என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய உள்துறை அமைச்சகம்"
- அலிபிரி சோதனை சாவடி வழியாக வியாபாரிகள் மதுபானம் மற்றும் கஞ்சா கடத்திச் சென்று பிடிபட்டனர்.
- கோடைகால விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்தினம் மேற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த ஜனவரி 20-ந் தேதி பாதுகாப்பு விதிமுறைகளை மீறி முட்டை பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகள் திருப்பதி மலைக்கு கொண்டு செல்லப்பட்டன
மார்ச் மாதத்தில் அலிபிரி சோதனை சாவடி வழியாக வியாபாரிகள் மதுபானம் மற்றும் கஞ்சா கடத்திச் சென்று பிடிபட்டனர். ஏப்ரல் 10-ந் தேதி தடையை மீறி கோவிலுக்கு அருகில் டிரோன் ஒன்று பறந்தது.
இது பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது உள்ளிட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து திருப்பதி எம்.பி. புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் பஹல் காமில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனர். இதன் காரணமாகவும் திருப்பதி கோவிலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கைத் விடுத்துள்ளது.
கோவிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் அலிபிரியில் தீவிர சோதனைக்கு பிறகு மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
கோடைகால விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அலிபிரி சோதனை சாவடியில் காலை 8 மணி முதல் 12 மணி வரை வாகனங்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் ஆர்ச் வரை காத்துக் நின்றன. போதிய அளவு வாகன சோதனை செய்யும் பாதுகாப்பு படையினர் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருப்பதியில் கடும் வெயில் கொளுத்தி வருவதால் பக்தர்களிள் வாகனங்கள் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
- அவுரங்காபாத் நகர் இனி சத்ரபதி சம்பாஜி நகர் என்று அழைக்கப்படும்.
- மராட்டியத்தில் உள்ள உஸ்மான்பாத் நகரின் பெயரும் தர்சிவா என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுரங்காபாத்:
மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதுபற்றி அந்த மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது.
அதை ஏற்றுக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து அவுரங்காபாத் நகர் இனி சத்ரபதி சம்பாஜி நகர் என்று அழைக்கப்படும்.
இந்த தகவலை துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்நாவிஸ் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். மராட்டியத்தில் உள்ள உஸ்மான்பாத் நகரின் பெயரும் தர்சிவா என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்திற்கு வெள்ளத்தடுப்பு திட்டத்திற்காக முதல் தவணையாக இதே தொகை வழங்கப்பட்டுள்ளது.
- ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு 493.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.
லட்சக்கணக்கான வீடுகள் இன்னும் தண்ணீருக்குள் உள்ளன. 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக பாதிப்பை சந்தித்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்துள்ளன.
பால், குடிநீர் பற்றாக் குறையால் மக்களிடம் கடும் தவிப்பு நிலவுகிறது. வாகனப் போக்குவரத்து இன்று முதல் 90 சதவீதம் இயங்கத் தொடங்கியுள்ளது.
பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினார். வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அரசு எந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீர் செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிகமான மழை பெய்ததாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
எனவே தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி தொகையை உடனே வழங்க வேண்டும் என்று அதில் உதவி கேட்டிருந்தார்.
இந்த கடிதத்தை டி.ஆர்.பாலு எம்.பி. இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்கினார். அப்போது பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புயல் சேத விவரங்களை கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு முதல் கட்டமாக ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
மாநில பேரிடர் நிவாரண நிதியின் 2-வது தவணையில் மத்திய அரசின் பங்கான ரூ.450 கோடியை முன்கூட்டியே மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-
மிச்சாங் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகள் வேறுபட்டாலும் இரு மாநிலங்களிலும் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநில அரசுகளுக்கு உதவ பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியின் 2-வது தவணை தொகையை முன்கூட்டியே வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்துக்கு ரூ.450 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த இரு மாநிலங்களுக்கும் ஏற்கனவே முதல் தவணை தொகை வழங்கப்பட்டு உள்ளது. புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர நான் பிரார்த்திக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.
விரைவில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதேபோல் முதல் முறையாக சென்னைக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்திற்கு ரூ.561.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமித்ஷா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடந்த 8 ஆண்டுகளில் 3-வது பெரிய வெள்ளத்தை எதிர் கொண்டு உள்ளது. அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்திற்கு தேசிய பேரிடர் தடுப்பு நிதியத்தின் கீழ் சென்னைக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள நடவடிக்கைகளுக்கு ரூ.561.29 கோடி ஒதுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதில் மத்திய அரசு உதவியாக ரூ.500 கோடி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் சென்னை மழை வெள்ளத்தை சமாளிக்க கூடியதாக மாற உதவும். நகர்ப்புற வெள்ளத் தடுப்பு முயற்சியில் இது முதன்மையானது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
மாநில பேரிடர் நிதியின் கீழ் ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை நகர்புற வெள்ள தடுப்பு நிதியாக ரூ.561.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் மத்திய அரசு ரூ.1011.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- டிசம்பர் 13 சம்பவம் பெரும் பாதுகாப்பு குறைபாடாக விமர்சிக்கப்பட்டு வருகிறது
- தேச பாதுகாப்பிற்கான பல முக்கிய அலுவல் கட்டிடங்களை சிஐஎஸ்எஃப் காத்து வருகிறது
கடந்த டிசம்பர் 13 அன்று மக்களவைக்கு உள்ளே இருவர், பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவை மையப்பகுதியில் குதித்து, கோஷங்களை எழுப்பியவாறு, தங்கள் காலணிகளில் மறைத்து வைத்திருந்த வர்ண புகை எழுப்பும் குப்பிகளை வீசி வெடிக்க செய்தனர்.
அவைக்கு வெளியேயும் இருவர் (1 ஆண், 1 பெண்) இதே போன்று கோஷங்களை எழுப்பி, புகை குப்பிகளை வீசினர்.
நால்வரையும் கைது செய்த டெல்லி காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
மத்திய அரசிற்கு பெரும் தலைக்குனிவாகவும், பெரும் பாதுகாப்பு குறைபாடாகவும் கருதப்பட்ட இந்த சம்பவம் அரசியல் கட்சி தலைவர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து விசாரித்து வந்த நிலையில், பாராளுமன்றத்தின் ஒட்டு மொத்த பாதுகாப்பு பொறுப்பை இனி டெல்லி காவல்துறையிடமிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் சிஐஎஸ்எஃப் பல மத்திய அரசாங்கங்களின் அலுவலகங்கள், அணு சக்தி மைய வளாகங்கள், விண்வெளி தளங்கள், சிவில் விமான தளங்கள், டெல்லி மெட்ரோ உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.
தற்போது உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பாராளுமன்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஒரு ஆய்வை சிஐஎஸ்எஃப் நடத்தி வருகிறது.
விரைவில் முழு பாதுகாப்பு பொறுப்பும் சிஐஎஸ்எஃப் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. இதன் பாதுகாப்பு வளையத்தில் புதிய மற்றும் பழைய பாராளுமன்ற கட்டிங்களின் மொத்த இடங்களும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த இறுதி முடிவு வரும் நாட்களில் எடுக்கப்படும்.
- நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சவால் விடும் வகையில்,
- செயல்படுவது கண்டறியப்பட்டால், சட்டப்பூர்வ கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்- அமித் ஷா
ஜம்மு-காஷ்மீரில் இயங்கி வந்த ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (தீவிரவாத குற்றச்செயல் நடவடிக்கை குற்றச்சாட்டில் ஜெயிலில் இருக்கும் யாசின் மாலிக் தலைமையில் இயங்கி வந்த அமைப்பு), காஷ்மீர் மக்கள் விடுதலை லீக் மற்றும் இந்த அமைப்பில் இருந்து பிரிந்து செயல்படும் நான்கு அமைப்புகள் ஆகியவற்றை தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, "நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சவால் விடும் வகையில் செயல்படுவது கண்டறியப்பட்டால், சட்டப்பூர்வ கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (முக்தார் அகமகது வாஜா), ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (பாஷீர் அகமது டோட்டா), ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (குலாம் முகமது கான்), யாகூப் ஷேக் தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (அஜிஸ் ஷேக்) ஆகிய அமைப்புகளுக்கு தனித்தனியாக தடை செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், முகமது யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி சட்டவிரோதமான அமைப்பு என மேலும் ஐந்து வருடத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அமித் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் மூலம் ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத்தை ஊக்குவித்த காரணத்திற்கான ஜம்மு-காஷ்மீர் மக்கள் விடுதலை லீக் அமைப்புக்கு ஐந்து வருட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களையும், அமைப்புகளையும் மோடி அரசு காப்பாற்றாது" எனத் தெரிவித்துள்ளார்.
- விசாரணைக் கைதிகள் குற்றத்திற்கான தண்டனையில் பாதியளவு அனுபவித்திருந்தால் ஜாமின் வழங்க வேண்டும்.
- தொடர்புடைய நீதிமன்றத்தில் சிறை அதிகாரிகள் கைதிகளை விடுவிக்க அணுக வேண்டும்.
மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படாத குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி, அந்தக் குற்றத்திற்காக குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சிறைத் தண்டனையில் பாதியை ஏற்கனவே அனுபவித்திருந்தால், அவரை விடுவிக்க வேண்டும் என்பதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் சிறைகளில் கூட்ட நெரிசல் குறையும் எனத் தெரிவித்துள்ளது.
அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சிறைச்சாலை இயக்குநர் ஜெனரல்களுக்கு அனுப்பிய கடிதத்தில், பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (BNSS) இன் பிரிவு 479-ன் விதிகளின் கீழ், அத்தகைய தகுதியுள்ள கைதிகளை விடுவிக்க சிறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
BNSS-ன் பிரிவு 479, ஒரு நபர் எந்தவொரு சட்டத்தின் கீழும் ஒரு குற்றத்தின் விசாரணை அல்லது விசாரணையின் போது (அந்தச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றமாக குறிப்பிடப்படாத குற்றமாக இருக்கும் பட்சததில்) அந்தக் குற்றத்திற்காகக் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச சிறைத்தண்டனைக் காலத்தில் பாதி காலம் வரை காவலில் வைக்கப்பட்டிருந்தால், அவர் நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று கூறுகிறது.
முதல் முறை குற்றவாளிகள் விஷயத்தில், அந்த குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சிறைத்தண்டனைக் காலத்தில் மூன்றில் ஒரு பங்கு வரை காவலில் இருந்திருந்தால், அத்தகைய கைதிகள் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்படுவார்கள்.
மேலும், BNSS-ன் பிரிவு 479 (3) மேற்கூறிய விசாரணைக் கைதிகளை ஜாமினில்/பிணையில் விடுவிப்பதற்காக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்ய சிறை கண்காணிப்பாளருக்கு ஒரு குறிப்பிட்ட பொறுப்பை வழங்குகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 16, 2024 அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டதாகவும், தகுதியுள்ள அனைத்து கைதிகளுக்கும் BNSS-ன் பிரிவு 479-ன் விதிகளின் பலனை வழங்கவும், அதன்படி அவர்களின் ஜாமின் விண்ணப்பங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் இதே கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
- 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளை நியமித்த விஜய், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதுதவிர த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து 2 நாட்களாக பல்வேறு ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவையும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கட்சி பணிகளில் மும்முரம் காட்டி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர் என்றும் இந்த 'Y' பிரிவு பாதுகாப்பானது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
- தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
- புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கு தற்போது z பாதுகாப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைத்துறை விஐபிகள் வரை வெவ்வேறு நிலை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 1960களில் நக்சல் பிரச்சனை ஏற்பட்டபோது இந்த பாதுகாப்பு முறைகள் தொடங்கப்பட்டன.
புலனாய்வுத்துறை ஒருவரின் பாதுகாப்பு அச்சுறுத்தலை மதிப்பிட்டு, அதுபற்றிய அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அச்சுறுத்தலின் தன்மைக்கு ஏற்ப X, Y, Y+, Z, Z+ மற்றும் சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) என 6 வகையான பாதுகாப்பு வழங்கப்படுகின்றன.
SPG:
பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஒரு சிறப்பு பாதுகாப்புப் பிரிவாக SPG உள்ளது. 1985 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்த அமைப்பு உருவானது. பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் திறமை வாய்ந்த சுமார் 3,000 பயிற்சி பெற்ற காவலர்கள் SPG கொண்டுள்ளது.
Z-பிளஸ் மற்றும் Z பிரிவு:
அதிக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நபர்களுக்கு Z-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதில் CRPF கமாண்டோக்கள் மற்றும் தேவைப்பட்டால், தேசிய பாதுகாப்பு காவலர் (NSG) கமாண்டோக்கள் உட்பட குறைந்தது 55 காவலர்கள் ஈடுபடுத்தப்படுவர். Z-பிளஸ் பாதுகாப்பில் பயணத்தின்போது குண்டு துளைக்காத வாகனம் மற்றும் ஆயுதம் தாங்கிய எஸ்கார்ட் பாதுகாப்பு வானங்களும் அடங்கும்.
Z-பிளஸை விட சற்று குறைவான பாதுகாப்பை வழங்குவது Z-பிரிவு. கமாண்டோக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை இணைத்து 22 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர். பாபா ராம்தேவ் மற்றும் நடிகர் அமீர் கான் போன்ற நபர்களுக்கு இந்த பாதுகாப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கு தற்போது z பாதுகாப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Y-பிளஸ் மற்றும் Y பிரிவு
Y பிளஸ் பிரிவு பொதுவாக மிதமான ஆபத்தில் உள்ளதாகக் கருதப்படும் நபர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. பாலிவுட் நட்சத்திரம் மற்றும் மக்களவை எம்பி கங்கனா ரனாவத் போன்ற நபர்கள் நபர்கள் Y-பிளஸ் பாதுகாப்பைப் பெற்றுள்ளனர். இதில் ஐந்து காலவர்கள், CRPF வீரர் ஒருவர் மற்றும்ந நான்கு கான்ஸ்டபிள்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர். 6 தனி பாதுகாப்பு அதிகாரிகள் மூன்று ஷிப்பில் சுழற்சி முறையில் காவல் இருப்பார்கள்.
Y பிளஸ்- ஐ விட சற்று குறைந்த அச்சுறுத்தல்களுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. Y பிரிவில் 9 மிமீ பிஸ்டலுடன் ஒருவர், ஸ்டென் துப்பாக்கியுடன் ஒருவரும் என 2 பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பார்கள். மொத்தம் 11 பேர், ஷிப்ட் முறையில் பாதுகாப்பில் ஈடுபடுவர். இரவு நேரங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.
X பிரிவு
X பிரிவு மிகக் குறைந்த பாதுகாப்பை வழங்குகிறது. இதில் இரண்டு ஆயுதமேந்திய போலீஸ்காரர்கள் மட்டுமே உள்ளனர். கமாண்டோக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கிடையாது. இது பொதுவாக குறைந்தபட்ச ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படும் நபர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
இவ்வகை பாதுகாப்புகளின்படி, மத்திய அமைச்சர்கள், VVIPகள் , முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கான பாதுகாப்பில் தேசிய பாதுகாப்பு படை (NSG ), இந்திய-திபெத்திய எல்லை காவல் படை (ITBP ) மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF ), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
- அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேருவோருக்கு மத்திய ஆயுதப் படை, அசாம் ரைபிள்ஸ் பிரிவில் முன்னுரிமை வழங்கப்படும்
- அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டு பணியை முடித்து வெளியே வரும் வீரர்களுக்கு வயது வரம்பிலும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிபாத் வீரர்களுக்கு துணை ராணுவம், அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 10 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேருவோருக்கு மத்திய ஆயுதப் படை, அசாம் ரைபிள்ஸ் பிரிவில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டு பணியை முடித்து வெளியே வரும் வீரர்களுக்கு வயது வரம்பிலும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் வீரர்கள் 2 படைப்பிரிவுகளிலும் சேருவதற்கு 3 வயது வரை விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அக்னிபாத்தின் முதல் பேட்ஜ் வீரர்கள் 2 படைப்பிரிவுகளிலும் சேருவதற்கு வயது வரம்பில் 5 வயது வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் குடிமகன் என்ற முறையில் அவர் அந்த முதலீட்டை செய்ததாக எதிர்க்கட்சிகள் அப்போது சுட்டிக்காட்டி இருந்தன. மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற ராகுல் காந்தியின் பட்டமளிப்பு சான்றிதழில் அவரது பெயர் ’ராகுல் வின்சி’ என்ற இத்தாலிய துணைப்பெயருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து நிற்கும் சுயேட்சை வேட்பாளரான துருவ் லால் என்பவர், பிரிட்டன் குடிமகனான ராகுல் காந்தி நம் நாட்டு தேர்தலில் எப்படி போட்டியிடலாம்? என்று அந்த தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இதே இரட்டை குடியுரிமை விவகாரத்தை முன்வைத்து பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி புகார் அளித்திருந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பான நிலைப்பாட்டை 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #RahulGandhi #MHANotice
மராட்டியம், கர்நாடகம், கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பருவ மழை வெளுத்துக்கட்டி வருகிறது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அந்த மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கிப் போய் உள்ளது.
இந்த நிலையில் வெள்ள நிவாரணப் பணிகளையும், மீட்பு பணிகளையும் கவனிப்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எப்.), நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 71 இடங்களில் தனது 97 குழுக்களை பணி அமர்த்தி உள்ளது. ஒவ்வொரு குழுவிலும் தலா 45 வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.
மேலும் இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை, மத்திய நீர் ஆணையம் உள்ளிட்ட பிற அமைப்புகளுடன் தேசிய பேரிடர் மீட்பு படை தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.
படைப்பிரிவின் கமாண்டர்கள் மாநில அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்.
மழை, வெள்ளத்தால் எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க ஏற்றவிதத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உத்திகளை வகுத்து செயல்படுத்த தயாராக உள்ளனர்.
நாட்டின் பல மாநிலங்களிலும் மழை, வெள்ள நிலவரத்தை டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள இடங்களை, அங்கு உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து அடையாளம் கண்டு, தேசிய பேரிடர் மீட்பு படை உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே மராட்டிய மாநிலத்தில் வெள்ளம் பாதித்த மாணிக்பூரில் இருந்து 68 பேரும், நலசோப்ரா மற்றும் பால்கரில் இருந்து 411 பேரும் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு உள்ளனர்.
இந்த தகவல்களை மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #tamilnews
மேற்கு வங்காளம் மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தல் இன்று காலை துவங்கியது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பிருந்தே மேற்கு வங்காளத்தின் பல கிராம பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடிக்கத் துவங்கியது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, வெடிகுண்டு தாக்குதல் போன்றவை அரங்கேறின.

நதியா மாவட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் சவுஜித் பிராமனிக் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். பிரக்னாஸ் அம்டங்கா பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
முர்ஷிதாபாத் பகுதியில் பாஜக பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஆரிப் அலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கணவன் மனைவி கொல்லப்பட்டு, அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறிய நிலையில் இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மற்றும் பல கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தேர்தல் வன்முறையை எதிர்த்து கொல்கத்தா நகரில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தேர்தலின் போது மாநிலத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து மாநில அரசு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #PanchayatElection #Pollviolence