என் மலர்
நீங்கள் தேடியது "கருணாநிதி பிறந்த நாள்"
- தூய்மை பணியாளர்கள் கருணாநிதி உருவ வடிவில் அணிவகுத்து நின்றனர்.
- டிரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சியில் தத்ரூபமாக அமைந்திருந்த கருணாநிதியின் படம்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று காலை திரண்ட 2752 தூய்மை பணியாளர்கள் கருணாநிதி உருவ வடிவில் அணிவகுத்து நின்றனர்.
டிரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சியில் தத்ரூபமாக அமைந்திருந்த கருணாநிதியின் படம்.
- பேரணாம்பட்டு ஒன்றியம் சார்பில் கொண்டாட்டம்.
- ஏராளமானோர் பங்கேற்பு.
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி பேரணாம்பட்டு ஒன்றியத்தில் கொண்டாடப்பட்டது.
பேரணாம்பட்டு வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பல்லலகுப்பம். குண்டல பல்லி. சாத்கர் கள்ளிப் பேட்டை அம்பேத்கர் நகர் சின்னதாமல் செருவு . கொத்தப்பள்ளி. பொகலூர். மேல்பட்டி போன்ற இடங்களில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
இதில் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர்களான ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜி.பரசுராமன். ரமேஷ் எம்.வி.குப்பம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர். எஸ் ஒ முல்லா ஏரிகுத்தி சிட்டி பாபு. ஒன்றியக்குழு துணைத்தலைவர் டி.லலிதா டேவிட் சின்னதாமல் தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் சண்முகம் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
