என் மலர்
நீங்கள் தேடியது "பாவூர்சத்திரம்"
- சாலையை சீரமைக்க வேண்டுமென பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.
- கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தென்காசி:
கீழப்பாவூர் ஒன்றியம் கடப்பொகத்தி பகுதியில் உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென ஊர் பொதுமக்கள் சார்பில் கீழப்பாவூர் யூனியன் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் திடீரென 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக புதிய சாலை பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் மாரியப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் பிரிவு தலைவர் கணபதி, மாவட்ட ராணுவ பிரிவு துணைத் தலைவர் சுரேஷ், இளைஞரணி துணைத்தலைவர் முரளிதரன் ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.
அவர்களுடன் கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பாவூர்சத்திரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அடுத்த 45 நாட்களுக்குள் சாலையை சீரமைத்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- பாவூர்சத்திரத்தில் ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெற்று வந்தது.
- மாடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக அளவில் சந்தைக்கு வந்திருந்தனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த மாடுகள் வளர்ப்போர் மாடுகளை வாங்குவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ கடையம் மாட்டுச்சந்தை மற்றும் பிற மாட்டுச்சந்தையையே பயன்படுத்தும் சூழ்நிலையில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் பாவூர்சத்திரத்தில் ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெற்று வந்தது. தற்போது ஆட்டுச் சந்தை நடைபெறும் பகுதியின் அருகே இன்று முதல் புதிதாக மாட்டுச்சந்தை பாவூர்சத்திரம் பகுதி வியாபாரிகள் தொடங்கி உள்ளனர்.
இன்று முதல் நாள் மாட்டுச்சந்தை என்பதால் மாடுகளின் வரத்து மிகவும் குறைந்த அளவே இருந்தது. இருப்பினும் மாடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.
பாவூர்சத்திரம் மாட்டுச்சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில் வாரத்தில் புதன் கிழமை தோறும் மாட்டுச்சந்தையானது தொடர்ந்து நடைபெறும் என கூறினர். இதனை பயன்படுத்தி மாடுகளை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் பயனடை யுமாறு கேட்டுக் கொண்டனர்.
- மேலபாவூரை சேர்ந்தவர் திருமலை கடந்த சில மாதங்களாக குடல் வால்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
- தனியார் கல்குவாரி நிறுவனத்தில் உள்ள கல்வெட்டான்குழியில் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தார்.
நெல்லை:
பாவூர்சத்திரத்தை அடுத்த மேலபாவூர் ஒத்தபனையடி கோவில் தெருவை சேர்ந்தவர் திருமலை(வயது 76). இவர் கடந்த சில மாதங்களாக குடல் வால்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம் அருகே உள்ள வடக்கு கொண்டாலூர் கிராமத்தை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி. இவரது மனைவி சொர்ணம்(வயது 62). கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள தனியார் கல்குவாரி நிறுவனத்தில் உள்ள கல்வெட்டான்குழியில் அவர் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தார்.தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று சொர்ணம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடல்நிலை சரியில்லாததால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாவூர்சத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது.
- கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
தென்காசி:
தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. 45-வது பிறந்தநாள் விழா கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் சாக்ரடீஸ், விஜயன், ஒன்றிய கவுன்சிலர்கள் வளன் ராஜா, ராஜேஸ்வரி மற்றும் மதிச்செல்வன், ஷாலி மேரி, ஜெகன், டேனியல், குருசிங், செந்தூர் உள்ளிட்ட தி.மு.க. பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
- சேரன்மகாதேவி பள்ளிகளுக்கு இடையேயான ரோலர் ஸ்கேடிங் போட்டியில் 1000-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- போட்டியில் பாவூர்சத்திரத்தை சேர்ந்த வெஸ்டர்ன் காட்ஸ் இந்தியன் அகாடமி சார்பில் 42 பேர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
சேரன்மகாதேவி ஸ்கேடு காலேஜ் ஆப் என்ஜினீயரிங் டெக்னாலஜியில் தமிழன் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான ரோலர் ஸ்கேடிங் போட்டியில் 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1000-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பாவூர்சத்திரத்தை சேர்ந்த வெஸ்டர்ன் காட்ஸ் இந்தியன் அகாடமி சார்பில் 42 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 14 பேர் முதல் பரிசும், 11 பேர் 2-ம் பரிசும், 8 பேர் 3-ம் பரிசும் பெற்றனர். பரிசு பெற்ற அனைவரையும் சேரன்மகாதேவி டி.எஸ்.பி. பாராட்டினர்.
- அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.
- பொதுக்கூட்டத்தில் பாண்டித்துரை, அருள்தாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
தென்காசி:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் பாவூர்சத்திரத்தில் தி.மு.க.முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். செல்லத்துரை, முத்துப்பாண்டி, ஜேசு ராஜன், ஷேக் தாவூது, சுந்தர மகாலிங்கம், தமிழ்ச்செல்வன், கென்னடி, கனிமொழி, ஷெரிப், அப்துல் காதர், ரஹீம், ராஜேந்திரன், ரவிச்சந்திரன், சமுத்திரபாண்டி, கதிர்வேல் முருகன், சாமிதுரை, தமிழ்ச்செல்வி, ஆர்.கே. காளிதாசன், சேவியர் ராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் சீனித்துரை வரவேற்று பேசினார். கம்பம் பாண்டித்துரை, மயிலாடுதுறை அருள்தாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், சிவன் பாண்டியன், ரவிசங்கர் ஒன்றிய குழு தலைவர்கள் காவேரி, திவ்யா மணிகண்டன், சேக் அப்துல்லா, கடையநல்லூர் சேர்மன் மூப்பன் ஹபிபூர் ரகுமான், நகரச் செயலாளர்கள் சாதிர்,ஜெயபாலன் பேரூர் மன்ற தலைவர்கள் சின்னத்தாய், வேணி, காளியம்மாள், சுதா, சுந்தர்ராஜன், பி.எம்.எஸ். ராஜன் மற்றும் தி.மு.க. பிரதிநிதிகளான மதிச்செல்வன், குருசிங் செல்வராஜ், விஜயன், செந்தூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலர் திருவிழாவிற்காக மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர்.
- 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை 5.30 மணிக்கு 108 வேத விற்பன்னர்கள் பங்கு பெறும் மஹா யாக சாலை பூஜையும், கேரளா செண்டை மேளங்கள் முழங்க காலை 10 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது.
கோவில் தர்மகர்த்தா சிவன் பாண்டி தலையில் பானை வைத்து அம்மனாக நின்று அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகின்றன. இத் திருவிழாவிற்காக சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலர் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி உள்ளனர். 10 நாட்களும் வில்லுப்பாட்டு, வாண வேடிக்கை மற்றும் மேள தாளங்களுடன் அம்மனுக்கு தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.
மேலும் இதில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக ளவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பா.ஜனதா சார்பில் 108 பானைகள் வைத்து பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.
- விழாவில் சிறப்பு அழைப்பாளராக அய்யாவழி அரசம்பதி சிவச்சந்திரன் கலந்து கொண்டார்.
தென்காசி:
கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழா நிகழ்ச்சி பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன், சுடலைமாட சுவாமி கோவில் திடலில் 108 பானைகள் வைத்து பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அய்யாவழி அரசம்பதி சிவச்சந்திரன் கலந்து கொண்டார்.
இதில் தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, மாநில வர்த்தக பிரிவு செயலாளர் கோதை மாரியப்பன், ஒன்றிய பார்வையாளர் வழக்கறிஞர் முத்துலட்சுமி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செந்தூர்பாண்டியன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சேர்மன், பேச்சிமுத்து, ஒன்றிய பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராஜ், இளைஞரணி மாவட்ட செயலாளர் சரவணன், விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் விஜய் சேகர், கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் கார்மேகநாதன், சில்லரைபுரவு ஊராட்சி மன்ற தலைவர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வியாபாரிகளும், பொதுமக்களும் கேரளா செல்ல இந்த பாலருவி ரெயில் உபயோகமாக இருந்து வந்தது.
- 6 மாதத்தில் 2.34 லட்சம் பயணிகளை பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் கையாண்டுள்ளது.
சங்கரன்கோவில்:
ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ராஜா எம்.எல்.ஏ., மத்திய ரெயில்வே மந்திரிக்கு ஒரு கடிதம் எழுதி யுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நெல்லையில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம் தென்காசி, கொல்லம் வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு (வண்டி எண் 16791/16792) பாலருவி எக்ஸ்பிரஸ் கொரோனா ஊரடங்கிற்கு முன் கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று சென்றது.
இந்நிலையில் பாலக்காடு செல்லும்போது பாவூர்சத்தி ரத்திலும், பாலக்காட்டில் இருந்து வரும் போது கடை யத்திலும் நிற்காமல் செல்கிறது. இந்த ரெயில் மூலம் தமிழகத்தில் இருந்து வணிக ரீதியாக கடையம், பாவூர் சத்திரம் சுற்று வட்டார பொது மக்களும், வியாபாரிகளும் கேரளாவில் உள்ள புனலூர், கொட்டாரக்கரை, கொல்லம், கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் செல்ல இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி வந்தனர்.
கேரளா செல்ல இந்த பாலருவி ரெயில் உபயோகமாக இருந்து வந்தது. வர்த்தக ரீதியாக லாபம் தரும் நிலையங்களாக கணக்கி டப்பட்டு கடையம், பாவூர் சத்திரம் ரெயில் நிலையங்களுக்கு மீண்டும் நிறுத்தங்கள் வழங்குவதற்கு வர்த்தக ரீதியாகவும், இயக்கு தல் ரீதியாகவும் சாத்தியக் கூறுகள் உள்ளது என்று 4.10.21 அன்று மதுரை ரெயில்வே கோட்ட மூத்த இயக்குதல் பிரிவு மேலாளர், தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் உள்ள தலைமை பயணி கள் போக்குவரத்து மேலாள ருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் கொரோ னாவுக்கு முன்பு கடையம், பாவூர் சத்திரம் ரெயில் நிலை யங்களில் பாலருவி எக்ஸ்பிரஸ் நின்று சென்ற நிலையில், அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரை 6 மாத காலகட்டங்களில், 23.4 லட்சம் வருமானத்துடன் 2.34 லட்சம் பயணிகளை பாவூர்சத்திரம் ரெயில் நிலையமும், 15.7 லட்சம் வருமானத்துடன் 1.31 லட்சம் பயணிகளை கடையம் ரெயில் நிலையமும் கையாண்டுள்ளது.
மேலும் இந்த நெல்லை- தென்காசி வழித்தடத்தில் இயங்கும் ஒரே தினசரி விரைவு ரெயில் இதுவா கும். தமிழக அரசால் நியம னம் செய்யப்பட்ட ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் என்ற முறையில், கடையம் மற்றும் பாவூர்சத்திரத்தில் இரு மார்க்கங்களிலும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும். இதனை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பாவூர்சத்திரத்தில் ஆதார் கார்டு திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
- சிறப்பு முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் கார்டு திருத்த சிறப்பு முகாம் நடை பெற்றது. பாவூர்சத்திரம் துணை அஞ்சல் அதிகாரி ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் வரவேற்று பேசினார்.
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவரும், கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், மாவட்ட கண் தான ஒருங்கிணைப்பாளருமான கே.ஆர்.பி. இளங்கோ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஓவியஆசிரியர் தமிழன் தொகுத்து வழங்கினார். முடிவில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.
- பாவூர்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தென்காசி:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் யூனியன் அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தங்கம் தலைமை தாங்கினார். முருகன், ஜெகநாதன், சுமன், இசக்கிமுத்து, ஜோதி உலகம்மாள், நாகராஜன், பாண்டியராஜன் மூக்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் குணசீலன், சி.ஐ.டி.யு. பீடிதொழிலாளர் சங்க இணை செயலாளர் ஆரியமுல்லை கற்பகவல்லி, அய்யாச்சாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சொரணம் ஆகியோரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கீழப்பாவூர் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பனிடம் கோரிக்கை மனுவினை வழங்கினர்.
- உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு வீடுகளில் இருந்து பொதுமக்கள் சிலர் வெளியே வந்தனர்.
- 3 கொள்ளையர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரில் நெல்லை-தென்காசி நான்குவழிச்சாலை ஓரத்தில் இசக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலை இன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
கொள்ளை முயற்சி
அப்போது உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் சிலர் வெளியே வந்தனர். அப்போது கோவிலில் உண்டியல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்றவர்களை பார்த்து அவர்கள் சத்தமிட்டனர்.
உடனே கொள்ளையர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் உதவியுடன் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.