என் மலர்
நீங்கள் தேடியது "slug 223471"
- நிர்வாகிகள் பூபதி, பகவதி சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோடங்கிபாளையம் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் லலிதாம்பிகை செல்வராஜ் தலைமை வகித்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை மகிழ்வனம் பூங்காவில் பாம்புகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கோடங்கிபாளையம் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் லலிதாம்பிகை செல்வராஜ் தலைமை வகித்தார். மகிழ்வனம் பூங்கா செயலாளர் சோமு என்ற பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் மழைக்காடுகள் ஆராய்ச்சியாளர் மாணிக்கம், இயற்கை ஆர்வலர் ரத்னசபாபதி,கலங்கல் வனம் ஒருங்கிணைப்பாளர் பாபு, மகிழ்வனம் நிர்வாகிகள் பூபதி, பகவதி சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சென்னை பாம்பு பூங்கா இணை இயக்குநர் மருத்துவர் அறிவழகன் பேசுகையில்,இந்தியாவில் பலவேறு வகையான பாம்புகள் இருந்தாலும் அவை குளிர்பிரதேசங்கள் வாழ்விடத்தை அமைத்து கொள்வது இல்லை. மித வெப்ப பிரதேசங்களில் தான் அவை வாழும். பாம்பு தானாக யாரையும் தீண்டாது. தன்னை மற்றவர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ளவே பாம்பு தீண்டும். நல்லபாம்பு, கண்ணாடிவிரியன், கட்டுவிரியன், சுரட்டை விரியன் ஆகிய 4 வகை பாம்புகள் மட்டுமே கொடிய விஷம் உடையவை. இவை தான் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிறது. பாம்பு கடித்தால் உடலில் வேர்க்கும், படபடக்கும், தாகம் ஏற்படும். அதற்காக நாம் அச்சப்பட தேவையில்லை.
எந்த முதலுதவி சிகிச்சையும் அளிக்காமல் உடனே அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றி விடுவார்கள். எந்த பாம்பு கடித்தது என்று காண்பிக்க பாம்பை அடிக்கும் வேலையில் ஈடுபட வேண்டியது இல்லை. கண்ணாடி விரியன், மண்ணுளி பாம்பு போன்றவை குட்டிகளை நேரடியாக ஈனும், மற்றவை முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறிக்கும். முன்பு 4 வகையான பாம்பு கடி மருந்து தனித்தனியாக இருந்தது. தற்போது பாம்புக்கடிக்கு என்று ஒரே மருந்து பவுடர் வடிவில் வந்து விட்டது.
எந்த பாம்பு கடித்தாலும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவர்கள் விஷம் உள்ள பாம்பு கடித்ததா இல்லையா என்பதை மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடித்து விடுவார்கள். நாம் அதற்காக எந்த ஆராய்ச்சியும் செய்ய வேண்டியது இல்லை. 4 வகை பாம்புகளில் குட்டி பாம்பு கடித்தாலும் அதில் விஷம் உள்ளது. தண்ணீர் பாம்பு, பச்சை பாம்பு போன்றவை தான் விஷம் இல்லாதவை. மேலும் கடல், ஆறுகளில் பாம்பு கடித்தாலும் அதிலும் விஷம் உள்ளது. தட்ப வெப்ப சூழ்நிலை காரணமாக ஊட்டி,கொடைக்கானல் போன்ற பகுதிகளில் பாம்புகள் அதிகம் வசிக்காது. வன விலங்குகள் பாதுகாப்பு தடுப்பு சட்டத்தின்படி பாம்புகளை கொல்வது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.
- கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இவரது மனைவி 2 குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே முளவிளை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஜோஸ் (வயது 38). இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அனிதா 2 குழந்தைகளுடன் பிரிந்து அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் மெர்லின் ஜோஸ் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் படுத்து இருந்தார்.
இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மெர்லின் ஜோஸ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- இவருக்கு கடன்தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே வெண்டலிகோடு புனையன்குழி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 29), பெயிண்டர். இவருக்கு கடன்தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விஷ்ணு கடந்த 4-ந் தேதி விஷம் குடித்துவிட்டு வீட்டில் படுத்து இருந்தார். வெகுநேரமாகியும் அவர் எழும்பாததால் தாயார் சென்று பார்த்தார். அப்போது விஷ்ணு மயங்கிய நிலையில் இருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் விஷ்ணு பரிதாபமாக இறந்தார். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேச்சிப்பாறை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- இவர் கடந்த 21-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
கன்னியாகுமரி:
பேச்சிப்பாறை அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 62). இவர் கடந்த 21-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்த நிலையில் நேற்று மோதிரமலை ரப்பர் தோட்டத்தில் ராமச்சந்திரன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடல் அருகே விஷ பாட்டில் இருந்ததால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. பேச்சிப்பாறை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ராமச்சந்திரன் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது 2 மகன்களும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள்.
- பறக்கை அருகே உள்ள மேலசெட்டியார் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 51) கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம்
- சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி :
பறக்கை அருகே உள்ள மேலசெட்டியார் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 51) கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் ,ருந்து வந்தது. குடிப்பழக்கம் அதிகமாகி கடந்த சில வருடங்களால் நோயால் பாதிக்கப்பட்டு நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் முன் காலில் இருந்து சேகர் வயிற்று வழி என சத்தம் போட்டு கொண்டிருந்தார். உடனே அவரது மனைவி பகவதியம்மாள் ஒரு ஆட்டோ பிடித்து நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏதோ விஷமருந்து சாப்பிட்டு உள்ளார்.ஆதலால் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சென்றபோது சேகரை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி பகவதியம்மாள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- புதிய மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டுமென்று தன் தாயாரிடம் பணம் கேட்டுள்ளார்.
- தாயார் ரஞ்சிதம் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி :
தென்தாமரைகுளம் அருகே உள்ள இடையன்வி ளையை சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 22).
இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. சதீஷ்குமார், புதிய மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டுமென்று தன் தாயாரிடம் பணம் கேட்டுள்ளார். அவர், பணம் கொடுக்காததால் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார்.
இதை பார்த்த குடும்பத்தினர் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச் சைக்கு சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். பின்னர் மீண்டும் அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இது குறித்து அவரது தாயார் ரஞ்சிதம் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தென்னைக்கு தெளிக்க தண்ணீரில் கலக்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து குடித்ததாக தெரிகிறது.
- இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே வில்லுக்குறி அடுத்த மணக்கரை அவரிவிளையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஐயப்பகோபு (வயது 46).
எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவர் விடுமுறையில் கடந்த 4-ம் தேதி ஊருக்கு வந்திருந்தார். ஐயப்பகோபுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த ஐயப்பகோபு போதையில் தென்னைக்கு தெளிக்க தண்ணீரில் கலக்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து குடித்ததாக தெரிகிறது. இதில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த அவரை மீட்டு நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஐயப்பகோபு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி துர்கா (36) இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட வேதனையால் விபரித முடிவு
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் ராஜா க்கமங்கலம் அருகே உள்ள தம்மத்துக் கோணம் சத்ரபதி சிவாஜி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 54). இவர் காய்கறி கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி (47).
இவர்களுக்கு அருள்ஜோதி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் மகன் அருள்ஜோதி மட்டும் தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இர வில் உணவு அருந்தியதும் செல்வ குமார் மற்றும் புவனேசுவரி தங்கள் அறைக்கு தூங்கச் சென்று விட்டனர். நேற்று காலை அவர்கள் இருவரும் நீண்ட நேரமாக அறையை விட்டு வரவில்லை.
இதனால் பதட்டமடைந்த அருள்ஜோதி, அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு பெற்றோர் பிண மாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து ராஜாக்க மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட செல்வ குமார், புவனேசுவரி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கணவன்-மனைவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில வருடங்க ளாக செல்வகுமார் நோயால் அவதிப்பட்டு வந்ததும் அதில் ஏற்பட்ட வேதனையில் தான் மனைவியுடன் சேர்ந்து தற்கொலை முடிவை எடுத்திருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் அந்தரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் சுபிதா கிரேஸ் (வயது21).
இவர் திடல் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரி யில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக சுபிதா கிரேஸ் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக சுபிதா கிரேஸ் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுபிதா கிரேஸ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்ப ட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். முதல் கட்ட விசாரணை யில் மாணவி சுபிதா கிரேஸ் கல்வி கட்டணம் செலுத்த வில்லை என்று கூறப்படு கிறது.
இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.
சுபிதாகிரேஸ் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள் ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.இதை யடுத்து உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.
- சில வருடங்களாக வாலிபர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
- வாலிபரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள சாமிகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் நாகராஜ்(வயது 30).இவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது தாயார் மயிலாத்தாள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- ஏகப்பட்ட கடன்கள் வாங்கி இருந்தார். இதனால் மணம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது
- சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்துவிட்டார்.
கன்னியாகுமரி :
குலசேகரம் அருகே பொன்மனை மங்கலம் சாணல்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 56) தொழிலாளி. இவருக்கு சந்திரகலா (50) என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இவர் ஏகப்பட்ட கடன்கள் வாங்கி இருந்தார். இதனால் மணம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவர் மனைவி வெளியே வேலைக்கு சென்று இருந்தார்.இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். ஜாண்சன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்துவிட்டார். சந்திரகலா கொடுத்த புகாரின்பேரில் குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த நிலையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
- இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
இரணியல் அருகே குளுமைக்காடு என்ற இடத்தை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 64) இவருக்கு மரியபுஷ்பம் (55) என்ற மனைவியும் இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக சுமார் இருபது வருடங்களாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்ரீவை குண்டம் பகுதியை சேர்ந்த உறவினர் செல்வி (52) என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு சிபில் (21) என்ற மகன் உள்ளார். சிவபெருமாளுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.
இந்த நிலையில் அவர் உடல்நலம் சரியில்லாமல் அவதி பட்டார். அதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த நிலையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார். இது குறித்து அவரது மகன் சிபில் அளித்த புகாரில் பேரில் இரணியல் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.