search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைபறிப்பு"

    • காய்கறி வாங்கி விட்டு வீடு திரும்பியவரிடம் மோட்டார்சைக்கிள் கும்பல் கைவரிசை
    • மொபட்டில் சென்ற பெண்ணிடமும் 8 பவுன் தங்கச்செயின் கொள்ளை

    கோவை,

    கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி சந்திரிகா (வயது 56). இவர் மாலை 7 மணி அளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார்.

    சந்தையில் காய்கறி வாங்கி விட்டு தனது வீடு நோக்கி நடந்து வந்தார். அப்போது வீட்டிற்கு முன்பு மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் சந்திரிகா அருகில் மோட்டார்சைக்கிளை நிறுத்தினர். சந்திரிகா கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க செயினை பறித்து சென்றனர்.

    செயின் பறிக் கும்போது கீழே விழுந்த சந்திரிகா சத்தம் போட்டார். சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த கணவர் கோபி ஓடி வருவதற்குள் மோட்டார்சைக்கிளில் வந்த திருடர்கள் செயினுடன் தப்பிச் சென்றனர். இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு , வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    அதே போன்று சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி நிர்மலா (வயது 56). இவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு தனது மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். பீள மேட்டில் திடீரென மொபட் நிற்கவே, கீழே இறங்கி பெட்ரோல் இருக்கிறதா என சோதித்து பார்த்தார்.

    அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென நிர்மலா அணிந்திருந்த 8 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிர்மலா பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார்.

    புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் கண்காணிப்பு காமிரா மூலம் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    • கொள்ளையர்களை பிடிக்க விடிய, விடிய தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
    • பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொ ள்ளப்ப ட்டு வருகிறது.

    கோவை,

    கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு சம்பவங்கள், பணம் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக ரத்தினபுரி, டாடாபாத், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் ஒரே நாளில் நடந்தது.

    இது குறித்து பாதிக்க ப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்காக மாநகர போலீஸ் சார்பில், 7 தனிப்ப டைகள் அமைக்கப்பட் டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்க ளை தேடி வருகின்றனர்.

    மேலும் செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா க்களில் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மாநகர் முழுவதும் போலீசார் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு 2-வது நாளாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்ப ட்டது. பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொ ள்ளப்ப ட்டு வருகிறது.

    மேலும் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ரத்தினபுரி, என பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் விடிய, விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது. வாகனங்களில் வருபவர்க ளிடம் தீவிர விசாரணை நடத்தி, அதன் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    • திருமங்கலம் அருகே 2 பெண்களை தாக்கி 8 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள புங்கங்குளத்தை சேர்ந்தவர் மார்கண்டன். இவரது மனைவி சுந்தரவள்ளி(வயது 49). இவர்கள் கிராமத்தில் சித்தாலை செல்லும் ரோட் டில் ஒத்தவீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் 1 மணியளவில் சுந்தரவள்ளி வீட்டின் முன்பு அமர்ந்து காய்கறி நறுக்கி கொண்டிருந்தார்.

    அப்போதுஅந்த வழியாக திருமங்கலம் சோ்ந்த ஈஸ்வரன் மனைவி தெய்வகனி (25), டூவிலரில் சென்றார். ஆள்நடமாட்டம் அற்ற அந்த ரோட்டில் அவரை பின் தொடர்ந்து வேகமாக மற்றொரு டூவிலரில் வந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் தெய்வகனி கழுத்திலிருந்த 5 பவுன் நகையை பறித்துள்ளான்.

    அவர் சப்தம் போடவே வீட்டிலிருந்த சுந்தரவள்ளி வெளியேஓடி வந்த நகைபறித்தவனை தடுக்க முயலவே ஆத்திரமடைந்த அந்த நபர் சுந்தரவள்ளி அணிந்திருந்த 3 பவுன் நகையையும் பறித்து கொண்டு மொத்தம் 8 பவு னுடன் தப்பியோடிவிட்டார்.

    நகை பறித்துச் சென்றவன் ஹெல்மெட் அணிந்து வந்தால் அடையாளம் தெரிய வில்லை. இதுகுறித்து சுந்தரவள்ளி கொடுத்த புகாரில் திருமங்கலம் தாலுகா போலீ சார் வழக்குபதிவு செய்து இரண்டு பெண்களிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பயின்று வருகிறார்.
    • இவர் தளவாய்பட்டினத்தில் இருந்து தாராபுரத்திற்கு தனியார் பேருந்தில் சென்றார்.

    தாராபுரம் : 

    தாராபுரம் தளவாய்பட்டினம் கிராமம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா (வயது 22). சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பயின்று வருகிறார். சம்பவத்தன்று இவர் தளவாய்பட்டினத்தில் இருந்து தாராபுரத்திற்கு தனியார் பேருந்தில் சென்றார்.தாராபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கிய போது அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இது குறித்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் கீர்த்தனா கூறினார். தனியார் பேருந்தில் உள்ள சிசிடிவி. காட்சிகளை பார்த்தபோது அடையாளம் தெரியாத சுடிதார் அணிந்த 2 பெண்கள் மாணவி கீர்த்தனாவை திசை திருப்பி திருடியது சிசிடிவி. கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது . தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடிய பெண்களை தேடி வருகின்றனர். 

    • திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து மர்ம நபர்கள் துணிகர கைவரிசை காட்டியுள்ளனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் மீனா(வயது29). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் அவர் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்க்கிறார்.

    இந்நிலையில் தன்னு டைய பிள்ளைகளை தனது சொந்த ஊரான அழகு ரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் விட்டு விட்டு இரவில் இருசக்கர வாகனத்தில் தனக்கன்குளம் வந்து கொண்டிருந்தார்.

    திருமங்கலம்- குதிரைச்சாரிகுளம் நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார்சைக்கி ளில் வந்த மர்ம நபர்கள், மீனா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் மீனா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து வந்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகேபெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • நகை செல்போன் ஆகியவைபோலீசார் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில்அடைத்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காடாம்பு லியூர்கொஞ்சிகுப்பம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யானந்தன் இவரது மனைவி ராதா (37). இவர், காடாம்புலியூர் மாயா கார்டன் ரவி என்பவரின்தோப்பில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர்இவரை மிரட்டி இவர் அணிந்து இருந்த செயின்மற்றும் செல்போ னை பறித்துசென்றா ர்.

    இதுகுறித்து காடாம்பு லியூர் போலீசா ர்வழக்குபதிவுசெய்து விசா ரணை நடத்திவந்தனர். கடலூர் எஸ்பி சக்தி கணேஷ் உத்தரவின் பேரின் பண்ருட்டி துணைபோலீ ஸ்சூப்பிரண்ட் சபியுல்லா மேற்பார்வையில் காடாம்பு லியூர் இன்ஸ்பெக்ட ர்ராஜதாமரை பாண்டியன்,சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், போலீசார் ரகு மர்மஆசாமியை வலைவீசி தேடி வந்தனர்.

    நேற்று சாத்திப்பட்டு பஸ்நிறுத்தம் அருகில் போலீசா ர்வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையி ல்காடாம்புலியூர் அடுத்த தெற்குமேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் ( 27 ) என தெரிய வந்தது. இவர் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த பெண்ணிடம் நகை பறித்தை ஒப்பு க்கொண்டார்

    இதனை தொடர்ந்துஅவரை கைது செய்துஅவரிடமிருந்து நகை செல்போன் ஆகியவைபோலீசார் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில்அடைத்தனர்

    • வீட்டில் ஸ்மைலா மட்டும் தனியாக இருந்தபோது மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து கத்தியால் ஸ்மைலாவை குத்தினார்.
    • ருபிஸ்டைன் வீட்டில் இருந்த 17 பவுன் நகை, பீரோவில் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள கல்லாமொழியை சேர்ந்தவர் ருபிஸ்டைன். இவரது மனைவி ஸ்மைலா (வயது 36).

    கத்திக்குத்து

    ருபிஸ்டன் மீன்படி வேலை செய்து வருகிறார். அவர் நேற்று அதிகாலை வழக்கம் போல கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டார். வீட்டில் ஸ்மைலா மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்மைலா சத்தம் போட்டார். உடனே மர்மநபர் கத்தியால் ஸ்மைலாவை குத்தினார்.

    17 பவுன் நகை கொள்ளை

    இதில் அவரது உடலில் 3 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் மர்ம நபர் அங்கிருந்த 17 பவுன் நகை, பீரோவில் இருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளை யடித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

    கொள்ளையன் கத்தியால் குத்தியதில் காயமடைந்த ஸ்மைலா திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக அவர் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்–ெபக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை நடத்தி வருகின்றார்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர்திடீரென பேராசிரியை கத்தியால் குத்தியதுடன் கழுத்தில் கிடந்த 7 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு வேகமாக தப்பினர்.
    • திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காங்கயம் ரோடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா தேவி (வயது 40). தனியார் கல்லூரி பேராசிரியை. அதிகாலை காங்கயம் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

    அப்போது தனியார் பள்ளி அருகே சென்றபோது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர்திடீரென பேராசிரியை கத்தியால் குத்தியதுடன் அவரை மிரட்டி கழுத்தில் கிடந்த 7 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து தப்பினர். காயம் அடைந்த பேராசிரியை சத்தம் போட்டார். உடனே அப்பகுதி மக்கள் மஞ்சுளாதேவியை மீட்டு திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இது தொடர்பாக மஞ்சுளாதேவி அளித்த புகாரின் பேரில், திருப்பூர் நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×