என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225753"

    • பிரசவம் நிகழ்ந்த பின், அடுத்த ஆறு வாரங்கள் அவர்களுக்கு பெரும் சவாலான காலம்.
    • பெண்கள் பிரசவத்திற்குப் பின் மிகக்கடினமான மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள்.

    பிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு. தாய்மை என்ற நிலையை அடைய பெண்கள் பிரசவ காலத்தில் படும்பாட்டினை வெறும் வார்த்தைகளால் கூறுவதால் அதன் வலியும்,வேதனையும் யாருக்கும் தெரிய வராது.

    அத்தகைய தாய்மையை அடைந்த பின், பிரசவத்திற்கு பிந்தைய நிலையில் பெண்கள் இன்னும் பல்வேறு உடலியல், மனவியல் சார்ந்த மாற்றங்களுக்கு ஆட்படுவது என்பது அவர்களுக்கு மீண்டும் ஒரு சவால். அத்தகைய மாற்றங்களோடு உடல் எதிர்கொள்ளும் வேதனைகளைத் தாங்கிக்கொண்டு மகவின் மீது பேரன்பும், அக்கறையும் காட்டி வளர்ப்பது என்பது அவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை. அத்தகைய தருணத்தில் பெண்களை அன்பும், அரவணைப்பும் கொடுத்து பேணிக்காக்க வேண்டியது குடும்பத்தாரின் கடமை.

    பிரசவம் நிகழ்ந்த பின், அடுத்த ஆறு வாரங்கள் அவர்களுக்கு பெரும் சவாலான காலம். தன் உடல் நலத்தோடு, மகவின் நலனையும் சேர்த்து காக்க வேண்டிய தருணம் அது. அந்த காலத்தில் அவர்களை அதிகம் பாதிப்பது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் 'பி.பி.டி.' எனப்படும் பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தம் தான். இதனைப் பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு தெரிவதே இல்லை.

    ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது மிகவும் கடினமான பணி. ஒரு தாயின் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் தேவையான ஆற்றலை பிரசவத்தின் போது எடுத்துக்கொள்ளும் என்கிறது நவீன அறிவியல். உலக அளவில் 10 சதவீதம் பெண்கள் பிரசவத்திற்குப் பின் மிகக்கடினமான மன சோர்வு அல்லது மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள். சிலருக்கு பிரசவத்திற்கு பிந்தைய ஒரு வருடம் கூட இந்த மன அழுத்தம் நிலைத்திருப்பதாக ஆய்வுகள் கூறுவது வருத்தம் தான்.

    இதனால் குழந்தைகளை, கவனித்துக்கொள்வதும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதும் கடினமாவதால், ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதும் கடினமாகிறது. பிரசவத்திற்கு பின் ஏற்படும் இத்தகைய மன அழுத்தத்தை போக்க எளிய மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது. இதனால் மன மகிழ்ச்சி ஏற்படுவதுடன் பால் சுரப்பினை அதிகரிக்கும். மணத்தக்காளி கீரை மனதிற்கு மகிழ்ச்சியை தரும் என்பது அதன் பெயரிலேயே விளங்கும். இந்த கீரை பிரசவத்திற்கு பின் அடிக்கடி செய்து கொடுக்க மனஅழுத்தம் குறையும்.

    அதே போல் வல்லாரை, பிரமி ஆகிய கீரை வகைகளையும் நெய்விட்டு வதக்கி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. பிரமி நெய் எனும் சித்த மருந்து அதற்கு நல்ல தீர்வினை தரும். மற்றொரு எளிய சித்த மருத்துவ மூலிகை அமுக்கரா கிழங்கு. நரம்புகளைப் பலப்படுத்தவும், மன அழுத்தத்தைப் போக்கி நிம்மதியான தூக்கம் உண்டாக்கவும் வல்லது. எல்லா வயதினரும், எல்லா பருவத்திலும் பயன்படுத்த ஏற்புடைய மூலிகை அமுக்கரா எனும் அஸ்வகந்தி. பிரசவத்திற்கு பின் பாலூட்டும் தாய்மார்கள் பயன்படுத்த உகந்தது.

    மேலும் அமுக்கரா கிழங்கு இயற்கை வலிநிவாரணியாக இருப்பதால் பிரசவத்திற்கு பின் ஏற்பட்ட உடல் வலியும் நீங்கும். இதனை ஒரு தேக்கரண்டி அளவு தினசரி பாலில் கலந்து எடுத்துக்கொள்ள பிரசவத்திற்கு பின் உண்டாகும் சிறுநீர் பிரச்சினைக்கும் பலன் தரும். தூக்கமின்மை இருப்பின் தகரை மற்றும் சடாமாஞ்சில் ஆகிய மூலிகைகள் சேர்ந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். பிரசவத்திற்கு பின் பெரும்பாலான வீடுகளில் இன்றும் பழக்கத்தில் உள்ள பாட்டி வைத்தியம் என்னவெனில் 'செலவு குழம்பு' எனப்படும் 'பத்திய மருந்து குழம்பு' தான்.

    பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு பத்தியக் குழம்பாக இந்த மருந்து குழம்பு கொடுக்கப்படுவது இன்றளவும் பல ஊர்களில் வழக்கத்தில் உள்ளது. கர்ப்ப காலத்திலும் சரி, கர்ப்பத்திற்கு பின்னரும் சரி சித்த மருத்துவம் பாட்டி வைத்தியமாக கையாளப்பட்டு வருவதற்கு இதுவும் உதாரணம். 'பிரசவத்திற்கு பின்னர் கருப்பை மற்றும் உடலில் சேரும் நச்சுத்தன்மையுள்ள கழிவுகளை அகற்றி உடலை சுறுசுறுப்பாக வைக்கக்கூடியது மருந்து குழம்பு. பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் உடலைச்சுத்தம் செய்வதற்காக மட்டுமின்றி அவர்களுக்கு ஊட்டம் தரும் உன்னதமான உணவுப்பொருள்.

    மேலும் இதன் மூலம் தாய்ப்பால் அருந்தும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் காக்க முடியும். மிளகு, சீரகம், சுக்கு, திப்பிலி, கருவேப்பிலை, ஓமம், பெருங்காயம், தனியா போன்ற கடைசரக்குகளின் கலவையாக உள்ளது இந்த பத்திய குழம்பு. இது சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்றுக்கள் வராமல் காக்கக் கூடியது. பிரசவமான 15 நாட்கள் கழித்து இதனை பயன்படுத்துவது நல்லது. 'பிரசவ லேகியம்' என்ற சித்த மருந்து பலராலும் அறியப்பட்ட பெண்களுக்கான மருந்து. இது பிரசவம் ஆன பிறகு கருப்பையில் உள்ள அழுக்கினை நீக்கி கருப்பையை தெளிவாக்கும்.

    சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரசவம் இவை இரண்டிலும் இதனை பயன்படுத்தலாம். சுகப்பிரசவம் எனில் உடனே இதனை எடுக்கத் துவங்கலாம். சிசேரியன் பிரசவம் எனில் இரண்டு மூன்று வாரங்கள் கழித்து இதனை எடுக்கத் துவங்கலாம். இதனால் கருப்பையில் உள்ள ரத்தகட்டிகள் விரைவில் நீங்கி பாலூட்டும் தாய்க்கு சுகம் தரும். 'சவுபாக்கிய சுண்டி லேகியம்' எனும் சித்த மருந்து பாட்டிகாலம் முதல் மிகப்பிரபலமான ஒன்று. சுக்கினை முதன்மையாக கொண்ட இந்த லேகியம் கருப்பையில் உள்ள அழுக்கினை நீக்கி கருப்பையை பலப்படுத்தும். மேலும் கருப்பை இயல்பு நிலைக்கு திரும்பவும் பேருதவி புரியும்.

    இது மட்டுமின்றி மார்பில் பால் சுரப்பை அதிகரிக்கும். மேலும் சுக்கினால் உடல் வலியும், அசீரணம், செரியாமை, வாய்க்குமட்டல் ஆகிய குறிகுணங்கள் நீங்கி பெண்களுக்கு நலம் பயக்கும். பிரசவத்திற்கு பின்னர் உடல் வலி, இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு சுடுநீரில் நொச்சி இலையை போட்டு காய்ச்சி குளிப்பதற்கு பயன்படுத்த நல்ல பலன் தரும். இது உடல் வலியை குறைக்கும் எளிய மருத்துவ வழிமுறை. நொச்சி இலை வீக்கத்தை குறைக்கும் தன்மையும், வலியை நீக்கும் தன்மையும் உடையது. சித்த மருத்துவத்தில் வெளி மருத்துவம் சிறப்பு மிக்கது. அந்த வகையில் பிரசவத்திற்கு பின்னரும், இடுப்பு பகுதியை வலிமையாக்க உளுந்து தைலத்தை பயன்படுத்தலாம்.

    உடல் வலி, கை கால் வலி, தசை வலி இவற்றிக்கு 'பிண்ட தைலம்' எனும் சித்த மருந்தை வெளியே தடவி லேசான சுடுநீரில் ஒற்றடமிட வலி குறையும். தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கவும், பிரசவத்தில் இழந்த குருதியையும், உடல் வன்மையையும் மீண்டும் பெறுவதற்கும் அதிகப்படியான கலோரி அளவுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இரும்பு சத்துள்ள உணவுகளையும், அன்னபேதி செந்தூரம் போன்ற மாத்திரைகளையும் மற்றும் கால்சியம் சத்துள்ள உணவுகளையும், சங்கு பற்பம் போன்ற மருந்துகளையும் எடுக்க வேண்டியது அவசியம். முருங்கைக்கீரை சூப், கறி வேப்பிலை சூப், காய்கறிகள் சூப், சத்துமாவு கஞ்சி, கருப்பு உளுந்து கஞ்சி, பிரண்டை துவையல், முளை கட்டிய தானியங்கள், மாமிச சூப் வகைகள் இவற்றை எடுத்துக்கொள்வது மிக அவசியம்.

    பிரசவத்திற்கு பின்னர் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து ஹார்மோன் மாற்றங்களை சீராக்கும் மற்றொரு சித்த மருந்து சதாவேரி லேகியம். தண்ணீர்விட்டான்கிழங்கு மூலிகையை முதன்மையாகக் கொண்டு உருவாகும் இந்த லேகியம் பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இது கருப்பைக்கு வலுவை தரும். மேலும் கருப்பை ரணங்களை ஆற்றவும், அதனால் ஏற்படும் வெள்ளைப்போக்கினை குறைக்கவும் கூடியது. பிரசவத்திற்கு பின்னர் பெரும்பாலான பெண்களுக்கு சிறுநீர்ப்பை பலவீனம் அடைவதால் அடிக்கடி சிறுநீர் கழிதல், சிறுநீரை அடக்கமுடியாத நிலை ஏற்படுகிறது.

    இது பெண்களுக்கு சிறுநீர் பாதை சார்ந்த தொற்றினையும், ஒரு வித மன உளைச்சலையும் ஏற்படுத்தும். அவர்களுக்கு சித்த மருத்துவம் பாதுகாப்பானதாக இருக்கும். நரம்புகளை வன்மைப்படுத்தும் உள் மருந்துகளை எடுத்துக்கொள்வதோடு, வெளி மருத்துவம் செய்தலும் நல்லது. உளுந்து தைலம் என்ற சித்த மருந்தினை அடிவயிற்றில் தடவி வர நல்ல பலன் தரும். அத்துடன் கருப்பு உளுந்தினை பாலுடன் சேர்த்து கஞ்சியாக்கி எடுத்துக்கொள்ள தசைகளுக்கும், நரம்புகளுக்கும் வன்மை தரும். இது பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்ட சிறப்பு பாரம்பரிய உணவு.

    மன அழுத்தத்தை போக்கவும், உடல் சோர்வை களையவும் நேரம் கிடைக்கும் போது தியானப் பயிற்சி செய்வது நல்லது. மேலும் பிரசவத்திற்கு பின் பழகக்கூடிய யோகாசன பயிற்சி முறைகளான சவாசனம், பத்த கோணாசனம், புஜங்காசனம், காலை உயர்த்தி பிடித்த நிலை போன்ற எளிய பயிற்சி முறைகளை செய்து வருவது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும். பிரசவத்திற்கு பின் வயிறு பெரிதாவதை தடுக்கும். பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் உடல் எடை பொதுவாகவே கூடும்.

    அதற்காக உணவு வகைகளை குறைத்தால் சேய்க்கு பால் சுரப்பு குறையும். ஆதலால், எளிய யோகாசனப் பயிற்சிகளை செய்து உடல் எடையை நிர்வகிக்க வேண்டும். தடாசனம், திரிகோணாசனம், கோமுகாசனம், மர்ஜரியாசனம், பத்மாசனம் ஆகிய எளிய பயிற்சிகளை செய்வது இதற்கு நற்பலன் தரும். கணவன்மார்கள் மனைவியின் மன அழுத்தத்தையும், உடல் பலவீனத்தையும் புரிந்து கொண்டு குழந்தையின் பராமரிப்பில் சரிபங்கு தருவதுடன், மனைவிக்கு பக்க பலமாக நின்று ஆதரவு தந்து தாய்மைக்கு ஒத்துழைப்பு நல்குவது அத்தகைய சூழலில் அவசியமான ஒன்று.

    இவ்வாறாக, பெண்கள் பிரசவத்திற்கு பின் சித்த மருத்துவம் கூறும் பாரம்பரிய உணவு முறைகளையும், எளிய மருந்துகளையும் கையாள்வது அவர்களுக்கு பின்னாளில் பல்வேறு உடல் நலக்கேடுகள் வரவிடாமல் தடுக்கும். அவர்களின் ஆரோக்கியத்தையும், அழகையும் கூட்டும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • ராமாபுரத்தைச் சேர்ந்த விதவை பெண்ணின் 17வயது மகளை சிவமணி கர்ப்பமாக்கி உள்ளார்.
    • இருவரும் சிவமணியை தாக்கியதில் அவர் கீழே விழுந்தார்.

    கடலுார்:

    கடலுார் அருகே குறவன்பாளை யத்தைச்சேர்ந்தவர் சிவமணி, (வயது38). ஆட்டோ டிரைவர். திருமணமாகி, ஆண் குழந்தை உள்ளது. இவர் கிழக்கு ராமாபுரம்-நடுக்குப்பம் சாலை, வாழைத்தோப்பில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுகிடந்தார். இதுகுறித்து  திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிழக்கு ராமாபுரத்தைச் சேர்ந்த விதவை பெண்ணின் 17வயது மகளை சிவமணி கர்ப்பமாக்கி உள்ளார். இதன் காரணமாக சிவமணியை கொலை செய்ய விதவை பெண், அவரது தம்பி வேல்முருகன், நண்பர் அம்பாள்புரம் சங்கர் ஆகியோர் திட்டமிட்டனர். அதன்படி, கிழக்கு ராமாபுரம் திரவுபதியம்மன் கோவில் திருவிழாவிற்கு விதவை பெண் அழைத்ததின் பேரில், சிவமணி அங்கு சென்றார். அப்போது, விதவைபெண் , வேல்முருகன், சங்கர் ஆகியோர் சிவமணியை கோவிலுக்கு போகலாம் எனக் கூறி, ஆட்டோவில் அழைத்துச் சென்று கொலை செய்தது தெரிந்தது. விதவை பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக 2 பேரை தேடிவந்தனர். அதன்படி என்.எல்.சி., சுரங்கத்தில் கனரக வாகன டிரைவரான வேல்முருகன், பெயிண்டர் சங்கர், ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசில் வேல்முருகன் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:- என் அக்கா மகளை சிவமணி கர்ப்பமாக்கினார். இதுகுறித்து எனது அக்கா தட்டிக் கேட்டபோது சிவமணிவாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால்சி வமணியை கொலை செய்ய திட்டமிட்டோம். பேச வேண்டும் எனக்கூறி சிவமணியை, விதவை பெண் வாழைத்தோப்பிற்கு அழைத்து வந்தார். அங்கு வந்த நானும், சங்கரும் சேர்ந்து சிவமணியுடன் மது அருந்தினோம். பின், இருவரும் சிவமணியை தாக்கியதில்,அவர் கீழே விழுந்தார். அப்போது, கத்தியால் கழுத்தறுத்து கொலைசெய்தோம். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

    • 17 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் பள்ளி விடுமுறைக்கு இவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
    • சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கண்டியன்கோவில் பகுதியில் வசித்து வருபவர் விமல்ராஜ் (வயது26) .இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்த நிலையில், இவரது உறவினரான 17 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் பள்ளி விடுமுறைக்கு இவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். இதேபோல மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கர்ப்பமான அந்த சிறுமிக்கு நேற்று முன்தினம் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி கொடுத்த புகாரின் பேரில், விமல் ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து, பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பிரசவத்துக்குப் பிறகு எப்போது தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.
    • சிலருக்கு பிரசவமான அடுத்த மாதமே பீரியட்ஸ் வரலாம்.

    பிரசவத்துக்குப் பிறகு செக்ஸ் ஆர்வம் குறைவது சகஜமானதுதான். குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக பெண் உடலின் ஹார்மோன்கள் எல்லாம் மாறத் தொடங்கும். இதனால், சில பெண்களுக்கு பிரசவமான சில நாள்களில் தொடங்கி, சில மாதங்கள் வரைகூட தாம்பத்திய உறவு கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.

    பிரசவத்துக்குப் பிறகு இத்தனை நாள்கள் கழித்துதான் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும் என குறிப்பிட்ட கால இடைவெளி எதுவும் வலியுறுத்தப்படுவதில்லை. ஆனால் பிரசவமான அடுத்த ஆறு வாரங்களுக்கு உறவு கொள்ள வேண்டாம் என பொதுவாக அறிவுறுத்தப்படும்.

    கர்ப்பத்தின் போது விரிந்திருந்த கர்ப்பப்பை சுருங்கி, சிறியதாக ஆறு வாரங்கள் ஆகும். நார்மல் டெலிவரி என்றால் வெஜைனா பகுதியில் போடப்பட்ட தையல் ஆறுவதற்கும் அந்த அவகாசம் அவசியம் என்பதால் ஆறு முதல் 8 வாரங்களுக்கு உறவைத் தவிர்க்கும்படி அறிவுறுத்துவோம்.

    தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். பீரியட்ஸும் வராமலிருக்க வேண்டும்.

    எனவே தாய்ப்பால் மட்டுமே கொடுத்துக் கொண்டும், பிரசவமான ஆறு மாதங்கள் வரை பீரியட்ஸ் வராமலும் இருப்பவர்கள், கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

    சிலருக்கு பிரசவமான அடுத்த மாதமே பீரியட்ஸ் வரலாம். அது அவர்கள் மீண்டும் கருத்தரிக்கத் தயாராகிவிட்டதையே குறிக்கும். அவர்களுக்கு கருத்தடை அவசியம். ஆணுறை உபயோகிக்கலாம் அல்லது பிரசவமானபோதே காப்பர் டி பொருத்திக்கொள்ளலாம்.

    பிரசவத்துக்குப் பிறகு செக்ஸ் ஆர்வம் குறைவது சகஜமானதுதான். குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக பெண் உடலின் ஹார்மோன்கள் எல்லாம் மாறத் தொடங்கும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவு குறையத் தொடங்கும். இதன் காரணமாக சில பெண்களுக்கு பிரசவமான சில நாள்களில் தொடங்கி, சில மாதங்கள் வரைகூட தாம்பத்திய உறவு கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.

    ஆனால் அது குறித்துக் கவலைப்படத் தேவையே இல்லை. நாள்கள் போகப் போக, உங்களால் இயல்புநிலைக்குத் திரும்ப முடியும். இழந்த ஆர்வம் மீண்டும் திரும்பும்.

    • திட்டக்குடி அருகே போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
    • இருவீட்டு பெற்றோரை அழைத்து சமாதானப்படுத்தினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுநத்தம் கொடிகளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது27). அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் கவுசல்யா (23) இவர்கள் இருவரும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். அப்போது 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதனால் கவுசல்யா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். அதிர்ச்சி அடைந்த கவுசல்யா தன்னை திருமணம் செய்துகொள்ள முருகானந்தத்தை வற்புறுத்தி உள்ளார். ஆனால் காதலர்கள் 2 பேரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்த நிலையில் முருகானந்தம் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

    எனவே ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் கவுசல்யா தரப்பினர் புகார் அளித்தனர். இதுகுறித்து திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, சப் இன்ஸ்பெக்டர் தனசீலன் ஆகியோர் இருவீட்டு பெற்றோரை அழைத்து சமாதானப்படுத்தினர். பின்னர் போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு ஆவினங்குடி போலீஸ் நிலைத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். அதன்பின்னர் கவுசல்யாவின் பெற்றோர், உறவினர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

    • மதுரையில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மதிச்சியத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. எனவே அவரை பெற்றோர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போதுஅவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மதுரை தல்லாகுளம் அனைத்து போலீசில் புகார் கொடுத்தனர்.

    இதன் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் அக்பர்கான் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் இது தொடர்பாக மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் மாணவியும், மேளக்காரர் தெருவை சேர்ந்த பாபு மகன் வசந்தகுமார் (வயது 19) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், அவரது வீட்டிற்கு மாணவி சென்ற போது பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானதும் தெரியவந்தது.

    இது தொடர்பாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.

    • 11 வயதில் இரட்டை ஆண் குழந்தையும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
    • வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் பச்சிளம் குழந்தை உடல் புதைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, வேடம்பூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்.இவரது மனைவி ரேவதி. இவர்களது மூத்த மகள் ரேணுகா (வயது 33).

    இவருக்கும் நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த முத்து என்பவருக்கும் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 11 வயதில் இரட்டை ஆண் குழந்தையும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    முத்து கடந்த 7 வருடங்களாக ரேணுகாவை பிரிந்து விட்டு திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இதனால் ரேணுகா தனது மூன்று குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அங்கிருந்து குடவாசலில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவருக்கு கமலேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது. இவர்கள் நெருங்கி பழகியதால் ரேணுகா கர்ப்பமடைந்து கடந்த 22 -ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் இவரது வீட்டு பின்புறம் உள்ள இடத்தில் அந்த பச்சிளம் குழந்தை உடல் புதைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை தோண்ட முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்து அதன் பிறகு புதைக்கப்பட்டதா? அல்லது கள்ளகாதலில் பிறந்த குழந்தை என்பதால் கொன்று புதைக்கப்பட்டதா? என்ற பல்வேறு கோணங்களில் ரேணுகா, கமலேஷ் உள்ளிட்ட சிலரிடம் துருவி துருவி விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் உண்மை நிலவரம் என்னவென்று தெரியவரும்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிப்ரவரி மாதம் 28 ம் தேதி வீட்டில் இருந்து சிறுமி மாயமானார்.
    • பலமுறை சிறுமியுடன் பாலியல் உறவு வைத்துள்ளார்.

    உடுமலை :

    உடுமலை அடுத்த போடிப்பட்டி சேர்ந்தவர் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் போடிபட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் லோகேஷ்( வயது 22) . தொழிலாளி யான இவர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். உடுமலையில் உள்ள கோவிலின் முன்பு வைத்து சிறுமிக்குக்கு தாலி கட்டியுள்ளார் . பின்னர் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை சென்று கணவன் மனைவி என்று சொல்லி வீடு எடுத்து தங்கி உள்ளனர். மேலும் பலமுறை சிறுமியுடன்பாலியல் உறவு வைத்துள்ளார். இதில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

    இந்த சம்பவம் குறித்து உடுமலை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி லோகேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

    • குழந்தை பிறந்த ஒரு வாரத்தில், ரத்தப் போக்கு குறைந்துவிடும்.
    • வயிற்றில் உள்ள புண்கள் குணமான பின்பு உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

    அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்கள் எளிதில் உடல் நலம் தேறுவதற்கான வழிமுறைகளை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி, மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களுக்கு வலி இருக்கும்.

    அதிகமான ரத்தப்போக்கு, ரத்த உறைவு, வீக்கம் ஆகியவற்றால் திசுக்கள் மற்றும் தசைகள் பாதிக்கப்பட்டிருக்கும். இவை அனைத்துமே முழுமையாக குணமாகுவதற்கு குறைந்தபட்சம் 12 வாரங்களாவது ஆகும். அதாவது, அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றெடுத்த பெண்ணின் உடல், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு குறைந்த பட்சம் 4 முதல் 5 மாதங்கள் ஆகும்.

    நன்றாக ஓய்வு எடுக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக ரத்தப் போக்கு குறைந்து நின்று விடும். பொதுவாகவே குழந்தை பிறந்த ஒரு வாரத்தில், ரத்தப் போக்கு குறைந்துவிடும். ஒரு சிலருக்கு ஒரு மாத காலம் கூட சிறிது சிறிதாக வெளியேறலாம். அளவுக்கு அதிகமாக ரத்தப் போக்கு இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

    சிசேரியன் முறையால் கர்ப்பப்பையில் இருக்கும் 'யூட்ரின் தசை' நிறைய மாற்றங்களை எதிர்கொள்கிறது. எனவே அது மீண்டும் பழைய நிலையை அடைவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும். ஆகையால் முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இடைவெளி இருப்பது சிறந்தது. சிசேரியனுக்குப் பிறகு இரண்டாவது குழந்தை பெற விரும்பும் பெண்கள், மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்து தங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகு குழந்தைக்குத் திட்டமிட வேண்டும்.

    அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களில் 70 சதவிகிதம் பெண்களுக்கு அடுத்து சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பிருக்கிறது. குழந்தை பிறந்த 6 மணி நேரத்தில் பால், பழச்சாறு போன்ற திரவ உணவுகளை சாப்பிட வேண்டும். அதையடுத்து திட உணவுகள் உட்கொள்ள வேண்டும். பல பெண்கள் இடியாப்பம், சர்க்கரை உள்ளிட்ட நார்ச்சத்து இல்லாத உணவுகள் சாப்பிடுகிறார்கள். அதைத் தவிர்த்து நார்ச்சத்து அதிகம் உள்ள காராமணி, கேரட், பீன்ஸ், கீரை உள்ளிட்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

    கொண்டைக்கடலை, பச்சைப்பட்டாணி, முட்டை போன்ற புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சாப்பிடுவது சிறந்தது. எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, அசைவ உணவுகளை சாப்பிடலாம். தையல் போட்ட இடங்களில் தண்ணீர் பட்டால் ஏதாவது ஆகி விடுமோ? என பல பெண்கள் அச்சப்படுகின்றனர். அது தவறான கருத்து. தையல் போட்ட இடங்களில் அழுக்கு சேராதவாறு சுத்தமாக குளிக்க வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். வயிற்றில் உள்ள புண்கள் குணமான பின்பு உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் கூறினார்.

    • மாதவிலக்கு வருவது பெண்களின் உடல்நிலையை பொருத்து மாறுபடும்.
    • பல பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வரும்.

    உங்களுக்கு எப்போது பீரியட் (மாதவிலக்கு) தொடங்குகிறது எனக் காலண்டரில் குறித்து வைக்கப் பழகி கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.

    எந்த நாளில் மாதவிலக்கு வருகிறது எனத் தெரிந்து, குறித்து வைத்தால்தான் உங்களால் கருமுட்டை வெளிவரும் நாளை சரியாக கணக்கிட முடியும். பல பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வரும். சிலருக்கு 30 அல்லது 34 நாட்களுக்கு ஒருமுறை கூட வரலாம். பெண்களின் உடல்நிலை பொருத்து மாறுபடும்.

    உதாரணமாக, உங்களுக்கு டிசம்பர் 1-ம்தேதி மாதவிலக்கு முதல் நாளாகத் தொடங்கி இருந்தால், அடுத்த மாதவிலக்கு உங்களுக்கு டிசம்பர் 29-ம் தேதியில் மாதவிலக்கு வரும் என்றால் அந்த தேதியும் மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கான மாதவிலக்குக்கான காலகட்டம் (மென்சுரல் சைக்கிள்). உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சி, 28 நாட்களுக்கு ஒரு முறை.

    கருமுட்டை எப்போது வெளிவரும் என்றால், அடுத்த மாதவிலக்கு தொடங்கும் முன்னராக 2 வாரத்துக்கு முன்பு கருமுட்டை வெளிவரும்.

    உங்களது மாதவிலக்கு சைக்கிள் 28 நாட்களுக்கு ஒருமுறை என்றால், கருமுட்டை வெளிவரும் நாள் 14-வது நாள்.

    28 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 14-ம் நாள் கருமுட்டை வரும்

    30 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 16-ம் நாள் கருமுட்டை வரும்

    34 நாட்கள் மாதவிலக்கு சுழற்சி இருப்பவர் - 20-ம் நாள் கருமுட்டை வரும்

    இந்த கருமுட்டை வெளிவரும் நாட்களில், அதற்கு முன் நாளன்று, உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.

    இதெல்லாம் சீராக மாதவிலக்கு வருபவர்களுக்கு பொருந்தும். அவர்கள் எளிதாகக் கணக்கிட்டு கொள்ளலாம்.

    • தம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள்.
    • தம்பதியர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது.

    பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, ஒரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். சில பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்.

    இந்த 28 நாளில் முதல் 4 - 5 நாட்களில், இரண்டு கருமுட்டை பைகளிலும் 3-4 முட்டைகள் வளரத் தொடங்கும். இந்த கருமுட்டைகளில், ஒரு முட்டை மட்டும் தலைவியாக உருவாகும். அந்த ஒரு தலைவி கருமுட்டைதான் அந்த மாதத்தில் வருகின்ற கருமுட்டை. இந்தத் தலைவி கருமுட்டை நன்கு வளர்ந்து 14-ம் நாளில் வெடிக்கும். இது வெடிக்கையில் இதிலிருந்து வெளிவருவது, 'கருமுட்டை'. இந்த கருமுட்டையானது மிகவும் அரிதானது. இதை 'பொக்கிஷம்' என்றும் சொல்லலாம்.

    இந்த கருமுட்டை 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த நேரத்துக்குள் ஒரு ஆண் விந்துவுடன் இந்த கருமுட்டை இணைந்தால்தான். அது குழந்தையாக (கருவாக) மாறும்.

    14-ம் நாளில் ஏற்பட்ட உடலுறவு அல்லது அதற்கு முந்தைய நாளில் ஏற்பட்ட உடலுறவில் உள்ளே வந்த ஆண் விந்துகள் வேகமாக மேலே வருகின்றன. இந்த ஆண் விந்துகள் வேகமாக மேலே வர அதன் வால் பகுதி உதவுகிறது. இது 10 மைக்ரான் அளவே இருக்கும்.

    இந்த கருமுட்டை வெளிவரும்போது சிந்துகின்ற நீர், இந்த கெமிக்கலின் ஈர்ப்பால் ஆண் விந்துக்கள் ஈர்க்கப்படும். இந்த ஈர்ப்பால் விந்துக்கள் அதைத் தேடி போய் பெண்ணின் கருமுட்டையை பிடித்துக் கொள்ளும்.

    மில்லியன் கணக்கில் பெண்ணின் யோனி குழாயில் (பிறப்புறுப்பு வழியாக) விழுகின்ற விந்துகளில், வெறும் 1000 கணக்கான விந்துகள் மட்டுமே ஒவ்வொரு தடைகளையும் தாண்டி பெண்ணின் கருமுட்டை இருக்கும் இடத்தில் சேர்கின்றன.

    இந்த நேரத்தில் விரல் அளவே உள்ள கரு இணைப்பு குழாயானது, நகர்ந்து சென்று கெமிக்கலின் ஈர்ப்பால், அதில் உள்ள துளைகள் வழியாக விந்துவை ஈர்த்துக்கொள்ளும். இந்த இடத்தில்தான் விந்தணுவும் கருமுட்டையும் இணை சேரும். பின்னர் இது கருவாக உருவாகும்.

    கருவாக உருவான நாளிலிருந்து, 3 நாட்களுக்குள்ளே அப்படியே கரு குழாய் வழியாக நகர்த்திக்கொண்டு கர்ப்பப்பைக்குள் கருவை உட்கார வைப்பது, கர்ப்பப்பை குழாய்தான். இந்த செயல்பாடு நடக்க மயிர்கால்கள் போன்ற அமைப்பில் உள்ள 'சிலியா' எனப்படும் ஒன்று, மெல்ல நகர்ந்து நகர்ந்து கருமுட்டையை கர்ப்பப்பையில் சேர்க்கிறது.

    கர்ப்பப்பையின் உள்ளே வந்த விந்தணுவின் அளவு வெறும் 10 மைக்ரான் அளவுதான். ஆனால், ஈர்த்தது 100 மைக்ரான் அளவுள்ள கருமுட்டை. இது இரண்டும் சேர்ந்து கருவாகி, கரு வளர்ந்து கொண்டே இருக்கையில் 130-140 மைக்ரான் அளவில் கர்ப்பப்பையில் இறங்கும். கர்ப்பப்பையில் இறங்கும்போது, கருவை 'ஐந்தாவது நாள் கரு' என்பார்கள்.

    கர்ப்பப்பையின் உள் சவ்வோடு கரு ஒட்டிக்கொள்ளும். இந்தக் கரு வேராக இறங்கி, தாயோடு ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கும். இதற்கு 6-7 நாட்கள் வரை ஆகும்.

    இந்த 6-7 நாட்களில் குழந்தையின் ஹார்மோன் தாயின் ரத்தத்தில் கலக்கும். இந்த சமயத்தில் தாயின் ரத்தத்தைப் பரிசோதித்தால், கரு உருவாகியிருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். 'பாசிடிவ்' என்ற ரிசல்ட் ரத்தப் பரிசோதனையில் தெரியும்.

    • உணவில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
    • பிரசவம் ஆனதும் முதல் சில நாட்களுக்கு சிறுநீர் கழித்தல் மிகவும் சிரமமாக இருக்கும்.

    பிரசவத்திற்கு பின் காலத்திய கவனிப்பு கீழ்க்கண்டவற்றை கொண்டுள்ளது.

    * தாயின் உடல் நலத்தைப் பேணுதல் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு போதுமான அளவு தண்ணீர் சுத்தம் சுகாதாரம் வசதியான நிலை உடற்பயிற்சி ஆகியவற்றை அளித்து பிரசவித்த தாயின் உடல் நலத்தைப் பேணுதல் வேண்டும்.

    * பிரசவித்த பெண்ணை சீக்கிரமாகவே நடக்கச் செய்தல் வேண்டும்.

    * உடல் நலத்தோடு சேர்ந்து மன நலமும் பேணிடல் வேண்டும்.

    * தாய்ப்பாலுட்டல் துவக்க வேண்டும்.

    இவற்றைச் செய்வதன் மூலம் பியூர்பேரியத்தை சிக்கல்கள் ஏதுமின்றி சமாளித்தல் இயலும். பிரசவத்திற்கு பின் காலத்திய கவனிப்பில் கீழ்க்கண்டவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

    * போதுமான அளவு ஓய்வும் தூக்கமும் அளிக்க வேண்டும்.

    * தொற்று நோயின் அறிகுறிகளோ அதிக இரத்தப்போக்கு உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    உணவு

    * சமச்சீரான உணவு போதுமான அளவு புரதம் (90 கிராம்) தாது உப்புக்கள் உயிர்ச்சத்துக்கள் கொண்ட உணவினை அளித்தல் வேண்டும்.

    * கூடுதலான தண்ணீர் குடிக்க பரிந்துரைக்க வேண்டும்.

    * உணவில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

    * வலிநிவாரணிகளும் ஆன்டிபயாடிக் மருந்துகளும் மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கப்பட வேண்டும்.

    * நோய் தொற்றுவதற்கு வழியில்லாத வகையில் கவனத்துடன் பெரினியல் சவ்வினை சுத்தம் செய்ய வேண்டும்.

    சிறுநீர் கழித்தல்

    பிரசவம் ஆனதும் முதல் சில நாட்களுக்கு சிறுநீர் கழித்தல் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனாலும் சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    மலச்சிக்கல்

    * பெருங்குடலில் பெரிஸ்டால்டிக் அசைவுகள் மிகவும் மந்தமாக இருப்பதால் பியூர்பேரியத்தில் மலச்சிக்கல் பொதுவாக அதிகமாக காணப்படும் பிரச்சினையாகும்.

    * நார்ச்சத்து அதிகம் உள்ள உணவினை திட்டமிடுவதால் இப்பிரச்சினை தீரும்.

    பிரசவத்திற்குப் பின் செய்ய வேண்டிய உடற்பயிற்சி

    * கர்ப்பத்தின் போது பிரசவத்தின் போதும் மிகவும் இழுக்கப்பட்ட தசைகளின் சக்தியை திரும்பப் பெறுவதற்காக, உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து பயிற்சிகளை கற்றும் கொடுக்க வேண்டும்.

    * இரும்புச்சத்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள அறிவுறுத்தல் வேண்டும்.

    * தினப்படி செயல்களை மெதுவாக செய்ய ஆரம்பிக்குமாறு உற்சாகப்படுத்த வேண்டும். தாய்ப்பாலூட்டவும் சிசுவுக்கு அளிக்க வேண்டிய கவனிப்பையும் அறிவுறுத்த வேண்டும்.

    * குடும்ப நல ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    * 6 வாரங்களுக்குப் பிறகு மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்.

    ×