என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கருங்கல்"
- சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி அம்பேத்கர் தெரு செல்லும் பகுதியில் பி.எஸ்.என்.எல். கேபிள் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
- நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் மண்ணை தோண்டியபோது திடீரென பாறை உடைபடுவது போன்ற சத்தம் கேட்டது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி அம்பேத்கர் தெரு செல்லும் பகுதியில் பி.எஸ்.என்.எல். கேபிள் பதிப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் மண்ணை தோண்டியபோது திடீரென பாறை உடைபடுவது போன்ற சத்தம் கேட்டது.
கருங்கல் சிலை
இதையடுத்து அங்கு பார்த்தபோது கருங்கல் சிலை மண்ணுக்குள் தென்பட்டது. உடனடியாக இதுபற்றி வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறை அதிகாரிகள் சிலையை மீட்டு பார்த்தபோது அது 10 கைகளுடன் 2 அடி உயரம் கொண்ட பத்ரகாளியம்மன் கற்சிலை என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த சிலையை நங்கவள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவ லகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
மக்கள் வழிபாடு
சிலை கண்டெடுக் கப்பட்டது குறித்து தகவல் அறிந்து சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் சாமி சிலைக்கு புடவை மற்றும் மாலை அணிவித்து வழிபட்டு சென்றனர்.
ஒப்படைப்பு
இதனிடையே மீட்கப்பட்ட பத்ரகாளியம்மன் சிலை சேலம் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இதன்படி இன்று வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த தொல்லியல் துறை அதிகாரிகளிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது.
இப்பகுதியில் பழமையான கோவில்கள் ஏராளமாக உள்ளதால் தொல்லியல் துறையினர் இந்த பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வேதாரண்யம் -கரியாப்பட்டினம் சாலையில் கருங்கல் ஏற்றிய லாரி வந்து கொண்டிருந்தது.
- அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறை மீனவ கிராமத்தில் ரூ.150 கோடி செலவில் படகு நிறுத்த தூண்டில் முள் வளைவு கட்டும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது .
இதற்காக புதுக்கோ ட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கல் ஏற்றி வந்து ஆறுகாட்டுதுறை கடலில் கொட்டி துண்டு முள் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை மணக்காடு பகுதியில் வேதாரண்யம் -கரியாப்பட்டினம் சாலையில் திருச்சியில் இருந்து கருங்கல் ஏற்றி லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக கார் வந்தது.
திடீரென எதிர்பா ராதவிதமாக லாரி- கார் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இதில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து அதில் இருந்த கருங்கற்கள் சாலையில் சிதறின. விபத்தில் டிரைவர் முத்து பலத்த காயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இமு பற்றி கரியா பட்டி னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
- 1,200 ஆண்டு பழைமையான இந்த கோயில் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
- சகல சாஸ்திரம், ஆகம விதிமுறைகள்படி கருங்கல் முதல்வரி பதிக்கப்பட்டது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் அருகே திருபுவனம் கிராமத்தில் ஸ்ரீரங்கநாதர் பெருமாள் கோயில் உள்ளது 1,200 ஆண்டு பழைமையான இந்த கோயில் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
கோவிலில் முதல்வரி கருங்கல் பதிக்கும் நிகழ்ச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீ பெரிய நம்பி திருமாளிகை தலைமையில் திருப்பணி குழுவினர், கிராமவாசிகள் முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக கருங்கல் உபய பீடத்திற்கு அடியில் வெள்ளி காசு, தங்க காசு, நவரத்தினங்கள், துளசி, நொச்சி. ஆழம் கொழுந்து, வேப்ப கொழுந்து, அரச கொழுந்து. பாதரசம், நாணயங்கள், வைக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள். சகல சாஸ்திரம், ஆகம விதிமுறைகள்படி கருங்கல் முதல்வரி பதிக்கப்பட்டது
இதில் இதில் தமிழ்நாடு அரசு சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினர் ராஜேந்திரன், பூண்டி கல்லூரி பேராசிரியர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், திருப்பணி குழுவினர், கிராமவாசிகள், மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- ரோட்டோரம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து உள்ளனர்.
- கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தேவிகோடு தோரணவிளையை சேர்ந்த வர் செல்லன். இவது மகன் மகேஷ் (வயது 20).
இவர் கடந்த 28-ம் தேதி மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.அப்போது டயர் பஞ்சர் ஆகி உள்ளது. எனவே மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்று உள்ளார்.
நேற்று மோட்டார் சைக்கிளை எடுத்து வர ஊழியருடன் சென்றார். அங்கு அவரது மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரோட்டோரம் நிறுத்தி யிருந்த மோட்டார் சைக்கி ளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து உள்ளனர்.
இது குறித்து கருங்கல் போலீஸ் நிலையத்தில் மகேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- புகாரின்பேரில் கருங்கல் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
- ஒலிபெருக்கியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
கன்னியாகுமரி:
கருங்கல் அருகே உள்ள சகாயநகர் பகுதியில் ஏராளமான வீடுகள் நெருக்கமாக உள்ளன. அப்பகுதியில் கிறிஸ்தவ ஆலயம், இந்து கோவில் போன்றவையும் உள்ளது. இருவேறு மதத்தை சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சகாயநகர் குன்னுவிளை பகுதியில் ஒருவர் புதிய வீடு ஒன்றை கட்டி ஜெபக்கூட்டம் நடத்தி உள்ளார். பலநாட்கள் ஜெபக்கூட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த 9-ந் தேதி முதல் வெளி ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து ஒலிபெருக்கி வைத்து ஜெபக்கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனை கண்டு கொள்ளா மல் நேற்று இரவு அந்த வீட்டில் எவ்வித அனுமதியும் இன்றி அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி வைத்து ஜெபக்கூட்டம் நடத்தி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வீட்டின் முன் அப்பகுதி பொதுமக்கள் திரண்டனர்.
இதுகுறித்து அப்பகு தியை சேர்ந்த வக்கீல் படுவூர் எட்வின் என்ற அருள் எட்வின் ஜெகம் என்பவர் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவ்வீட்டில் அனுமதியின்றி ஜெபகூட்டம் நடத்தியதும், அனுமதி யின்றி ஒலிபெருக்கி வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததும் தெரியவந்தது. எனவே ஜெபக்கூட்டம் நடத்தியதை நிறுத்தினர். மேலும் ஒலிபெருக்கியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்ற னர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- மேலும் ஒருவர் தலைமறைவு
- சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (வயது 24).
இவர் கருங்கல் பஸ் நிலையம் அருகே உள்ள வேன் ஸ்டாண்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை அஸ்வின் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது போலீஸ் வாகனத்தில் வந்த ஒரு கும்பல் அஸ்வினை வழிமறித்து ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றது.
இந்த கும்பல் மீது அஸ்வினுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அஸ்வின் போலீஸ் வாகனத்தையும் அதிலிருந்த கும்பலையும் செல்போனில் படம்பிடித்தார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து போலீஸ் வாகனத்தில் தப்பி சென்று விட்டது. நடந்த சம்பவம் குறித்து அஸ்வின் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அஸ்வின் செல்போனில் பதிவு செய்திருந்த அந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அஸ்வினிடம் பணம் பறித்த கும்பல் பயன்படுத்தியது குலசேகரம் போலீஸ் நிலைய வாகனம் என்பது தெரிய வந்தது. குலசேகரம் போலீஸ் நிலையத்தில் உள்ள வாகனத்தை பழுது நீக்குவதற்காக ஒர்க் ஷாப் ஒன்றில் விட்டு இருந்தனர்.
வேலை முடிந்த பிறகு அந்த வாகனத்தை அங்கு நிறுத்தி இருந்தனர். அந்த வாகனத்தை சிலர் எடுத்து செல்வது போன்ற காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் போலீஸ் வாகனத்தை எடுத்துச் சென்றது காஞ்சிரக்கோடு பகுதியைச் சேர்ந்த போஸ்கோ டைசிங் (38), ரூபன் (38), விஷ்ணு (27), கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஹிட்லர் (45)என்பது தெரியவந்தது. இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 4 பேரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் போஸ்கோ டைசிங், ரூபன், விஷ்ணு ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வாகனத்தை அந்த பகுதியில் இருந்து எடுத்து சென்று கருங்கல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றதாகவும் திரும்பி வரும் வழியில் அஸ்வினிடம் பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது.
தலைமறைவாகியுள்ள ஹிட்லரை தேடி வருகி றார்கள். போலீஸ் வாகனத்தில் சென்று வாலிபரி டம் பணம் பறித்த சம்ப வம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் விதமாக கடந்த மூன்று மாதமாக கருங்கல்லில் ஹெல்மெட் வடிவமைத்தேன்.
- ஒரே கருங்கல்லை பயன்படுத்தி அதை நன்கு செதுக்கி 8 கிலோ எடை அளவில் நேர்த்தியான ஹெல்மெட் வடிவமைத்துள்ளார்.
அவினாசி
திருப்பூர் மாவட்டம் அவினாசி கால்நடை மருத்துவமனை எதிரில் சிற்ப கலைக்கூடம் நடத்தி வருபவர் சரவணன் (வயது 32). இவர் பல்வேறு சிற்பங்களை செதுக்கியுள்ளார். இந்த நிலையில் ஒரே கருங்கல்லை பயன்படுத்தி அதை நன்கு செதுக்கி 8 கிலோ எடை அளவில் நேர்த்தி யான ஹெல்மெட் வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். ரூ.500 மதிப்புள்ள ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ரூ.1,000 அபராதம் கட்ட நேரிடுகிறது. மேலும் விபத்து ஏற்பட்டு விலைமதிப்பில்லாத உயிரை இழக்க நேரிடுகிறது. எனவே அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் விதமாக கடந்த மூன்று மாதமாக கருங்கல்லில் ஹெல்மெட் வடிவமைத்தேன். கொரோனா காலத்தில் கொரோனா உருவ பொம்மை, முக கவசம், சானி டைசர் பாட்டில் போன்றவற்றை கருங்கல்லால் செதுக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தேன். அந்த வகையில் தற்போது ஹெல்மெட் அவசியத்தை வலியுறுத்துவதற்காக கருங்கல்லில் ஹெல்மெட் வடிவமைத்தேன் என்றார்.
- மழை நீரோடையின் மேல் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- மழை நீர் தேங்கி சுகாதார கேட்டையும் ஏற்படுத்தி வந்தது.
கன்னியாகுமரி:
கருங்கல் சந்திப்பில் இருந்து புதுக்கடை செல்லும் சாலையில் ரோட்டோரம் அமைக்கப்பட்டு இருந்த மழை நீரோடைகள் ஆக்கிர மிக்கப்பட்டு இருந்ததோடு, சில பகுதிகள் சேதமடைந்தும் காணப்பட்டது.
இதனால் மழைக்காலங் களில் மார்த்தாண்டம் சாலையிலிருந்தும் சந்திப் பில் இருந்தும் மழைநீர் ரோடு வழியாக ஓடி ஆர்.சி. தெருவில் ஆறுபோல் பெருக்கெ டுத்து ஓடி வந்தது. மட்டுமல்லாமல் சேதமடைந்து இருந்த பகுதியில் மழை நீர் தேங்கி சுகாதார கேட்டையும் ஏற்ப டுத்தி வந்தது.
இதனால் அப்பகுதி மக்க ளும், வியாபாரிகளும் பெரும் பாதிப்புக்கு உள் ளாகி வந்தனர். எனவே கருங்கல் புதுக்கடை சாலை யில் உள்ள மழை நீரோடை களை சீரமைக்க வேண் டும் என பேரூராட்சி நிர்வா கத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த மழை நீரோடையை சீர மைப்பதற்கு 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் தமிழக அரசு ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இந்நிதியில் கருங்கல் சந்திப் பில் இருந்து புதுக்கடை செல்லும் சாலையில் ரோட்டின் வலதுபுறம் கூனாலுமூடு வரை மழை நீரோடையின் மேல் அமைக் கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டு, மழை நீரோடை சீரமைக்கும் பணி தொடங்கியது.இப்பணியை கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூ ராட்சி துணைத்தலைவர் மரிய செல்வம், பேரூராட்சி உறுப்பினர்கள் டெல்பின், ராஜசேகர், ஜெயக்குமார், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் அருள்ராஜ் உட்பட பலர் கலந்து கொண் டனர்.
- கூடி நின்ற பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.
- குளச்சல் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.
கன்னியாகுமரி:
கருங்கல் அருகே உள்ள இனயம் பகுதியை சேர்ந்தவர் அசின். இவர் தனது நண்பருடன் காரில் கருங்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். கார் பாலூர் பகுதியில் வரும்போது திடீரெனை முன்பக்கம் இருந்து புகை வந்து உள்ளது. உடனடியாக அவரும், அவரது நண்பரும் காரை நிறுத்திவிட்டு இறங்கி விட்டனர். சிறிது நேரத்தில் காரில் தீப் பிடித்தது. அப்பகுதியில் கூடி நின்ற பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.
மேலும் குளச்சல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பிடித்திருந்த தீயை அணைத்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம்
- கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் வாழைத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவர் கப்பலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. இவர்களுக்கு சந்தீப் (வயது 12), சஞ்சய் (10) என்ற மகன்களும் ரிஸ்மிதா (2) என்ற மகளும் உண்டு.
நேற்று ரிஸ்மிதா வீட்டின் அருகே விளையா டிக்கொண்டு இருந்தார். பின்னர் திடீரென குழந்தை காணாமல் மாயமானார். குழந்தையை காணாத ஸ்ரீஜா அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினார். எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த கருங்கல் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ், சோபன ராஜ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
குழந்தையை குறித்து எவ்வித தகவலும் கிடைக் காத நிலையில், இவர்களது வீட்டின் அருகே உள்ள குளத்தில் தேட முடிவு செய்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குளச்சல் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் குளத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் குழந்தை பிணமாக மீட்கப்பட்டார்.
பிணத்தை கைப்பற்றிய கருங்கல் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
ரிஸ்மிதா விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- இவர் கடநத சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
- ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கருங்கல் அருகே உள்ள பாலூர் வெட்டுக்காட்டு விளையை சேர்ந்தவர் ஐயப்பன் ஆசாரி மகன் சுனில்குமார் (வயது 46). இவர் நகை தொழில் செய்து வந்தார். இவர் கடநத சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று, இவரது மனைவி சாந்தி இவரை வேலைக்கு செல்ல வலியு றுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சுனில்குமார் அவரை தள்ளி விட்டு அறைக்குள் சென்று மனைவியின் சேலையால் பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார்.
இதுகுறித்து சாந்தி கருங்கல் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் கருங்கல் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜாக்கமங்கலம் அருகே எறும்பு காட்டை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 32). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சிவரஞ்சனி. கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வரதராஜன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
இதுபற்றி ராஜாக்க மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து வரதராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கருங்கல் போலீசார் பிணத்தை கைப்பற்றினர்
- வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கருங்கல் அருகே உள்ள இலவுவிளை காரான் விளையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் அஸ்வின் (வயது 30). இவர் சொந்தமாக கார், மேக்சி கேப் வேன்கள் வைத்து ஓட்டி வந்தார்.
பைனான்ஸ் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அஸ்வின் நேற்று பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட அஸ்வினுக்கு பிரீஷா என்ற மனைவியும், ரெஷ்வினா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்