என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் உதவி"

    • இது போன்ற தவறான தகவல்களை, பொதுமக்கள் மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம்.
    • கடன் தொடர்பான வதந்தியை நம்பி, வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம்.

    புதுடெல்லி:

    ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மத்திய அரசு 4 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குகிறது என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த தகவல் வதந்தி என மத்திய அரசு மறுத்துள்ளது. இது போன்ற தவறான தகவல்களையோ செய்திகளையோ மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று பொதுமக்களை மத்திய தகவல் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    மேலும் கடன் தொடர்பான இந்த வதந்தியை நம்பி தனிப்பட்ட தங்களது வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் போலி செய்தி பரப்பட்டதாகவும், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் கடன் வழங்கும் திட்டம் எதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்றும் மத்திய தகவல் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

    இதேபோல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு கூடுதல் தவணை அகவிலைப்படி (டிஏ) ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசின் துணைச் செயலர் நிர்மலா தேவ் கையொப்பத்துடன் போலி யான சுற்றறிக்கை வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்டதாகவும், ஆனால், நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை அத்தகைய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று தெளிவு படுத்தி உள்ளதாகவும் மத்திய தகவல் பணியகம் தெரிவித்துள்ளது.

    • பெண் குழந்தைகள் 119 பேருக்கு ரூ.4.42 லட்சம் அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • ரூ.43ஆயிரம் அளவில் மளிகை பொருட்கள் மண்டல துணை பொது மேலாளர் சந்தோஷ் மூலம் வழங்கப்பட்டது.

    அவினாசி :

    கனரா வங்கியின் 117-வது நிறுவனர் தினவிழாவையொட்டி அரசு பள்ளியில் படிக்கும் சமுதாயத்தில் மிகவும் நலிவுற்ற பிரிவை சார்ந்த பெண் குழந்தைகள் 119 பேருக்கு ரூ.4.42 லட்சம் அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற தொழில் முனைவோர் கருத்தரங்கில் அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் மற்றும் மாவட்ட தொழில் மையம், தாட்கோ மேலாளர் கலந்து கொண்டு எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.57 லட்சம் அளவில் கடன் வழங்கப்பட்டது.

    மேலும் கனரா வங்கியின் மூலம் கரவலூர் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்திற்கு ரூ.43ஆயிரம் அளவில் மளிகை பொருட்கள் மண்டல துணை பொது மேலாளர் சந்தோஷ் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி பொது மேலாளர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். 

    • திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் 5,59,909 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
    • 14758 உறுப்பினர்களுக்கு 29.29 கோடி கடன் தள்ளுபடி செய்ய அரசாணை பிறப்பிக்க நடவடிக்கையில் உள்ளது.

    பல்லடம் :

    தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி ஸ்ரீ மணிவேல் மஹாலில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 2056 பயனாளிகளுக்கு ரூ.16.94 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் 5,59,909 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். திருப்பூர் மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் மக்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். 31.03.2021-60 நிலுவையிருந்த நகைக்கடன்களில் 38453 நபர்களுக்கு ரூ.158.68 கோடி அளவிற்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கி நகைகள் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. 31.03.2021-ல் நிலுவையிருந்த 1638 சுய உதவிக்குழுக்களை சார்ந்த 14758 உறுப்பினர்களுக்கு 29.29 கோடி கடன் தள்ளுபடி செய்ய அரசாணை பிறப்பிக்க நடவடிக்கையில் உள்ளது.

    2022-23-ம் ஆண்டிற்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க ரூ.561 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, நாளது தேதி வரை 23697 உறுப்பினர்களுக்கு 252 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 345 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.1 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 3020 புதிய உறுப்பினர்களுக்கு ரூ.27 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    2022-23-ம் நிதியாண்டில்உதவிக்குழுக்களுக்குகூட்டுறவுசங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.6.48 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. 606 நபர்களுக்கு ரூ.9.86 கோடி வீட்டு வசதிக்கடன் மற்றும் வீட்டு அடமானக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    2021-22ல் ரூ.16.13 கோடி அளவிற்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு 1.98 லட்சம் நோயுற்ற மக்களுக்கு மட்டும் ரூ.1 கோடி தள்ளுபடியாக வழங்கப்பட்டுள்ளது.சிறுவணிகர்களின் நலன்காக்க சிறுவணிகக் கடன் திட்டத்தின் கீழ் திருப்பூர் மண்டலத்தில் 537 பயனாளிகளுக்கு ரூ.1.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கம் மூலம் ரூ.395.00 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    நிகழ்ச்சியில் 1855 பயனாளிகளுக்கு ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் பயிர்கடனுதவிகளும், 52 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் சுயஉதவிக்குழுக்கடன்களும், 54 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி கடனுதவிகளும், 11 நபர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் சிறுவணிக்கடன் உதவிகளும், 69 நபர்களுக்கு ரூ.1லட்சம் மதிப்பீட்டில் மத்திய காலக்கடனுதவிகளும், 14 நபர்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் டாம்கோ கடனுதவிகளும், 1 நபருக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுவசதி கடனுதவிகளும் என மொத்தம் 2056 பயனாளிகளுக்கு ரூ.16.94 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

    விழாவில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், உடுமலைப்பேட்டை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மாவட்ட வருவாய் அலுவலர் -மேலாண்மை இயக்குநர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.தேன்மொழி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் பழனிச்சாமி, மணி, கதிரவன், திரு.துரைராஜ், முருகேசன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 18 வயது பூர்த்தி அடைந்த, 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 2022-2023 ம் நிதியாண்டில் தமிழ்நாட்டை சார்ந்த சிறுபான்மையின மக்களுக்கு கடன் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திற்கு 2022-2023 ம் நிதியாண்டிற்கு ரூ.1.55 கோடி அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்படவுள்ளது.

    தமிழ்நாடு சிறுபான்மையினர்பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் டாம்கோ விராசாட் (Virasat) கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடனுதவி சிறப்பு முகாம்கள் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.

    புதிய தொழில், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்ய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த, 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்போர் ரூ.98,000, நகர்புறங்களில் வசிப்போர் ரூ.1,20,000 இருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் சாதிச்சான்று, ஆதார் கார்டு, வருமான சான்று, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம்- திட்ட தொழில் அறிக்கை, டிரைவிங் லைசென்ஸ் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுபவர்கள் மட்டும்) மற்றும் வங்கிகள் கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    கடன் உதவி முகாம்கள் நடைபெறும் இடங்கள் : திருப்பூா் வடக்கு வட்டத்தில் திருப்பூா் நகர கூட்டுறவு வங்கி, திருப்பூா் தெற்கு வட்டத்தில் கரட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் வருகிற1-ந் தேதியும், அவிநாசி வட்டத்தில் ராக்கியாபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊத்துக்குளி வட்டத்தில், ஊத்துக்குளி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 2-ந் தேதியும், பல்லடம் வட்டத்தில், பல்லடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டத்தில் காங்கயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 5 ந் தேதியும் முகாம்கள் நடைபெறும்.

    அதேபோல தாராபுரம் வட்டத்தில் தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி, உடுமலை வட்டத்தில் உடுமலை நகர கூட்டுறவு வங்கி, மடத்துக்குளம் வட்டத்தில் கணியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 6ந்தேதியும் முகாம் நடைபெறும். முகாம் காலை 10-30 மணி முதல் மாலை 4மணி வரை நடைபெறும்.

    மேலும், தகவலுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண்.0421-2999130 மற்றும் மின்னஞ்சல் dbcwotpr@gmail.com – ஐ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • மகளிர் சுய உதவிக்குழக்களுக்கு கடன் உதவி வழங்குதல் மற்றும் மாவட்ட அளவிலான வங்கி யாளர்கள் விருதுகள் வழங்கும் விழா
    • 512 சுய உதவி குழுக்களுக்கு ரூ.46 கோடியே 90 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டது.இதன் மூலமாக 10417பேர் பயன் பெறுகிறார்கள்.

    நாகர்கோவில் :

    திருச்சியில் இன்று நடந்த விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவ னம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி மற்றும் பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சி மற்ற மாவட்டங்களுக்கு காணொலி காட்சி மூலம் வழங்கப்பட்டது. குமரி மாவட்டத்திலும் மகளிர் சுய உதவிக்குழக்களுக்கு கடன் உதவி வழங்குதல் மற்றும் மாவட்ட அளவிலான வங்கி யாளர்கள் விருதுகள் வழங்கும் விழா இன்று நாகர்கோவில் ஸ்காட் கிறி ஸ்தவ கல்லூரியில் நடந்தது.

    விழாவிற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.

    512 சுய உதவி குழுக்களுக்கு ரூ.46 கோடியே 90 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டது.இதன் மூலமாக 10417பேர் பயன் பெறுகிறார்கள்.

    விழாவில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும் மேயருமான மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார்,பிரின்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் மனோ தங்க ராஜ் வழங்கினார். முன்னதாக மகளிர் சுய உதவி குழு சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வை யிட்டார்.

    • வியாபாரிகளும் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென அதிகாரியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
    • இந்த கமிட்டியில் 15 நாட்கள் வரை இலவசமாக இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே வளத்தியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு அதிகமாக நெல் மூட்டைகள் வராததால் வியாபாரிகளும் அதிகமாக வருவதில்லை. எனவே குறைந்த அளவே கணக்கீடு வைத்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. வளத்தியில் பழைய முறைப்படி நடைபெறும் ஏலத்தில் விவசாயிகளும் வியாபாரிகளும் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென அதிகாரியும் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் ரவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விழுப்புரம் விற்பனை குழு எல்லைக்குட்பட்ட வளத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2 . 1. 2023 முதல் நெல் மறைமுக ஏலம் தொடங்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்கள் நெல் விலை பொருட்களை இங்கு விற்பனை செய்து அதிகபட்ச விலை பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எனவே விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை நன்கு காய வைத்து தூய்மையாக கொண்டு வந்து கூடுதல் விலை பெற வேண்டும் எனவும் இந்த மறைமுக ஏலத்தில் உள்ளூர் மற்றும் செஞ்சி, அவலூர்பேட்டை, கீழ்பெண்ணாத்தூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    எனவே இதில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து பயனடைய வேண்டும் எனவும் மேலும் விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை இந்த கமிட்டியில் 15 நாட்கள் வரை இலவசமாக இருப்பு வைத்துக் கொள்ளலாம். அதன் பின்னர் குறைந்த வாடகையில் 180 நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளலாம். .மேலும் நெல் மூட்டைகளை இருப்பு வைத்து அதற்காக பொருளீட்டுக்கடனாக விலை பொருள் மதிப்பிற்கு ரூ 3 லட்சம் வரை கடனாக குறைந்த வட்டியில் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நாகையில் தொழில் மையம் மூலம் ரூ. 4 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
    • தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 17 பேருக்கு ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்கி வருகிறது.

    மேலும் புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மூலமாக புதிய தொழில் தொடங்குவதற்கும்,

    தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும், தொழில் நிறுவனங்களுக்கான மானியங்களை பெறுவதற்கும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நாகை மாவட்டத்தில் மாவட்டதொழில் மையம் மூலம் 2022-2023-ம் ஆண்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 43 பேருக்கு ரூ.37லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டிலும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 17 பேருக்கு ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டிலும்,

    பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 137 பேருக்கு ரூ.2 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டிலும், பாரத பிரதமர் உணவுப்பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் 65 பேருக்கு ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 262 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 75 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 18 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும்.
    • குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பினைச் சாா்ந்த தனி நபா்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள், வியாபாரம் செய்ய பொது காலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இதில், விண்ணப்பிக்க குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் 18 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

    இதில் பொதுகால கடன் திட்டம், தனிநபா் கடன் திட்டம் மூலமாக அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையில் கடனுதவி வழங்கப்படும். பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    இதற்கான கடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம், அனைத்து மாவட்ட மத்திய மற்றும் கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். இதன் பின்னா் கடன் விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து ஜாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா் அட்டை மற்றும் வங்கிகோரும் ஆவண நகல்களுடன் இணைக்க வேண்டும்.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421 - 2999130 என்ற தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வயது வரம்பு 18 வயது பூர்த்தியாகியிருத்தல் வேண்டும்.
    • மொத்த திட்ட தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாகவும் 35 சதவீதம் முன்முனை மானியமாகவும் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்ததொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல்அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இத்திட்டத்தின்கீழ் ஆர்வமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களுக்கு உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த (நேரடி வேளாண்மைதவிர்த்த) தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிகடன் வழங்கப்படும்.இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு கல்வித்தகுதிதேவையில்லை. வயது வரம்பு 18 வயது பூர்த்தியாகியிருத்தல் வேண்டும். 55 வயதுக்குமிகாமல் இருத்தல் வேண்டும். வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. மொத்த திட்டத்தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாகவும் 35 சதவீதம் (அதிகபட்சம் ரூ.150 லட்சம்வரை) முன்முனை மானியமாகவும் வழங்கப்படும். எனவே பயனாளர்கள் சொந்தமூலதனம் செலுத்த தேவையில்லை. 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரால் நடத்தப்படும்தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.

    சொந்த முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கும், விரிவாக்கத்திற்கும்இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம் .35 சதவீதம் (அதிகபட்சம் ரூ.150 லட்சம் வரை)பின்முனை மானியமாகவும் வழங்கப்படும்.

    தொழில் முனைவோர் மேம்பாட்டுபயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பானசிறப்புபயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாடுமற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.இத்திட்டத்தின்கீழ் பயன்பெற திட்டஅறிக்கை மற்றும் ஆவணங்களுடன்www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கவேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோ சனைகள்,வழிகாட்டுதல்கள், திட்டஅறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள்மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும். கடன்பெறுவது தொடர்பாக நிதிநிறுவனங்களுடன் இணைப்பு பாலமாகவும் மாவட்ட தொழில் மையம் விளங்கும்.திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினதொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின்கீழ்விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கேட்டு கொண்டுள்ளார். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை 0421-247507, 9500713022 என்ற எண்களின் மூலம்தொடர்புகொள்ளலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்வு பென்னாகரம் அருகே பருவதன அள்ளி வட்டார நல அலுவலகத்தில் நடைபெற்றது.
    • 6 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடனுதவி என 34 பயனாளிகளுக்கு தலா 50,000 விதம் ரூ.20.55 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்வு பென்னாகரம் அருகே பருவதன அள்ளி வட்டார நல அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதனையடுத்து 28 பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் கடன் 6 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடனுதவி என 34 பயனாளிகளுக்கு தலா 50,000 விதம் ரூ.20.55 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

    இந்த விழாவில் விழாவிற்கு மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் பத்ஹூ முகம்மது நசீர் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். மேலும் உதவி திட்ட அலுவலர்கள் கார்த்திகேயன், பெரியநாயகம், வெற்றிசெல்வன்,ராஜேஷ் மாவட்ட வழ பயிற்றுநர்கள் தென்னரசு, வட்டார மேலாளர் என் பிரதீப், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றிவேல்,லலிதா, ஜான்சி ராணி, தமிழ்ச்செல்வி, கண்ணகி சமுதாய வலப் பயிற்றுநர்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற மானி யத்துடன் கூடிய திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.
    • இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு ஆர்வ முள்ள படித்த இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க ஆவன செய்யும் வகையில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் படித்த வேலையற்ற இளை ஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற மானி யத்துடன் கூடிய திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 35-லிருந்து 45-ஆகவும், சிறப்பு பிரி வினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45-லிருந்து 55-ஆகவும் உயர்த்தி தமிழ்நாடு அரசு தற்பொழுது அர சாணை வெளியிட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்ப டுத்தப்படும் மானியத்துடன் கூடிய கடனு தவி திட்டமான படித்த வேலையற்ற இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாகவும், தகுதியான அதிகபட்ச மானியம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.3.75 லட்சமாகவும் உயர்த்தி அர சாணை வெளி யிட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம். இணை யதளத்தில் கல்வித் தகு திக்கான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை பதி வேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றப்பட்ட விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட வங்கி கிளைக ளுக்கு தகுதியின் அடிப்படை யில் பரிந்துரை செய்யப்படும்.

    எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்வ முள்ள தொழில் முனை வோர்கள் புதிய தளர்வுகளு டன் கூடிய நீட்ஸ் மற்றும் யூ.ஒய்.இ.ஜி.பி. திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெற்று சுய தொழில் தொடங்கி பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்-சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்குவதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்வகை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப் பினரை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத் திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபார கடன், பெண்களுக்கான கடன், நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடு கடன் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது.

    விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்த வராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப் படும்.

    பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத் தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண் டும். ஒரு குழுவில் அதிக பட்சம் 20 உறுப்பினர் கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர் களுக்கு கடனுதவி வழங்கப் படுகிறது.

    மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்ப திவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்ப படிவங் களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப் பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல் களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதி வாளர் அலுவலகம் மற்றும் கூட்டு றவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×