என் மலர்
நீங்கள் தேடியது "ஆரஞ்சு எச்சரிக்கை"
- பலத்த காற்று மற்றும் மரங்கள் சாய்ந்ததால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
- கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 3 பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று பல மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கொல்லம், ஆலப்புழா, திருச்சூர், கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
பலத்த காற்று மற்றும் மரங்கள் சாய்ந்ததால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. பாலக்காடு வடக்கஞ்சேரியில் தென்னை மரம் விழுந்ததில், தங்கமணி என்பவர் உயிர் இழந்தார்.
கனமழை காரணமாக மத்திய கேரளாவில் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பை ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பலத்த காற்று காரணமாக பல மாவட்டங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடல் அலைகள் ஆக்ரோஷமாக அடித்தப்படி உள்ளன.
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 3 பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு இருவஞ்சி புழாவில் ஒருவரும், மலப்புரம் அமரம்பலத்தில் ஒரு பெண் மற்றும் குழந்தை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கனமழை நீடிப்பதால் கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் பெரியாறு, முத்திரபுழா ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் வருகிற சனிக்கிழமை வரை மோசமான வானிலையே நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொல்லம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
- புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மும்பையில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
மும்பை:
மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராய்காட், ரத்னகிரி, சிந்துத்ரக், புனே, கோலாப்பூர் மற்றும் சதாரா மாவட்டங்களில் ஜூலை 27-ந்தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மும்பையிலும் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மலைப்பாங்கான கிராமங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஆலப்புழா மாவட்டத்திற்கு நாளை மற்றும் 5-ந்தேதியும், இடுக்கி மாவட்டத்திற்கு 6-ந்தேதியும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்த மழை கேரள மாநிலத்தில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழையாக நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2 சூறாவளி சுழற்சிகள் இணைந்திருப்பதால் வியாழக்கிழமை வரை மழையின் தாக்கம் இருக்கும் என்பதால், மலைப்பாங்கான கிராமங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பு டன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொல்லம், ஆலப்புழா, இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் இந்த மழை அதிக அளவில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழா மற்றும் பத்தனம் திட்டா மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்ப ட்டுள்ளது. மேலும் ஆலப்புழா மாவட்டத்திற்கு நாளை மற்றும் 5-ந்தேதியும், இடுக்கி மாவட்டத்திற்கு 6-ந்தேதியும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் வெப்ப அலை மேலும் தீவிரமடையும் என எச்சரிக்கை.
- தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை.
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மே 4ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெப்ப அலை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, பெரம்பலூர், கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களுக்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- கேரளாவில் இன்றும் நாளையும் அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 24-ந்தேதி மற்றும் 25-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கேரளாவில் இன்றும் நாளையும் அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- நீர்நிலைகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
கோழிக்கோடு, நாதாபுரம், குட்டியாடி போன்ற மலைப்பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. தாமரச்சேரி பகுதியில் மண் சரிவும் ஏற்பட்டது. மணிக்கு 40 கி.மீ. வேகத்திற்கும் மேலாக காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்தன. கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் பகுதியில் அரசு பஸ் மீது மரம் விழுந்தது. இதனை தொடர்ந்து அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதில் சிக்கி நின்ற ஒரு காரின் மீது மற்றொரு மரம் முறிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 1½ மணி நேரத்திற்கு பிறகே மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு காரில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.
ஆனால் அதற்குள் காரில் பயணித்த இடுக்கி ராஜகுமாரி பகுதியைச் சேர்ந்த ஜோசப் (வயது 63) பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் இருந்த அவரது கர்ப்பிணி மகள் அஞ்சுமோள், அவரது கணவர், ஜோபி ஜான், ஜோசப்பின் மனைவி அன்னக்குட்டி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அடிமாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வயநாடு மாவட்டத்திற்கு நாளை (26-ந் தேதி) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு போன்ற மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு மஞ்சள் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் வட பகுதிகளில் கடந்த 22-ந்தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கூடலூரில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் சாலைகளில் மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தொடர் மழையால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக ஊட்டி அருகே அத்திக்கல், புது தோட்டம், மஞ்சனக்கொரை, எம்.பாலாடா ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தாவரவியல் பூங்கா அருகே ராஜ்பவன் மாளிகை சாலையிலும் மரம் விழுந்தது.
கூடலூரில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் சாலைகளில் மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர் மழையால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொரப்பள்ளி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இருவயல் கிராமத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குழந்தைகளுடன் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கடும் குளிர் நிலவுவதால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரியில் கனமழை காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதோடு ஆங்காங்கே மின் வினியோகமும் தடைபட்டது. குறிப்பாக கூடலூர், பந்தலூரில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த தாலுகா பகுதிகளில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளித்து கலெக்டர் அருணா உத்தரவிட்டார்.
- மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- நாளை முதல் வரும் 11ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும்.
தெற்கு ஆந்திரா வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (06-10-2024)தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், சேலம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், வட தமிழ்நாட்டிற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் வரும் 11ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜூலை 7-ஆம் தேதி வரை 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
- மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மலப்புரம் மாவட்டத்திற்கு நாளையும், மேலும் ஒன்பது மாவட்டங்களில் செவ்வாய்கிழமையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட் என்பது அடுத்த 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதை குறிக்கும்.
கேரளா-லட்சத்தீவு-கர்நாடகா கடற்கரை பகுதிகளில் ஜூலை 7-ஆம் தேதி வரை 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- வடமாநிலங்களில் பருவமழை இன்னும் எங்கும் தொடங்கவில்லை.
- வெயில் கடுமையாக இருப்பதால் மக்கள் கவனமாக வெளியே செல்லுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி:
கடும் வெப்பம் காரணமாக தலைநகர் டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மைதானத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி கூறியதாவது:
வடகிழக்கு இந்திய பகுதிகளில் கனமழை பெய்யும். அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பருவமழை இன்னும் எங்கும் தொடங்கவில்லை. இது குறித்து கண்காணித்து வருகிறோம்.
டெல்லியில் பருவமழை இன்னும் தொலைவில் உள்ளது. கடும் வெப்பம் காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரியானா, பஞ்சாப், டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் ஜூன் 4 முதல் கடும் வெப்பம் நிலவி வருகிறது. 44 முதல் 47 டிகிரி வரை செல்சியஸ் மாறுபடுகிறது. இன்னும் 4 நாட்களுக்கு இது தொடரும். வெயில் மிகக் கடுமையாக இருப்பதால் மக்கள் கவனமாக வெளியே செல்லுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என தெரிவித்தார்.