search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்ணயம்"

    • மத்திய மந்திரி உடன் விவசாயிகள் சந்திப்பு
    • அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி

    ஊட்டி,

    அண்ணாமலை பாதயாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி பியூஸ்கோயல் வந்திருந்தார்.அப்போது அவரை நாக்குபெட்டா நலசங்க தலைவர்கள், தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் சங்கத்தினர் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.தொடர்ந்து நீலகிரி தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

    விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை படித்து பார்த்த பியூஸ்கோயல், இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.நிகழ்ச்சியில் பா.ஜ.க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 51 எண்கள் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • முதலீட்டு மானியம் 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக ஆக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சியைக் கல்வித் தகுதியாகப் பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு மூன்று வாரக் கால, தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து பின்னர் வங்கிகள் (அ) தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

    தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 51 எண்கள் (மானியம் ரூ.503.00 லட்சம்) என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்திற்கு மேல் அதிகபட்சமாக ரூ.500 லட்சம் வரையிலான உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்கலாம். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும் சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 21-க்கு மேல் 35-க்குள் இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கு (மகளிர் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்த ப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

    இத்திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை. இத்திட்டத்தின் கீழ், தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்குத் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிக பட்சமாக ரூ.75 லட்சம் வரை) முதலீட்டு மானியம் 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும்.

    சிறப்பு பிரிவினரான மகளிருக்கு இத்திட்டத்தின் கீழ் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வு குழுவினால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

    எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 சதவீதம் மானியம் திட்ட மதிப்பீட்டில் வழங்கப்படும். ஆர்வமுள்ள படித்த தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.msmeonline.tn.gov.in/needs ஆகும்.

    மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும், தொலை பேசி எண் - 04362 257345, 255318. எனவே, ஆர்வமுள்ள இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    • 6592 மகளிர் சுயஉதவி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
    • 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.7.69 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி, டிச.30-

    திருச்சியில் நேற்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடரந்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நிதி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, ஒன்றியக்குழு தலைவர்கள் செம்பனார்கோயில் நந்தினி ஸ்ரீதர், குத்தாலம் மகேந்திரன், சீர்காழி கமலஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வைத்தனர். மகளிர் திட்ட இயக்குனர் பழனி வரவேற்றார்.

    விழாவில் கலெக்டர் லவிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர் செல்வம் ஆகியோர் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்கினர்.

    விழாவில் கலெக்டர் லலிதா பேசியதாவது;-

    மாவடத்தில் ஐந்து வட்டாரங்களில் 5,857 மகளிர் சுயஉதவி குழுக்களும், மயிலாடுதுறை சீர்காழி ஆகிய நகராட்சிகள், குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய நான்கு பேரூராட்சிகள் உள்ளிட்ட ஆறு நகர்புற அமைப்புகளில் 735 அளவிலான மகளிர் சுயஉதவி குழுக்கள் என மொத்தம் 6592 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களுக்கு நடப்பு நிதியாண்டில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கிட ரூ.500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    விழாவில் 652 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20.99 கோடியும், 16 ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பிற்கு ரூ.7.69 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் சுயதொழில் தொடங்கி மகளிர் சுய உதவி குழுவினர் தங்களது பொருளாதாரத்தை உய ர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வேளாண் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.
    • தருமபுரி, நீலகிரியில் நியாய விலை கடைகள் மூலம் கேழ்வரகு 2 கிலோ வீதம் வழங்க அனுமதி.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சம்பா நெல் கொள்முதல் தொடா்பான முத்தரப்புக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

    அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை கொறடா கோவி செழியன், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரை, அவர் பொருள் வாணிபாகளாக இயக்குனர் பிரபாகர், கல்யாணசுந்தரம் எம். பி . ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார்.

    இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சம்பா நெல் கொள்முதல் தொடர்பாக பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    வரும் நிதியாண்டில் போடப்படும் மூன்றாவது வேளாண் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு புதிய திட்டங்கள் அதிகமாக அறிவிக்கப்படும்.

    அடுத்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், அது தொடா்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறும். தருமபுரி, நீலகிரியில் நியாய விலைக் கடைகள் மூலம் கேழ்வரகு 2 கிலோ வீதம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது, நெல் கொள்முதலின் போது ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக விவசாயிகளிடமிருந்தும், விவசாய சங்கங்களிடமிருந்தும் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

    கடந்த முறை நடத்தப்பட்ட கூட்டத்தின் அடிப்படையில், நிகழாண்டு அனைத்து நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டு, அரைவைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    முதல்வரின் ஆலோசனையைப் பெற்று உணவுத் துறை அமைச்சா், துறை அலுவலா்கள் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்ததால், நெல் மூட்டைகள் திறந்தவெளியில் கிடக்காமல், கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டன. இவை அனைத்தும் அரைவை செய்யப்பட்டு, அரிசியாக்கப்பட்டு, நியாய விலை கடைகள் மூலம் பொதுமக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சம்பா அறுவடைக்கு தேவையான எந்திரங்கள் எந்தெந்த பகுதியில் இருக்கின்றன என்பதை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலியில் தகவல் பதிவு செய்யப்படுகிறது.

    இதே போல எந்திரத்துக்கு வாடகைத்தொகை இவ்வளவுதான் வாங்க வேண்டும் என நிர்ணயமும் செய்யப்படுகிறது. சீர்காழி பகுதியில் பலத்த மழை 32,700 ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டன.

    இதில் 33 சதவீத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு நிவாரணத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் கலெக்டர்கள் அருண் தம்பராஜ் ( நாகை), காயத்ரி கிருஷ்ணன் ( திருவாரூர்), லலிதா ( மயிலாடுதுறை ) , எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன்,, டி.கே.ஜி. நீலமேகம், கலைவாணன், அன்பழகன், அண்ணாதுரை, பன்னீர்செல்வம், ஜவாஹிருல்லா, மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவி உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்ட மகளிர் குழுக்களுக்கு ரூ.650 கோடி நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.351.97 கோடி வங்கி கடன்கள் வழங்கப்பட்டது.
    • சுய உதவிக் குழுக்களின் பயனாளிகளுக்கான மானியத்தை வங்கி கணக்கிலேயே வழங்க இணைய தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    விருதுநகர் 

    விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் பயிற்சி கருத்தரங்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்தில், வங்கி களின் பங்கு குறித்தும், வங்கிகள் நிலையான வட்டி வருமானம் மற்றும் முறையாக கடனை செலுத்து வதால் வட்டி மானியம் பெறுவதில் உள்ள தடைகள் அகற்றுவது பற்றியும், கடன் திரும்ப கிடைப்பதில் உள்ள நம்பகத் தன்மை குறித்தும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்குவதற்கான ரிசர்வ் வங்கி விதிமுறை கள் குறித்தும், வங்கியாளர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

    இனி வரும் காலங்களில் தனிநபர் மற்றும் குழுக்கடன் பெறும் சுய உதவிக் குழுக்களின் பயனாளிகளுக்கான மானியத்தை அவர்களது வங்கி கணக்கிலேயே வழங்குவதற்கான இணைய தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்ட த்தில் 2022-23-ம் நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.650 கோடி கடன் உதவிக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் தற்போது வரை ரூ.351.97 கோடி வங்கி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் அதிக தொழில்களை நம்பி இருக்கக்கூடிய மாவட்டமாக இருந்து வருகிறது. வங்கியாளர்கள் தகுதியான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2021-22-ம் ஆண்டு அதிக கடன் உதவி வழங்கிய 8 மாவட்ட அளவிலான வங்கிகளுக்கும், 10 மாவட்ட அளவிலான வங்கி கிளைகளுக்கும் பரிசுகள், பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    ×