search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அச்சுறுத்தல்"

    • 42 ஆண்டுகளாக நடந்து வரும் மதம் பிரச்சினை சார்ந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
    • தான் விரும்பி செய்த நீதிபதி பதவியை விட்டு விலகுவதாக அவர் தெரிவித்தார்.

    முல்லைத்தீவு:

    இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தவர் சரவணராஜா. இலங்கை தமிழரான இவர் மிகவும் சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை, விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர் தீலிபன் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்தார்.

    சமீபத்தில் 42 ஆண்டுகளாக நடந்து வரும் மதம் பிரச்சினை சார்ந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

    இந்த தீர்ப்புக்கு பிறகு அவருக்கு பல வகைகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்குமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. மேலும் மிரட்டல்களும் வந்தது.

    இதையடுத்து நீதிபதி சரவணராஜா தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், மன அழுத்தம் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதி பொறுப்புகள் அனைத்தையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். தான் விரும்பி செய்த நீதிபதி பதவியை விட்டு விலகுவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் நிதிச்சேவை ஆணைக்குழு செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து நீதிபதி சரவணராஜா இலங்கையை விட்டு வெளியேறி தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக உயிருக்கு பயந்து நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • பொதுமக்களை அச்சுறுத்தி ஆபாச வார்த்தைகளால் பொது இடத்தில் நின்று கொண்டு ஒருவர் பேசிவந்தார்.
    • அவர் இதனை மீறியும் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தவே அந்த நபரை கைது செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவில் தெருவில் பொதுமக்களை அச்சுறுத்தி ஆபாச வார்த்தைகளால் பொது இடத்தில் நின்று கொண்டு ஒருவர் பேசிவந்தார். தகவல் அறிந்து சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்தில் இருந்த நபருக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்..

    அவர் இதனை மீறியும் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தவே அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அதே பகுதியில் உள்ள நடராஜன் (வயது 42) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • வணிகர்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு வகையில் தொல்லைகள் நடக்கிறது.
    • முக்கிய இடங்களில் கேமராக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட காவல் நிலைய போன் நம்பரை வைத்திருக்க வேண்டும்.

    வல்லம்:

    தஞ்சை மாவட்ட அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் சுப்பு என்கிற சுப்பிரமணியன் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரிக்கை மனு அளித்தனர்.

    பின்னர் இது பற்றி மாவட்ட தலைவர் சுப்பு என்கிற சுப்பிரமணியன் கூறியதாவது ;-

    ஜி.எஸ்.டி. வரி வருவதற்கு முன்னர் பொருட்கள் அனைத்தும் கடைகளுக்கு விற்பனைக்கு வந்தது.

    தற்போது பொருளாதார நெருக்கடியால் கடைகளே விற்பனையாகி வருகிறது. வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் வணிகர்கள் மீண்டும் சற்று தலைதூக்கி வியாபாரம் செய்து வருகிறோம்.

    தற்போது வணிகர்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு வகையில் தொல்லைகள் வந்து கொண்டுள்ளது.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட தஞ்சை கரந்தை பகுதியில் சமூக விரோதிகளால் வணிகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

    தற்போது சிலர் ஆயுதபூஜை அன்று பல இடங்களில் கடைகளுக்கு வந்து மிரட்டி மாமூல் கேட்டு வாங்கி சென்றுள்ளனர்.

    சில திருநங்கைகள் கடையில் வாசலில் நின்றும், கடைக்குள் வந்தும் அநாகரிகமாக நடந்து கொண்டனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

    அதேபோல் சில சமூக விரோதிகளும் மிரட்டி பணம் கேட்டனர். தற்போது இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது.

    அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வரவுள்ளது.

    தீபாவளி பண்டிகை நேரத்திலும் இவர்களால் மாமூல் தொல்லை ஏற்படும்.

    மாமூல் கேட்டு வணிகர்கள் மிரட்ட படும் அபாயம் உள்ளது.

    அது போன்ற சூழலில் வணிகர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.

    இது தொடர்பாக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளோம்.

    சங்கம் சார்பாகவும் தஞ்சை, பட்டுக்கோட்டை, உள்ளிட்ட அந்தந்த ஊர்களில் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம்.

    வணிகர்கள் மிரட்டப்பட்டால் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    கடைகள் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும்.

    அதேபோல் அனைவரும் அந்தந்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய போன் நம்பரை வைத்திருக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று உதவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட‌ செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் பாஸ்கரன், ஊடக தொடர்பாளர் இராம.சந்திரசேகரன், மாவட்ட இணை செயலாளர் முருகையன், மாவட்ட கூடுதல் செயலாளர் தாமரை செல்வன், தியாக சுந்தரமூர்த்தி, மணிகண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×