என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பேருந்து"
- ஓட்டுநரும் நடத்துனரும் அவரை பேருந்தில் ஏற அனுமதிக்க வில்லை.
- கதவின் அருகே தொங்கியபடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர் பயணித்துள்ளார்.
சண்டிகர் நகரில் ஓடும் பேருந்தின் கதவில் தொங்கியபடி ஒருவர் பயணித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட நபர் அலுவலகம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அவ்வழியே பேருந்து வந்துள்ளது. ஆனால் ஓட்டுநரும் நடத்துநரும் அவரை பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை. இதனால் பேருந்தின் கதவின் அருகே தொங்கியபடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர் பயணித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததன் அடிப்படையில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
चंडीगढ़ः ड्राइवर ने दरवाजा नहीं खोला, CTU बस के बार लटका रहा युवक, 2 किमी तक ऐसे ही किया सफर, महिला कंडक्टर बनाती रही वीडियो. @trafficchd hope, you are not Sleeping?@DgpChdPolice #Chandigarh #chandigarhtrafficpolice #Ctubus pic.twitter.com/AUOtzIXr01
— Vinod Katwal (@Katwal_Vinod) October 18, 2024
- குன்னங்குளம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திருடப்பட்டது.
- பல மணிநேர தேடுதலுக்கு பிறகு குருவாயூரில் திருடுபோன பேருந்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கேரளாவின் குன்னங்குளம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து அதிகாலை 5 மணிக்கு திருடப்பட்டது. இது தொடர்பாக பேருந்து உரிமையாளர் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் பல மணிநேர தேடுதலுக்கு பிறகு குருவாயூரில் திருடுபோன பேருந்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குருவாயூரில் வசிக்கும் அஜித் என்கிற ஷாம்நாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் 6 மாதங்களுக்கு முன்பு இதே பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
குருவாயூர் செல்ல பேருந்து இல்லாததால், குன்னங்குளம் பேருந்து நிலையத்தில் நின்ற இந்த பேருந்தை மதுபோதையில் குருவாயூருக்கு ஓட்டி வந்ததாக அஜித் தெரிவித்தார்.
பின்னர் பேருந்தின் உரிமையாளர் தனது முன்னாள் ஊழியரை மன்னித்துவிட்டதால், போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் ஓட்டுநர் அஜித்தை விடுவித்தனர்.
- இந்த விபத்தில் 4 பேர் படுகாயம்
- விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து HSR லே-அவுட்டுக்கு சென்று கொண்டிருந்த வால்வோ பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் சென்றுகொண்டிருந்த பைக் மற்றும் கார்கள் மீது சரமாரியாக மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CCTV captures moment BMTC bus smashes through traffic on Bengaluru's busy Hebbal flyover. No deaths, thankfully, 1 man injured. (Via @anaghakesav) pic.twitter.com/0KUHQMEdAC
— Shiv Aroor (@ShivAroor) August 13, 2024
- பேருந்தை ஓட்டி வந்த மற்றொரு ஓட்டுநரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
- பேருந்தில் மற்ற பயணிகள் உள்ளபோதே ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்
தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஸ்லீப்பர் பேருந்தின் ஓட்டுனரால் 26 வயது பெண் பயணி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நள்ளிரவில் பேருந்து ஹைதராபாத் நகரில் இருந்தபோது நடந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் காவல் நிலையத்திற்கு போன் செய்து கூறியுள்ளார்.
இதனையடுத்து, போலீசார் அந்த பேருந்தை நிறுத்தி ஓட்டுனரை கைது செய்ய முயன்றனர். அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய போலீசார், "தப்பியோடிய ஓட்டுநர் ஓடும் பேருந்தில் அந்த பெண்ணின் வாயில் போர்வையை வைத்து அடைத்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது பயணிகள் பலரும் அந்த பேருந்தில் இருந்துள்ளனர். பேருந்தை ஓட்டி வந்த மற்றொரு ஓட்டுநரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தனர்.
- 5 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
- பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் கூடுதலாக பேருந்துகளை இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தாம்பரம் ரயில் நிலையத்தில் 23.07.2024 முதல் 14.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 09.30 மணி முதல் பிற்பகல் 13.30 மணி வரையும் மற்றும் இரவு 22.00 மணி முதல் 23.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 23.07.2024 முதல் 14.08.2024 வரை மேற்குறிப்பிட்ட நேரங்களில் பல்லாவரம் வழியாக கூடுவாஞ்சேரிக்கு தற்போது 60 பேருந்துகள் மூலம் 571 பயண நடைகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பெரிய பேருந்துகளை மா.போ.கழக இயக்க உள்ளது. மற்றும் பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் முதல் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் shuttle service-ஆக இயக்க உள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என கூறியுள்ளது.
- எம்டிசி பேருந்தின் மீது ஏறி ரகளை செய்யும் வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலானது.
- வானகரம் மற்றும் திருவேற்காடு பகுதியை சேர்ந்த 2 மாணவர்கள் கைது.
கோடை விடுமுறை முடிந்த நிலையில், சென்னையில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சாலையில் கும்பலாகவும், பேருந்துகளில் கானா பாடல்கள் பாடியும், முக்கியமாக கல்லூரிக்கு தினசரி வந்து செல்லும் பேருந்து மற்றும் ரெயில் வழித்தடங்களில் ரூட் தல என்ற பெயரில் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் தங்களின் 'ரூட் தல' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக எம்டிசி பேருந்தின் மீது ஏறி ரகளை செய்யும் வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலானது.
பிராட்வே மற்றும் பூந்தமல்லி இடையே இயக்கப்படும் வழித்தட எண் 53, எம்டிசி பேருந்தின் மேற்கூரையில் மாணவர்கள் ஏறிச் சென்றனர். அவர்களில் சிலர் சாலையில் ரகளை செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரும்பாக்கம் மற்றும் டிபி சத்திரம் காவல் எல்லையில், ஜூலை 5 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பேருந்தில் ஏறி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மூன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
வானகரம் மற்றும் திருவேற்காடு பகுதியை சேர்ந்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் 53 பஸ் ரூட்டை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
- பணியின்போது இறந்த பணியாளர்களின் 49 வாரிசுதாரர்களுக்கு (ஒரு ஓட்டுநர் மற்றம் 48 நடத்துநர்களுக்கு) கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்கள்.
- தமிழ்நாடு அரசின் நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023-ஐ பரிந்துரைத்துள்ளது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் டீசல் எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த (CNG) மற்றும் (LNG) பயன்படுத்தி, மறுசீரமைப்பு செய்த பேருந்துகளை பரிச்சார்த்த முறையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் 20,160 டீசல் பேருந்துகள் மூலம், தினசரி சுமார் 1.76 கோடி பொது மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். போக்குவரத்துக் கழகங்களின் மொத்த செலவில் சுமார் 27% டீசலுக்காக செலவிடப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசின் நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023-ஐ பரிந்துரைத்துள்ளது.
அதன் அடிப்படையில், குறைந்த கார்பன் உமிழ்வு, அதிகப்படியான கிலோமீட்டர். டீசலைவிட 7% முதல் 20% வரை செலவு குறைந்த, சுற்றுச் சூழலுக்கு உகந்த, சுருக்கப்பட்ட இயற்கை எரிவாய்வு (CNG) மற்றும் திரவ நிலை இயற்கை எரிவாய்வு (LNG) பேருந்துகளை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பரிச்சார்த்த அடிப்படையில் இயக்கிட. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து, 7 போக்குவரத்து கழகங்களில் தலா இரண்டு பேருந்துகளில் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாய்வு (CNG) பயன்படுத்தி என்ஜினில் மறுசீரமைப்பு செய்து, மொத்தம் 14 பேருந்துகளை இயக்கவும், மேலும் மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் விழுப்புரம் போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 பேருந்துகளில், திரவ நிலை இயற்கை எரிவாய்வு (LNG) பயன்படுத்தி என்ஜினில் மறுசீரமைப்பு செய்து, மொத்தம் 4 பேருந்துகளை இயக்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதில், முதல் கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 4 திரவ நிலை இயற்கை எரிவாய்வு (LNG) பேருந்துகள் மற்றும் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 2 சுருக்கப்பட்ட இயற்கை எரிவாய்வு (CNG) பேருந்துகள் என மொத்தமாக 6 பேருந்துகள் இயக்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் இன்று தொடங்கி வைத்து, கீழ்கண்ட 6 வழித்தடங்களில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது.
மேலும், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து, பணியின்போது இறந்த பணியாளர்களின் 49 வாரிசுதாரர்களுக்கு (ஒரு ஓட்டுநர் மற்றம் 48 நடத்துநர்களுக்கு) கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்கள். ஏற்கனவே, 57 வாரிசுதாரர்களுக்கு 8 ஓட்டுநர். 48 நடத்துநர் மற்றும் ஒரு நிர்வாகப் பணியாளர் நியமன ஆணைகள் வழங்கப்பட்டு. தற்போது வரை மொத்தமாக 106 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி. மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், ராஜ்யசபா உறுப்பினர் மு.சண்முகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன், இணை மேலாண் இயக்குநர் குணசேகரன், போக்குவரத்துத்துறை தலைவர் அலுவலக தனி அலுவலர் நடராஜன், இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிர்வாக இயக்குநர் (தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி) அண்ணாதுரை, உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்குதல்.
- தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில், புனித தலத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
இதில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்தியது ரஜோரி, பூஞ்ச் மற்றும் ரியாசியின் மேற்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதக் குழு என தெரியவந்துள்ளது.
- சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
- திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 23ம் தேதி முதல் தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தற்பொழுது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மேற்படி, தடங்களில் குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கையின் அடிப்படையில் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு 23/05/2024 முதல் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
1. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் செஞ்சி வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படும்.
2. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 44 பேருந்துகள் ஆற்காடு, ஆரணி வழியாகவும் மற்றும் தற்போது தினசரி கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் 30 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
ஆக மொத்தம் 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்படும்.
எனவே, பயணிகள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரிக்கை.
- க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் பயணம் செய்யலாம்.
சென்னையில் பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதற்காக, தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரியுள்ளது.
இந்த செயலியில் க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம்.
- முதற்கட்டமாக இன்று 100 புதிய பேருந்துகளைத் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
- எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.
சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து ரூ.37.98 கோடி மதிப்பிலான 100 புதிய BS6 ரக பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, மேயர் பிரியா, துறையின் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவைக்கேற்ப புதிதாக 1,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனக் கடந்த 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின்கீழ் அறிவித்தேன்.
அதன்படி, ரூ.634.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1,666 BSVI பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக இன்று 100 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தேன்.
எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.
பொதுமக்கள் தங்கள் வீட்டின் சொந்த வாகனங்களில் பயணிப்பதைப் போன்று பொதுப் போக்குவரத்துகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பயணிகள் வசதிக்காக திருச்சி மண்டலத்தில் 250 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது
- போக்குவரத்து பணியாளர் விடுமுறை இன்றி பணியாற்றி வருகிறார்கள்
திருச்சி,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் சார்பில் பொதுமக்கள் சிரமின்றி செல்வதற்காக கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களில்13, 14, 15 ஆகிய தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கும், பிற இடங்களுக்கும 250 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக போக்குவரத்து பணியாளர் விடுமுறை இன்றி பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்