மக்பராவில் சந்தனம் பூசம் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதனை தொடர்ந்து ஜூன் 19-ந்தேதி நிறைவு நிகழ்ச்சியான அஸர் தொழுகைக்குப் பின் கொடியிறக்கம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு தப்ரூக் எனும் நெய் சோறு நேர்சை வழங்கப்பட்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நிறைவு பெறும்.

    இந்த தகவலை ஏர்வாடி தர்கா ஹக்தார் கமிட்டினர் தெரிவித்துள்ளனர்.

    • 12-ந்தேதி சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 13-ந்தேதி தர்காவுக்கு சந்தனக்கூடு வந்தடையும்.
    • 19-ந்தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறும்.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுல்தான் செய்யது இபுராகிம் பாதுஷா ஷஹுது ஒலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஒருமைப்பாட்டு விழாவாக, ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள், ஹக்தார் கமிட்டியினர் நடத்தி வருகின்றனர்.

    இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்கப்பட்டது.

    உலமாக்கள், தர்கா ஹக்தார்கள் ஒன்றிணைந்து தர்கா மண்டபத்தில் மாவட்ட தலைமை அரசு காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் உலக அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு துஆ ஓதினர். தொடர்ந்து கடந்த 30-ந் தேதி மாலையில் தர்கா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்பட்டது.

    நேற்று ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை 4 மணிக்கு கொட்டும் முழக்கங்களுடன் குதிரை நாட்டியத்துடன் யானை மீது கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்தது. இரவு 7 மணிக்குமேல் நாரே தக்பீர் என்ற முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 12-ந்தேதி மாலை மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 13-ந்தேதி அதிகாலை தர்காவுக்கு சந்தனக்கூடு வந்தடையும்.

    பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். 19-ந்தேதி கொடியிறக்கத்துடன், யாத்ரீகர்களுக்கு நேர்ச்சை வழங்கப்பட்டு விழா நிறைவு பெறும்.

    இந்த விழாவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வதால் தர்கா பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் எஸ்.முகம்மது பாக்கிர் சுல்தான் தலைமையில், செயலாளர் எஸ்.செய்யது சிராஜ்தீன், துணை தலைவர் ஜெ.சாதிக் பாட்சா மற்றும் ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.

    • ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழா கொடியேற்றத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    • போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுல்தான் செய்யது இபுராகிம் பாதுஷா ஷஹுது ஒலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஒருமைப்பாட்டு விழாவாக, ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள், ஹக்தார் கமிட்டியினர் நடத்தி வருகின்றனர்.

    இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்கப் பட்டது.

    உலமாக்கள், தர்கா ஹக்தார்கள் ஒன்றிணைந்து தர்கா மண்டபத்தில் மாவட்ட தலைமை அரசு காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் உலக அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு துஆ ஓதினர். தொடர்ந்து கடந்த 30-ந் தேதி மாலையில் தர்கா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்பட்டது.

    கொடியேற்றம் நேற்று ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை 4 மணிக்கு கொட்டும் முழக்கங்களுடன் குதிரை நாட்டியத்துடன் யானை மீது கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்தது.

    இரவு 7 மணிக்குமேல் நாரே தக்பீர் என்ற முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 12-ந்தேதி மாலை மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 13-ந்தேதி அதிகாலை தர்காவுக்கு சந்தனக்கூடு வந்தடையும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.

    19-ந்தேதி கொடியிறக்கத்துடன், யாத்ரீகர்களுக்கு நேர்ச்சை வழங்கப்பட்டு விழா நிறைவு பெறும். இந்த விழாவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பல்லாயி ரக்கணக்கானோர் கலந்து கொள்வதால் தர்கா பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.

    ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் எஸ்.முகம்மது பாக்கிர் சுல்தான் தலைமையில், செயலாளர் எஸ்.செய்யது சிராஜ்தீன், துணை தலைவர் ஜெ.சாதிக் பாட்சா மற்றும் ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.

    ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகிற 13-ந்தேதி(செவ்வா ய்க்கிழமை) உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் 24-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப் படுவதாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • யாசின் மவுலானா இறையடி சேர்ந்த தினமான கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.
    • சிறப்புத்துவா ஓதி வழிபாடு நடைபெற்றது.

    சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் வம்சாவழி பேரன் ஜமாலியா சையது யாசின் மவுலானா தர்கா அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஆன்மிக குருவாக விளங்கிய இவர் இந்தியா மற்றும் கீழ்திசை நாடுகளில் இஸ்லாமிய ஆன்மிகத்தை பரப்பியவர்.

    இறுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசலில் 1964-ம் ஆண்டு நல்லடக்கம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தர்கா அமைத்து வழிபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் யாசின் மவுலானா இறையடி சேர்ந்த தினமான கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் தஞ்சை, சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, லண்டன், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் மவுலானாவின் கலிபாக்கள், சீடர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் இன்று விமர்சையாக நடைபெற்றது. சந்தன குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சையது மவுலானா சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்புத்துவா ஓதி வழிபாடு நடைபெற்றது. மேலும் மத நல்லினக்கத்தையும் ஒற்றுமையையும் வெளிபடுத்தும் விதமாக அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    • 19-ந்தேதி கந்தூரி விழா தொடங்குகிறது.
    • 21-ந்தேதி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் வருகிற 19-ந்தேதி சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப்பின் கந்தூரி விழா தொடங்குகிறது.

    தொடர்ந்து வருகிற 21-ந்தேதி அன்னாரின் புனித சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவையொட்டி நேற்று சந்தனம் அரைக்கும் பணி நாகூர் தர்காவில் தொடங்கியது.

    இந்த பணி நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகளால் துவா ஓதப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.

    • ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.
    • 19-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் அன்னதானம் வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள அல் குத்பு சுல்த்தான் செய்யது பாதுஷா நாயகம் ஷஹீது ஒலியுல்லாஹ் (ரலி) அவர்களின் தர்காவில் கடந்த மாதம் மே 21-ந்தேதி மவுலுது (புகழ்மாலை) ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா தொடங்கியது. நேற்று மாலை யானை, 21 குதிரை ஊர்வலத்துடன் சென்று தர்காவில் போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதிகாலை ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு தர்கா வந்தடைந்தது. தர்காவை 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையை மாவட்ட காஜி சலாஹுத்தீன் ஓதினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான், நவாஸ் கனி எம்.பி., மாவட்ட பா.ஜனதா தலைவர் தரணி முருகேசன் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ஏர்வாடி சந்தனக்கூடு உருவாக்குவதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்பதால் ஆண்டுதோறும் மத நல்லிணக்க விழாவாக கொண்டாடி வருகின்றனர். காலை 6 மணிக்கு மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்கா வளாகத்தை வந்தடைந்தது.

    தற்போது தர்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர். முன்ன தாக தர்கா ஹக்தார்கள் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசி, போர்வையை போர்த்தினர். அதன் பின் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கினர்.

    மதுரை, கோவை, திருச்சி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வருகிற 19-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் அன்னதானம் வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    • ஜூலை 5-ந்தேதி மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை சந்தனக்கூடு விழா ஊர்வலம் நடைபெறுகிறது.
    • ஜூலை 5-ந்தேதி பிற்பகல் பகல்கூடு நடைபெற உள்ளது.

    பெரியபட்டினத்தில் புகழ்பெற்ற மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா உள்ளது. 122-ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு விழாவையொட்டி வருகிற 25-ந்தேதி மாலை தர்கா வளாகத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் 5-ந்தேதி மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை சந்தனக்கூடு விழா மற்றும் ஊர்வலம் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் பகல்கூடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை சந்தனக்கூடு விழா கமிட்டியினர் அனைத்து சமுதாய மக்கள் செய்து வருகின்றனர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

    • சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு கொடி இறக்கம் நடைபெற்றது.
    • ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டு நேர்ச்சைகளை நிறைவேற்றினர்.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் பாதுஷா ஷஹுது ஒலியுல்லாஹ் தர்காவில் கடந்த 12-ந்தேதி சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது. விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டு நேர்ச்சைகளை நிறைவேற்றினர். கடந்த 13-ந் தேதி திருவிழா முடிவடைந்தது.

    அதனை தொடர்ந்து நேற்று மாலை 5.30 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் டவுன் காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் உலமாக்கள் முன்னிலையில் உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு கொடி இறக்கம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களுக்கும் நேர்ச்சையாக நெய்சோறு வழங்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

    விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையின் தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், துணைத்தலைவர் சாதிக் பாட்ஷா ஆகியோர் தலைமையில் தர்கா அக்தார் நிர்வாக சபையினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் ஏராளமான போலீசார் செய்திருந்தனர்.

    • கந்தூரி விழா ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    • 3 நாட்களுக்கு தர்கா உட்புறம் மவுலூது நடைபெறும்.

    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் ஆண்டகையின் கந்தூரி விழா ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா நேற்று தொடங்கியது. துல்ஹஜ்ஜூ பிறை என்பதால் அலங்கார வாசல் முன்பு தொட்டில் பந்தல் அமைக்கப்பட்டது.

    வியாபாரிகள் மற்றும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக காணிக்கை பொருட்களை அந்த தொட்டில் பந்தலில் கட்டினர். 3 நாட்களுக்கு தர்கா உட்புறம் மவுலூது நடைபெறும்.

    வருகிற 21-ந்தேதி மாலை சின்ன ஆண்டவர் சாமதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், இரவு தர்கா அலங்கார வாசலில் இருந்து பூகலேபு ஊர்வலம் புறப்படும்.

    இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேனேஜிங் டிரஸ்டி மற்றும் போர்டுஆப் டிரஸ்டிகள் செய்துவருகின்றனர்.

    • கீழக்கரை வலியுல்லாஹ் தர்கா கொடியேற்று விழா நடந்தது.
    • மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெரு ஓடைக்கரை பள்ளி ஜமாத்திற்கு உட்பட்ட மஹான் 18 வாலிபர்கள் ஷஹீத் வலியுல்லாஹ் தர்காவில் 849-ம் ஆண்டு கொடி யேற்று விழா நடைபெற்றது.

    கீழக்கரை புதுப் பள்ளி கதீப் மன்சூர் நூரி ஆலிம், ஜமாஅத் உலமா பெருமக்கள் ஆரிப் அன்வாரி ஆலிம், அப்துல் சலாம் பாக்கவி ஆலிம், கலீல் ரஹ்மான் ஆலிம், முகம்மது அஸ்லம் ஆலிம் ஆகியோர் கலந்து கொண்டு உலக நன்மைக் காக சிறப்பு பிராத்தனை செய்தனர். இதையடுத்து தக்பீர் முழக்கத்துடன் கொடியேற்றம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் ஜமாஅத் பிரமுகர்கள் அப்துல் ஜப்பார், சிக்கந்தர் பாட்சா, சாகுல் ஹமீது என்ற ஹாஜா, கீழக்கரை புரவலர்கள் சீனாதானா செய்யது அப்துல் காதர், சதக் அப்துல் காதர் மற்றும் கீழக்கரை நகர துணை சேர்மன் ஹமீது சுல்தான் ஆகியோர் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்ட னர்.

    கீழக்கரை ஒடைக்கரைப் பள்ளி நிர்வாக கமிட்டி உறுப்பி னர்கள் சீனி முஹம்மது, பசீருதீன், ஹாஜா, ராசிக் பரீத், சபிர்கு ஆகியோரும் 18 ஷுஹதாக்கள் ஜகாத் கமிட்டி உறுப்பினர்கள் ஹபீப் முஹம்மது சுஐபு, சுல்த்தான், யூசுப் அமீன், ஹபீப் முஹம்மது நெய்னா, குத்புதீன் ஆகியோரும், பாஹிர்தீன் தலைமையி லான எம். ஆர். எப், இளை ஞர் குழுவும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தி ருந்தனர்.

    ஜமாஅத்தை நிர்வகிக்கும் கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க தலைவர் யூசுப் சாஹிப், சங்க உறுப்பினர்கள், மற்றும் சங்க மேலாளர் அப்துல் ரசாக் உட்பட அனைவரும் விழா சிறப்புற நடைபெறுவதற்கு ஆலோசனை வழங்கினர்.நகர் மன்ற உறுப்பினர்கள், நகர பிரமுகர்களும் கீழக்கரை அனைத்து ஜமா அத்தை சேர்ந்த பிரமுகர்கள், அரூஸ்யா பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கீழக்கரை காவல் துறையினர் சிறப்பாக செய்தனர்.

    18 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிரார்த்தனை நிகழ்வில் தினமும் இரவு மவ்லிது ஓதி நார்சா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 5 மற்றும் 6-ந்தேதிகளில் சந்தனக்கூடு திருவிழா மற்றும் கந்தூரி விழா நடைபெறுகிறது.
    • ஜூலை 14-ந்தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது.

    பெரியபட்டினத்தில் புகழ்பெற்ற மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு மதநல்லிணக்க சந்தனக்கூடு கந்தூரி விழாவையொட்டி தொடக்க நிகழ்ச்சியாக கொடியேற்றம் நடைபெற்றது. இதற்காக ஜலால் ஜமால் பள்ளி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    குதிரைகள் நடனம், வாணவேடிக்கையுடன் தர்காவை மூன்று முறை வலம் வந்த பின்பு தர்கா மினராவில் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மவுலீது ஓதப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பெரியபட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து மதத்தினர் திரளாக கலந்து கொண்டனர். வருகிற ஜூலை 5 மற்றும் 6-ந்தேதிகளில் சந்தனக்கூடு திருவிழா மற்றும் கந்தூரி விழா நடைபெறுகிறது. ஜூலை 14-ந்தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் ஹாஜா நஜ்புதீன், துணை தலைவர்கள் சிராஜுதீன், இக்மத், சாகுல் ஹமீது, செயலாளர் ஹபிபுல்லா, விழா அமைப்பாளர் அப்துல்மஜீத், பொருளாளர் சகுபர்சாதிக், தொழில் அதிபர் சிங்கம்பஸீர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியாக கட்டிடங்கள் இடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    • சஹாரன் பூர் மேம்பாலத்துக்காக சாலையை விரிவுபடுத்த கோவில் மற்றும் தர்கா அகற்ற வேண்டி இருந்தது.

    புதுடெல்லி:

    டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள பகுஜன் புராவில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து சாலையில் இருந்த கோவில் மற்றும் தர்கா கட்டிடங்களை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி இன்று காலை பஜன்புரா மெயின் ரோட்டில் கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

    இதில் அனுமன் கோவில் மற்றும் தர்கா உள்ளிட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. போலீசார், துணை ராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    போலீசார் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறையினர் கட்டிடங்களை அகற்றினர். எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியாக கட்டிடங்கள் இடிக்கப்பட்ட தாக போலீசார் தெரிவித்தனர்.

    கோவில் மற்றும் தர்காவை அகற்ற இரு தரப்பினரிடமும் பொதுப் பணித்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி சம்மதத்தை பெற்ற பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது.

    இதுகுறித்து டெல்லி வட கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் ஜாய் டிர்கி கூறும்போது, 'பஜன்புரா பகுதியில் அமைதியான முறையில் கோவில் மற்றும் தர்கா அகற்றப்பட்டன. சஹாரன் பூர் மேம்பாலத்துக்காக சாலையை விரிவுபடுத்த கோவில் மற்றும் தர்கா அகற்ற வேண்டி இருந்தது.

    இதுதொடர்பாக இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டன. உள்ளூர் தலைவர்கள் சிறிது கால அவகாசம் கேட்டனர்.

    அதன்பின் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இரு மத கட்டமைப்புகளும் அனைவரின் ஒத்துழைப்போடு அகற்றப்பட்டன. அக்கட்டிடங்கள் அகற்றப்படுவதற்கு முன்பு பூஜைகள் செய்தனர்' என்றார்.

    ×