search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராசிரியை"

    • பேஸ்புக்கில் வந்த ஒரு பதிவுக்கு கருத்து தெரிவிக்கையில், கோட்சே இந்தியாவை காப்பாற்றியதில் பெருமை உண்டு என குறிப்பிட்டிருந்தார்.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. கிளை செயலாளர் அஸ்வின், குன்னங்குளம் போலீசில் புகார் கொடுத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.) கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியையாக இருப்பவர் ஷைஜா ஆண்டவன். இவர், பேஸ்புக்கில் வந்த ஒரு பதிவுக்கு கருத்து தெரிவிக்கையில், கோட்சே இந்தியாவை காப்பாற்றியதில் பெருமை உண்டு என குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது.

    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. கிளை செயலாளர் அஸ்வின், குன்னங்குளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், பேராசிரியை ஷைஜா ஆண்டவன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    • கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்த இளம்பெண் மெடிக்கலுக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
    • சம்பவம் குறித்து, பெற்றோர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தனர்.

    பொள்ளாச்சி,

    காதலுக்கு வயதில்லை. இருவரின் மனமும் ஒத்துப்போனால் யார் வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்பார்கள். அப்படி 20 வயது மூத்த நபரை காதலித்து கரம்பிடித்துள்ளார் கோவையை சேர்ந்த கல்லூரி பேராசிரியை ஒருவர்.

    கோவை பொள்ளாச்சியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் அங்குள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இது தவிர அந்த பகுதியில் உள்ள மெடிக்கல்லில் பகுதி நேரமாகவும் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது, இளம்பெண்ணுக்கும், கடையின் உரிமையாளருக்கும் இடையே நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

    ஆனால் இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவில்லை. இளம்பெண் நீண்ட நேரம் போனில் பேசியதை கேட்டபோதும், வேலை விஷயமாக பேசுவதாக தெரிவித்து வந்தார். கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்த இளம்பெண் தனது தாயிடம் தான் மெடிக்கலுக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர், இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். அவரும் வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் இளம்பெண்ணின் செல்போனுக்கு அவரது தாய் போன் செய்தார். அப்போது அவர், தான் மருந்தகத்தின் உரிமையாளருடன் வேலை விஷயமாக சென்னைக்கு சென்று கொண்டிருக்கிறேன். வேலை முடிந்தவுடன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து விடுவேன் என தெரிவித்தார்.

    வேலை விஷயமாக செல்வதாக கூறியதால் அவர்களும் விட்டு விட்டனர். 2 நாட்கள் ஆகியும் திரும்பி வராததால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து மீண்டும் தங்களது மகளுக்கு போன் செய்தனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் பெற்றோர் பதறி போனார்கள்.

    உடனடியாக சம்பவம் குறித்து, பெற்றோர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வந்தனர்.

    இதற்கிடையே மாயமான இளம்பெண் தான் வேலை பார்த்து வந்த மருந்தகத்தின் உரிமையாளரை திருமணம் செய்து கொண்ட தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் சென்னையில் உள்ளனரா அல்லது வேறு எங்காவது தங்கி இருக்கின்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேராசிரியர் கணவன்-மனைவி இருவரும் தேவாலயம் சென்ற நேரத்தில் வீடு கொள்ளை.
    • கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் பகுதியில் வசிப்பவர் தேவராஜ் (வயது 70). இவரது மனைவி தங்க லீலா. இவர்கள் 2 பேரும் அரசு மற்றும் தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக பணி யாற்றி ஒய்வு பெற்றவர்கள். இன்று காலை கணவன்-மனைவி இருவரும் அரு கில் உள்ள தேவாலயம் சென்றனர்.


    அவர்கள் திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனைக் கண்டு 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பொருள்கள் வீடு முழுவதும் சிதறி கிட ந்தது.


    எனவே வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்தி ருப்பது தெரியவந்தது. இதுகுறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஸ், மற்றும் தனிப்படை போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பீரோவில் இருந்த ரூ.25ஆயிரம் கொள்ளை போய் இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க கதவு வழியாக தப்பி சென்றது தெரிய வந்தது. அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வரு கின்றனர்.


    பணத்தை கொள்ளை யடித்த மர்ம நபர்கள் பீரோ டிராயரில் இருந்த 40 பவுன் தங்க நகைகளை கவனிக்க வில்லை. இதனால் அந்த நகைகள் தப்பியது.

    ×