search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவறைகள்"

    • முன்னதாக சிலம்பாட்ட போட்டியை தொடங்கி வைத்தார்.
    • சின்னையாபாளையம் பகுதியில் கழிவறைகளை திறந்து வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலைஞர் அறிவாலயம் அருகே 29-வது வார்டு ரெசிடென்ஸ் பங்களா சாலையில் அங்கன்வாடி செயல்பட்டு வந்தது. பழமை வாய்ந்த இந்த அங்கன்வாடியை புதுப்பித்து நவீன முறையில் கட்ட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நடந்து முடிந்தன. இதையடுத்து இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி நவீன அங்கன்வாடியை திறந்து வைத்து பார்வையிட்டார். முன்னதாக அவர் அங்கன்வாடி அருகே சிலம்பாட்ட போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கன்வாடி அருகே சின்னையாபாளையம் பகுதியில் கழிவறைகளை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, மேத்தா, ரம்யா சரவணன், கவுன்சிலர் ஸ்டெல்லா நேசமணி, பகுதி செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காவல் நிலைய இடம் ஆய்வு.
    • பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வசதி குறித்து கேட்டறிந்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்காவின் நான்கு புறமுள்ள நடைப்பாதைகள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காவல் நிலைய இடத்தையும், மேலும், தர்காவிற்கு வரும் பக்தர்களின் பயன்பா ட்டிற்காக உள்ள கழிவறைகள் சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்தும், பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வசதி குறித்தும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், மாரிமுத்து எம்.எல்.ஏ., மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மாவட்ட சிறுபான்மையினர் அலுவலர் பாலசந்தர், தாசில்தார் மலர்கொடி மற்றும் தர்கா டிரஸ்டி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.இதில் தர்கா கமிட்டி சார்பில் முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி, ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன், எஸ்.பி.டி. ஐ. தலைவர் பகுருதீன் ஆகியோர் அமைச்சரிடம் மனு கொடுத்தனர். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.

    • டெல்லியில் பல இடங்களில் பூங்காக்களை அழகுபடுத்தவும், மரங்களை ஒளிரச் செய்யவும் முடிவு.
    • சுற்றுலா தலங்கள் மற்றும் அதிக மக்கள் நடமாட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மண்டலங்கள் முக்கியமானதாக தேர்வு.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜி20 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி ஜி20 உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தனது ஐந்து மண்டலங்களில் புதிய கழிப்பறைகளை கட்டவும், பழைய கழிப்பறைகளை சரிசெய்யவும் திட்டமிட்டுள்ளது.

    மேலும் இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் பல இடங்களில் பூங்காக்களை அழகுபடுத்தவும், மரங்களை ஒளிரச் செய்யவும், பொது இடங்களில் கலைகள் நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதிய சமுதாயக் கழிப்பறை வளாகங்கள் மற்றும் பொதுக் கழிப்பறைகள் கட்டுவதற்கான பணிகளும், பழையவற்றை சரிசெய்யும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இந்த புதிய கழிப்பறைகள், மாநகராட்சியின் கரோல் பாக், தெற்கு, மத்திய, ஷாஹ்தாரா தெற்கு மற்றும் நகர எஸ்பி ஆகிய ஐந்து மண்டலங்களில் பணி மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுலா தலங்கள் மற்றும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மண்டலங்கள் முக்கியமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    • வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 28 லட்சத்தில் 95 தனி நபர் கழிவறைகள் கட்டப்படுகிறது.
    • விரைந்து பணிகள் முடிக்கபட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 31 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பொது கழிவறைகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    மேலும், நகராட்சி சார்பில் 95 தனிநபர் கழிவறை கட்டும் பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இது குறித்து நகராட்சி கமிஷனர் ஹேமலதா கூறியதாவது:-

    வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 28 லட்சத்தில் 95 தனி நபர் கழிவறைகள் கட்டப்படுகிறது.

    இதில் ஒவ்வொரு கழிவறையும் ரூ. 9 ஆயிரத்து 330 அரசு மானியமாக 30 ஆயிரம் செலவில் கட்டப்படுகிறது.

    தற்போது 18 கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

    மேலும், ரூ. 31 லட்சம் 28 ஆயிரம் செலவில் கட்டப்படும் பொது கழிவறையும் விரைந்து பணிகள் முடிக்கபட்டு பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு விடப்படும் என்றார்.

    ஆய்வின்போது வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கர், ஆத்மா குழு தலைவர் சதாசிவம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.

    • 53 தனிநபர் கழிவறைகள் திறக்கப்பட்டது
    • ராம்கோ சிமென்ட்ஸ் ஆலை சார்பில்

    அரியலூர்:

    ராம்கோ சிமெண்ட்ஸ், (கோவிந்தபுரம்), நிறுவனத்தின் நிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டு துறையின் நிதியின் மூலம் ரெட்டிபாளையம் ஊராட்சி, மு.புத்தூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 53 தனிநபர் கழிப்பறை மற்றும் குளியல் அறைவளாகங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, எம்.எல்.ஏ. சின்னப்பா மற்றும் கிராமாலயா நிறுவனத்தின் நிறுவனர், பத்மஸ்ரீ தாமோதரன், ராம்கோ சிமெண்ட்ஸ் அரியலூர் ஆலைத்தலைவர் மதுசூதன் குல்கர்னி, மூத்த துணைதலைவர் (நிர்வாகம்) ராம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இது குறித்து ராம்கோ சிமென்ட்சின் அரியலூர் ஆலை தலைவர் மதுசூதன் குல்கர்னி கூறியதாவது:

    கடந்த நிதியாண்டின் (2020-21) ஆரம்பத்தில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் தனது ஆலை மற்றும் சுரங்கப்பகுதிகளை சுற்றியுள்ள அமீனாபாத், நல்லாம்பத்தை, சின்னநாகலூர் மற்றும் மு.புதூர் ஆகிய 4 கிராமங்களில் 100 தனி நபர் நவீன கழிப்பறைகளுடன் கூடிய குளியலறைகளை கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்கள். மேலும், இந்த ஆண்டு கூடுதலாக 100 கழிவறைகளை மேற்கண்ட கிராமங்களில் கட்டிவருகிறது.

    இந்நிலையில், மு.புதூர் கிராமத்தில் மட்டும் இரண்டாண்டுகளில் 53 தனிநபர் கழிப்பறைகளை கட்டிமுடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்துள்ளனர். நமது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ள ஸ்வச் பாரத் இயக்கத்தில், தி ராம்கோ சிமெண்ட்ஸ், கோவிந்தபுரம், அரியலூர் ஆலையின் "நிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டு துறை"-யின் மூலம் தனிப்பட்ட வீடுகளுக்கு நவீன கழிவறை கட்டிக் கொடுத்து வருகிறது.

    இவ்விழாவில், கிராம ஊராட்சி மன்ற தலைவர், பிரதிநிதிகள், அரசு அலுவலாக் ள், ராம்கோ சிமெண்ட்ஸ் அலுவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

    ×