search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • கிருஷ்ணராயபுரம் அருகே முதியவர் மர்மமுறையில் இறந்தார்
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வீரராக்கியம் குளத்து வாரி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் 80 வயது முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த முதியவர் யார?் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வீரராக்கியம் பகுதியை சேர்ந்தவர் அம்மையப்ப கவுண்டர் (வயது 88) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்து கிடப்பது அம்மையப்ப கவுண்டர் என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் பெரியசாமி கொடுத்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மங்களமேடு அருகே புள்ளிமான் இறந்தது
    • மங்களம் காப்புக்காட்டில் மானின் உடல் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள ஒகலூர் கிழக்கு கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்தில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மங்களம் காப்புக்காட்டில் மானின் உடல் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

    • 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
    • தகவல் அறிந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். அவரது 2 கால் முட்டி பகுதிகளில் காயத்தழும்பு உள்ளன. முதியவர் இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழந்தார்
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் பிச்சம்பட்டி அருகே உள்ள கே.பி.தாளப்பட்டியை சேர்ந்தவர் பிரசாத்(வயது 32). இவர் பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி வினோதினி (27) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பிரசாத் வழக்கம்போல் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வேலை செய்து கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அங்கு பணிபுரிந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பிரசாத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பாம்பு கடித்து தொழிலாளி இறந்தார்
    • சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி நடுத்தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் (வயது 47) என்பவர், இரவு நேரத்தில் கடைவீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது வழியில் இருட்டாக இருந்த பகுதியில் தெருவில் கிடந்த பாம்பை மிதித்து உள்ளார். இதனால் சிவக்குமாரின் காலை பாம்பு கடித்து உள்ளது. இது குறித்து சிவக்குமார் தனது மனைவி உஷாவிடம் கூறவே, அக்கம்பக்கத்தினர் உதவியுடன், சிவக்குமார் தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று, பின்னர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து சிவகுமாரின் மனைவி உஷா தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    திருமங்கலம்

    மதுரை செல்லூரை சேர்ந்தவர் மதுரை வீரன் (வயது46). புக் பையிண்டிங் செய்யும் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அரசு பஸ்சில் திருமங்கத்திற்கு வந்த மதுரை வீரனுக்கு பஸ் நிலையத்தில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மதுரை வீரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓடும் பஸ்சில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
    • கிருஷ்ணகுமார் இறந்த தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வெள்ளாகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ண குமார்(வயது46). இவருக்கு 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் ராஜ பாளையம் பி.டி.ஆர்.நகரில் வசிக்கும் இவரது உறவினர் கணேசனை பார்ப்பதற்காக தனியார் பஸ்சில் ராஜ பாளையம் வந்தார். புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் இறங்கி சென்றனர். ஆனால் கணேசன் இறங்கவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த பஸ் கண்டக்டர் பாக்யராஜ், அவரது அருகில் சென்று பார்்த்தபோது பேச்சு, மூச்சின்றி கிடந்துள்ளார். அவர் வைத்திருந்த ஆதார் அட்டை, போன் அழைப்பு களை வைத்து அவரது உறவினரான கணேசனுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அங்கு வந்த கணேசன், ஆம்புலன்சு மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கிருஷ்ண குமாரை கொண்டு சென்றார். அங்கு டாக்ட ர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

    பஸ்சில் பயணம் செய்துவந்தபோதே கிருஷ்ணகுமார் இறந்தி ருக்கிறார். இதுகுறித்து கணேசன் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமார் இறந்த தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பாம்பு கடித்து பெண்-முதியவர் பரிதாபமாக இறந்தனர்.
    • சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சின்னபேராளி கிழக்கு தெருவை சேர்ந்தவர் இந்திராணி(வயது55). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் கருப்பசாமி கோவில் அருகே உள்ள ஓடை பகுதியில் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்ேபாது அவரது இடது காலில் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இந்திராணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இந்திராணியின் மகன் முத்துமணி கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (63). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று காட்டுக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • வலிப்பு நோய் ஏற்பட்ட விவசாயி உயிரிழந்தார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி ஏரிக்கரை காட்டு கொட்டகையை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 66), விவசாயி. இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவது வழக்கம். கடந்த 29-ந்தேதி பெரியசாமி அதே பகுதியில் உள்ள முருகன் கோவிலில் கட்டையில் அமர்ந்திருந்த போது திடீரென்று வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதில், தலையின் பின்பக்கம் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டாரை அடுத்த செங்கோடி மாத்தாரை சேர்ந்தவர் மணிதாஸ் (வயது 59 ), பந்தல் தொழிலாளி.

    இவர் மாத்தார் பகுதியில் உள்ள காவு கோவில் திருவிழாவுக்காக பந்தல் அமைக்கும் வேலையில் ஈடுபட்டார். அப்போது மேல் பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மணிதாஸ், நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி மணிதாஸ் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் மணிதாசின் உடல் உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது. அவருக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

    • மின்சார வாரிய ஊழியர் உயிரிழந்தார்
    • இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் புகழூர் மின்சார வாரிய குடியிருப்பில் வசிப்பவர் செந்தில்குமார் (வயது 45). இவர் மின்சார வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக (எல்ஐ) பணியாற்றி வந்தார். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில்குமார் மூலிமங்கலம் செல்லும் பிரிவு சாலையில் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்பிகா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 27-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நிலை குறைவு ஏற்பட்டது.
    • ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    திருப்பூர் அருகே ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் கருப்பன் (வயது72). இவர் காங்கேயம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த போக்சோ வழக்கில் கைதாகி கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் கைதியாக அடைக்கப்பட்டு இருந்தார்.

    ஜெயிலில் இருந்த அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 27-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நிலை குறைவு ஏற்பட்டது.

    அப்போது திடீரென ஜெயிலில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சக கைதிகள் இது குறித்து ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் விரைந்து சென்று அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகளுக்கான வார்டில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×