search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளளவு"

    • மழை காலத்தில் மூட்டையில் இருக்கும் நெல் முளைத்து பயனின்றி போகிறது.
    • 58,500 மெடன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிரிடும் நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில் கொள்முதல் செய்து வைக்கப்படுகிறது.

    பெரும்பாலான இடங்களில் கூரையுடன் கூடிய கொள்முதல் மையம் இல்லாததால் விவசா யிகளிடம் கொள்முதல் செய்த நெல்லை பாதுகாக்க இடமின்றி திறந்த வெளியில் அடுக்கி வைக்கின்றனர்.

    இதனால் மழை, வெயிலில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுகின்றன. மழைக் காலத்தில் மூட்டையில் இருக்கும் நெல் முளைத்து பயனின்றி போகிறது.

    இதை தவிர்க்க திறந்த வெளி சேமிப்பு மையங்களில் கட்டாயம் கான்கீரிட் தளத்துடன் கூடிய மேற்கூரை அமைப்பது அவசியம் என விவசாய சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

    அதன் பொருட்டு அரசு, நெல்லை பாதுகாக்க கான்கீரிட் தளத்துடன் கூடிய மேற்கூரை கட்ட ரூ.35.205 கோடியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிள்ளையார்பட்டியில் 50,000 மெ.டன், சென்னம்பட்டியில் 2,500 மெடன் மற்றும் பட்டுக்கோட்டை தாலுகா, திட்டக்குடியில் 6,000 மெடன் என மொத்தமாக 58,500 மெடன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் முதற்கட்டமாக தஞ்சை பிள்ளையார்பட்டியில் 31000 மெ.டன் (31 x 1000 மெ.டன்) கொள்ளளவில் 31 எண்ணங்கள் கான்கீரிட் தளத்துடன் கூடிய மேற்கூரையை திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து பிள்ளையார்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல முதுநிலை மேலாளர் உமா மகேஸ்வரி, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தாசில்தார் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழலகம் கட்டிடம்.
    • 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரம் ஊராட்சி மற்றும் காரையூர் ஊராட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகங்களை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    அதுபோல் உத்தமசோழபுரம் ஊராட்சி, பூதங்குடி மற்றும் திட்டச்சேரி பேரூராட்சி, மரைக்கான்சாவடி பகுதியில் தலா ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் திறந்து வைத்தார்.

    இதில், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன், திட்டச்சேரி சுல்தான், ஊராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் காசிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறு மருதூர் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
    • இதையடுத்த வையாபுரிபட்டி, சிறுமருதூர், மேட்டுப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து மலர் தூவி வழிபட்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிறுமருதூர் கண்மாய் உள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் பொதுப்பணித்துறை சார்பில்சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பெய்து வந்த கனமழையின் காரணமாக கண்மாயின் நீர்வரத்து அதிகமாகி முழு கொள்ளளவை எட்டியது. தற்போது கண்மாய் நிரம்பி மாறுகால் பாய்கிறது.

    இதையடுத்த வையாபுரிபட்டி, சிறுமருதூர், மேட்டுப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து மலர் தூவி வழிபட்டனர். கண்மாய் நிரம்பியதால் இந்த ஆண்டு விவசாயம் நல்ல முறையில் நடக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • அமராவதி ஆறு அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளை ஆதாரமாக கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது.

    அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக அமராவதி நிரம்பியது. சூழ்நிலைக்கு ஏற்ப உபரிநீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அணை அதன் முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நீர் வரத்து அதிகரித்தால் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக கூடுதலாக உபரி நீர் திறப்பதற்கு உண்டான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கை வைத்தால் அதன் பெயரில் கருத்துரு தயாரித்து அனுப்பப்பட்டு தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றைய நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.46 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 676 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 483 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • முடிகொண்டான் பகுதியில் ரூ.7 கோடியே 68 லட்சம் மதிப்பில் 7 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது.
    • நெல்லை திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து செல்லாமல் நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் எண்கண் பகுதியிலுள்ள வெட்டாறு கதவணை, எண்கண் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் கிடாரங்கொண்டான் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் நெல் 103 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ரூ.238.07 கோடியில் சுமார் 2 லட்சத்து 86 ஆயிரத்து 350 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள புதுக்குடியில் ரூ.4 கோடியே 69 லட்சம் மதிப்பில் 4500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும், முடிகொண்டான் பகுதியில் ரூ.7 கோடியே 68 லட்சம் மதிப்பில் 7 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும்.

    திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ரூ.4 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் 7250 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும் என ரூ.16 கோடியே 75 லட்சம் மதிப்பில் 18,750 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது. மதுரை மாவட்டம் கப்பலூரில் 18 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்ட முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருமங்கலத்தில் 3500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்டவும் அனுமதி அளித்துள்ளார். தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்காக தமிழக அரசு செலுத்த வேண்டிய காப்பீட்டுத்தொகையான ரூ.2 ஆயிரத்து 57 கோடி நிதியினை விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நெல்லை திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து செல்லாமல் நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • கனமழையால் புதிய கட்டளை மேட்டு கால்வாய் பாசன பகுதி ஏரிகளில் ஓரளவு தண்ணீர் நிரம்பியுள்ளது.
    • பூதலூர் ஒன்றிய விவசாயிகள் சிரமமின்றி ஒருபோக சாகுபடி செய்ய பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் ஒன்றியத்தில் செங்கிப்பட்டி பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய் வழியாக தண்ணீர் பெற்று 100-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரப்பி அதன் மூலம் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு போக சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்திற்குகாக மேட்டூர் அணை கடந்த மே 24-ந் தேதி திறக்கப்பட்ட நிலையில் புதிய கட்டளை மேட்டு கால்வாயில் அதன் தலைப்பு உள்ள கரூர் மாவட்டம், மாயனூரில் இருந்து தண்ணீர் கடந்த ஜூலை 16-ந் தேதி திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் கரூர், திருச்சி மாவட்டங்களை கடந்து தஞ்சை மாவட்ட த்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருச்சி மாவட்டம் அசூர் அருகில் கட்டளை கால்வாய் உடைப்பு ஏற்பட்டதால், அதனை அடைப்பதற்காக மாயனூரில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாக தெரியவருகிறது.

    இது போன்ற சூழ்நிலையில் பூதலூர் ஒன்றியத்தில் அவ்வப்போது கொட்டி தீர்க்கும் கனமழையால் புதிய கட்டளை மேட்டு கால்வாய் பாசன பகுதி ஏரிகளில் ஓரளவு தண்ணீர் நிரம்பியுள்ளது. புதிய கட்டளை மேட்டு கால்வாயின் கடைமடை ஏரியாக உள்ள பூதலூர் ஒன்றியம் செல்லப்பன்பேட்டை பெத்தமாதுரான் ஏரியில் முழு கொள்ளளவும் நிரம்பி கடல் போல காட்சியளித்து கொண்டிருக்கிறது. இதனால் திருச்சி மாவட்ட த்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை அடைத்து பொய்கைகுடி ஏரியை நிரப்பி பூதலூர் ஒன்றிய பகுதி பாசனத்திற்காக புதிய கட்டளை மேட்டு கால்வாயில் முழு கொள்ளளவில் தண்ணீரை திறந்து விட்டு அனைத்து ஏரிகளையும் நிரப்பி, பூதலூர் ஒன்றிய விவசாயிகள் சிரமமின்றி ஒருபோக சாகுபடி செய்ய பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    ×