என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஓய்வூதியர்"
- ஓய்வூதியர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் ஆயுள்சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- தொழிலாளர் நல உதவி ஆணையர் அறிவித்தார்.
விருதுநகர்
தொழிலாளர் நல உதவிஆணையர் காளிதாஸ் (சமூக பாதுகாப்பு திட்டம்) கூறியதாவது:-
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம் முதலான 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் 60 வயது முடிவடைந்த உறுப்பினர்களுக்கு விருதுநகர் தொழிலாளர் நல உதவி ஆணைய (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணைய (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்திற்கு வருகை தந்து ஆயுள்சான்று சமர்ப்பிக்கின்றனர். தற்போது ஓய்வூதியர்களின் சிரமத்தினை தவிர்க்கும் பொருட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் இணையதளத்தில் ஓய்வூதியர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் முதலான 18 அமைப்பு சாரா நல வாரியங்களில் விருதுநகர் தொழிலாளர் உதவிஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தின் மூலம் ஏற்கனவே மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள், ஆதார் எண், குடும்ப அட்டை, ஓய்வூதிய ஒப்படைப்பு கணக்குஎண் மற்றும் நேரடி புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.
தொழிலாளர் நல வாரிய பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து ஓய்வூதிய ஆணை இல்லாதவர்கள் இணையதளம் முகவரியில் ஓய்வூதியதாரரின் ஓய்வூதிய விண்ணப்ப எண் மற்றும் தொழிலாளர் நல வாரிய பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து ஓய்வூதிய ஆணையினை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஓய்வூதிய விண்ணப்ப எண் தெரியாத ஓய்வூதிய தாரர்கள் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய இணையதளத்தின் முகப்பில் இருக்கும் விண்ணப்பத்தின் எண்கள் அறிய என்ற வசதியை பயன்படுத்தி பதிவு செய்த தொலைபேசி எண் உள்ளீடு செய்தும் அல்லது பயனாளியின் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்தும் ஓய்வூதிய விண்ணப்ப எண்ணை அறிந்து கொள்ளலாம்.
ஆயுள் சான்று அளித்த ஓய்வூதியர்களுக்கு மட்டுமே தொடர்ந்து ஓய்வூதியம் அனுமதிக்கப்படும் என்பதால் இதுவரை ஆயுள்சான்று சமர்ப்பிக்காத 790 ஓய்வூதியதாரர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் இணையதளம் வழியாக ஆயுள் சான்றினை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். மேற்படி ஓய்வூதிய தாரிடமிருந்து ஆயுள் சான்றை அலுவலகத்தில் நேரில் பெற இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆலங்குடியில் ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது
- குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க தீர்மானம்
புதுக்கோட்டை:
ஆலங்குடியில் ஓய்வூதியர் தின விழா கிளை அலுவலகத்தில் நடை பெற்றது.கிளை தலைவரும், மாவட்ட செயலாளாருமா,சிதம்பரம், தலைமையில் நடைபெற்றது.மாவட்ட, பிராச்சார செயலாளர். கலியபெருமாள். மாநில செயற்குழு உறுப்பினர் உத்தமநாதன், வட்ட கிளை செயாளாலர், சிவானந்தம், பொருளாலர் அரங்குளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில்1.7.2022 முதல் மத்திய அரசு அலுவலர்களுக்கு வழங் கிய அகவிலைப்படியினை உடனடியாக வழங்கிவும், நிலுவையில் உள்ள குடும்ப பாதுகாப்பு நிதியினை கால தாமதமின்றி வழங்கிட வேண்டிம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இவ்விழாவில், ஓய்வூதியம், சட்டபூர்வமாக (17.12.1982) ல் வாங்கி கொ டுத்த, டிஎஸ் நகரா அவர்களையும் மற்றும் ஓய்வூதியம் சங்க நிறுவ னத் தலைவர் நாராயணராவ், (லேட்) அவர்களின் படத்திற்கு மலர்தூ வி அஞ்சலி செலுத்தப்பட்டது.
- ஓய்வுபெறும் நாளில் ஊரக வளர்ச்சி- ஊராட்சித்துறை பணிநீக்கத்தை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஊராட்சி செயலாளர் பணிக்காலத்தில் 50 சதவீதம் ஓய்வூதிய கணக்கிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மதுரை
மதுரை மாவட்ட ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் அண்ணா பஸ் நிலையம் மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்்ப்பாட்டம் நடந்தது.
ஓய்வூதியர்கள் மீதான நிலுவை ஒழுங்கு நடவ டிக்கைகளின் மீது தாமத மின்றி விசாரணை நடத்தி நிர்ணயித்துள்ள கால வரையறைக்குள் முடிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும்.
ஓய்வூதியர் குறை தீர்வு கூட்டத்தை மாநில, மாவட்ட அளவில் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தி நிலுவை இனங்களை தீர்வு காண வேண்டும். ஊராட்சி செயலாளர் பணிக்காலத்தில் 50 சதவீதம் ஓய்வூதிய கணக்கிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஓய்வு பெற்றோர்-ஓய்வு பெற உள்ளவர்களுக்கான தணிக்கைத்தடை கூட்டமர்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில, மாவட்ட நிர்வாகிகள் கிருபாகரன் சக்திராஜ், ஜெயராமன், சொக்கலிங்கம், தினகரசாமி, ஜெயசீலன், ராஜேந்திரன், கோமதி, பரமேசுவரன், அனைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பால்முருகன், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் பேசினர்.
அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் நிறைவு ரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.
- அஞ்சல் துறையில் ஆட்கள் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உரிய இடம் ஒதுக்கப்படுவது இல்லை.
- பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளவர்களுக்கு இன்னும் பணிக்கொடை வழங்கப்படவில்லை.
திருப்பூர் :
அனைத்திந்திய அஞ்சல் ஆர். எம். எஸ். ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 5- வது மாநில மாநில மாநாடு திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.தேசியக்கொடியை வரவேற்புக் குழுத் தலைவர் எஸ். கார்த்திக்கேயன், மாநிலத் தலைவர் எம். கண்ணையன் ஆகியோர் ஏற்றினர். சங்ககொடியை மாநிலத்துணைத்தலைவர் எஸ். ரெங்கசாமி ஏற்றினார். மாநாட்டுக்கு மாநிலத்தலைவர் எம். கண்ணையன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் வரவேற்று பேசினார். அஞ்சலி தீர்மானத்தை கணேசன் வாசித்தார்.
மாநாட்டு துவக்கவுரை நிகழ்த்திய சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் பேசுகையில் ,மத்திய அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பென்சன் திட்டத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வந்து மத்திய அரசு சீர்குலைக்கப் பார்க்கிறது. தற்போது அஞ்சல் துறையில் ஆட்கள் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உரிய இடம் ஒதுக்கப்படுவது இல்லை. வட இந்தியர்கள் பெருமளவில் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது நிரந்தர பணியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளவர்களுக்கு இன்னும் பணிக்கொடை வழங்கப்படவில்லை. அதனை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். அதனை பிடித்தம் செய்து வைத்துக்கொள்ள கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு விருந்தினராக சுமிதா அயோத்யா கலந்து கொண்டார். அனைத்திந்திய பொதுச்செயலர் ராகவேந்திரன் சிறப்புரை ஆற்றினார். சுரேஷ், மோகன்ராவ், ராஜசேகர், பழனிவேல், சுப்பிரமணி, சண்முகசுந்தரராஜ், நடராஜன், ரெங்கசாமி ஆகிய மாநில நிர்வாகிகள் பேசினர். ஈராண்டு அறிக்கையை மோகன் வாசித்தார். தணிக்கையை குமார் சமர்ப்பித்தார்.இன்று நடைபெறும் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
- திருப்பூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
- மாநகராட்சி மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் மேற்காணும் கூட்டத்தில் விண்ணப்பம் அளிக்க இயலாது என தெரிவிக்கப்படுகின்றது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசியர்களுக்கான ஒய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டமானது திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் 24.11.2022 அன்று முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் ஓய்வூதிய இயக்குநர் ,சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதிய மற்றும் இதர ஓய்வூதிய பணப்பலன்கள் இதுநாள் வரையில் தங்களுக்கு கிடைக்கப்பெறாமல் இருப்பின், பணியாற்றிய துறை மற்றும் எந்த அலுவலர் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிட்டுள்ள தங்களது மனுவினை இரண்டு பிரதிகளில் மாவட்ட கலெக்டர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், பல்லடம் சாலை, திருப்பூர் 641601 என்ற முகவரிக்கு 15.11.2022 அன்று மாலைக்குள் கிடைக்கும்படியாக நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம். மாநகராட்சி மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் மேற்காணும் கூட்டத்தில் விண்ணப்பம் அளிக்க இயலாது என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஓய்வூதியதாரர் அவர்தம் கோரிக்கைகளை சங்க கடிதம் மூலம் அல்லாமல் நேரடியாக விண்ணப்பம் அளிக்க வேண்டும் என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்கும் வகையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும்
- நிலுவை தொகையை முடக்காமல் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் :
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்கும் வகையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும். நிலுவை தொகையை முடக்காமல் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஐவின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் சுகுமாரன், மாவட்ட பொருளாளர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்:
சேலம் மேற்கு தபால் கோட்டத்தின் சார்பாக ஓய்வூதியம் பெறுவோர்க்கான குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந்தேதி மாலை 3 மணிக்கு சூரமங்கலம் தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள சேலம் மேற்கு தபால் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அது சமயம் ஓய்வூதியம் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் குறைகள் பற்றிய கலந்தாய்வு கோட்ட கண்காணிப்பாளர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சேலம் மேற்கு தபால் கோட்டத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு சேலம் மேற்கு தபால் கோட்ட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாழப்பாடி:
சேலம் மண்டல மின்வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் வாழப்பாடி கிளை பொது உறுப்பினர் பேரவை கூட்டம் வாழப்பாடி அரசினர் மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, கிளை தலைவர் வடிவேலு தலைமை வகித்தார். ராமலிங்கம் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் குமார் முன்னிலை வகித்தார். பாலசுப்பிரமணியன் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் சுகந்தவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில நிர்வாகிகள் முத்துசாமி, கோபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், மூத்த உறுப்பினர்கள், 70 முதல் 90 வயது நிரம்பியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். உதவித்தொகை ரூ.1.50 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி மருத்துவ செலவுகளை ஓய்வூதியர்க்கு தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும்.
மாதந்திர மருத்துவப்படி ரூ.300 லிருந்து மத்திய அரசில் வழங்கப்படுவதை போல் ரூ.1000 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக, சையத் யாசின் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்