என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பலி"

    • புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது.
    • இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட உயிர் நீத்த தினமான புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து கலை அரங்கத்தில்பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் இறை வார்த்தை வழிபாடு,சிறப்பு கூட்டு திருப்பலி நிறை வேற்றப்பட்டது.

    சிலுவையில் அறை யப்பட்ட இயேசுவின் சொரூ பத்தை பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்கு தந்தைகள் முத்தமிட்டனர்.

    அதைத்தொடர்ந்து இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு செல்லும் போது பக்தர்கள் முத்தமிட்டு வழிபட்டனர்.

    • மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றிக்கொண்டு கைகளில் ஏந்தியவாறு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
    • இயேசுநாதரின் உருவத்தை பேராலய அதிபர் சாம்சன் திறந்து வைத்து புனிதம் செய்தார்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று புகழப்படும் பூண்டி மாதா பேராலயத்தில், இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் பெருவிழா நேற்று நள்ளிரவில் தொடங்கி இன்று அதிகாலையில் முடிவடைந்தது.ஈஸ்டர் திருவிழா திருப்பலி நேற்று நள்ளிரவில் தொடங்கியது.இதில் மிகத் திரளான மக்கள் பூண்டி மாதா பேராலய வளாகத்தில் திரண்டு இருந்தனர்.

    யேசுநாதர் உயிர்த்தெ ழுந்ததை குறிக்கும் வகை யில் புதிய நெருப்பு உண்டாக்கப்பட்டு அதனை மந்திரித்து அதிலிருந்து பாஸ்கா திரி எனப்படும் பெரிய மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றப்பட்டது. இந்த மிகப்பெரிய மெழுகுவர்த்தி யில் சிலுவை அடையாளம் வரையப்பட்டிருந்தது. நமது மீட்பின் தொடக்கமும் முடிவும் கிறிஸ்துவே என்பதை காட்ட பேரலாய அதிபர் தந்தை தமிழ் மொழியின் முதல் எழுத்தான (அ) வையும் கடைசி எழுத்தான (ன) வையும் மெழுகுவர்த்தியில் எழுதினார். நடப்பு ஆண்டினை குறிக்கும் விதமாக 2023 என்று பொறிக்கப்பட்டு, இயேசுவின் 5 காயங்களை நினைவுபடுத்தும் விதமாக பெரிய மெழுகு திரியில் 5 மணிகளை பதிக்கப்பட்டது.

    பெரிய மெழுகு வர்த்தியில்ஒ ளியேற்றப்பட்டு அதனை பூண்டி பேராலய அதிபர் சாம்சன் கையில் ஏந்தியவாறு திருப்பலி மேடைக்கு கிறிஸ்துவின் ஒளி இதோ என உரக்க பாடியவண்ணம் ஏந்தி வந்தார். உயிர்ப்பு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றிக்கொண்டு கைகளில் ஏந்தியவாறு திருப்பலியில் கலந்து கொண்டனர். கிறிஸ்துவின் ஒளி இதோ என்று பாடியவாறு பேராலய அதிபர் சாம்சன்கைகளில் ஏந்தி வந்த மெழுகுவர்த்தியை திருப்பலி மேடையின் மீது அமைக்கப்பட்டிருந்த இடத்தில் பொருத்தி வைத்தார்.

    உயிர்ப்பு விழா சிறப்பு திருப்பலி யில் பேராலயஅதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம், ஆகியோர் பங்கு கொண்டனர். உன்னதங்களிலே பாடல் பாடப்பட்ட போது ஆலயமணிகள் ஒலிக்க ஏசுநாதர் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் பீடத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இயேசுநாதரின் உருவத்தை பேராலய அதிபர் சாம்சன் திறந்து வைத்து புனிதம் செய்தார். அதனைத் தொடர்ந்து திருப்பலிநடைபெற்றது. வீபுதி புதன் அன்று தொடங்கிய கிறிஸ்தவர்களின் 40நாள் தவக்காலம் யேசுநாதர் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் நாளுடன் முடிவடைகிறது. இன்று பூண்டி மாதா பேராலயத்தில் காலை, நண்பகல், மாலையில் ஈஸ்டர் நாள் திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன.

    • திருவிழிப்பு சடங்குகளான புதுநெருப்பு, புனித தீர்த்தம் புனிதம் செய்யும் சடங்குகள் நடைபெற்றது.
    • தொடர்ந்து உயிர்த்த ஆண்டவரின் தேர்பவனி நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்தெழுந்த நிகழ்வை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இதனை முன்னிட்டு நள்ளிரவு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு பிரார்த்தனை திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை திரு இருதய பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை நள்ளிரவு வழிபாடு மறைமாவட்ட பரிபாலகரும், ஆயருமான (பொறுப்பு) சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பாஸ்கார் திருவிழிப்பு சடங்குகளான புதுநெருப்பு, புனித தீர்த்தம் புனிதம் செய்யும் சடங்குகள் நடைபெற்றது. தொடர்ந்து கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

    இந்த வழிபாட்டில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலாளர் ஆன்ட்ரூ செல்வகுமார், திருத்தொண்டர் அரவிந்த் மற்றும் குருக்கள் கலந்து கொண்டனர். திருப்பலி முடிந்தவுடன் வியாகுல அன்னை ஆலய முகப்பில் இயேசுவின் உயிர்த்த காட்சி நடைபெற்றது. தொடர்ந்து உயிர்த்த ஆண்டவரின் தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.முடிவில் ஈஸ்டர் பாண்டிகை வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

    இதேப்போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்க ளிலும் நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    • தேரில் பூண்டி அன்னையின் சுருபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெறும்.
    • வருகிற 15-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. பூலோகம் போற்றும் பூண்டி மாதா என அழைக்கப்படும் இந்த பேராலயத்தில் ஆண்டு பெருவிழா வருகிற 6-ம்தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    பேராலய ஆண்டு திருவிழா தொடக்க நிகழ்வாக கொடியேற்றம் நிகழ்ச்சி வரும் 6-ம் தேதி மாலை நடைபெறுகிறது .

    பூண்டி அன்னையின் உருவத்துடன் கொடியை பக்தர்கள் ஜெபமாலை பாடல்களுடன் ஊர்வலமாக எடுத்து வருவார்கள்.

    ஊர்வலம் கொடி மேடையை வந்து அடைந்தவுடன் கொடி மரத்தில் அந்தமான் நிகோபார், போர்ட் பிளேர் மறை மாவட்ட பிஷப் விசுவாசம் செல்வராஜ் கொடியை ஏற்றி வைத்து மரியா- ஆறுதலின் அன்னை என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், துணைஅதிபர் ரூபன் அந்தோணி ராஜ் , தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    கொடியேற்றத்தினை தொடர்ந்து நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும் அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் அருள் தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    வரும் 8-ம் தேதி (திங்கட்கிழமை) புதுமை இரவு வழிபாடு கும்பகோணம் மறை மாவட்ட அருட்தந்தை யூஜின் டோனி வழிநடத்து தலில் நடைபெறும்.

    பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா நாளான வரும் 14ஆம் தேதி காலை பூண்டி மாதா பேராலயத்தில் பணியாற்றி மறைந்த அருட் தந்தையர்கள் லூர்து சேவியர் மற்றும் ராயப்பர் அடிகளாரின் நினைவு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    மாலை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் மரியா -அருளின் ஊற்று என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    அதனைத் தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மல்லிகை மலர்களாலும் மின்விளக்கு களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் பூண்டி அன்னையின் சுருபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.

    தொடர்ந்து வாணவே டிக்கை நடைபெறும்.

    மே 15ஆம் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி கும்பகோணம் ஆயர் அந்தோ னிசாமி நிறைவேற்றுவார்.

    மாலையில் கொடி இறக்கத்துடன் பூண்டி திருத்தல பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது .

    திருவிழா விற்கான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் அருட்தந்தையர்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    • வண்ண ஒளிச்சிதறல்கள் வானில் பரவியபோது உற்சாக குரல் எழுப்பினர்.
    • பக்தர்கள் கைகளை உயர்த்தி மரியே வாழ்க என முழக்கங்களை எழுப்பினர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் புகழ் பெற்ற கிறித்தவ பேராலயம் பூண்டி மாதா பேராலயம்.பெருமை மிக்க பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 6-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பரப்பவனியும் அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நிறைவேற்ற ப்பட்டது.

    பூலோகம் போற்றும் பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நாளான நேற்று காலை பூண்டி மாதா பேராலயத்தில் பங்கு தந்தையர்களாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர், ராயப்பர் ஆகியோரது நினைவு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    நேற்று மாலை 6 மணி அளவில் கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி தலைமையில் மரியா - அருளின் ஊற்று என்ற தலைப்பில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

    திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி,துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ் ,அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் மற்றும் அருட்தந்தையர்கள்பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பலி நிறைவடைந்த உடன் பூண்டி மாதா பேராலயத்தின் முகப்பில் வண்ணமின்னலங்கார பெரிய தேரில் பூண்டி மாதாவின் சுரூபம் வைக்கப்பட்டு தேரை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.

    பேண்டு வாத்திய இசை முழங்க நடைபெற்ற தேர் பவனியின் போது திரண்டு இருந்த பக்தர்கள் ,கைகளை உயர்த்தி மரியே வாழ்க என்று முழக்கங்களை எழுப்பி வணங்கினார்கள்.

    தேர்பவனிதொடங்கிய உடன் அதிரடி வாணவே டிக்கை நடைபெற்றது.வண்ண ஓளிச்சிதறல்கள் வானில் பரவியபோது உற்சாக குரல் எழுப்பினர்.

    திருவிழா நிறைவு நாளான இன்று (திங்கள்)காலை திருவிழா திருப்பலி கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி நிறைவேற்றினார். இன்று (திங்கள் )மாலை கொடி இறக்கத்துடன் பூண்டி பேராலய ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது.

    தேர் பவனியை முன்னிட்டு பேராலய வளாகம் முழுவதும் நாடெங்கும் இருந்து வந்த பக்தர்கள் குழுமி இருந்தனர்.

    பேராலயம் அதி நவீன மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் திருக்காட்டு ப்பள்ளி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    • தொண்டி அருகே செங்கோல் மாதா ஆலயத்தில் கொடியேற்றம் நடந்தது.
    • தேர் பவனி நடைபெற்று சிறப்பு திருப்பலியுடன் விழா நிறைவு பெறும்.

    தொண்டி

    தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் செங்கோல்மாதா ஆலயம் உள்ளது. இங்கு வருகிற 1, 2-ந்தேதிகளில் திருவிழா நடக்க உள்ளது. இதையொட்டி கொடியேற்ற விழா நடந்தது. தூத்துக்குடி மறைமாவட்ட பங்கு பணியாளர் வெனிஇளங்குமரன் தலைைம வகித்தார். இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவில் பாவமன்னிப்பு வழிபாடு திருப்பலி, புனித இஞ்ஞாசியார் திருவிழா, நற்கருணை பவனி ஆராதனை ஆகியவை நடைபெறும். அதைத்தொடர்ந்து தேர் பவனி நடைபெற்று சிறப்பு திருப்பலியுடன் விழா நிறைவு பெறும்.

    • பல சமய தலைவர்கள் வடம்பிடித்து தொடங்கி வைத்த அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி
    • விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை. பங்கு இறை மக்கள், பங்குப்பேரவையினர், அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.

    கன்னியாகுமரி :

    தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 5-ந்தேதி வரை நடைபெற்றது. 9-ம் நாளான நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பல சமய தலைவர்கள் வடம்பிடித்து தொடங்கி வைத்த அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.

    10-ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடை பெற்றது. கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் அருட்பணி ஜாண் ரூபஸ் தலைமை தாங்கினார். கிறிஸ்தவ வாழ்வு பணி குழு செயலர் அருட்பணி எட் வின் வின்சென்ட் மறையுரை யாற்றினார். பிற்பகல் 3.30 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு இன்னிசை விருந்தும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெரி வின் சென்ட் மற்றும் பங்கு இறை மக்கள், பங்குப்பேரவையினர், அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.

    • பூ அன்னையின் பிறப்பு பெருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது.
    • கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம்.

    பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று பக்தர்களால் புகழப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது.

    வரும் 30 ஆம் தேதி புதன்கிழமை அன்னையின் பிறப்பு பெருவிழா தொடக்கமாக கொடியேற்று நிகழ்வு நடைபெறுகிறது .அன்னையின் உருவம் வரையப்பட்ட திருக்கொ டியை பக்தர்கள் பக்தி பெருக்கோடு எடுத்து வந்து கோவிலின் முன்புறமுள்ள கொடி மரத்தில் ஏற்றப்படும்.

    இந்த நிகழ்வில் கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் கலந்து கொண்டு அன்னையின் பிறப்பு பெருவிழா தொடக்கமாக கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    திருப்பலியில் கும்பகோ ணம் பிஷப் அந்தோனி சாமியுடன், பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ் ,தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் ,உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீகத் தந்தை அருளானந்தம் மற்றும் பல்வேறு அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றி வைக்கின்றனர்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலை திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    வரும் 31ஆம் தேதி மரியா -இறை நம்பிக்கையின் நங்கூரம் என்ற தலைப்பில் அரிமளம் பங்கு தந்தை தஞ்சை டோமி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    செப்டம்பர் மாதம் 1ம் தேதி மரியா- சீடத்துவத்தின் அடையாளம் என்ற தலைப்பில் திருச்சி புதிய வளனார் கல்லூரி அதிபர் பவுல்ராஜ் திருப்பலி நிறைவேற்றுகிறார். செப்டம்பர் 2ம்தேதி மரியா-மனிதநேயத்தின் உச்சம் என்ற தலைப்பில் திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரி அதிபர் ஆன்ட்ரூ டி ரோஸ் , செப்டம்பர் 3தேதி மாலை மரியா -உதவுவதில் முன்னோடி என்ற தலைப்பில் கும்பகோணம் கல்வி மற்றும்திட்டப்பணி குழு செயலாளர் கஸ்பார், செப்டம்பர் 4ம் தேதி மரியா -ஆறுதலின் ஊற்று என்ற தலைப்பில் திருச்சி மறை மாவட்ட பொருளாளர் ஜேம்ஸ் செல்வநாதன், செப்டம்பர் 5ஆம் தேதி மரியா -மனவலிமையின் முன்மாதிரி என்ற பொருளில் திருச்சிலுவை சபை தமிழக மறை மாநில தலைவர் ஜோசப் கஸ்பார், 6ம் தேதி மரியா- முன்னெடுப்பின் உதாரணம் என்ற தலைப்பில் அம்மாபேட்டை பங்குத்த ந்தைஜோஜோ லாரன்ஸ்,

    செப்டம்பர் 7ஆம் தேதி மரியா -ஒற்றுமையின் வழிகாட்டி என்ற பொருளில் கும்பகோணம் மறை வட்ட முதன்மை குரு பிலோமின்தாஸ் ஆகியோர் திருப்பலி நிறைவேற்று கின்றனர்.

    அதனை தொடர்ந்து அன்னையின் பிறப்பு நாளாக கருதப்படும் செப்டம்பர் மாதம் 8 தேதி மாலை 6 மணிக்கு அன்னையின் பிறப்பு பெருவிழா திருப்பலியை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் நிறைவேற்றி, இரவு 8:30 மணி அளவில் அன்னையின் பிறப்பு பெருவிழா தேர்பவனியை தொடங்கி வைக்கிறார். மறுநாள் செப்டம்பர் 9-ம் தேதி காலை திருவிழா திருப்பலிநிறை வேற்றுவதுடன் பூண்டி மாதா திருத்தல பேராலயத்தின் அன்னையின் பிறப்பு பெருவிழா நிகழ்வுகள் நிறைவு பெறுகின்றன. அன்னையின் பிறப்பு பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ்,தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விழா நடைபெறும்.
    • சிறப்பு பாடல், கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

    நாகப்பட்டினம்:

    கீழ்திசை நாடுகளின் லூர்துநகரம் என அழைக்கப்ப டும் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கும்.

    இந்தாண்டு பெருவிழா நாளை (29-ந்தேதி) கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் கொடி புனிதம் செய்யப்பட்டு ஊர்வலத்துக்கு பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து ஆலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர், தமிழ் திருப்பலி நடைபெறும்.

    வரும் 30-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், ஆலயம் மேல் கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    வரும் 1-ந்தேதி மாலை சிலுவை பாதையும், 7-ந்தேதி மாலை தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபமும் நடைபெறும் அதை தொடர்ந்து சிறப்பு பாடல் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

    8-ந்தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டா டப்படுகிறது.

    காலை 8 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    இரவு 8 மணிக்கு பெரிய தேர்பவனி நடக்கிறது. இதன்பின்பு கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம், ஆலய நிர்வாகம், வேளாங்கண்ணி பேரூராட்சி, போலீஸ்துறையினர் செய்து வருகின்றனர்.

    • ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விழா நடைபெறும்.
    • சிறப்பு பாடல், கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

    நாகப்பட்டினம்:

    கீழ்த்திசை நாடுகளின் லூர்துநகரம் என அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கும்.

    இந்நிலையில், இந்தாண்டு பெருவிழா இன்று மாலை மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் கொடி புனிதம் செய்யப்பட்டு ஊர்வலத்துக்கு பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஆலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர், தமிழ் திருப்பலி நடைபெறும்.

    வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், ஆலயம் மேல் கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    வரும் 1-ம் தேதி மாலை சிலுவை பாதையும், 7-ம் தேதி மாலை தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபமும் நடைபெறும் அதை தொடர்ந்து சிறப்பு பாடல் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது. 8-ம் தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. காலை 8 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு பெரிய தேர்பவனி நடக்கிறது. இதன்பின்பு கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

    திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், 2500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • உலக நன்மைக்காக மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.
    • இன்று காலை விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்க ண்ணியில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.

    இதன் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.

    விழாவின் முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி எனப்படும், தேர்த்திருவிழா கொட்டும் மழையில் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு, கூட்டுபிராத்தனை உள்ளிட்ட நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து தஞ்சை மறைமாவட்ட ஆயார் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ், வேளாங்க்ண்ணி உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ், நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி செய்யது முகம்மதுஹாஜி உசேன் சாகிப், நாகூர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான்சா கிப், வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வர் கோயில் தலைமை குருக்கள் நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு உலக நன்மைக்காக மும்மத பிரார்த்ததை நடைபெற்றது

    பின்னர் தேர் புனிதம் செய்யப்பட்டு தேர் கடற்கரைசாலை, ஆரியநாட்டுதெரு உத்திரியமாதாதெரு, கடைவீதி வழியாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் அதிதூதர், செபஸ்தியார் ,சூசையப்பர் , உத்திரிய மாதா, ஆரோக்கிய மாதா ஆகிய ஏழு தேர்களில் தனியாக காட்சியளித்தார்.

    இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழா இன்று காலை 6 மணிக்கு விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    • பேராலய ஆண்டு பெருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • பேராலய கீழ்கோவிலில் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணியில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது.

    இந்த பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து நேற்று புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேராலய கீழ் கோவிலில் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டு ஆலயத்திற்கு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பேராலய நிர்வாகம் சார்பில் காவல்துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×