என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிறைவு"
- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறைவு விழா நடத்தப்படாமல் பொருட்காட்சி முடிவடைந்தது.
சென்னை:
தமிழக அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 48-வது சுற்றுலா பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த பொருட்காட்சியில், 51 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகளில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவை தவிர கடைகள், பொழுதுபோக்கு வளாகம் ஆகியவையும் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், 32-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள், ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றி ருந்தன. அரசு பள்ளி மாண வர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தினந்தோறும் பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக சென்று சுற்றுலா பொருட்காட்சியை கண்டு களித்தனர். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சுற்றுலா பொருட்காட்சி நேற்று முடிவடைந்தது. இந்த பொருட்காட்சியை மொத்தம் 5.86 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர். இவர்களில் 4,91,361 பேர் பெரியவர்கள், 94,637 பேர் குழந்தைகள் ஆவர். பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடப்பதால் கடந்த வாரம் பொது மக்களின் வருகை குறைந்து காணப்பட்டது.
தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறைவு விழா நடத்தப்படாமல் பொருட்காட்சி முடிவடைந்தது. சிறந்த அரங்குக்கான விருது ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- குடிநீர் திட்டப்பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் குமாா் நகரில் உள்ள வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்றது.
- இப்பணிகளை செப்டம்பா் மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
திருப்பூர்,
குடிநீர் திட்டப்பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் குமாா் நகரில் உள்ள வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருப்பூா் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் தலைமை வகித்தாா்.
இதில் அவா் பேசியதாவது:-
திருப்பூா் வடக்கு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூா் ஒன்றியம் பட்டம்பாளையம், சொக்கனூா், மேற்குபதி, வள்ளிபுரம், தொரவலூா், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லூா், காளிபாளையம், கணக்கம்பாளையம், பொங்குபாளையம் ஆகிய 10 ஊராட்சிகளுக்கு அன்னூா்-மேட்டுப்பாளையம் குடிநீர் திட்டப்பணிகள் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டன.
இப்பணிகளை செப்டம்பா் மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் சொா்ணாம்பாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேலுசாமி, ஜோதிநாத், ஒன்றிய உதவிப்பொறியாளா்கள் கற்பகம், மகேஸ்வரி, ஒன்றியக்குழு உறுப்பினா் ஐஸ்வா்ய மகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
- திருமயம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவுற்றது
- பணிகள் நிறைவுற்றதாக திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கத்தர் அறிவிப்பு
திருமயம்,
திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கத்தர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருமணம் ஊராட்சியில் 15-வது மாநில நிதி குழு மான்யத்தில் ரூ.9 லட்சத்து 47 ஆயிரம் திப்பீட்டில் திட்டப்பணிகள் நடைபெற்று முடிவடைந்து வருகிறது. கோட்டை தெரு, நடுவீதி பகுதியில், மேல் மூடியுடன் கூடிய கழிவு நீர் கால்வாயானது சுமார ரூ.4 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. சந்தைப்பேட்டை பகுதியில் ரேஷன் கட வீதியில் ரூ.3 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர்பிளாக சாலையானது அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. பெல் தொழிற்சாலை எதிரே உளள ராயல் நகரில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலையானது அமைக்கப்பட்டு ள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
- இருதய ஆண்டவர் தேவாலய தேர்பவனிவிழா நடந்தது.
- இன்று 8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், மானாம துரை அருகே இடைக்காட்டூரில் பிரபலமான திருஇருதய ஆண்டவர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின்
129-வது ஆண்டு திருவிழா கடந்த 30-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோணி முஸ் கொடியேற்றி வைத்து திருப்பலி நடத்தினார். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் மாலையில் இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் வெவ்வேறு தலைப்புகளில் மறையுரை வழங்கப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார மின்விளக்கு தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது. அப்போது, திரு இருதய ஆண்டவர் சொரூபம் தாங்கிய மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் ஆலயத்தைச் சுற்றி உள்ள வீதிகளில் வலம் வந்தது.
முன்னதாக காலை ஆயர் (பொறுப்பு) ஸ்டீபன் அந் தோணி, திருவிழா திருப்பலி யையும், மாலையில் முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் திருவிழா நிறைவு திருப்பலியையும் நடத்தினர். இன்று 8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.
- கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.
- 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கீழக்கரை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் ஆக்கி விளையாட்டு மைதானத்தில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.
ஹாக்கி பயிற்றுனர் மணிகண்டன் கடந்த 15 நாட்களாக மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இந்த நிலையில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கணேஷ் தலைமை தாங்கினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி துணைத்தலைவர் ஜெயக்குமார் வாழ்த்திப் பேசினார். இதில் தடகளம், ஓட்டப்பந்தயம், குழு விளையாட்டுப் போட்டிகள், கைப்பந்து என பல பயிற்சிகளில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்படுவதாக மேயர் மகேஷ் பேட்டி
- ஆய்வின்போது ஆணையாளர், மாநகர செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநக ராட்சி மேயராக மகேஷ் பொறுப்பேற்றதும் நாகர்கோவில் மாநக ராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக 52 வார்டுகளிலும் நேரில் ஆய்வு செய்து என்னென்ன வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு நடத்தி வந்தார். கடந்த 2 மாத காலமாக இந்த ஆய்வு பணி நடந்தது. 51 வார்டுகளில் நேற்றுடன் ஆய்வு பணி நிறைவடைந்து இருந்தது. இன்று மேயர் மகேஷ் வார்டான 4-வது வார்டில் தெரு தெருவாக சென்று ஆய்வு மேற் கொண் டார்.
அப்போது மக்களின் குறைகளை கேட்டு அறிந் தார். கிறிஸ்டோபர் காலனி, வெள்ளாளர் தெரு பகுதி களில் ஆய்வு மேற் கொண்ட மேயர் மகேஷ் அந்த பகுதி யில் உள்ள பூங்காவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து பெருவிளை அரசு பள்ளி காம்பவுண்ட் சுவரை சீர மைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் மகேஷ் அதை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். குப்பை இல்லா மாநகராட்சியாக மாற்றும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிடித்து பொதுமக்களிடம் இருந்து வாங்கப்பட்டு வரு கிறது. பிளாஸ்டிக் முற்றிலு மாக ஒழிக்கப்பட்டு உள் ளது. இதைத்தொடர்ந்து நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள வார்டுகளில் என்னென்ன வளர்ச்சி பணிகள் மேற் கொள்ளவேண்டும் என்பது குறித்து அதிகாரிகள் கவுன்சி லருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் அனைத்து வார்டுகளிலும் நேரில் சென்று நான் ஆய்வு மேற்கொண்டேன். பல்வேறு பொதுமக்களை சந்தித்து பேசினேன்.
அப்போது பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதிகள் குறித்து தகவல் தெரிவித்தனர். எந்தெந்த வார்டுகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தனித்தனியாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பணிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்பொழுது நாகர் கோவில் மாநகராட்சி யில் சாலை சீரமைப்பிற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதி அனைத்து வார்டு களுக்கும் பகிர்ந்து அளிக் கப்பட்டு உள்ளது. விரை வில் அந்த பணிகள் தொடங்கப்படும். ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணி யில் அதிகாரி கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். எந்த ஒரு பார பட்சமும் இன்றி ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
தற்போது 52 வார்டுகளி லும் கழிவு நீர் ஒடைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. கழிவு நீர் ஒடைகளில் கிடந்த மணல்கள் அப்புறப்படுத்தப் பட்டு அதை சீரமைத்து உள்ளோம். அடுத்த கட்டமாக சாலை சீரமைப்பிற்கான நிதிகள் ஒதுக்கப்படும். 52 வார்டுகளுக்கும் எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பது குறித்த பட்டியல் இன்னும் ஒரு இரு நாட் களுக்குள் இறுதி செய் யப்பட்டு முதல்-அமைச்ச ரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அரசிடம் இருந்து நிதி பெற்று அனைத்து பணிகளும் விரை வில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது ஆணையாளர் ஆனந்த்மோகன், மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- மேயர் மகேஷ் தகவல்
- 33-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகளில் மேயர் மகேஷ் வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இன்று 33-வது வார்டுக்கு உட்பட்ட தொல்லவிளை, குருசடி, மேலச்சூரங்குடி பகுதிகளில் நடந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது மூவேந்தர் நகர் பகுதியில் செயல்படாமல் இருந்த குடிநீர் தொட்டியை பார்வையிட்ட அவர் அதன் விவரங்களை அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
மேலும் 33-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்தது. அந்த சாலைகளை சீரமைக்கவும் பொதுமக்கள் மேயரிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்த மேயர் மகேஷ் அதை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து வார்டுகளிலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தற்போது சாலை சீரமைப்புக்கு ரூ. 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளுக்கும் எந்த ஒரு பாகுபாடும் இன்றி நிதி சரிவர பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். நாகர்கோ வில் மாநகரப் பகுதியிலுள்ள 52 வார்டுகளில் என்னென்ன வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து நானே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன்.
இன்று வரை 50 வார்டுகளில் ஆய்வு முடிவு பெற்றுள்ளது. இன்னும் எனது வார்டான 4-வது வார்டு மற்றும் 5-வது வார்டு மட்டும் ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஆய்வு பணி நிறைவடையும். மாநகர வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பதை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவ டிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- கரியகோவில் அணைக்கு தினமும் 50 கன அடி நீர் கூடுதலாக கிடைக்கும் கைக்கான்வளவு திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.
- இதில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பாப்பநாயக்கன்பட்டியில் 188.76 ஏக்கரில் கரியகோவில் அணை கட்டப்பட்டுள்ளது.
சேலம்:
தமிழ்நாட்டில் மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பாபநாசம், பெருஞ்சாணி, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, முல்லைப் பெரியாறு, திருமூர்த்தி, வைகை உள்பட 100-க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இந்த அணைகள் தமிழகத்தின் நீர்வளத்தை பாதுகாக்கின்றன.
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மேட்டூர், கரியகோவில், ஆனைமடுவு உள்ளிட்ட முக்கிய அணைகள் உள்ளது. இதில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பாப்பநாயக்கன்பட்டியில் 188.76 ஏக்கரில் கரியகோவில் அணை கட்டப்பட்டுள்ளது. அதன்மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணைக்கு கூடுதல் தண்ணீர் பெற 2020-ல் கைக்கான்வளவு நீரோடை திட்டம் அமைப்பது குறித்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். ெதாடர்ந்து 7.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணியை 18 மாதங்களில் முடிக்க அரசு அறிவுறுத்தியது.
மதகுகள் அமைப்பு
அதன்படி 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பணி தொடங்கப்பட்டது. செப்டம்பர் பருவ மழைக்கு பின், 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் பணி தொடங்கப்பட்டது. கரியகோவில் அணைக்கு கைக்கான்வளவு நீரோடையில் இருந்து புதிதாக ஓடை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. அங்கு மதகுகள் அமைத்து, அைணக்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் (நீர்வளம்) கூறியதாவது:-
கைக்கான்வளவு திட்டத்தில் சீரான இடைவெளியில் 8 தொட்டிகள் அமைத்து, அங்கிருந்து நீர் வர, 295 மீட்டர் தூரம் கான்கிரீட் கால்வாய் அமைக்கப்படுகிறது. கால்வாய் கட்டுமானப்பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. குறிப்பாக 90 சதவீத பணி முடிந்துள்ளது.
நவம்பரில்...
நவம்பரில் இத்திட்டம் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் கரியகோவில் அணைக்கு பருவ மழையின்போது தினமும் 50 கன அடி நீர் கூடுதலாக கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- முளகுமூட்டில் தொடங்கி களியக்காவிளை சென்றடைகிறார்
- வழி நெடுக செல்பி எடுத்து தொண்டர்கள் உற்சாகம்
நாகர்கோவில்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார்.
கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி பாதயாத்திரை தொடங்கிய ராகுல் காந்தி நேற்று இரவு முளகுமூடு பகுதியில் தங்கினார். இன்று 4-வது நாளாக முளகுமூட்டில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் ராகுல் காந்தி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் கலந்துரை யாடியதுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து காலை 7.05 மணிக்கு பாதயாத்திரை தொடங்கியது. வெள்ளை சீருடையுடன் தேசிய கொடியை ஏந்தியவாறு நிர்வாகிகள் முன் சென்றனர். தொடர்ந்து செண்டை மேள கலைஞர்கள் முன் செல்ல ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டார்.
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி திக் விஜய் சிங், மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், விஜய்வசந்த் எம்.பி., ஜோதிமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ராபர்ட் புரூஸ் ஆகியோரும் உடன் வந்தனர்.முளகுமூடு பகுதியில் ஏராளமான சிலம்பாட்ட கலைஞர்கள் ராகுலை வரவேற்க காத்திருந்தனர். அவர்கள் ராகுல்காந்தியை கண்டதும் சிலம்பம் ஆடினர்.
அதனை ரசித்த ராகுல் காந்தி பின்னர் சிலம்ப கலைஞர்களை அருகில் அழைத்து பாராட்டினார். இதுபோல சாலையோரம் நின்ற சிறுமி ஒருவரை அழைத்து ராகுல் காந்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்ட சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். வீடுகளின் மாடிகளில் இருந்தும் பெண்கள் குழந்தைகள் ராகுல் காந்தியை பார்த்து கை அசைத்தனர். ராகுல்காந்திக்கு ஒவ்வொரு சந்திப்பிலும் செண்டை மேளம், சிங்காரி மேளம், மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராகுல்காந்தி பயணம் செய்த பாதையோரம் ஏராள மான பள்ளி மாணவிகளும் அவரை பார்க்க காத்திருந்தனர். ராகுல்காந்தி வந்ததும் அவர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர். அவர் களில் சிலர் செல்போன்களை உயர்த்திக் காட்டி செல்பி எடுக்க வேண்டுமென்று கேட்டனர்.
அவர்களை பார்த்து புன்முறுவல் செய்த ராகுல்காந்தி, பாதுகாப்பு அரணை தாண்டி சென்று மாணவிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார். விருப்பம் நிறைவேறிய மகிழ்ச்சியில் மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.
இன்று காைல முளகுமூட் டில் தொடங்கிய ராகுலின் பாத யாத்திரை மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியில் காலை 9.10 மணிக்கு சென்றடைந்தது. அங்கு ஓய்வு எடுக்கும் ராகுல்காந்தி இன்று மாலை 3 மணிக்கு களியக்காவிளை சென்று அடைகிறார்.
ராகுல்காந்தி மேற்கொண் டுள்ள இந்திய ஒற்றுமை பயணம் தமிழகத்தில் 4 நாட் கள் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி, கன்னியாகுமரியில் கடந்த 7-ந்தேதி தொடங்கிய பாத யாத்திரை இன்று குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சென்று அடைகிறது. இன்றிரவு களியக்காவிளை அருகே கேரள எல்லை பகுதியான செறுவாரக்கோணத்தில் நிறைவு செய்கிறார். அதன்படி, ராகுலின் தமிழக சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
நாளை முதல் ராகுல்காந்தியின் கேரள பாத யாத்திரை தொடங்கு கிறது. அங்கு 18 நாட்கள் அவர், பாத யாத்திரை மேற் கொள்கிறார். இன்று கேரள எல்லையை நெருங்க நெருங்க ராகுலுக்கு தமிழிலும், மலையாளத்திலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- நீர்நிலைகளில் தேங்கியுள்ள மண்னை விவசாயிகள் எடுத்துக்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- 29 விவசாயிகள் 24 ஆயிரம் கன மீட்டர் மண் எடுத்துள்ளனர்.
உடுமலை :
விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும் நீர் நிலைகளை தூர்வாரி கூடுதல் மழை நீர் சேமிக்கும் வகையிலும் திருப்பூர் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண், மண் ஆகியவற்றை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள கடந்த மே மாதம் 5-ந் தேதி மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
எடுக்கப்படும் வண்டல் மண்விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நஞ்சை நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 75 டிராக்டர் லோடு மற்றும் புஞ்சை நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடு மண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. உடுமலை தாலுகாவில் 9 குளம், குட்டைகளில், விவசாயிகள் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் திருமூர்த்தி அணையிலும் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன் அடிப்படையில் நடப்பாண்டு திருமூர்த்தி அணையில் 34 ஆயிரத்து 100 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று நிலத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்டு 18 முதல் திருமூர்த்தி அணையிலிருந்து வண்டல் மண் எடுக்கப்பட்டு வந்தது.
தற்போது வரை 29 விவசாயிகள் 24 ஆயிரம் கன மீட்டர் மண் எடுத்துள்ளனர். பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கும் பணி நடந்து வருவதால் மண் எடுக்கும் அனுமதி நிறைவு செய்யப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், அணையின் நீர் தேங்கும் பரப்பில் மேடான பகுதியிலிருந்து 24 ஆயிரம் கனமீட்டர் மண் விவசாயிகள் எடுத்து விளை நிலங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர். அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதாலும் அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாலும் மண் எடுக்கும் பணி நிறைவு செய்யப்பட்டது என்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்தில் பணி நிறைவு பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலகத்தின் சார்பில் பணிநிறைவு பாராட்டுவிழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர்கள் ஸ்ரீனிவாஸ், மகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
பணி நிறைவு பெறும் கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் என்.டி.செல்வம், பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.மேலும் இவர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். முக்கியமாக கொரோனா காலத்தில் வீடு வீடாகச் சென்று பாடம் நடத்தியது, மரக்கன்றுகள் வழங்கியது, மாணவர்களுக்கு உண்டியல் பரிசுத்தொகை வழங்கியது போன்றவற்றால் பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் நன்மதிப்பைப் பெற்றார்.
பள்ளி இறுதி நாளில் பள்ளியில் உள்ள அனைத்து இடங்களிலும் கற்பூரம் ஏற்றி வழிபட்டார். இவரது சேவையை பாராட்டி என்.டி.செல்வத்திற்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் கலெக்டர் ரோகிணியிடம் 2 விருதுகளையும், பல்வேறு அமைப்புகள் மூலம் நிறைய விருதுகள் பெற்றவர்.
இவருக்கும், வாழக்கோம்பை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பச்சமுத்து, ஆனையாம்பட்டி புதூர் தலைமை ஆசிரியர் நாஸ்லின்பேகம் ஆகியோருக்கு வட்டாரக்கல்வி அலுவலர் ஸ்ரீனிவாஸ், வட்டாரக் அலுவலர் மகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பாராட்டிப் பேசினார்கள்.
பணி நிறைவு பெறும் தலைமையாசிரியர்களான செல்வம், பச்சமுத்து, நாஸ்லின்பேகம் ஏற்புரை நிகழ்த்தினர். கெங்கவல்லி வட்டாரத்தில் வட்டாரக்கல்வி அலுவலர்களால், ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் முதல் விழா என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்