என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலைவாசி உயர்வு"

    • கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • போலீசார் எடியூரப்பாவிடம் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    பெங்களூரு:

    பால் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து கர்நாடக பா.ஜ.க. சார்பில் பகல்-இரவு தர்ணா போராட்டம் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று காலை தொடங்கியது. கட்சியின் மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் தொடங்கிய இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக நீடித்த இந்த போராட்டத்தில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா கலந்து கொண்டார். பின்னர் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் எடியூரப்பாவிடம் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து எடியூரப்பா உள்பட கட்சி நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.



    • சில்லறை பணவீக்க விகிதமானது ஜனவரி மாதம் 4.31 சதவீதமாக இருந்தது.
    • இது பிப்ரவரி மாதத்தில் 3.61%-ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிந்து பிப்ரவரியில் 3.61%-ஆக குறைந்துள்ளது என மத்திய அரசின் புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.

    சில்லறை பணவீக்கம் என்பது நுகர்வோர் வாங்கும் சில்லறைப் பொருட்களின் விலைகள் காலப்போக்கில் உயரும் விகிதம் ஆகும்.

    நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்க விகிதமானது ஜனவரி மாதம் 4.31 சதவீதமாக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் 3.61%-ஆக குறைந்துள்ளது.

    கடந்தாண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு சில்லறை பணவீக்கம் 4%-க்கும் கீழ் சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.

    இதேபோல், உணவு பொருட்களின் சில்லரை பணவீக்கம் 3.75 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் உணவு பொருட்களின் சில்லரை பணவீக்கம் 5.97 சதவீதமாக இருந்தது.

    கிராமப்புறங்களில் 4.06 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 3.20 சதவீதமாகவும் சில்லரை பணவீக்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொழில்துறை வளர்ச்சி கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் 3.2சதவீதமாக இருந்தது. இந்தாண்டு ஜனவரி மாதம் அது 5 சதவீதமாக உயர்ந்தள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

    • திரளான நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்
    • நாகர்கோவில் வடக்கு மண்டல பூத் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நாகர்கோவில் மாநகராட்சி வடக்கு மண்டல பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது.

    கூட்டத்துக்கு 11-வது வார்டு கவுன்சிலரும், வடக்கு மண்டல பொறுப்பாள ருமான ஸ்ரீலிஜா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகே சன் முன்னிலை வகித் தார். முன்னாள் அமைச்சர் பச்சைமால் சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டு பேசினார்.

    மாணவரணி செயலா ளர் மனோகரன், அண்ணா தொழிற்சங்க செய லாளர் சுகுமாரன், மண்டல பொறுப்பாளர்கள் முகேஷ்வரன், ஜெய கோபால்,ஜெவின் விசு, கவுன்சிலர்கள் அக்‌ஷ்யா கண்ணன், சேகர், கோபால கிருஷ்ணன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.சி. யூ.மணி, முன்னாள் நகர செயலாளர்கள் சந்தி ரன், சந்துரு நிர்வாகிகள் ரபீக், கோட்டார் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மிக்கேல்ராஜ் நன்றி கூறினார்.

    விலைவாசி உயர்வு மின் கட்டண உயர்வை கண்டித்து குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில்அண்ணா விளை யாட்டு அரங்கம் முன்பு வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண் டும். பாராளுமன்ற தேர் தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டியில் பொறுப்பாளர்களை நிய மிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

    • ராமநாதபுரத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் நகராட்சி அலுவலகம் அருகே இன்று காலை நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் அ.தி.மு.க.சார்பில் நகர் செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன் ஏற்பாட்டில் தி.மு.க. ஆட்சியை கண்டித்து மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நகராட்சி அலுவலகம் அருகே இன்று காலை நடந்தது.

    மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் புதுமடம் தர்வேஸ், ஸ்டாலின் ஜெயசந்திரன், சரவணக்குமார், செந்தில் குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையா, ராமநாதபுரம் நகர துணைச் செயலாளர் ஆரிப் ராஜா, கீழக்கரை நகர அவைத்தலைவர் சரவணபாலாஜி, மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் சுரேஷ், நகர முன்னாள் செயலாளர் இம்பாலா உசேன், முன்னாள் நகர் மன்ற தலைவர் ராமமூர்த்தி, மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மின் கட்டணம், சொத்துவரி உயர்வு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதை கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பினர்.

    • அ.தி.மு.க. அவை தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • விலைவாசி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. அவை தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர்கள் பசுபதி, வண்டி மேடு ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன

    போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கல்பட்டு முத்துமைச்செல்வன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன், ராமதாஸ், ராஜா, ஜே. பேரவை துணைச் செயலாளர் பாலாஜி, இணைச் செயலாளர் செங்குட்டுவன், நிர்வாகிகள் வக்கீல் பிரபாகரன், கனல் கண்ணன், பழக்கடை மணிகண்டன், வண்டி மேடு ராஜா ராமன், பன்னீர், கஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர். இதேபோல் திண்டி வனம், கோட்டக் குப்பம் ஆகிய பகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திண்டிவனம் தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. அர்ஜூனன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. மாநில நிர்வாகி கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு பேசினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் விலை உயர்வை கண்டித்து மேலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    மேலூர்

    மதுரை புறநகர் மாவட்ட மேலூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு பெயர் மாற்றி செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டது. பால், மின் கட்டணம், சொத்துவரி ஆகியவை 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன.

    இந்த மோசமான விலைவாசி உயர்வுக்கு காரணமான தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். எனவே வருகிற தேர்தலில் அனைவரும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், அவைத் தலைவர் ராஜேந்திரன், மண்டல செயலாளர் ராஜசத்யன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பொருளாளர் அம்பலம், ஜபார், சேர்மன் பொன்னு சாமி, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் அருண், நிர்வாகிகள் வெற்றி செழியன், குலோத்துங்கன், பொன்ராஜேந்திரன், நகர் இணை செயலாளர் சரவணகுமார், முன்னாள் சேர்மன் சாகுல் அமீது, கவுன்சிலர் திவாகர் தமிழரசன், மெகராஜ் பீபி, பள்ளப்பட்டி முருகேசன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விலைவாசி உயர்வுக்கு காரணம் தி.மு.க. அரசு மீது செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டினார்.
    • பொதுமக்கள் விலை உயர்வு காரணமாக கடும் துன்பத்துக்கு ஆளாகி யுள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தாலிக்கு தங்கம், மாண வர்களுக்கு மடிக்கணினி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி தந்தார். ஆனால் இப்போ தைய தி.மு.க. அரசு விலை வாசியை உயர்த்தியது தான் சாதனையாக உள்ளது.

    மு.க.ஸ்டாலின் தற்போது அவரது மகனுக்கு அமைச்சராக முடிசூட்டி யுள்ளார். பொதுமக்கள் விலை உயர்வு காரணமாக கடும் துன்பத்துக்கு ஆளாகி யுள்ளனர். இதற்கு காரணம் தி.மு.க. அரசு தான்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    ஆர்ப்பாட்டத்தில்.ஒன்றிய செயலாளர் செல்வ மணி, நகரசெயலாளர் ராஜா மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், கூட்டுறவு சங்க தலைவர் சங்கர்ராமநாதன், நாலு கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், ஒன்றிய, மாவட்ட, நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் தலைமையில் கண்டன கோஷமிட்டனர்.

    விலைவாசி உயர்வை கண்டித்து பாரதிநகரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ராமநாதபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தேவிபட்டினத்தில் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     ராமநாதபுரம்

    தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் ராமநாதபுரம் பாரதிநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலை மையில், மண்டபம் (மேற்கு) ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அ.தி.மு.க., அவைத்தலைவர் சாமிநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேதுபா லசிங்கம், மாவட்ட சிறு பான்மை பிரிவு செயலாளர் தர்வேஸ், முதுகுளத்தூர் நகர் கழக செயலாளர் சங்கர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் தலைமையில் கண்டன கோஷமிட்டனர்.

    ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் பால்பாண்டி யன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் சரவணகுமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் வாலாந்தரவை ஜெயபால், மருதுபாண்டியர் நகர் ராஜேந்திரன், பாரதிநகர் தினகரன், மாரியப்பன், வசந்தநகர் வீரபாண்டியன், மாவட்ட ஜெ. பேரவை துணைச் செயலாளர் சங்கர் (எ) ஜெயச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் கருணாகரன், மண்டபம் மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் ராஜேந்தி ரன், ஒன்றிய பொருளாளர் ரகுபதி ராஜா, ஒன்றிய துணை செயலாளர் தெய்வேந்தி ரன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், கங்காதேவி, மாவட்ட மீனவரணி துணை செயலாளர் வேலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க. மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் மணிகண்டன் தலைமையில், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையா முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக் கவுன்சிலர்கள் சுமதிஜெயக்குமார், செவத்தான் முனியாயி, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் பாக்கியநாதன், நாகநாதன், காஞ்சிரங்குடி பாலு, முன்னாள் கவுன்சிலர் சரண்யா நாகநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தேவிபட்டினத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அசோக்குமார் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் வழங்கினர்.

    ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டி யன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணகுமார், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் தேவிகா, ஒன்றிய கவுன்சிலர்களான ராஜ்குமார், குப்புராமு சாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

     

    • தி.மு.க. அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம் தலைமை தாங்கினார்.

    தஞ்சாவூர்:

    சொத்து வரி, மின் கட்டணம், பால் ஆகியவற்றின் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம் தலைமை தாங்கினார்.

    அம்மா பேரவை இணை செயலாளர் ஆர்.காந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை களை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட எம்.ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், முன்னாள் மேயர் சாவித்ரி கோபால், முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர் பூபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற ரத்தினசோமசுந்தரம், மாணவரணி முருகேசன், அம்மா பேரவை துணைச் செயலாளர் பாலை ரவி , எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய பொருளாளர் தம்பிதுரை, கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க அரசு போக்குவரத்து கழக பொதுச் செயலாளர் திருநீலகண்டன், 51-வது வட்ட செயலாளர் மனோகரன், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, காந்திமதி, நீலகிரி ஊராட்சி மாவட்ட பிரதிநிதி சண்முகசுந்தரம், நிர்வாகிகள் தங்க கண்ணன், ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • எரிபொருள் தட்டுப்பாடு, அன்னிய செலவாணி கையிருப்பு பற்றாக்குறையாலும் பாகிஸ்தான் திண்டாடி வருகிறது.
    • ரொட்டி, பால் பொருட்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.

    பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட மழை-வெள்ள பாதிப்பு, நாட்டின் நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.

    எரிபொருள் தட்டுப்பாடு, அன்னிய செலவாணி கையிருப்பு பற்றாக்குறையாலும் பாகிஸ்தான் திண்டாடி வருகிறது.

    ரொட்டி, பால் பொருட்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. சமீபத்தில் அரசு வழங்கிய இலவச கோதுமை வாங்க திரண்ட மக்களிடம் மோதல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் சில்லரை விற்பனையில் ஒரு லிட்டர் பால் விலை ரூ.190-லிருந்து ரூ.210 ஆக உயர்ந்து உள்ளது. கோழிக்கறி விலை ரூ.650-லிருந்து ரூ.780 வரை உயர்ந்து உள்ளது. உயிருடன் உள்ள பிராய்லர் கோழி ரூ.480 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.

    அதே போல் இறைச்சி விலை கிலோவுக்கு ரூ.1000 முதல் ரூ.1,100 வரை உயர்ந்து இருக்கிறது.

    பால் விலை உயர்வு தொடர்பாக கராச்சி பால் விற்பனையாளர்கள் சங்கம் தரப்பில் கூறும்போது, 1000-க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் அதிக விலைக்கு பாலை விற்பனை செய்கிறார்கள். எங்கள் சங்க உறுப்பினர்கள், பால் விலையை உயர்த்தவில்லை என்று தெரிவித்துள்ளது. அதே போன்று மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது.

    பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.

    இதற்காக கடன் மேலாண் திட்டம் ஒன்றை பாகிஸ்தான் அனுப்பியது. அதை ஆய்வு செய்து சர்வதேச நாணய நிதியம் அத்திட்டத்தை நிராகரித்து விட்டது.

    கடன் பெறுவதற்கான முயற்சி தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தானில் அத்தியாசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு செல்கிறது. இதனால் பாகிஸ்தான் மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    • சென்னையில் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சாதாரண பொன்னி அரிசி விலை கிலோ 35 ரூபாயிலிருந்து ரூ.41 ஆகவும், நடுத்தர வகை பொன்னி அரிசி விலை 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும் உயர்ந்திருக்கிறது.

    அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தமிழக மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்டண உயர்வு, வரிகள் போன்றவற்றால் ஓட்டல் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளோம்.
    • நிலைமை இப்படியே சென்றால் ஓட்டல் உணவு வகைகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயமே ஏற்படும்.

    காய்கறி விலை... மளிகை பொருட்களின் விலை உயர்வோடு வணிக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் கடும் சுமையை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மின் கட்டணத்துக்காக 40 சதவீதம் அளவுக்கு கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர்களின் விலை 8 ரூபாய் அதிகரித்துள்ளதால் சமையல் செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளது. 1500 பேருக்கு சமையல் செய்ய 10 சிலிண்டர்கள் தேவைப்படுவதாக ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

    விலை உயர்வால் ஒரு நாளைக்கு ரூ.80 கூடுதல் செலவு ஆகிறது என்று கூறும் அவர்கள் மாதத்துக்கு 2500 ரூபாய் வரை சமையல் செலவு அதிகரித்து இருப்பதால் இது பெரும் சுமை என்றே தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறியதாவது:-

    ஓட்டல் உரிமையாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும். காய்கறி விலை உயர்வு, சமையல் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக ஓட்டல் தொழில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் இருப்பது போன்ற நிலை தான் தற்போதும் ஏற்பட்டிருக்கிறது.

    கட்டண உயர்வு, வரிகள் போன்றவற்றால் ஓட்டல் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளோம். தற்போது மதிய சாப்பாட்டின் விலை 100 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரையில் இருக்கிறது. காய்கறி விலை, பருப்பு விலை, சிலிண்டர் விலை, மின் கட்டண உயர்வு போன்றவற்றின் காரணமாக இதே விலைக்கு சாப்பாட்டை கொடுக்க முடியுமா? என்பது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

    அதே நேரத்தில் தற்போது பொதுமக்களின் தலையில் விலை உயர்வை சுமத்த நாங்கள் தயாராக இல்லை. விலைவாசி குறையுமா? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அப்போதுதான் ஓட்டல் தொழிலை நாங்கள் நடத்த முடியும். இல்லையென்றால் பல ஓட்டல் உரிமையாளர்கள் ஓட்டலை மூடிவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விடக் கூடிய சூழ்நிலை உள்ளது.

    இது போன்ற விலை உயர்வு காரணமாக 100 சதவீதம் அளவுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஏற்படும் சுமை எங்களை மட்டுமே பாதிக்காது, பொதுமக்களையும் கண்டிப்பாக பாதிக்கும். நிலைமை இப்படியே சென்றால் ஓட்டல் உணவு வகைகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயமே ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×