search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்திருப்பேரை"

    • தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன் தலைமையில் முருகன் என்பவருக்கும், வினிதா என்பவருக்கும் இலவச திருமணம் நடைபெற்றது.
    • மணமக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான திருமாங்கல்யம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கோவில் சார்பாக வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மணமக்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோவிலில் நேற்று தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில், குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவில் நிதி மூலம் நாங்குநேரி வட்டம் கீழ அரியகுளத்தை சேர்ந்த மணமகன் முருகன் என்பவருக்கும், ஆழ்வார்திருநகரி பத்தவாசலை சேர்ந்த மணமகள் வினிதா என்பவருக்கும் இலவச திருமணம் நடைபெற்றது. மணமக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான திருமாங்கல்யம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கோவில் சார்பாக வழங்கப்பட்டது.

    • ராஜபதி டி.எல்.லெட்சுமண பெருமாள் கல்வி மற்றும் ஆன்மீக அறக்கட்டளை தலைவர் தங்கவேல் பூபதி தலைமை தாங்கினார்.
    • 10-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள்.

    தென்திருப்பேரை:

    மாவடிபண்ணை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ராஜபதி டி.எல்.லெட்சுமண பெருமாள் கல்வி மற்றும் ஆன்மீக அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் 12-ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள் பிரிய தர்ஷனி, பிரேமா மற்றும் பொன் ராதா, 10-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள் சுஜி, சுமதி, சஹானா ஆகியோர்களுக்கு பரிசுகள் மற்றும் பொன்னா டை அணிவித்து பாராட்டு கள் தெரிவிக்க ப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள்.

    நிகழ்ச்சியில் ராஜபதி டி.எல்.லெட்சுமண பெருமாள் கல்வி மற்றும் ஆன்மீக அறக்கட்டளை தலைவர் தங்கவேல் பூபதி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் விஜி முன்னிலை வகித்தார்.

    தென்திருப்பேரை சுற்று வட்டார தேவேந்திர குல வேளாளர் ஆன்மீக அறக்கட்டளையின் தலைவர் ராஜகுமார் வரவேற்றார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கிங்ஸ்லி நிகழ்ச்சி யினை ஒருங்கிணைத்தார்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், ராஜாதி பஞ்சாயத்து தலைவர் சவுந்திரராஜன், சேதுக்கு வாய்தான் பஞ்சாயத்து தலைவர் சுதா சீனிவாசன், குருகாட்டூர் பஞ்சாயத்து தலைவர் ராணி ராஜ்குமார், குரங்கணி பஞ்சாயத்து தலைவர் ஜெய முருகன், சமூக ஆர்வலர் பலவேசம், கவுன்சிலர் ஆனந்த், துர்க்கை யாண்டி, மாரியப்பன், குமார் பெருமாள், ஜெயசிங், வக்கீல் துர்க்கை ராஜா, கடம்பாகுள பாசன விவசாய சங்க உறுப்பினர் கணேசன், சுதா வீரமணி, ஆல்பர்ட் மற்றும் தென்திருப்பேரை சுற்று வட்டார ஆன்மீக அறக்க ட்டளை பொருளாளர் மாரிதுரை சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சமூக ஆர்வலர் முத்து வீர பெருமாள் நன்றி கூறினார். இவ்விழாவில் பள்ளி மாண வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆதார் சிறப்பு முகாம் காலை 10 -மாலை 4 மணி வரை நடைபெற்றது.
    • 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டை எடுக்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    இந்திய அஞ்சல் துறை, தென்திருப்பேரை பேரூராட்சி மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நல கூடத்தில் நடத்திய ஆதார் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. முகாமை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தொடங்கி வைத்தார்.

    முகாமில் புதிய ஆதார் அட்டை எடுத்தல், ஆதார் அட்டை திருத்தம், ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைப்பு, மேலும் இதுவரை ஆதார் அட்டை எடுக்காதவர்கள் புதிய ஆதார் அட்டை எடுக்கவும், 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டை எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் அமிர்த வள்ளி, கவுன்சிலர்கள் ஆனந்த், சண்முக சுந்தரம், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை பொன்னுசாமி, இசக்கி, துரைராஜ், பேரூராட்சி இளநிலை உதவியாளர் சேக் அகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அய்யப்பனின் ரதம் தமிழ்நாடு முழுவதும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் தேங்காய் உடைத்து அய்யப்பனை வழிபட்டனர்.

    தென்திருப்பேரை:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைசாற்றும் முன் ஹரிவரா சனம் பாடல் பாடப்படுவது வழக்கம். இந்த பாடலை இயற்றி 100 ஆண்டுகள் நிறைவடைந்தை முன்னிட்டு அய்யப்ப சேவா சமாஜம் சார்பில் அய்யப்பனின் ரதம் தமிழ்நாடு முழுவதும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை தென்திருப்பேரைக்கு வந்த அய்யப்ப ரததிற்கு பா.ஜ.க. ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் தேங்காய் உடைத்தும். அபிஷேக பொருட்கள் வழங்கியும் அய்யப்பனை வழி பட்டனர். நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரிதுரைசாமி, பிரசார பிரிவு மண்டல் தலைவர் ஆட்டோ சுப்பிர மணியன், கூட்டுறவு பிரிவு மண்டல் தலைவர் ஜெயசிங், அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு திரவியம், வக்கீல் பிரிவு தலைவர் கண்ணன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட் டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோவில்களில் 7-வது தலமாகவும், 108 திவ்ய தேசங்களில் 53-வது தலமாகவும், சுக்கிரன் தலமாகவும் அமையப் பெற்றது தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் ஆகும்.

    தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் மீன் வடிவ காதணி அணிந்த ஸ்ரீமகர நெடுங்குழைக்காதன், குழைக்காதர் நாச்சியார், திருப்பேரை நாச்சியாருடன் தென்திருப்பேரையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    கொடியேற்றம்

    ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருவிழா இந்த ஆண்டு இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தென்திருப் பேரை வீதிகளில் கொடி பட்டம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    மூலஸ்தானத்திலிருந்து கைத்தல சேவையாக உற்சவர் ஸ்ரீநிகரில் முகில் வண்ணன் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதை தொடர்ந்து கொடி மரத்தில் அமைந்துள்ள கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    பின்னர் கொடி பட்டத்திற்கு மாலை மரியாதை செய்து கற்பூர ஆரத்தி எடுத்து கொடி மரத்தில் கொடி பட்டத்தை அர்ச்சகர் காலை 7.15 மணிக்கு ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை 7 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீரிதேவி, பூதேவி நாச்சி யார்களுடன் வீதி புறப்பாடும் மாலையில் பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம், யானை வாகனத்தில் முக்கிய மாட வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    கருடசேவை

    9-ந்தேதி இரவு 9.30 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சியும், அன்ன வாகன நிகழ்ச்சியும், 10-ந்தேதி யானை வாகனத்திலும்,

    11-ந்தேதி மாலை 5 மணிக்கு இந்திர விமானத்தில் பக்தர் களுக்கு காட்சி அளிக்கிறார்.

    12-ந் தேதி காலை உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளி புறையூர் ஆணையப்ப பிள்ளை சத்திரம் வீதி புறப்பாடு நடக்கிறது.

    தேரோட்டம்

    13-ந்தேதி காலை 8 மணிக்கு மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளல், அதை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    14-ந்தேதி காலை 8 மணிக்கு தாமிர பரணி நதியில் தீர்த்த வாரியும், அதைதொடர்ந்து பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக் கோலமும், வெற்றிவேர் சப்பரம் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தக்கார் அஜீத் மற்றும் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன் கைங்கர்ய சபா நிர்வாகிகள், சீனி வாசன் சேவைகள் அறக் கட்டளை முருகன், சடகோபன், பா.ஜனதா மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரி துரைசாமி, பேரூராட்சி பா.ஜனதா கவுன்சிலர்கள் குமரேசன், ரேவதி, ராஜப்பா வெங்கடாச்சாரி, வள்ளியூர் குழைக்காதர் குடும்பத்தினர், மற்றும் ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டனர்.

    • ஆழ்வார்திருநகரியில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
    • நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை யடுத்து தென்திருப்பேரை மற்றும் ஆழ்வார்திருநகரியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி யும் கொண்டாடினர்.

    தென்திருப்பேரை

    தென்திருப்பேரை மெயின் ரோடு கால்நடை மருத்துவ மனை அருகில் நகர செயலாளர் ஆறுமுகநயினார் தலைமையில் ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் முன்னிலையில் பட்டாசு வெடித்து லட்டு வழங்கி கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் சடகோபன், வார்டு செயலாளர்கள் மாரியப்பன், பிரேம்ஆனந்த், சந்துரு, அருணாசலம், லட்சு மணன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆழ்வார்திருநகரி பஜாரில் நகர அவைத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி முன்னிலையில் நகர செயலாளர் செந்தில் ராஜ குமார் தலைமையில் பட்டாசு வெடித்தும், லட்டு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் கே.டி.சி. பெரியசாமி, ஜெயலலிதா பேரவை செயலாளர் சிவ சுப்பிரமணியன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் நாகமணி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வேலுசாமி, நகர துணைச்செயலாளர் விஸ்வநாதன், இளைஞரணி செயலாளர் லட்சுமணன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மரிய அடைக்கலம், சிறுபான்மை பிரிவு செய லாளர் தம்புராஜ், விவசாய பிரிவு செயலாளர் ஆனந்த பூபதி, ஆனந்தவெங்கடாச்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    ஆழ்வார்திருநகரியில் நகர செயலாளர் செந்தில் ராஜகுமார் தலைமையில் பட்டாசு வெடித்தும், லட்டு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

    ஆழ்வார்திருநகரியில் நகர செயலாளர் செந்தில் ராஜகுமார் தலைமையில் பட்டாசு வெடித்தும், லட்டு வழங்கியும் கொண்டாடப்பட்டது.


     


    • தென்திருப்பேரை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் விவசாயிகள் கூட்டம் நடை பெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆழ்வை ஒன்றிய குழு மற்றும் கடம்பாகுளம் விவசாயிகள் இணைந்து தென்திருப்பேரை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் விவசாயிகள் சங்க தலைவர் குருகாட்டூர் பூலான் தலைமையில், ரவிச்சந்திரன், நயினார் ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் கடம்பாகுளம் பாசனத்தில் தற்போது செய்யப்பட்டுள்ள நெல் பயிர்கள் அறுவடையானதும், எதிர் வரும் மார்ச் மாதத்திற்குள் கடம்பாகுளம் நீர் மட்டம் அறிந்து முன் சாகுபடி செய்ய கடம்பாகுளம் விவசாயிகளை கேட்டுக்கொள்வதும் காலம் தாழ்த்தாமல் முன்சாகுபடி செய்ய தாமிரபரணி நீர் வழங்க அனுமதி கேட்பது மறுக்கும் பட்சத்தில் மேல்முறையீடு செய்வது குறித்தும், மேலும் நெல்கொள் முதல் நிலையம் கூடுதலாக அறுவடை காலத்தில் விரைந்து திறக்க மாவட்ட நிர்வாகத்தினை கேட்டு கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஆழ்வார் திருநகரி சுற்று வட்டாரத்திலுள்ள ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பா குளத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • தூர்வாரும் பணி தொடக்க விழாவிற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசனத்தில் தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பா குளம் கடலில் பாதி கடம்பா என விவசாயிகள் கூறும் அளவிற்கு பெரிய குளமான கடம்பா குளத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    தூர்வாரும் பணி

    இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் தூர்ந்து போய் உள்ள நிலையில் கடைமடை பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும் என கடந்த 20 வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    மேலும் கடம்பாகுளம் பாசன கால்வாய் தூர்ந்து போய் அதன் முழு கொள்ளளவை எட்ட முடியாமல் சிறு மழைக்கு கூட பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியது.

    இதனை அடுத்து பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கடம்பாகுளம் பாசன விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான உபரிநீர் கால்வாய் தூர் வாரும் பணியின் சீரமைப்பு பணிகள் திட்ட தொடக்க விழா நேற்று கடம்பா குளத்தில் நடைபெற்றது விழாவிற்கு மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று கடம்பா குளம் உபரி நீர் கால்வாய் ரூ.34 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கடம்பா குளம், கால்வாய் குளம், தென்கரை குளம், வெள்ளூர் குளங்களின் கரைகளை பலப்படுத்துதல், கால்வாய் முன்புறம் கரை அமைத்தல், நீர் வரத்து கால்வாய் பலப்படுத்துதல், மடைகளை சீரமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல் என பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.

    இத் திட்டத்தை தந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் நன்றினை தெரிவித்து கொள்கிறோம். அதேபோல் துறையூர் அங்கமங்கலம் சாலையை கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.84 லட்சம் மதிப்பில் சீரமைத்து தரப்படும். இப்பணிகளுக்கு மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். கடம்பா குளம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலம் கடம்பாகுளம் உபரி நீர் வடிகால் ஓடையில் வெள்ளநீர் சீராக செல்லும்.

    இதன் மூலம் விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளில் மழைக்காலங்களில் நீர் உட்புகுவது தடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஸ்ரீவைகுண்டம், கால்வாய், வெள்ளூர், ஆதிச்சநல்லூர், புதுக்குடி மற்றும் ஏரல் தாலுகாவில் உள்ள ஆதிநாதபுரம், செம்பூர், வெள்ளமடம், நாசரேத், புரையூர், அங்கமங்கலம், குரும்பூர், குருகாட்டூர், கல்லாம்பாறை, ராஜபதி, தென்திருப்பேரை மற்றும் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள சுகந்தலை, மேலாத்தூர், ஆத்தூர் கஸ்பா ஆகிய கிராமங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் என கூறினார்

    மண்சாலை

    மேலும் விவசாயிகள் மணத்தி- ராஜபதி சாலையினை தங்களுடைய நிலத்தின் வழியாக மண் சாலையாக அமைத்துள்ளார்கள். அந்த சாலையினை தார் சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படும். கடம்பா குளம் உபரி நீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மீண்டும் பெருமைமிகு குளமாக மாற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    20ஆண்டு கோரிக்கை

    மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-

    விவசாயிகளின் 20 ஆண்டுகால கோரிக்கையான கடம்பா குளம் உபரிநீர் கால்வாய் தூர் வாரும் பணிகள் நேற்று ெதாடங்கி வைக்கப்பட்டுள்ளது. கடம்பாகுளம் தண்ணீர் நிரம்பினால் இப்பகுதி இரு போகம் விளைச்சல் நடைபெறும்.

    மேலும் புறையூர் பாலம் சரி செய்யும் திட்டங்களும் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் அமைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தை நிறைவேற்ற காரணமாக இருந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, ஆவின் தலைவர் சுரேஷ் குமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பத்மா, தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புகாரி, ஏரல் தாசில்தார் கண்ணன், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர்,

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன், பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், கூட்டுறவு வங்கி தலைவர் உமரிசங்கர், ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார், பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், துணை தலைவர் அமிர்த வள்ளி, பேரூராட்சி உறுப்பினர் ஆனந்த், மற்றும் உறுப்பினர்கள், நகர செயலாளர் முத்து வீர பெருமாள், ஆழ்வை மத்திய ஒன்றிய தி.மு.க. அவை தலைவர் மகரபூசணம், நட்டார், பால்சித்தர், ஆழ்வை ஒன்றிய விவசாய சங்க தலைவர் பூலான், ஆழ்வை நகர தி.மு.க. செயலாளர் கோபிநாத், மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன், நயினார், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தேசிய பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவடி பண்ணை அரசு பள்ளியில் நடைபெற்றது.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்திருப்பேரை பேரூராட்சி மாவடி பண்ணை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    ஆசிரியர் கிங்ஸ்லி வரவேற்றார். தலைமை ஆசிரியர் விஜி முன்னிலை வகித்தார். தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சித்தி ரம்ஜான், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பிரதிநிதி அனிற்றா ரூத் மங்களசெல்வி, ஆழ்வார் திருநகரி காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் ஆகியோர் பெண்குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சம்பந்தமாக பள்ளி மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு, பேரூராட்சி உறுப்பினர்கள் ஆனந்த், சண்முகசுந்தரம், கொடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை சுனந்தா நன்றி கூறினார்.

    • குரங்கணி வழியாக ஏரல் செல்லும் சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
    • குழிகளில் மழைநீர் தேங்கி வாகனத்தில் செல்வோர் தட்டு தடுமாறி செல்லும் நிலை உள்ளது.

    தென்திருப்பேரை:

    பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி வருவது சாலை வசதி. இந்த சாலை வசதியால் பொதுமக்கள் ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைந்து சென்று வருவதற்கு தரமான சாலை வசதி வேண்டும்.

    ஆனால் தென்திருப்பேரையில் இருந்து குரங்கணி வழியாக ஏரல் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் திருச்செந்தூர் மெயின் ரோட்டிலிருந்து இருந்து குரங்கணி வரையுள்ள ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இந்த சாலையில் பஸ் போக்குவரத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் செல்லும் பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர்.

    தற்போது மழையின் காரணமாக பள்ளமான குழிகளில் மழைநீர் தேங்கி சாலை சேதமடைந்த நிலையில் காணப்படுவதால் வாகனத்தில் செல்வோர் தட்டு தடுமாறி செல்லும் நிலை உள்ளது. இந்த சேதமடைந்த சாலையின் பள்ளத்திற்கு அருகில் நூலகத்திற்கு செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    அது மட்டுமல்லாமல் நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றான மகரநெடுங்குழைக்காதர் கோவிலுக்கும் அதிக அளவில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பஸ் மற்றும் வேன்களில் வந்து வழிபட்டு செல்கிறார். சாலை மோசமாக உள்ளதால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றார்கள்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு சிரமத்தை தவிர்க்கும் வகையில் சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தென்திருப்பேரையில் தி.மு.க. இளைஞர் அணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை நடை பெற்றது.
    • கோவி லெனின், வக்கீல் தமிழன் பிரசன்னா ஆகியோர் இளைஞரணியினருக்கு பயிற்சி அளித்தனர்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. இளைஞர் அணியின ருக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை நடை பெற்றது.

    தி.மு.க. தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ.வும் தலைமை செயற்குழு உறுப்பினருமான டேவிட் செல்வின், மாவட்ட இளைஞரணி துணை அமை ப்பாளர்கள் அம்பாசங்கர், அனஸ், சுதாகர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.

    மாநில சுயாட்சி என்ற தலைப்பில் கோவி லெனின் மற்றும் திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் வக்கீல் தமிழன் பிரசன்னா ஆகியோரும் தி.மு.க. இளைஞர் அணியினருக்கு பயிற்சி அளித்தனர்.

    மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    மருத்துவம் எல்லாராலும் படிக்க முடியாத நிலை முன்பு இருந்தது. இப்போது சமூக நீதி என்பது மற்ற மாநிலத்தை விட தமிழகத்தில் எல்லாரும் கடைப்பிடிக்கிறார்கள் என்பதே திராவிட மாடல் ஆட்சிக்கு சான்றாகும். கல்வி, வேலை வாய்ப்பு, பொரு ளாதாரத்தில் மாநிலத்திற்கு முழு அதிகாரம் வேண்டும் என்ற அடிப்படையில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் மாநில சுயாட்சியை வலியுறுத்தினர்.

    இப்போது மாநில சுயாட்சியை முடக்கும் வித மாக நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. அவற்றை பெரியார் அண்ணா கலைஞர் வழியில் தற்போது ஸ்டாலின் தொடர்ந்தது எதிர்த்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அருணாச்சலம், ஆறுமுகப்பெருமாள், ஜெயக்குமார் ரூபன், சோபியா, பிரம்ம சக்தி, ஒன்றிய செயலாளர்கள் பார்த்தீபன், நவீன் குமார், இசக்கி பாண்டியன், ரவி, ஜோசப், கொம்பையா, கோட்டாளம், ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர்கள் ராமமூர்த்தி, வெற்றிவேல், இசக்கி பாண்டியன், லட்சுமணன், ஜோயல், அந்தோணி ராஜ், ஆபிரகாம், சேவியர் விஜேஸ், பேரூர் இளைஞரணி அமைப்பா ளர்கள் இசக்கி குமார், முருகன், முத்துக்குமார், முகமது பஹ்மி, சத்திய விஜய், ஸ்ரீவைகுண்டம் பேரூர் செயலாளர் சுப்புராஜ், ஆழ்வார் திருநகரி பேரூர் செயலாளர் கோபிநாத், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, சாயர்புரம் பேரூராட்சி தலைவர் சினேகவல்லி, சாத்தான்குளம் பேரூ ராட்சி தலைவர் ரெஜினா ஸ்டெல்லாபாய், தென்தி ருப்பேரை பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் ஆனந்த், நகர செயலாளர் முத்து வீர பெருமாள் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் பலர் கலந்து கொண்டனர். ஆழ்வை மத்திய ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த் நன்றி கூறினார்.

    • ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி செவ்வாய்கிழமை கொடை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கால் நாட்டு விழா நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் தென் திருப்பேரை பேரூராட்சி மாவடி பண்ணை முத்தாரம்மன் கோவிலில் கொடை விழா நேற்று நடைபெற்றது.

    மாவடிபண்ணை 18பங்கு நாடார்களுக்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோவிலில் சிவன், சக்தி மற்றும் முத்தாரம்மன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்கள்.

    ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி செவ்வாய்கிழமை கொடை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொடை விழாவை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து கோவிலில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கால் நாட்டு விழா நடைபெற்றது.அன்று முதல் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகின்றனர். திங்கட்கிழமை இரவு குடி அழைப்பு மற்றும் அம்மனுக்கு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு மேள வாத்தியங்களுடன் சாமி ஊர்வலத்துடன் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை அலங்காரத்துடன் மதியக் கொடை, இரவு 8 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், நேர்த்தி கடன் ஆகியவை நடைபெற்றது. இரவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், கரகாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    காலை, மதியம் மற்றும் இரவு அன்னதானம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை தீபாராதனையும், அதை தொடர்ந்து முத்தாரம்மன் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வாண வேடிக்கையுடன் வீதிஉலா செல்லும் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று மதியம் பொங்கலிடுதல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    ×