search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருட்காட்சி"

    • விருதுநகரில் 2-வது புத்தக திருவிழா வருகிற 16-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது.
    • காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் வருகிற 16-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.

    தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கின்றனர். மேலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த புத்தக திருவிழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி கள், சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவு கள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.மேலும் புத்தக திருவிழா நடைபெறும் நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகளும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர் களுக்கான கலை நிகழ்ச்சிகளும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மாலையில் தலைசிறந்த ஆளுமைகள் கலந்து கொள்ளும் சிறப்புரைகள், பட்டிமன்றம், இலக்கிய அரங்கு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

    • பொருட்காட்சியின் முக்கிய தினமான ஆடி அமாவாசை வருகிற 16-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.
    • குழந்தைகளை குதூகலப்படுத்தும் ராட்டினங்களில் மக்கள் கூடுதல் நேரத்தை செலவிடுகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள வி.எல்.சி.திருமண மண்டபத்தில் 98-வது பொருட்காட்சி கடந்த 2-ந்தேதி தொடங்கியது. வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது. பொருட்காட்சியின் முக்கிய தினமான ஆடி அமாவாசை வருகிற 16-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.

    அன்றைய தினம் முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று உள்ளூர் விடுமுறை தினமாக மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. நாளை (15-ந்தேதி) சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறையானதால் 15 மற்றும் 16-ந்தேதி 2 நாட்கள் தொடர் விடுமுறையாக இருப்பதால் மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த விடுமுறை நாட்களில் வாவுபலி பொரு ட்காட்சி மைதானத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டும் இல்லாமல் கேரளா பகுதியில் உள்ள மக்களும் அதிகம் வந்து செல்கின்றனர். இந்த பொருட்காட்சியில் குழந்தை களை குதூகலப்படுத்தும் மிகப்பெரிய ராட்டினங்கள், பெரியவர்களை குதூகலப்ப டுத்தும் மரணக்கிணறு உட்பட பல்வேறு வகையான விளையாட்டுகள், கண்காட்சி பொருட்கள் உள்ளன. இது மட்டும் இல்லாமல் விவசாயிகளின் விளை பொருட்கள் ஏராள மானவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ள்ளது. மேலும் ஏராளமான கைவினை பொருட்களும் பொருட்காட்சியில் பார்வை க்காக வைக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரும் உற்சாகமாக வந்து வாவுபலி பொருட்காட்சியை கண்டு களித்து செல்கின்றனர்.

    குறிப்பாக குழந்தைகளை குதூகலப்படுத்தும் ராட்டினங்களில் மக்கள் கூடுதல் நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் பெண்கள் புதிய ரக செடிகளை வாங்கி செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    • 40-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டது.
    • இந்த பொருட்காட்சியானது 2 நாட்கள் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் மகளிர் சுய உதவி குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை காட்சிப்படு த்தவும், விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டது.

    இந்த பொருட்காட்சியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    இதில் 40க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டது.

    தொடர்ந்து 2-வது ஆண்டுகளாக இந்த பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த பொருட்காட்சி ஆனது 2 நாட்கள் நடைபெற உள்ளது.

    கடந்த வருடம் ரூ. 2.5 லட்சம் அளவில் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் தற்போது அதனை தாண்டி விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி மாவட்ட வளங்கள் மற்றும் விற்பனை சங்க மேலாளர் செந்தில்குமார் உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், நிதியாளர் ராஜாராமன், தாசில்தார் சக்திவேல், கல்லூரியின் துணைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.

    கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல் துறை தலைவர் முத்தமிழ் திருமகள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • ஆழ்கடல் மீன்கள் குகை பொருட்காட்சி தொடங்கப்பட்டது.
    • தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் திறந்து வைத்தார்

    கீழக்கரை

    ராமநாதபுரம்- மதுரை ரோட்டில் ராஜா மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் மதுரையைச் சேர்ந்த எம்.டி.சி. நிறுவனத்தின் சார்பில் முதன்முறையாக ஆழ்கடல் மீன்கள் குகை கண்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்காட்சி தொடங்கப் பட்டது. இதன் திறப்பு விழா நிறுவன உரிமையாளர் சிட்டிபாபு தலைமையில் நடைபெற்றது.

    மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிநகரம் முத்துக்கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொருட்காட்சியை திறந்து வைத்தார். தி.மு.க மதுரை மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் கிருஷ்ணகுமார், கவுன்சிலர் இந்திரா மேரி, அ.திமு.க நிர்வாகி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இப்பொருட்காட்சியில் ஆழ்கடல் போன்ற செட்டில் கண்ணாடி குகை அமைத்து அதில் பலவகையான வண்ண ஆழ்கடல் மீன்கள் நிரம்பிய கண்காட்சி அமைக் கப்பட்டது. மேலும் பொழுது போக்கு பூங்கா, ஷாப்பிங் மேலா, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் உணவகங் கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் பனிக்குகை, 3-டி ஷோ, பேய் வீடு, பல வகையான ராட்டினங்கள், ஜெயிண்ட்வீல் போன்ற குழந்தைகளுக்கான விளை யாட்டு அரங்குகள் அமைக் கப்பட்டுள்ளது.

    இந்த பொருட்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை நிறுவன மேலாளர் உமாபதி செய்திருந்தார்.

    • இப்பொருட்காட்சியில் 33 அரசு துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
    • ரூ.30 லட்சத்து 69 ஆயிரத்து 160 அரசுக்கு வருவாய் வரப்பெற்றுள்ளது.

    கோவை,

    கோவை சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் கடந்த மே 13-ந் தேதி முதல் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசு பொருட்காட்சி நடந்து வந்தது. இப்பொருட்காட்சியானது தொடர்ந்து நடைபெற்று நேற்றுடன் நிறைவு பெற்றது.

    ஒவ்வொரு துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் இத்திட்டங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினை அணுகி அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றிருந்தன.

    இப்பொருட்காட்சியில் 27 அரசு துறை அரங்குகளும், 6 அரசு சார்பு நிறுவனங்கள் என மொத்தம் 33 அரசு துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றிருந்தன. அரசு பொருட்காட்சியை காண வந்த பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறியவர்களுக்கு ரூ.10-ம் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    நேற்று வரை நடந்த அரசு பொருட்காட்சியை 1 லட்சத்து 77 ஆயிரத்து 742 பெரியவர்களும், 40 ஆயிரத்து 303 சிறியவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 45 பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் நுைழவுக்கட்டணமாக ரூ.30 லட்சத்து 69 ஆயிரத்து 160 அரசுக்கு வருவாய் வரப்பெற்றுள்ளது.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    • பாதாள கிணற்றில் இரண்டு பைக் ஒரு கார் சுற்றி வளம் வரும் சாகசங்கள் பார்ப்பவர்களை உறைய வைக்கும் காட்சியாக உள்ளது.
    • பொருட்காட்சியில் லண்டன் பிரிட்ஜ் மற்றும் பனி மலையில் பனி தூவுவது போன்ற காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருந்தது.

    தருமபுரி,

    தருமபுரி வள்ளலார் மைதானத்தில் டிஜே அம்யூஸ்மென்ட் நிறுவனம் சார்பில் லண்டன் பிரிட்ஜ் மற்றும் பணி உலகம் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த மாபெரும் பொருட் காட்சியினை கடந்த 24-ம் தேதி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தொடங்கி வைத்தார். டி.ஜே அம்யூனிஸ்ட்மென்ட் மேனேஜிங் டைரக்டர் தினேஷ் குமார் வரவேற்றார்.

    பொருட்காட்சியில் லண்டன் பிரிட்ஜ் மற்றும் பனி மலையில் பனி தூவுவது போன்ற காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருந்தது.

    மேலும் பனி மழையில் பனிக்கரடி, பனிக்குதிரை, பனி சிறுத்தைகள், பனி நாய்கள், பெண்குயின், உள்ளிட்ட பறவை மற்றும் விலங்குகள் தத்ரூபமாக மக்களை கவர்ந்து இருந்தது.

    மேலும் வீட்டு உபயோக பொருட்கள் ஊட்டி ட்ரை ப்ரூட்ஸ், மைசூர் கான்டிமெண்ட்ஸ், பெண்களுக்கான வளையல்கள், மாலைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பரிசு போட்டி, விளையாட்டுகள் குழந்தைகளுக்கான ரயில் பயணம், ராட்சத ராட்டினம், பாதாள கிணற்றில் இரண்டு பைக் ஒரு கார் சுற்றி வளம் வரும் சாகசங்கள் பார்ப்பவர்களை உறைய வைக்கும் காட்சியாக உள்ளது.

    மேலும் ஊட்டி மிளகாய் பஜ்ஜி, டெல்லி அப்பளம், ஐஸ்கிரீம், போன்ற திண்பன்டங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இந்த பொருட் காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதுக்களத்தை தூண்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    இந்நிலையில் தினந்தோறும் லண்டன் பிரிட்ஜ் மற்றும் பனி உலக பொருட்காட்சியில் பார்வையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    • கடந்த மாதம் 13-ந் தேதி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பொருட்காட்சி தொடங்கியது.
    • ரூ.13 லட்சத்து 99 ஆயிரத்து 125 அரசுக்கு வருவாய் வந்துள்ளது.

    கோவை,

    கோவை காந்திபுரம் அருகே உள்ள ஜெயில் மைதானத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பொருட்காட்சி தொடங்கியது. இதனை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    இந்த பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உள்பட 27 அரசுத்துறை அரங்குகளும், 6 அரசு சார்பு நிறுவனங்களின் அரங்கு என மொத்தம் 33 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி பொழுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. அரசு பொருட்காட்சியை காண பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பள்ளிகள் அழைத்து வரும் மாணவர்களுக்கு ரூ.5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பொருட்காட்சியை நேற்று வரை 26 நாட்களில் 1 லட்சத்து 93 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.13 லட்சத்து 99 ஆயிரத்து 125 அரசுக்கு வருவாய் வந்துள்ளது.

    தினந்தோறும் ஆயிரக்கணக்காக பொதுமக்கள் இந்த பொருட்காட்சியை கண்டு களித்து செல்கி றார்கள்.

    இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது:-

    கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கத்தால் எங்கும் செல்ல முடியவில்லை. அப்போது தான் காந்திபுரம் அருகே ஜெயில் மைதானத்தில் அரசு பொருட்காட்சி தொடங்கிய தகவல் வரவே குழந்தைகளுடன் அங்கு சென்றோம் .அங்கிருந்த ராட்டினங்கள் மற்றும் விளையாட்டுகளில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினர்.

    நாங்கள் அரசு பொருட்காட்சிக்கு சென்றது வாரவிடுமுறை என்பதால் அப்போது கோவை மாநகர போலீசார் சார்பில் வளர்ப்பு நாய்களில் சாகச கண்காட்சி நடைபெற்றது.

    இதில் நாய்களின் சாகசம், குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்தது.

    இதுதவிர அங்கு இருந்த ஸ்டால்களில் மிக குறைவான விலையில் அதிக பொருட்களை வாங்கி வந்தோம். மீண்டும் பொருட்காட்சிக்கு அழைத்து செல்லுமாறு எங்கள் குழந்தைகள் கூறி வருகின்றனர்.

    அந்தளவுக்கு அங்கு பொழுதுபோக்கு அம்சங்கள் பொருட்காட்சியில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மதுரை சித்திரை பொருட்காட்சி 13-ந்தேதி முடிவடைகிறது. இதுவரை 1.80 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.
    • மாணவர்கள் இந்த சிறப்பு சலுகையை 13-ந்தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மதுரை

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப் பொருட் காட்சியை இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு பொருட்காட்சி கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி யன்று தொடங்கியது.

    இந்த பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன.

    மேலும் மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் 6 அரங்குகளும் அமைக்கப் பட்டுள்ளன. அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள், அவற்றின் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத்துறை களின் சார்பாக கண்கவரும் வகையில் அரங்குள் இடம் பெற்றுள்ளன.

    மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப் பட்டன.

    அதேபோல இளை ஞர்கள் மற்றும் குழந்தை களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனியார் விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் இடம்பெற உள்ளன. மேலும், தினந்தோறும் இன்னிசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த பொருட்காட்சி தினந்தோறும் மாலை 3.45 மணி முதல் இரசு 9.30 மணி வரை நடைபெறுகிறது. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15 ரூபாயும், சிறியவர்களுக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதுவரை அரசுப் பொருட் காட்சியை இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

    இது கடந்த ஆண்டு எண்ணிக்கையை விட 30 ஆயிரம் பார்வையாளர்கள் அதிகம் ஆகும். இந்தப் பொருட்காட்சி வருகிற வருகிற 13-ந்தேதியன்று நிறைவடைகிறது.

    பொருட்காட்சியை கண்டுகளிக்க வரும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை காண்பித் தால் அவர்களுக்கு ராட்டி னம் உட்பட விளையாட்டு நிகழ்வுகளில் சிறப்பு சலுகைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. மாணவர்கள் இந்த சிறப்பு சலுகையை 13-ந்தேதி வரை பயன்படுத்திக் கொள்ள லாம்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரி வித்துள்ளது.

    • கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தனியார் பொருட்காட்சி இயங்கி வருகின்றது.
    • கனிஷ் இருந்த ராட்டினத்தில் சுற்றிய போது திடீரென்று தவறி கீழே விழுந்தார்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தனியார் பொருட்காட்சி இயங்கி வருகின்றது. இங்கு கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கோடைவிடுமுறையை முன்னிட்டு பொருட்காட்சிக்கு வந்தனர். அப்போது கார்த்திக் மகன் கனிஷ் (வயது 7) என்பவர் பொருட்காட்சியில் இருந்த ராட்டினத்தில் சுற்றிய போது திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் கனிஷ் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அஸ்வின் ராஜ் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் படத்தை ஏற்படுகிறது.

    • பொருட்காட்சியை இலவசமாக கண்டு களிக்கலாம் என பொருட்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    • பொருட்காட்சி வருகிற ஜூன் 4-ந்தேதி வரை நடக்கிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் முதல்முறையாக சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிரமாண்ட மான லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி மே 2-ந்தேதி முதல் நடந்து வருகிறது.

    கண்கவர் பொழுது போக்கு அம்சங்களுடன் நடக்கும் இந்த பொருட்காட்சி வருகிற ஜூன் 4-ந்தேதி வரை நடக்கிறது. கண்காட்சி மைதான முகப்பில் உள்ள லண்டன் பிரிட்ஜ் பொதுமக்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளது.அதில் பொதுமக்கள் ஏறி செல்பி எடுத்து மகிழ்கின்ற னர். துபாயில் உள்ள அரபா லோட்டஸ் ரிப்பன் பில்டிங் புகைப்படங்கள் ஏராளமாக உள்ளன. இயற்கை அங்காடி, குட்டியை சுமந்தபடி இருக்கும் கங்காரு, வரிக்குதி ரை,மான்கள், சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகள் அழகாக வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது.மேலும் இப்பொருட்காட்சியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.அதில் விளையாட்டு பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பர்னிச்சர்,பேன்சி பொருட்கள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    சிறுவர்களுக்கான நீச்சல் குளம்,பொருட்காட்சி திடலை சுற்றி வரும் அப்பளம்,வாழைத்தண்டு சூப்,ஜிகர்தண்டா போன்ற சுவையான தின்பண்டங்கள் கடைகளும் பொருட்காட்சி யில் இடம் பெற்றுள்ளன.

    இந்த பொருட்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.நுழைவு கட்டணமாக ரூபாய் 50 செலுத்தி டிக்கெட் பெற்று பொருட்காட்சியை கண்டு ரசிக்கலாம்.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பொருட் காட்சியை கண்டு களிக்க லாம் என பொருட் காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் சுவார்ட்ஸ் மைதானத்தில் பொருட்காட்சி நடந்தது.
    • குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ராட்டினம், கடைகள், சிற்றுண்டி விடுதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கோடைகால விடுமுறையையொட்டி குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் லண்டன் பிரிட்ஜ் வடிவ நுழைவு வாயிலுடன் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ராட்டினம், கடைகள், சிற்றுண்டி விடுதிகளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த பொருட்காட்சியை ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் திறந்து வைத்தார்.

    பொருட்காட்சி அமைப்பாளர் சவுந்தரபாண்டியன் வரவேற்றார். கவுன்சிலர்கள் வீரசேகர், ராஜகோபால், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று தொடங்கிய இந்த பொருட்காட்சி ஜூன் 4-ந்தேதி வரை 1மாதம் நடைபெற உள்ளது.

    பொருட்காட்சி மேலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.பொருட்காட்சி, ராட்டினம், Exhibition, Ratinam,

    • ராமநாதபுரத்தில் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சியை நகரசபை தலைவர் திறந்து வைக்கிறார்
    • அனைவரும் விரும்பி கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரில் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கல்வி பயின்ற ஸ்வார்ட்ஸ் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் 7 வருட நீண்ட கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரம்மாண்டமான லண்டன் பிரிட்ஜ் பொருட் காட்சி இன்று தொடங்கு கிறது.

    நகர சபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இன்று மாலை 6 மணிக்கு பொருட்காட்சியை திறந்து வைக்க உள்ளார்.

    ஏராளமான பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய இப்பொருட்காட்சியானது இன்று தொடங்கி அடுத்த மாதம் ஜூன் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    4 D ஷோ,பேய் வீடு,பன் சிட்டி, ஸ்டால்கள் என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் ஒரே இடத்தில் அமைந்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள

    இப்பொருட்காட்சிக்கான ஏற்பாடுகளை பொருட் காட்சி அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×