என் மலர்
நீங்கள் தேடியது "slug 228048"
- பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை மின்நுகர்வோர் அக்டோபர் மாதத்திற்கு செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- மின் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்திய மின் அளவீடு நிர்வாகக் காரணத்தினால் மேற்கொள்ள முடியவில்லை.
தாராபுரம்:
தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தாராபுரம் கோட்டத்தில் மானூர்பாளையம் பிரிவு அலுவலகதிற்குட்பட்ட காசிலிங்கபாளையம்,நிறையூர் மேற்கு சடையபாளையம் ஆகிய மின் பகிர்மான அலுவலகத்திற்குட்ட பகுதி மின் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்திய மின் அளவீடு நிர்வாகக் காரணத்தினால் மேற்கொள்ள முடியவில்லை. ஆகையால் கடந்த ஆகஸ்டு மாதம் கணக்கீட்டு பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை மின்நுகர்வோர் அக்டோபர் மாதத்திற்கு செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்க ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம்
பெரம்பலூர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் தலைவர் வரதன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் நிறுவனர் நல்லப்பன் சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர், சங்கத்தின் பொதுச் செயலாளர் நேரு, அமைப்பு செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து பணியாற்றி கொண்டிருக்கும் 171 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு விரைவில் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். மாறுபட்ட பாடத்தில் உயர்கல்வி பயின்ற அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் 2 ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும். அரசாணை எண் 194, நாள் 12.9.2018-ன்படி 6.4.2018 என்ற தேதியை நீக்கம் செய்து அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் 50 சதவீதத்தை கணக்கில் எடுத்து ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தின் பொருளாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்."
- புதிய பஸ் நிலையம் அம்பேத்கர் சிலையிலிருந்து காந்தி சிலை வரை போராட்டம் நடைபெற இருக்கிறது.
- துண்டு பிரசுரம் விநியோகித்து ஆதரவு திரட்டுவது என முடிவு.
பேராவூரணி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் சமூக நல்லிணத்தை விரும்புகின்ற அனைத்துக் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், இயக்கங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த அடிப்படையில் பேராவூரணியில் மனித சங்கிலி போராட்டம் புதிய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலையிலிருந்து காந்தி சிலை வரை நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும், உழைக்கின்ற தொழிலாளர்களும், ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டி அனைத்து கட்சிகள் சார்பில் நேற்று பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி பேராவூரணி சட்டமன்றத் தொகுதி செயலாளர் அரவிந்த் குமார் தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்களிடமும், தொழிலாளர்களிடமும் துண்டு பிரசுரம் விநியோகித்து ஆதரவு திரட்டுவது என முடிவு செய்யப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் மைதீன், திராவிடர் கழகம் மாவட்ட அமைப்பாளர் சிதம்பரம், தி.வி.க மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம், தமிழக மக்கள் புரட்சி கழகம் மதியழகன், அறநெறி மக்கள் கட்சி ஜேம்ஸ், தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு வெங்கடேசன் மற்றும் அப்துல் சலாம், முஜிபுர், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக விசிக பேராவூரணி ஒன்றிய செயலாளர் சிவா நன்றி கூறினார்.
- சவேரியார் ஆலயம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதையடுத்து கோட்டார் சவேரியார் ஆலய சாலையில் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.
- செட்டிகுளம் பீச் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது
நாகர்கோவில் :
நாகர்கோவில் சவேரியார் ஆலயம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதையடுத்து கோட்டார் சவேரியார் ஆலய சாலையில் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.
இதனால் வடசேரி பஸ் நிலையத்திற்கு கன்னியாகுமரிக்கு செல்லும் அனைத்து பஸ்களும் வேப்பமூடு பொதுப்பணித்துறை சாலை செட்டிகுளம் சந்திப்பு வழியாக சவேரியார் ஆலயத்திற்கு செல்கிறது. கன்னியாகுமரியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பீச் ரோட்டில் இருந்து ஆயுதப்படை மைதானம் ராமன் புதூர் வழியாக செட்டிகுளத்திற்கு வருகிறது. வாகனங்கள் மாற்று பாதை வழியாக இயக்கப்படுவதையடுத்து செட்டிகுளம் பீச் ரோடு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து போலீசார் அதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் செட்டிகுளம் பீச் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இன்று காலையில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர்.
குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் செட்டிகுளம் பகுதியில் சிக்கி பரிதவிப்பிற்கு ஆளானார்கள். சாலை நடுவே கான்கிரீட்டுக்களால் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளதால் பஸ்கள் மட்டுமே செல்ல முடியும் நிலை உள்ளது.ஆனால் அதன் இடையே இருசக்கர வாகனங்களும் செல்வதால் அவர்கள் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழல் ஏற்பட்டது.
செட்டிகுளம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் காலை மாலை நேரங்களில் இன்னும் அதிகமாக கூடுதல் போலீசாரை நியமனம் செய்து போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- பாராமரிப்புச் சட்டம் -2007ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
- விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு பதிவு செய்யுமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் :
தமிழக அரசின் விதிமுறைகளின் படி தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாராமரிப்புச் சட்டம் -2007ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் பதிவு செய்யாத முதியோர் இல்லங்கள் தாங்களாகவே முன்வந்து பதிவு செய்து கொள்ளுமாறும், அவ்வாறு பதிவு இல்லாமல் முதியோர் இல்லங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது
மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம் அறை எண்:35,36 தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு பதிவு செய்யுமாறு மாவட்ட கலெக்டர் வினித் தெரிவித்துள்ளார்.
- அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை துணை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- கீழக்கரை நகராட்சி பகுதியில் 95 சதவீதம் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
கீழக்கரை
கொரோனா பரவல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரானா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. கீழக்கரை நகராட்சி மற்றும் தனியார் கல்லூரி முகாமில் நேற்று 300-க்கும் மேற்பட்ட மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
ஆய்வு பணி மேற்கொள்ள வந்த சுகாதார துறை துணை இயக்குனர் அஜீத் பிரபு குமார் நிருபர்களிடம் கூறிய தாவது:-
கீழக்கரை நகராட்சி பகுதியில் 95 சதவீதம் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்று அரசு அறிவித்துள்ளது. உருமாறிய ஒமைக்ரான் கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் 85 சதவீதம் சிறப்பாக செயல்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. தற்போது கொரானா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதைத் தொடர்ந்து நாளை (7-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை கீழக்கரை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலக வளாகம், ஆரம்ப சுகாதார நிலையம், நாடார் பள்ளி, பி.எஸ்.எம் மருத்துவமனை உள்பட பல்வேறு இடங்களில் இலவச பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும். பொதுமக்கள் அனை வரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வட்டார மருத்துவர் செய்யது ராசிக்தீன், வட்டார சுகாதார துறை மேற்பார்வையாளர் பக்கீர் முகமது, கவுன்சிலர் மீரான் அலி, நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி உள்பட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மத்திய அரசு திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என பா.ஜ.க. கட்சி மாநில நிர்வாகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கான மானியம் ரூ.50 ஆயிரம் வழங்குவது குறித்து எடுத்துரைத்தார்.
ஆர்.எஸ்.மங்கலம்
பா.ஜ.க. கட்சி மாநில நிர்வாகி வேலூர் இப்ராஹிம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
நேற்று ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி பகுதிக்கு வருகை தந்தார். அவருக்கு ஆர்.எஸ்.மங்கலம் பா.ஜ.க. கட்சியின் ஒன்றிய தலைவர் நரசிங்கம் தலைமையில் சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் அஜ்மல்கான், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. அணியின் முன்னாள் பொதுச்செயலாளர் சசி கனி, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய பொதுச்செயலாளர்கள் செந்தில்குமார், கிஷோர், ஒன்றிய பொருளாளர் பாண்டித்துரை ஆகியோர் முன்னிலையில் திருப்பாலைக்குடி பழங்கோட்டை பஸ்நிறுத்தம் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருப்பாலைக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சென்று ஊராட்சி மன்ற தலைவர் முகமது உமர் பாரூக் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களை சந்தித்து பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டம் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை பிரிவினருக்கான திட்டம், மகளிர்குழு தொழில் தொடங்குவதற்கான மானியத்துடன் கூடிய கடன் திட்டம் குறித்து விளக்கினார்.சிறுபான்மையினருக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கான மானியம் ரூ.50 ஆயிரம் வழங்குவது குறித்து எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருப்பாலைக்குடி பாண்டி கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருப்பாலைக்குடி மாரியம்மன்கோவில் காந்திநகர் கிராம தலைவர் தமிழ்கண்ணன், செயலாளர் ஆதிரைமன்னன் ஆகியோர் தலைமையில் மீனவர்சங்கம் சார்பாக வேலூர் இப்ராஹிம்க்கு பரிவட்டம் கட்டப்பட்டது.
பின்னர் அ.தி.மு.க. நகர செயலாளர் குட்லக் ரஹ்மத்துல்லாவை சந்தித்து மத்திய அரசு முஸ்லீம் சிறுபான்மையினருக்கான கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து இத்திட்டங்கள் குறித்து முஸ்லிம் மக்களிடையே எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சசிகுமார், ஆர்.எஸ்.மங்கலம் இளைஞரணி தலைவர் தம்பிதுரை, ஊடகப்பிரிவு செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வார்டு வாரியாக, மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.
- மக்களுக்கு தெரியப்படுத்தினால், அதிக அளவு மக்கள் பயன் பெறுவர்.
அவிநாசி:
மக்களின் வசதியை கருத்தில் கொண்டு வீடு தேடி சென்று மருத்துவம் பார்க்கும் வகையில் வீடு தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.அதன்படி உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து வார்டு வாரியாக, மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.
இதில் சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட அடிப்படை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.இம்மருத்துவ முகாமில், கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. பரபரப்பான வாழ்க்கை சூழலில் இத்தகைய மருத்துவ முகாம்களை மக்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
வேலைக்கு செல்வோர் சில நிமிடம் ஒதுக்கி மருத்துவ முகாமுக்கு சென்று ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்கின்றனர். குறிப்பாக வீடுகளில் உள்ள முதியவர்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு இம்முகாம் பயனளிக்கிறது.இத்தகைய முகாம்களில் வயது முதிர்ந்தவர்களையே அதிகம் பார்க்க முடிகிறது. இருப்பினும் இம்முகாம் நடத்தப்படுவது குறித்து, மக்களுக்கு தெரிவதில்லை.
எனவே முகாம் நடக்கும் விவரம் குறித்து முன்கூட்டியே அந்தந்த வார்டு உறுப்பினர்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தினால், அதிக அளவு மக்கள் பயன் பெறுவர். எனவே அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
- ஜூலை 2022 மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.
உடுமலை:
உடுமலை ராகல்பாவி, மலையாண்டிபட்டணம், சுண்டக்காம்பாளையம் மின் நுகர்வோர் கடந்த மே மாத கட்டணத்தையே ஜூலை மாதத்திற்கும் செலுத்துமாறு, மின் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உடுமலை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அறம்வளர்த்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடுமலை மின் பகிர்மான வட்டம் உதவி மின் பொறியாளர் மேற்கு பிரிவுக்குட்பட்ட ராகல்பாவி, மலையாண்டிபட்டணம், சுண்டக்காம்பாளையம் பகிர்மான இணைப்புகளுக்கு, நிர்வாக காரணங்களினால் ஜூலை 2022 மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.எனவே மேற்படி பகிர்மான மின் நுகர்வோர்கள் மே 2022 மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே ஜூலை மாதத்திற்கான மின் கட்டண தொகையாக அறிவிப்பு செய்யப்பட்ட, 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதனால் பாதுகாப்பு நலன் கருதி நீரளவு குறையும் வரை மோட்டார் இயக்கம் நிறுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- வெள்ளகோவில் நகராட்சி பொதுமக்கள் நிலைமை சீராகும் வரை குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வெள்ளக்கோவில்:
வெள்ளகோவில் நகர் மன்ற தலைவி மு.கனியரசி மற்றும் ஆணையாளர் ஆர்.மோகன்குமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி ஆற்றை ஆதாரமாகக்கொண்டு இயங்கும் முத்தூர், காங்கயம் குடிநீர் திட்டம் இயக்கப்படும் தலைமை நீரேற்றம் செய்யும் நிலையங்களை சுற்றி வெள்ள அளவு அதிகமாக உள்ளது. அதனால் பாதுகாப்பு நலன் கருதி நீரளவு குறையும் வரை மோட்டார் இயக்கம் நிறுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் பயன் பெறும் 6 பேரூராட்சி. 3 நகராட்சி மற்றும் 1,790 ஊரக குடியிருப்புகளுக்கு நிலைமை சீராகும் வரை குடிநீர் வினியோகம் இருக்காது என்று இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.எனவே வெள்ளகோவில் நகராட்சி பொதுமக்கள் நிலைமை சீராகும் வரை குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்–பட்–டுள்–ளது.
- உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம் உள்ளிட்ட அனைத்து தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது.
- தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் வந்தால் சரி என்றனர்.
திருப்பூர்:
தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பு பூஸ்டர் தடுப்பூசி நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 75 நாட்களுக்கு இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.அதன்படி, திருப்பூர் கலெக்டர் அலுவலகம், தலைமை அரசு மருத்துவமனை, தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம் உள்ளிட்ட அனைத்து தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது.
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் செலுத்த வேண்டியுள்ளது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26வாரம் நிறைவு பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் ஆதார் அட்டை, குறுஞ்செய்தி காண்பித்து பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம். வெளிநாடு செல்வோர் இருதவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் ஆனால் பூஸ்டர் செலுத்திக்கொள்ளலாம். கைவசம் 2.5 லட்சம் தடுப்பூசி உள்ளது. தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் வந்தால் சரி என்றனர்.
- வரும் 4ந் தேதி வரை, தாங்கள் படித்த பள்ளிக்குச்சென்று விண்ணப்பிக்கலாம்.
- தனித்தேர்வர்களும், அரசு தேர்வுத்துறையின் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
உடுமலை:
கடந்த 2021-22ம் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி பிளஸ் 2 துணைத்தேர்வு வருகிற 25 -ந்ேததி முதல் ஆகஸ்டு 1-ந்தேதி வரையிலும், பிளஸ் 1 தேர்வு, ஆகஸ்டு 2ந்தேதி முதல் 10-ந் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புக்கு ஆகஸ்டு 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையிலும், துணைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அதில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், வரும் 4ந் தேதி வரை, தாங்கள் படித்த பள்ளிக்குச்சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனித்தேர்வர்கள், மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பலரும் ஆர்வமுடன் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்காதவர்கள் வரும் 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை கூடுதல் கட்டணம் செலுத்தி தக்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப எண்ணை பாதுகாப்பாக வைத்திருந்து அதை வைத்து ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.புதிதாக தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களும், அரசு தேர்வுத்துறையின் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.ஏற்கனவே பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கும், பிளஸ் 2வுக்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். துணைத்தேர்வு அட்டவணை மற்றும் விதிமுறைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றனர்.