என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரத்தான் போட்டி"

    • உலக இருதய தினத்தை முன்னிட்டு மணப்பாறையில் நடந்த மாரத்தான் போட்டியில் மழலையர் முதல் முதியோர்கள் வரை கலந்து கொண்டனர்
    • 21 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் ஊட்டியைச் சேர்ந்த நிகில் குமார் என்பவர் முதலிடம் பிடித்தார். இதே போல் 10 கிலோ மீட்டர் பெண்கள் பிரிவில் மனப்பாறையை சேர்ந்த யுவா முதலிடம் பிடித்தார்

    திருச்சி:

    இயங்க மறுக்கம் இதயத்திற்கு உற்சாகம் தருவதே ஓட்டமும், நடைபயிற்சியும் தான். மனித உடலை சீராக வைத்து கொள்வதற்கு உடற்பயிற்சி நல்துணையாக இருக்கும் என்று அனைவரும் கூறி வரும் நிலையில் மழலைகள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்டு ஓடி அசத்திய மராத்தான் போட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு சிந்துஜா மருத்துவ மனை மற்றும் தியாகேசர் ஆலை முன்னாள் மாணவர்கள் சார்பில் "மணவை மராத்தான்" என்ற தலைப்பில் மராத்தான் போட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் அருளரசன், செயலாளர் அசோக்குமார், ஆலை பொது மேலாளர் சதீஸ் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

    ஆண்களுக்கு 21 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 10 கிலோ மீட்டரும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே 5, 3 கிலோ மீட்டர் ஓட்டமும் நடைபெற்றது. டாக்டர் கலையரசன் மற்றும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    21 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் ஊட்டியைச் சேர்ந்த நிகில் குமார் என்பவர் முதலிடம் பிடித்தார். இதே போல் 10 கிலோ மீட்டர் பெண்கள் பிரிவில் மனப்பாறையை சேர்ந்த யுவா முதலிடம் பிடித்தார்.

    5 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் பொள்ளாச்சியை சேர்ந்த கனிராஜா என்பவரும், பெண்கள் பிரிவில் மணப்பாறை ஏ.பி.ஜே. விளையாட்டு அகாடமியை சேர்ந்த கனிஷா என்பவரும், 3 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் நத்தம் பகுதியை சேர்ந்த ராம்பிரதி,

    பெண்கள் பிரிவில் மணப்பாறை ஏ.பி.ஜே. விளையாட்டு அகாடமியை சேர்ந்த சாதனா பாரதி ஆகியோர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ஒவ்வொரு பிரிவாக நடைபெற்ற போட்டியில் மழலைகளுக்கு 500 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் கலந்து கொண்டு போட்டி போட்டு ஓடியது அனைவரின் கவனங்களையும் வெகுவாக ஈர்த்தது.

    இந்த மராத்தான் போட்டியை தொடங்கி வைத்த போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தங்கள் குழுவினருடன் 21 கிலோமீட்டர் முழுமையாக ஓடி ஓட்டத்தை நிறைவு செய்தார். தொழிலதிபர் காந்திராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    இந்த மராத்தான் போட்டியில் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடிய போது வழிநொடுகிளும் கிராம மக்கள் சாலை ஓரங்களில் நின்று அனைவரையும் கைத்தட்டி உற்சாகமூட்டினார்.

    பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆணழகன்கள் மேடையில் அனைவகுத்து நின்று தங்களின் கட்டலகை காண்பித்தனர். மழலைகள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற மராத்தான் போட்டி மக்களின் கவனங்களை வெகுவாக இருப்பதுடன் பாராட்டையும் பெற்றது.

    • 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களும்,40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் கலந்து கொள்கிறார்கள்.
    • போட்டி காலை 6 மணி அளவில் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இருந்து தொடங்குகிறது. 

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் வள்ளுவன் மராத்தான் போட்டி வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. போட்டி காலை 6 மணி அளவில் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இருந்து தொடங்குகிறது. இதில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களும்,40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் கலந்து கொள்கிறார்கள். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை உணவு, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பெருமாநல்லூர் ரோட்டரி சங்கம் மற்றும் சுகன் சுதா மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்துள்ளனர். 

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகம் முன்பு பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி மாரத்தான் ஓட்ட பந்தயம் இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாரத்தான் ஓட்டமானது புதிய கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து தொடங்கி சென்னை சித்தூர் செல்லும் நெடுஞ்சாலை வழியாக சிப்காட், புளியந்தாங்கல் சென்று பெல் பகுதியில் முடிவடைந்தது.

    இதில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாரத்தான் ஓட்ட பந்தயம் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில் தலைமை வகித்தார். கலெக்டர்.அமர்குஷ்வாஹா. கொடியசைத்து தொடங்கி வைத்தார், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி.அ.நல்லதம்பி எம் எல் ஏ, முன்னிலை வகித்தார். மினி மாரத்தான் போட்டியில் கலெக்டர், எம்எல்ஏ, டாக்டர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள் 350, பேர் கலந்து கொண்டனர். வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் செந்தில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லா, தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், சுகாதாரத்துறை பணியாளர்கள், பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் இந்திய ஆயுதப் படையினரிடம் சரணடைந்தனா்.
    • போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளும், பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் இந்திய ஆயுதப் படையினரிடம் சரணடைந்தனா். வெற்றி திருநாளான இந்நாளை கொண்டாடும் வகையில் ராணுவம் சாா்பில் ஆண்டுதோறும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது.அதன்படி, இந்த ஆண்டுக்கான மாரத்தான் போட்டி 'ரன் வித் சோல்ஜா்' என்ற தலைப்பில் நடைபெற்றது. போட்டியை மெட்ராஸ் ரெஜிமென்ட் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

    5 கி.மீ., 12.5. கி.மீ. என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் வெலிங்டன் கண்டோன்மென்ட் போா்டு, பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என 800க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளும், பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    • நிதி திரட்ட வருகிற 8-ந்தேதி திருப்பூரில் பல்லாயிரம் பேர் பங்கேற்கும் வகையில் வாக்கத்தான், மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • அதிகாலை 5:30 மணிக்கு வாக்கத்தான் மற்றும் 6 மணிக்கு மாரத்தான் ஆகியன நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் புற்று நோய் சிகிச்சைக்கான அதி நவீன மையம் அமைக்கப்படவுள்ளது. இது 60 கோடி ரூபாய் மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.இதற்காக நிதி திரட்ட வருகிற 8-ந்தேதி திருப்பூரில் பல்லாயிரம் பேர் பங்கேற்கும் வகையில் வாக்கத்தான், மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பல்வேறு தரப்பினரும் இதில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.வருகிற 3-ந் தேதி வரை ஆன்லைன் வாயிலாகவும், கியூஆர் கோடு மூலமாக, புக் மைஷோ செயலியிலும் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாக்கத்தான் - மாரத்தான் நடைபெறும் 8ந் தேதி சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் புற்று நோய் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 5:30 மணிக்கு வாக்கத்தான் மற்றும் 6 மணிக்கு மாரத்தான் ஆகியன நடைபெறுகிறது.

    • ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 5 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது.
    • ஆண்கள், பெண்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 5 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியை காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட ஆண்கள், பெண்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த மாரத்தான் போட்டி காரைக்காலில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நிறைவு பெற்றது.

    • பிளாஸ்டிக் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு
    • 5 கி.மீ. வரை நடந்தது

    நெமிலி:

    நெமிலியில் உள்ள நேரு யுகேந்திரா சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து மினி மாரத்தான் போட்டிநடைபெற்றது.

    இதில் நெமிலி ஒன்றிய தலைவர் பெ.வடிவேலு, அரக்கோணம் போலீஸ் துணைசூப்பிரண்டு கிரிஷ் யாதவ் அசோக்ஆகியோர் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, பின்னர் மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்து மினி மாரத்தான் போட்டியிலும் கலந்து கொண்டனர்.

    சுமார் 5 கிலோ மீட்டர் வரை நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு நெமிலி மேற்கு ஒன்றிய தி.மு.க மாவட்ட பிரதிநிதி, காட்டுப்பாக்கம். தணிகைவேல் பரிசை வழங்கினார்.

    நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய துணைப் பெருந்த லைவர் ச.தீனதயாளன், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர், பவானி வடிவேலு, அசநெல்லிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர்சேகர், ஒன்றிய குழு உறுப்பினர்சங்கீதா கதிரவன், நெமிலி பேரூராட்சி மன்ற தலைவர்ரேணுகாதேவி சரவணன், நெமிலி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர், ஆசிரியர்.வேதையா, கவுன்சிலர்.சேகர், எம்.பி.பாபு, அப்துல் நசீர் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி நடைபெற்றது
    • போட்டியில் மொத்தம் 480 பேர் பங்கேற்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா, காரமடை மேற்கு ஒன்றிய இளைஞரணி மற்றும் விவேகானந்தர் பசுமை இயக்கம் சார்பில் தேசிய இளைஞர் தினம் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இதற்கு காரமடை மேற்கு ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.

    கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, மாவட்ட பொதுக்குழு செயலா ளர்கள் சத்தியமூர்த்தி, சுபாஷ், மாவட்டத் துணைத் தலைவர் விக்னேஷ், ஒன்றிய இளைஞரணி தலைவர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக காரமடை ஸ்ரீ விநாயக வித்யாலயா சி.பி.எஸ்.சி பள்ளி தாளாளர் சோமசுந்தரம் பங்கேற்றார். மாரத்தான் போட்டி மருதூர் பெட்ரோல் பங்கில் தொடங்கி வெள்ளியங்காடு பகுதியில் உள்ள போரேகவுடர் திருமண மண்டபத்தில் முடிவுற்றது.

    இதில் காரமடை நகர தலைவர் ஆனந்தகுமார், நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கதிர்வேல், மத்திய அரசின் நலத்திட்ட மாவட்ட தலைவர் ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.போட்டியில் மொத்தம் 480 பேர் பங்கேற்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

    • ராகுல்காந்தியின் தலைமையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
    • மாரத்தான் போட்டியை கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக் குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியும் இணைந்து ராகுல்காந்தியின் தலைமையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி அண்ணாசிலை அருகில் இருந்து துவங்கிய மினி மாரத்தான் போட்டியை கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக் குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நடராஜன், முரளிதரன் ஆகியோரின் முன்னிலை வகித்தனர்.

    இதில் 17- வயதுக்கு உட்பட்ட மூன்று பிரிவுகளில் ஆண்,பெண் என தனியாக நடத்தப்பட்ட இந்த மினி மாரத்தான் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் இன்றி தருமபுரி மாவட்டத்திலும் இருந்து ஏராளமான இளைஞர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்கள்.

    இதில் அண்ணாசிலையில் இருந்து துவங்கிய மினி மாரத்தான் காத்தி சிலை, ரவுண்டானா, பெரியமாரியம்மன் கோவில், ராசு விதி, திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆவின் மேம்பாலம், ராயக்கோட்டை மேம்பாலம் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடிவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியின்போது முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிக்கம், கிருஷ்ணமூர்த்தி, மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, மாவட்டத் துணைத்தலைவர் சேகர், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் விக்னேஷ் பாபு, முன்னாள் ஊத்தங்கரை சேர்மன் ஆறுமுகம், மாவட்டத் துணைத்தலைவர் ஹரி, நகரத் தலைவர் முபாரக், லலித் ஆண்டனி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், காங்கிரஸ் கட்சியின் எஸ்சி,எஸ்டி பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுகம் சுப்பிரமணி, என ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்கள். மேலும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்கள்.

    • ராணுவ மையம் சாா்பில் ஆண்டுதோறும் மகளிா் தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.
    • போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றிபெற்றவா்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    மெட்ராஸ் ராணுவ மையம் சாா்பில் ஆண்டுதோறும் மகளிா் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மகளிா் தின கொண்டாட்டம் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரில் நடந்தது. இதில் பெண்கள் சக்தி மற்றும் பாலின சமத்துவம் என்ற பெயரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    போட்டியை மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரின் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றிபெற்றவா்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    • திருநங்ககைள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்டப்போட்டியும் நடத்தப்படவுள்ளது.
    • போட்டி தூரத்தை நிறவைு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் தடை செய்யப்பபட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடக்கிறது. இப்போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசுகையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தளபதி திடல் வளாகத்தில் நாளை மறுநாள் மாலை 3.30 மணியளவில் நடைபெறும் மாரத்தான் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இப்போட்டிகள் பள்ளி பொதுப்பிரிவினர் மற்றும் மாணவ- மாணவிகள் ஆண்கள் பெண்கள் என 4 பிரிவாக 5 கிலோ மீட்டர் தூரமும் திருநங்ககைள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்டப்போட்டியும் நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் 2ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் 3ம் பரிசாக ரூ.1,000 மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் 5 பிரிவினர்களுக்கும் பரிசளிக்கப்படும். போட்டி தூரத்தை நிறவைு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் பொதுப்பிரிவினர்கள் திருநங்கைகள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டியும் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுமதும பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போட்டியில கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயரை எம்.ஜி.ஆர் உள்விளையாட்டரங்கில் பதிவு செய்திடலாம். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் நா.புகழேந்தி எம்.எல்.ஏ மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ் மற்றும் வாலிபால் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாரத்தான் ஓட்டம் 9 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நிறைவு பெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடர்பான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரணடு மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி மராத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏர்வாய்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் 9 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நிறைவு பெற்றது. இதில் 206 ஆண்களும், 115 பெண்களும் என மொத்தம் 321 பேர் பங்கேற்றனர்.

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே 9 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.4000-ம், 2-வது பரிசாக ரூ.3000-ம், 3-ம் பரிசாக ரூ.2000-ம், 4-ம் பரிசாக ரூ.1000-ம், 5-ம் பரிசாக ரூ.1000.ம், 6 மற்றும் 7-ம் பரிசாக ரூ.500-ம் வழங்கப்பட்டது. மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு நெகிழி பயன்பாடு தடை மற்றும் மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவது மீண்டும் மஞ்சள்பை இயக்கம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய நபர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் காமராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயகுமாரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் இளையராஜா, ராம்குமார், பிரபாகரன், உடற்கல்வி இயக்குநர்கள் பாலாஜி, ஹரிகரன், பாலுசாமி சுற்றுச்சூழல்த்துறை அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

    ×