என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலங்காரம்"

    • குடமுழுக்கு முடிந்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.
    • முன்னதாக நவசக்தி அர்ச்சனை, அனுக்ஞை, சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கை ஊராட்சி திருவளர் மங்கலத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் குடமுழுக்கு நடைபெற்றது.

    குடமுழுக்கு முடிந்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.

    நிறைவு நாளான நேற்று மண்டல அபிஷேக பூர்த்தி நவசக்தி அர்ச்சனை மற்றும் மகா சண்டியாக பெருவிழா நடைபெற்றது.

    முன்னதாக நவசக்தி அர்ச்சனை, அனுக்ஞை, சந்தன காப்பு அலங்காரம், விக்னேஸ்வர பூஜை, கோ தனம், மண்டப பலி, மகாபூர்ணஹீதி, தீபாரதனை நடைபெற்றது.

    தொடர்ந்து பைரவர் பலி தானங்கள், சுவாசினி, வடுக பூஜை, பட்டுப்புடவை ஹோமம், மகாபூர்ணஹீதி, தீபாராதனை, கலசாபிஷேகம், தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • தங்க கொடிமரம் அருகே சிவபெருமானிடம் தங்கவேல் வாங்கி கோவிலை வலம் வந்தார்.
    • சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் ஐதீக நிகழ்வு.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகியவைத்திய நாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 25ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது.

    தொடர்ந்து வள்ளி தெய்வானை உடனாகிய செல்வ முத்துக்குமா ரசாமிக்கு நாள்தோறும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தன.

    விழாவில் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது. முன்னதாக சிறப்புவழி பாட்டுக்கு பின் நவரத்தின அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெ ருமான் கோவில் தங்க கொடிமரம் அருகே சிவபெருமானிடம் தங்கவேல் வாங்கி கோவிலை வலம் வந்து மேற்கு கோபு வாசல் வழியாக சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார்.

    சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் ஐதீக நிகழ்வு சிவாச்சாரி யார்களால் தருமபுரம் ஆதீனம் 27-வதுகுருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகள் முன்னி லையில் நடைபெற்றது.

    இதில் வைத்தீஸ்வரன் கோயில் கட்டளைதிருநா வுக்கரசு தம்பிரான் சுவா மிகள், ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராம.சேயோன், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, திமுக பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், சேவாதள காங்கிரஸ் மாநில செயலாளர் பால. எழிலரசன், மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.
    • சுப்பிரமணியர் மற்றும் சூரபத்மன் ஆகியோர் வீதியுலா வந்து, சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

    திருவையாறு:

    தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தனிச் சன்னிதி கொண்டுள்ள சுப்பிரமணிய சுவாமி சூரசம்ஹார விழா நேற்றிரவு நடந்தது.

    இதனை முன்னிட்டு சுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பின்னர் அம்பாளிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து சுப்பிரமணியர் சுவாமி மற்றும் சூரபத்மன் ஆகியோர் வீதி உலா வந்து, கீழவீதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

    புஷ்யமண்டபத்துறை பாலமுருகன் சுவாமி மற்றும் சூரபத்மன் ஆகியோர் நேற்று மாலை வீதிஉலா வந்து வடக்கு மடவிளாகத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.
    • மூவரையும் பொன்னூஞ்சலில் எழுந்தருள செய்து, ஊஞ்சல் பாடல்கள் பாடப்பட்டன.

    திருவையாறு:

    தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தனிச் சன்னிதி கொண்டுள்ள சுப்பிரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்றிரவு நடந்தது.

    நேற்று முன்தினம் சூரசம்ஹார விழா நடந்ததைத் தொடந்து நேற்றிரவு சுப்பிரமணியருக்கு வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோருடன் கல்யாண உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று சுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.

    இதனைத் தொட.ர்ந்து சன்னிதியில் அலங்கரிக்கப்பட்ட மணவறையில் சுப்பிரமணியர் சுவாமியின் இருபக்கமும் வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய இருவரையும் மணக்கோலத்தில் எழுந்தருளச் செய்து, ஹோமங்கள் வளர்த்து, மூலிகைகள், தானியங்கள், பழம், பட்டு வஸ்திரம் முதலிய ஆகுதிகள் சமர்ப்பித்து, வேதபாராயணம் முதலிய மந்திரங்கள் பாடி, இரு மணமகள்களுக்கும் மங்கல நாண் பூட்டி சுப்பிரமணியர் சுவாமிக்கு திருமணம் செய்விக்கப்ட்டது. பின்னர் மூவரையும் பொன்னூஞ்சலில் எழுந்தருளச் செய்து, ஊஞ்சல் பாடல்கள் பாடப்பட்டன.

    இத்திருமண வைபவத்தைக் கண்டு அருள்பெற்ற ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கும் அறுசுவை விருந்துடன் கல்யாண சாப்பாடு போடப்பட்டது. ஏற்பாடுகளை ஐயாறப்பர் கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.

    • புனிதநீர் அடங்கிய சங்குகளில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளத்தாளத்துடன் கோவிலை வலம் வந்தது.
    • வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.

    யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய சங்குகளில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளத்தாளத்துடன் கோவில் உட்பிரகாரத்தில் சுற்றி வலம் வந்து. பின்னர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வண்ண வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் வீதி உலா புறப்பாடு காட்சி நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சங்குகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம்.
    • மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரணேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை ஒட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.

    இதனை அடுத்து வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மந்திரங்கள் முழங்கிட அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 1008 சங்குகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

    இதில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் பேஸ்கர் திருஞானம், உபயதாரர் ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, கோவில் மேலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வடக்கே காசியிலும், தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார்.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பைரவர் கோவில் உள்ளது. வடக்கே காசியிலும், தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார்.

    மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் பைரவரின் அவதார திருநாளையொட்டி நேற்று பைரவருக்கு பால், இளநீர், திருநீறு, நெய், தேன், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின், பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    முன்னதாக கோவிலின் எதிரே உள்ள மகா மண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இந்த ஆண்டு முக்கோடி தெப்பத்திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 8-ம் நாள் விழாவான வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பு விழா.

    சுவாமிமலை, டிச.30-

    108 திவ்ய தேசங்களில் 20-வது தலமாக விளங்குவது நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுக்கு இருமுறை பங்குனி பெருவிழா மற்றும் முக்கோடி தெப்ப திருவிழாவின் போது கல்கருட சேவை நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு முக்கோடி தெப்பத்திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் பெருமாள்- தாயார் வீதியுலா நடைபெறும். 4-ம் நாள் விழாவான நேற்று கல்கருடசேவை நடந்தது.

    மாலை கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து, இரவு கருடபகவான் மீது பெருமாளும், அன்னபட்சி வாகனத்தில் தாயாரும் சன்னதிக்குள் சென்றனர்.

    இதையடுத்து 8-ம் நாள் விழாவான வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பும், ஜன.3-ம் தேதி தெப்பத்திருவிழாவும், ஜன.5-ம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    • 108 வைணவ தலங்களுள் 19-வது தலமாக விளங்குகிறது.
    • மூலவா் பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசித் திருவிழா பரமபத வாசல் திறப்பு உத்ஸவம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

    ஆழ்வாா்களால் பாடல்பெற்ற 108 வைணவத் தலங்களுள் 19 ஆவது தலமாக விளங்குகிறது நாகை அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் கோயில். இக்கோயிலில், திரு அத்யயன வைகுந்த ஏகாதசித் திருவிழா கடந்த 23 ஆம் தேதி, பகல் பத்து உத்ஸவத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.

    வைகுந்த ஏகாதசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரபத வாசல் திறப்பு உத்ஸவம் இன்று காலை நடைபெற்றது. காலை 4 மணிக்கு மூலவா் சேவை நடைபெற்றது.

    இதைத் தொடா்ந்து, மூலவா் பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது.

    பிறகு, ஐதீக முறைப்படி நடைபெற்ற வழிபாடுகளின் நிறைவில், அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் (உத்ஸவா்) ரத்ன அங்கி அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமதேராக புறப்பாடாகி, வேத மந்திரங்களுடன், மங்கள வாத்தியங்களும் முழங்க, காலை 5.30 மணிக்கு பரமபத வாசல் வழியே எழுந்தருளினாா்.

    அப்போது, கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கங்களை எழுப்பியவாறு பக்தா்கள், பெருமாளை பின்தொடா்ந்து பரமபத வாசல் வழியே வெளியே வந்து, சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.

    • சாமி– அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது.
    • சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பிரசன்ன வெங்கடேச பெருமாள் கடந்தார்.

    தஞ்சாவூர்:

    மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11-வது நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடப்படுகிறது.

    வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாக கருதும் வைகுண்டத்தின் கதவுகள் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். அன்றைய தினம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா இன்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு தஞ்சையில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று அதிகாலை நடந்தது.

    அதன்படி தஞ்சை நாலுகால் மண்டபம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அதிகாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

    இதையொட்டி சுவாமி–அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பிரசன்ன வெங்கடேச பெருமாள் கடந்தார். பின்னர் பெருமாளுக்கு தீபாரா தனையும் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து பக்தர்களும் சொர்க்க வாசலை கடந்து வந்தனர்.இதில் கவுன்சிலர் மேத்தா, முன்னாள் கவுன்சிலர் சாமிநாதன், பிரதிநிதிகள் சிங்காரவேலன், பலராமன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதேபோல தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலை விசேஷ திருமஞ்சன சேவையும், தீபாராதனையும் நடைபெற்றது. அதை த்தொடர்ந்து பெருமாள் சொர்க்கவாசலை கடந்து வசந்த மண்டபத்தை அடைந்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல வெண்ணாற்றங்கரையில் உள்ள மாமணிக்கோவில், தெற்குவீதியில் உள்ள கலியுக வெங்கடேசபெருமாள் கோவில், கீழவீதியில் உள்ள வரதராஜபெருமாள் கோவில் உள்பட தஞ்சையில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் இக்கோவிலில் தனியாக சொர்க்கவாசல் கிடையாது.
    • நிகழ்ச்சியில் சாரநாத பெருமாள் பரமபதவாசல் வழியாக வந்தார்.

    கும்பகோணம்:

    வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த 3-வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோவிலின் உள் பிரகாரத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது.

    பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் இந்த கோவிலில் தனியாக சொர்க்கவாசல் கிடையாது.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    மூலவர் மற்றும் உற்சவர் சன்னதிகளில் கோமளவல்லி தாயார், ஆராவமுதன் பெருமாளை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து தரிசித்தனர்.

    இது போல் கும்பகோ ணம் அருகே உள்ள திருச்சேறையில் சாரநாயகி சாரநாத பெருமாள் கோவில் உள்ளது.

    108 வைணவ தலங்களில் 12-வது தலமாக போற்றப்படும் இந்த கோவில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக பரமபத வாசல் உள்ள சிறப்பு பெற்ற ஸ்தலம். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாரநாத பெருமாள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    அப்போது வேத மந்திரங்கள் முழங்க ஆராதனைகள் நடைபெற்றது.பின்னர் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் சாரநாத பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்தார்.

    விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கி ழமையன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இது தவிர கட்டளைதாரர்கள் மூலம் தினசரி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் வரை பனிக்காலத்தில் வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டின் (2023) முதல் வெண்ணைக்காப்பு அலங்காரம் நேற்று நடந்தது.

    120 கிலோ வெண்ணை கொண்டு, சுவாமியின் உடல் முழுவதும் பூசி, பல வண்ணங்களால் அலங்காரம் செய்தனர். 3 மணி நேரத்துக்கு மேலாக ஆஞ்சநேயருக்கு இந்த அலங்காரம் நடைபெற்றது. அலங்காரம் முடிந்த பின்னர் திரை விலக்கப்பட்டு சுவாமிக்குத் தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வெண்ணெய் காப்பு அலங்காரம் புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக் கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜனவரி 8-ந்தேதி) தினந்தோறும் இரவு 7 மணிக்கு மேல் கட்டளைத்தாரர்களால் செய்யப்படுகிறது.

    ×