என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஞ்சநேயர்"

    • 8-ந்தேதி சந்திர கிரகணம்: பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் 12½ மணிநேரம் மூடப்படுகிறது
    • இங்கு 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.

    திண்டிவனம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் பஞ்சவடி கோவில் அமைந்துள்ளது. இங்கு பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி, 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதிகள் அமைந்துள்ளன.

    சந்திர கிரகணத்தையொட்டி வருகிற 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பஞ்சவடி கோவில் காலை 6.30 மணியில் இருந்து இரவு 7 மணி வரை 12.30 மணிநேரம் மூடப்படுகிறது. அதாவது அன்றைய தினம் அனைத்து சன்னதிகளும் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு காலை 6.30 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 7 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு கிரகண பரிகார பூஜைகள் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். எனவே பக்தர்கள் மேலே குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த தகவலை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலர் நரசிம்மன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • ஆஞ்சநேயருக்கு தினசரி 1,008 வடை மலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.
    • அபிஷேகத்துக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேர் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி காலையில் நடை திறக்கப்பட்டு 9 மணி அளவில் 1,008 வடை மலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.

    இதை தொடர்ந்து காலை 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சாமிக்கு தினசரி அபிஷேகம் மற்றும் வடை மாலை அலங்காரம் கட்டளைதாரர்கள் மூலம் நடத்தப்படுகிறது. அதற்காக ஒரு ஆண்டுக்கு முன்பே பக்தர்கள் முன்பதிவு செய்வது வழக்கம். ஒரு நாள் நடைபெறும் வடைமாலை அலங்காரம் மற்றும் அபிஷேகத்துக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேர் முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து பூஜையில் கலந்துகொள்ளும் கட்டளைதாரர்களுக்கு அபிஷேக முடிவில் பிரசாதம் வழங்கப்படும்.

    அதன்படி 2023-ம் ஆண்டுக்கான ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேக முன்பதிவு வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாக அலுவலகத்தில் முழு தொகையையும் செலுத்தினால் மட்டுமே அபிஷேக தேதி முன்பதிவு செய்யப்படும். இல்லை என்றால் முன்பதிவு செய்யப்பட மாட்டாது என்று கோவில் உதவி ஆணையர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

    இதேபோல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம் அணிவிக்க ரூ.5 ஆயிரம், வெள்ளி கவசத்துக்கு ரூ.750, முத்தங்கி அலங்காரத்துக்கு ரூ.3 ஆயிரம், தங்கத்தேருக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வடை மாலை அலங்காரம் கட்டளைதாரர்கள் மூலம் நடத்தப்படுகிறது.
    • முதல் நாளில் 154 பக்தர்கள் முன்பதிவு செய்தனர்.

    நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் செதுக்கபட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த ஆஞ்சநேயருக்கு தினசரி காலையில் நடை திறக்கப்பட்டு 9 மணி அளவில் 1,008 வடை மலை சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறும்.

    இதை தொடர்ந்து காலை 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்ல எண்ணெய், சீயக்காய், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சாமிக்கு தினசரி அபிஷேகம் மற்றும் வடை மாலை அலங்காரம் கட்டளைதாரர்கள் மூலம் நடத்தப்படுகிறது. அதற்காக ஒரு ஆண்டுக்கு முன்பே பக்தர்கள் முன்பதிவு செய்வது வழக்கம். ஒரு நாள் நடைபெறும் வடை மாலை அலங்காரம் மற்றும் அபிஷேகத்துக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேர் முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து பூஜையில் கலந்துகொள்ளும் கட்டளைதாரர்களுக்கு அபிஷேக முடிவில் பிரசாதம் வழங்கப்படும்.

    அதன்படி வருகிற 2023-ம் ஆண்டுக்கான ஆஞ்சநேயர் சாமி அபிஷேக முன்பதிவு நேற்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்தனர். முதல் நாளான நேற்று 154 பக்தர்கள் பதிவு செய்து இருப்பதாகவும், சனி, ஞாயிறு மற்றும் விஷேச நாட்களுக்கு அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், முழு தொகையையும் செலுத்தினால் மட்டுமே அபிஷேக தேதி முன்பதிவு செய்யப்படும் என்ற அறிவிப்பால் கடந்த ஆண்டைவிட முதல்நாளில் குறைவான முன்பதிவே நடைபெற்று இருப்பதாகவும் கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல் ஆஞ்சநேயர் சாமிக்கு தங்க கவசம் அணிவிக்க ரூ.5 ஆயிரம், வெள்ளிக்கவசத்துக்கு ரூ.750, முத்தங்கி அலங்காரத்துக்கு ரூ.3 ஆயிரம், தங்கத்தேருக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

    இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் நாமக்கல் மட்டும் இன்றி பிற மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • உற்சவர் ராமர், லட்சுமனர், சீதை, அனுமருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
    • விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெற்றிலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் நேற்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு மூலவரான 11 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மற்றும் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் பருவமழையால் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியும், டெல்டா மாவட்டங்களில் போதிய அளவு மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் பக்தர்கள் மகா சங்கல்பம் செய்து கொண்டனர்.

    உற்சவர் ராமர், லட்சுமனர், சீதை, அனுமருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் ராமன், மோகன் பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஆஞ்சநேயருக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது.
    • ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை உள்ளது. ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி 22 -ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு தாணுமாலய சாமிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு தீபாராதனை நடக்கிறது.

    23-ந்தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகமும், காலை 8 மணிக்கு 18 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு நல்லெண்ணெய், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் தயிர், களபம், சந்தனம், குங்குமம், விபூதி, மஞ்சள், அரிசி மாவு, பன்னீர், எலுமிச்சை பல சாறு, கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், மாதுளைச் சாறு உள்பட 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடச அபிஷேகமும் நடைபெறுகிறது.

    நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகமும், அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு புஷ்பாபிஷேகமும், 10 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது, பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம் ஆகியவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • செந்தூரத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.
    • மூலவர் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை, சிறப்புப்பூஜைகள் நடந்தது.

    தமிழ் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோவிலில் மூலவருக்கு நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து செந்தூரத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை, சிறப்புப்பூஜைகள் நடந்தது.

    அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அனுமத் ஜெயந்தி மகா அபிஷேகம் மற்றும் 24ந்தேதி மூலவர் வெண்ணெய்க் காப்பு நடக்கிறது.
    • தினமும் இரவு சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

    திருவையாறு:

    திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தில் எழுந்தருள்வதும், சத்குரு தியாகராஜர் சுவாமிகள் வழிபட்டதுமான ஸ்ரீஆஞ்ச நேயர் கோயிலில் அனுமத் ஜெயந்தி உற்சவம் நேற்று காலையில் கொடியேற்ற த்துடன் தொடங்கியது. இரவு சூரிய பிரபை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி வீதிஊலா நடந்தது.

    முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அரங்கா ரம் மற்றும் ஆராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள்பெற்றனர்.

    இதனைத் தொடர்ந்து தினமும் இரவு சுவாமி திருவீதி உலா நடக்கிறது. 17ந்தேதி மூலவருக்கு வடைமாலை சாற்று அலங்காரமும், 18ந்தேதி ஏகதின லெட்சார்ச்சனையும், 22-ந்தேதி திருத்தே ரோட்டமும், 23ந்தேதி தீர்த்தவாரி, அனுமத் ஜெயந்தி மகா அபிஷேகம் மற்றும் 24ந்தேதி மூலவர் வெண்ணெய்க் காப்பு நடக்கிறது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திருவையாறு பாவாசாமி அக்ரஹாரம் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி கோயில் பரம்பரை அறங்காவலர் குருமூர்த்தி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • இந்த கோவிலுக்கு கோபுரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • விழாவில் 1 லட்சத்து 8 வடைமாலை அணிவிக்க ஏற்பாடு.

    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினசரி சாமிக்கு 1,008 வடைமலை அலங்காரம் நடைபெறும்.

    தொடர்ந்து நல்லெண்ணெய், மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் மலர் அலங்காரம் செய்யப்படும். இல்லையெனில் வெள்ளிக்கவசம் அல்லது தங்ககவசம் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெறும். மாலையில் தங்கத்தேர் உற்சவம் மற்றும் சந்தனக்காப்பு, வெண்ணெய்காப்பு, முத்தங்கி போன்ற அலங்காரம் நடைபெறும்.

    இந்த கோவிலுக்கு கோபுரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மலைக்கோட்டையின் கீழ் நரசிம்மர் கோவிலும் நாமகிரி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். இவர்களை வணங்கியது போல ஆஞ்சநேயர் தனி கோவிலில் காட்சி தருகிறார். ஸ்ரீ நரசிம்மர் அனுமனுக்கும் லட்சுமிதேவிக்கும் காட்சியளித்த இடமாக இந்த ஸ்தலம் உள்ளது. இங்கு அமைந்துள்ள ஆஞ்சநேயரின் உயரமானது 18 அடியாகும் பிரமாண்டமாக இந்த சிலை காட்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை இதுதான்.

    ராமாயண காலத்தில், சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துவந்தார் ஆஞ்சநேயர்.பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார்.

    அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒருபெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்துவந்தார்.அந்த நேரத்தில் சூரியன் உதயமான படியால், வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சந்தியாவந்தனத்தை முடித்தார்.மீண்டு வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார்.ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.

    "ராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்" என்றொரு அசரீரி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் ஆண்டு தோறும் அனுமன் ஜெய்ந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்று ஆஞ்ச நேயர் 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்தில் அருள்பாலிப்பது காண கண் கொள்ளா காட்சியாகும்.

    ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற 23-ந் தேதி ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சாத்தப்படுகிறது.

    காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயா சிங், ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பட்டாச்சாரியார் ரமேஷ் தலைமையிலான குழுவினர் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் வருகிற 21-ந் தேதி முதல் வடை தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • மார்கழி மாதத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு வழிபாடு நடைபெற்றது.
    • பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் : 

    மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பூர் அருகே அல்லாளபுரத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அனுமனுக்கு என்று கொடிமரத்துடன் கூடிய தனிப்பெரும் கோவிலாக திகழ்கிறது.
    • லட்ச ராம நாம ஜெபம், 18 வகையான அபிஷேகம் நடக்கிறது.

    தஞ்சை மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோவில் உள்ளது. இக்கோவிலை தஞ்சை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாப சிம்மன் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அனுமனுக்கு என்று கொடிமரத்துடன் கூடிய தனிப்பெரும் கோவிலாக இக்கோவில் திகழ்கிறது. இங்கு மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வரபகவான் உள்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

    பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. இதை முன்னிட்டு லட்ச ராம நாம ஜெபம், 18 வகையான அபிஷேகம், வீதி உலா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • கமலஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி விழா 23-ந் தேதி தொடங்குகிறது.
    • கலசம் மேளதாளத்துடன் வீதி உலா நடக்கிறது.

    மதுரை

    மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தென்மாட வீதியில் உள்ள கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 23-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

    முதல் நாள் காலை 6 மணிக்கு விஷ்வக்சேன பூஜை, கலச ஆராதனை, ஹோமம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு ஆஞ்சநேயர் கலசம் மேளதாளத்துடன் வீதி உலா நடக்கிறது. 12.30 மணிக்கு சமாராதனையும், மாலை 6.30 மணிக்கு ஆஞ்சநேயர் வீதி உலாவும் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது.

    இதேபோல் 2-வது நாள் இரவு 7 மணிக்கு பக்தி சொற்பொழிவு நடக்கிறது. இதனை தொடர்ந்து 12 ராசிகளுக்கான பலன் மற்றும் பரிகாரங்கள் கூறப்படுகிறது. 3-வது நாளில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், பரதநாட்டியம், கோலாட்டம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    ×