search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிவாயு"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம், ராமேசுவரம். கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந் தேதி அன்று மாலை 5.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

    • திருப்பூர் ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்காக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவுக்கு வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் அமைக்கப்பட வேண்டும்.
    • நிட் காம்பாக்டிங் உரிமையாளர்கள் சங்கத்தின் 24வது மகாசபை கூட்டம் திருப்பூர் காந்திநகர் அரிமாசங்கத்தில் நடைபெற்றது.

    திருப்பூர்:

    'பைப்லைன் கேஸ்' திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தி திருப்பூர் தொழில் துறையினருக்கு மானிய விலையில் எரிவாயு வழங்க மத்திய,மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று காம்பாக்டிங் சங்க மகாசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    நிட் காம்பாக்டிங் உரிமையாளர்கள் சங்கத்தின் 24வது மகாசபை கூட்டம் திருப்பூர் காந்திநகர் அரிமாசங்கத்தில் நடைபெற்றது. சங்கத்தலைவர் சார்ஜா துரைசாமி தலைமை வகித்தார். பொருளாளர் முத்துசாமி வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். செயலாளர் ஈஸ்வர மூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். 

     கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:- 

    யூகவணிகர்கள் சூதாட்ட முறையில் பஞ்சுவிலையை முறைகேடாக கையாள்வதை தடுக்க, மத்திய அரசு, பருத்தி ஆலோசனைக்குழு மற்றும் மத்திய பருத்திக்கழகங்கள் மூலம் கண்காணித்து, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்து நூற்பாலைகளுக்கு விற்பனை செய்ய முன்வர வேண்டும். இதனால் நூல் விலையை சீராக வைத்திருக்க முடியும். 

    பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு பதிலாக ஆடையாக தயாரித்து ஏற்றுமதி செய்யும்போது, வேலைவாய்ப்பு, மதிப்பு கூட்டு, பொருளாதார ஏற்றம், அந்நிய செலாவணி என பலவகையிலும் பல்வேறு நன்மைகளும், வளர்ச்சியும் ஏற்படும் என்பதை மத்திய அரசு உணர்ந்து, அதற்கேற்றவகையில் தொழில் துறையினருக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். 

    மெட்ரோ ரயில் மூலம் அருகில் உள்ள நகரப்பகுதிகளை இணைத்தல், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல அடுக்கு மேம்பாலங்களை உருவாக்குதல், அடுக்கு மாடி குடியிருப்புகள் மூலம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி தருதல் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

    பிற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு அதிக வருமானம் ஈட்டித்தருகின்ற திருப்பூர் போன்ற தொழில் நகரத்திற்கு போதிய அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாததை மத்திய, மாநில அரசுகள் கூர்ந்து கவனித்து, திருப்பூரின் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்துகிறோம்.  

    தொழிலாளர்களின் அடிப்படைத்தேவையை கருத்தில் கொண்டு பாரதப்பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ள 'இ.எஸ்.ஐ.,' மருத்துவமனை வசதியை துரிதமாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்த மத்திய,மாநில அரசுகள் முன்வர வேண்டும். திருப்பூர் ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்காக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவுக்கு வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் அமைக்கப்பட வேண்டும். 

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 'பைப்லைன்'எரிவாயு திட்டத்தை நடைமுறைப்படுத்தி மானிய விலையில் எரிவாயு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    இதைத்தொடர்ந்து, தற்போதுள்ள தொழில் நிலையை கருத்தில் கொண்டு, தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் பழைய நிலையை நீடித்து உதவ மாநில அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும், புதிய கட்டணங்களை இப்போதைக்கு நடைமுறைப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்வது என்றும், 

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள தொழில் சிக்கல்களை கருத்தில் கொண்டு, வங்கிக்கடன் தள்ளுபடி சலுகையை மத்திய, மாநில அரசுகள் வழங்கி உதவிட வேண்டும் என்றும், 

     ஜி.எஸ்.டி.,வரிவிதிப்பில் பெரிய நிறுவனங்களுக்கும், சிறு, குறு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதால் தனி மனித வருமானம் உயர்வதில் சிக்கல் ஏற்படுவதை மத்திய அரசு உணர்ந்து, தொழில் நிறுவனங்களின் பொருளாதார தன்மையை உணர்ந்து போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. புதிய பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட ஜுபிடர் குணசேகரன் நன்றி கூறினார்.

    • எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 29ந் தேதி நடைபெறும்.
    • கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 29ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா், எரிவாயு சேவை தொடா்பாக புகாா்கள், குறைபாடுகள் இருந்தால் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தாரமங்கலம் நகராட்சியில் உள்ள மயான நினைவு சின்னங்களை அகற்றி விட்டு பூங்காவுடன் கூடிய புதிய எரிவாயு தகன மேடை அமைக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • அதனை தொடர்ந்து மயானத்தில் இருந்த 500-க்கும் மேற்பட்ட நினைவு மேடைகளை நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் உள்ள மயான நினைவு சின்னங்களை அகற்றி விட்டு பூங்காவுடன் கூடிய புதிய எரிவாயு தகன மேடை அமைக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது.

    இந்த திட்டத்துக்கு பொது மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் பலமுறை பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வந்தனர். ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்ற நிலையில் , எரிவாயு தகனமேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதையடுத்து எரிவாயு தகனமேடை பணியை தொடக்க அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மயானத்தில் இருந்த 500-க்கும் மேற்பட்ட நினைவு மேடைகளை நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.

    அப்போது நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, நகரமன்ற தலைவர் குணசே கரன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், நகராட்சி முதன்மை பொறியாளர் சரவணன், வார்டு கவுன்சிலர்கள் தனபால், பாலசுந்தரம் மற்றும் பலர் பணியை மேற்கொண்டனர்.

    • சிவகங்கையில் எரிவாயு பயன்பாடு விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்-கலெக்டர் பங்கேற்றார்.
    • சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 13 எரிவாயு நிறுவன விநியோகஸ்தர்கள் உள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் மாளிகையில் எல்.பி.ஜி. வினியோகிஸ்தர்கள் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் கண்காட்சி நடந்தது. அதனை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்த வரையில் எரிவாயு பயன்பாடு என்பது கடந்த 2006-ம் ஆண்டு, 2011-ம் ஆண்டுகளில் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமாகும்.எரிவாயு பயன்பாடு மற்றும் அதனை எளிதில் பெறு வதற்கான முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும் இதுபோன்று விழிப்புணர்வு கண்காட்சிகள் நடத்த ப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 13 எரிவாயு நிறுவன விநியோகஸ்தர்கள் உள்ளனர். ஒவ்வொரு வினியோகஸ்தர்களும் தங்களது பகுதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இதனை பொதுமக்களாகிய வாடிக்கையாளர்கள் இதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் எரிவாயு நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு, வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு பயன்படுத்தப்படும் முறைகள் குறித்து எடுத்துரை ப்பதை கேட்டறிந்து, வாடிக்கையாளர்களுக்கு புதிய எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்புக்களை வழங்கினார்.

    இதில் சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், மண்டல துணை பொது மேலாளர் ரவிக்குமார், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, சிவகங்கை நகர்மன்ற உறுப்பினர்கள் அயுப்கான், ராஜேஸ்வரி ராமதாஸ், கீதாகார்த்திகேயன், சண்முகராஜன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை மேலாளர் மிருதுபாஷினி, சிவகங்கை வட்டாட்சியர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 22-ந்தேதி நடக்கிறது.
    • பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மதுரை 

    மதுரை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதில், எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், அசோசியேசன் எரிவாயு நுகர்வோர்கள், ரிவாயு முகவர்கள் மற்றும் அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    இதில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கொரோனா நோய் தொற்றினை தடுப்பதற்காக முகக் கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 ஆண்டுகளில் 41 ஆயிரத்து 311 வீடுகளுக்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாட்டில் குழாய் நெட்வொர்க் உள்கட்டமைப்பு மூலம் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு இயற்கை எரிவாயுவை எளிதாக வழங்க ஏ.ஜி. அண்ட் பி. பிரதாம் திட்டங்களை அறிவித்துள்ளது.

    இந்த நிதியாண்டில் பரமக்குடி, கீழக்கரை, சாயல்குடியில் 3 துணை பூஸ்டர் எரிவாயு நிலையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மற்றும் கீழக்கரையில் இரும்பு குழாய் பதிக்கும் பணியை எரிவாயு தேவை அதிகரித்து வருவதால் 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, சாயல்குடி உள்பட பல்வேறு இடங்களில் மேலும் நிலையங்களை தொடங்க இலக்கு வைத்துள்ளது.

    24 மணி நேர இயற்கை எரிவாயு விநியோகத்தை ராமநாதபுரம், பட்டணம்காத்தான், ராமேசுவரம் பகுதிகளில் எரிவாயு கட்டங்களை நிறுவி மார்ச் 2023-க்குள் 15 ஆயிரம் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு என்ற இலக்குடன் உள்கட்டமைப்பு பணிகளில் செயல்படுகிறது.

    இந்த விரிவான திட்டத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும். பரமக்குடி, கீழக்கரை, சாயல்குடி ஆகிய பகுதிகளில் இந்த நிதியாண்டில் 3 துணை பூஸ்டர் நிரப்பும் நிலையங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளன.

    பட்டினம்காத்தான், சக்கரக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் நடுத்தர அடர்த்தி பாலி எத்திலீன் நெட்வொர்க்குகள் மூலம் இந்த பகுதிகளில் பி.என்.ஜி. சேவையை தொடங்க உள்ளன. அடுத்த 7 ஆண்டுகளில் 11 எரிவாயு நிரப்பு நிலையங்களை தொடங்குவதன் மூலம் 41 ஆயிரத்து 311 வீடுகளுக்கு பி.என்.ஜி. விநியோகத்தை உறுதி செய்யும் என ஏ.ஜி. அண்ட் பி.பிரதாம் மண்டலத் தலைவர் பூமாரி தெரிவித்தார்.

    ×