என் மலர்
நீங்கள் தேடியது "மின்நுகர்வோர்"
- காலை 11 மணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது.
- மின்சார விநியோகம் குறித்து குறைகள்,புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பல்லடம்:
பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் - உடுமலை ரோட்டில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை 15-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது .இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள்,புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு மின்சார வாரியம், மின்நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு, ஆதார் இணைக்கலாம்.
- மின் இணையதள முகவரியில் சென்று, மின் இணைப்பு எண்ணை பதிவிடலாம்.
திருப்பூர் :
தமிழ்நாடு மின்சார வாரியம், மின்நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு, ஆதார் இணைக்கலாம் என மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் வரும் குறுஞ்செய்தியில், இதுதொடர்பான அரசாணை தேதியும், ஆதார் இணைப்புக்கான இணையதள முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்நுகர்வோர், https://www.tnebltd.gov.in/adharupload என்ற இணையதள முகவரியில் சென்று, மின் இணைப்பு எண்ணை பதிவிடலாம். பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. எண் வாயிலாக, உரிமையாளர் சரிபார்க்கப்படுகின்றனர். அதற்கு பிறகு, ஆதார் எண்ணை பதிவு செய்து, அதன் போட்டோவை பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
சொத்து வாங்கிய உரிமையாளர், தங்கள் பெயருக்கு மின் இணைப்பை மாற்றாமல் இருந்தாலும், புதிய உரிமையாளரின் ஆதார் எண்ணை பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யாமல் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. எனவே ஆதார் இணைக்க வசதியாகவும், பெயர் மாற்ற ஏதுவாகவும், சிறப்பு முகாம்கள் நடத்திட மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
- மதுரை தெற்கு கோட்டத்தில் வருகிற 16-ந்தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை தெற்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 16-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். இதில் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்சங்கம், யானைக்கல், டவுன்ஹால் ரோடு, மீனாட்சியம்மன் கோவில், மாகாளிப்பட்டி, திருமலைநாயக்கர் மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
- ஏப்ரல் மாதத்திற்கான மின் அளவை நிர்வாக காரணங்களால் மின் அளவீடு எடுக்கப்படவில்லை.
- இந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
தாராபுரம் :
தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மானூர்பாளையம் மின்சார வாரிய பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட காசிலிங்கபாளையம், நிறையூர், பெரியகுமாரபாளையம், மேற்கு சடையம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கான மின் அளவை நிர்வாக காரணங்களால் மின் அளவீடு எடுக்கப்படவில்லை.
எனவே மின் நுகர்வோர் கடந்த பிப்ரவரி மாதம் செலுத்திய மின் கட்டணத்தை ஏப்ரல் மாதத்திற்கும் செலுத்தலாம். இந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள–ளது.
- காலை 11 மணிக்கு குமார் நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
- மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர் தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு திருப்பூர் குமார் நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- திருவாரூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
- இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
திருவாரூர்:
திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் துர்காலயா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் திருவாரூர் நகரம், புறநகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பார் பகுதிகளுக்கு உட்பட்ட மின்நுகர்வோர் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான தங்களுடைய குறைகளை விண்ணப்பம் மூலம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
- மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
தஞ்சாவூர்:
ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒரத்தநாடு மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் 3-வது வியாழக்கிழமைகளில் இக்கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் குறைகளை தீர்க்கும் வகையில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மே மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கி ழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
எனவே ஒரத்தநாடு, ஊரணிபுரம், திருவோணம், வடசேரி, பாப்பாநாடு, உறந்தரா யன்குடிக்காடு, ஒக்கநாடு கீழையூர், பின்னையூர், பொய்யு ண்டார்கோட்டை, கண்ணுக்குடி மேற்கு, மேஉளூர், சாலியமங்கலம், மாரியம்மன்கோவில், அம்மாப்பேட்டை, சூரக்கோ ட்டை, பனையக்கோட்டை ஆகிய பிரிவு அலுவலகங்களை சேர்ந்த பகுதிகளில் உள்ள மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை சமயநல்லூர் கோட்டத்தில், நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.
மதுரை
சமயநல்லூர் கோட்டத்தை சார்ந்த மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை (1-ந் தேதி) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சமயநல்லூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் சமயநல்லூர் கோட்ட மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைககளை தெரிவிக்கலாம்
மேற்கண்ட தகவலை மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.
- திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை கூட்டம் நடக்கிறது.
- மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குறை நிறைகளை கூறலாம்.
திருப்பூர் :
அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :- திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. எனவே அவினாசியை சுற்றியுள்ள மின்நுகர்வோர் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரில் மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலையில் 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்லடம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைபொறியாளர் கலந்து கொள்கிறார். எனவே மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தொழில் முனைவோர் கலந்து கொண்டு கூட்டத்தில் குறை நிறைகளை கூறலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.
- காலை 11 மணிக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
திருப்பூர் :
திருப்பூர் மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர், நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இந்த தக–வலை திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் ஜவகர் தலைமையில் நடக்கிறது. இதில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது மின்சார இணைப்பில் வினியோகம் குறித்து குறைகள், புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை பல்லடம் செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- திருவாரூரில் 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.
- மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
திருவாரூர்
திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.
திருவாரூர் கோட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தலைமையில் துர்காலயா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திருவாரூர் நகர், புறநகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி,
குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பார் பகுதிகளுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்புடைய குறைகளை நேரில் விண்ணப்பம் மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
- மின்நுகர்வோர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம்.
கும்பகோணம்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் கோட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நாளை 10-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கும்பகோணம் மாநகரம், புறநகர், பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை நகர், புறநகர், திருக்கருக்காவூர், கணபதி அக்ரஹாரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம், பிரிவு அலுவலகம் பகுதியினை சார்ந்த மின்நுகர்வோர்கள் தங்களுக்கு மின்விநியோகம் தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவித்து பயன்பெறலாம்.
இந்த தகவலை கும்பகோணம் கோட்டம் செயற்பொறியாளர் திருவேங்கடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.