என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீர்மானங்கள்"
- கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநில இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் தேவ.பொழிலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விலைவாசி குறைப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, நீட் தேர்வு ரத்து, புதுச்சேரிக்கு மாநில தகுதி கிடைக்க உறுதி அளித்த இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்து பா.ஜனதாவிற்கு தோல்வியை அளித்தனர்.
புதுவையில் கடந்த 3 ஆண்டுகளாக மக்களுக்கு துன்பம் அளித்த என். ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சிக்கு எதிராக இந்திய கூட்டணி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து மக்களின் நம்பிக்கையை பெற்றதனால் புதுச்சேரி மக்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கத்தை வெற்றியடைய செய்தனர். வெற்றியை அளித்த புதுச்சேரி மாநில மக்களுக்கு இந்தியா கூட்டணி நன்றியை தெரிவிக்கிறது.
தொடர்ந்து போராட்டங்களை நடத்தி மக்கள் நம்பிக்கையை இழந்த என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சியை அகற்றி, எதிர்காலத்தில் மக்கள் நலம் காக்கும் அரசை அமைக்க இந்திய கூட்டணி பணியாற்றும். புதுச்சேரி மாநில மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- எத்தனை காலம் தான் பிறரை சார்ந்திருக்கப்போகிறோம் என்பது தெரியவில்லை.
- அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஒரே கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் காமராஜர் அரங்கில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை தமிழகத்தில், காங்கிரசின் தற்போதைய நிலை பற்றிய தனது வேதனையை தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
தமிழகத்தில் எத்தனை காலம் தான் பிறரை சார்ந்திருக்கப்போகிறோம் என்பது தெரியவில்லை. எனவே வரும் காலங்களில் எந்த திசையில் பயணிக்கப் போகிறோம் என்பதை தொண்டர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பிற கட்சிகளை சாராத நிலை வேண்டும் என்றால் அதற்கும் தொண்டர்கள் தான் பதில் அளிக்க வேண்டும். அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஒரே கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்திற்கு தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார், அகில இந்திய செயலாளர் சிரி வெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட சுமார் 1500 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
காங்கிரஸ் கட்சிக்கென்று தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. அதை விரிவுபடுத்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியை அனைத்து நிலையிலும் செயல்படுகிற அமைப்பாக முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும். செயல்படாத கட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
காங்கிரஸ் கட்சி 1989-ல் தனித்து போட்டியிட்ட போது பெற்ற 20 சதவிகித வாக்குகளை இதுவரை தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத எந்த கட்சியும் பெற்றதி ல்லை, பெறவும் முடியாது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை விரிவுபடுத்தி உறுதிபடுத்த வேண்டும்.
ராகுல்காந்தியின் தமிழக கனவு மெய்ப்படுகிற வகையில் செயல்பட வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்தில் இருந்து வலிமை படுத்துவதற்கு எத்தகைய வியூகத்தை வகுக்கிறாரோ, அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு அவரது முயற்சிகள் வெற்றிபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென இப்பொதுக்குழு கூட்டம் கேட்டுக் கொள்வது உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கிடையே முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்தார். பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி தொகுதியை மீண்டும் கேட்டார்.
ஆனால் அந்த தொகுதி ம.தி.மு.க.வுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் வேறு தொகுதிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்ப டவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்து வரும் திருநாவுக்கரசர் இன்றைய கூட்டத்தை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்து.
- கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி தீர்மானங்களை படித்தார்.
- மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி ஒன்றியம் பனையபுரத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபா கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் சங்கீத அரசிரவி துரை முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவி காந்த ரூபி வரவேற்றார்.கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி தீர்மானங்களை படித்தார். மக்கள் குறைகளை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் பழனி பேசியதாவது,
இக்கிராமத்தில் வசிக்கும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு ,வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க ஆணை , கிராமத்தி்ல் பிளாஸ்டிக் முழுமையாக ஒழிக்கப்பட்டு ,பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் .இவ்வாறு கலெக்டர் பேசினார்
இதில் மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் ஜோதி , மாவட்ட ஊராட்சிகள் இயக்குனர் பொன்னம்பலம், நேர்முக உதவியாளர் லட்சாதிபதி, தாசில்தார் யுவராஜ் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி ,முபாரக் அலி பேக், வேளாண்மை உதவி இயக்குனர் கங்காகவுரி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், ஒன்றிய பொறியாளர் இளையராஜா, கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ், துணைத் தலைவர் கலா, ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி ராமராவ், கஸ்தூரி பாண்டியன், கண்காணிப்பு குழு எத்திராசன், கல்வி மேலாண்மை குழு ராஜசேகர்,கணேசன் புகழேந்தி ,வேல்முருகன், மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.
மேல்மலையனூர்
மேல்மலையனூர் அருகே தேப்பிரம்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் கண்மணிநெடுஞ்செழியன் தலைமைக தாங்கி பேசினார். இதில் வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கன், சரவணக்குமார் மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன்,செல்வி ராம சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தோப்புத்துறை ஊராட்சிபள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் நிஷாந்தி தலைமையில் நடந்தது.
முன்னதாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி, கூட்ட பொருள் குறித்து பேசினார்.
தொடர்ந்து, துணை தலைவர் உமா மகேஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர் அம்சவல்லி கோவிந்தராஜுலு, கல்வியாளர் ஆர்த்தி, உறுப்பினர்கள் ரபியத்துல் பஜ்ரியா, மீனா, முருகானந்தம், சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்துவது, 10, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்லூரி கல்வி பெற வழிகாட்டுவது மற்றும் உதவி செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.
- ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடந்தது.
- 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு வரவேற்றார். உதவி அலுவலர் பிரபாகரன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்தல், கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சங்கராபுரம் அருகே ரங்கப்பனூரில் ஏப்ரல் மாத சாதாரண கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் அனைவர்களுக்கும் மாதாந்திர படி வழங்கியது, மற்றும் ஊராட்சிக்கு தேவையான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ரங்கப்பனூரில் ஏப்ரல் மாத சாதாரண கூட்டம் நடைபெற்றது. ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு துணை தலைவர் ராதிகா பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் மீணா துரை, இளம்வழிதி, ஸ்டெல்லா வேலூ, தமிழ் ரகு, ரூபாவதி புகழேந்தி, ஏழுமலை, மாசிலாமணி, விருத்தம்பால் பச்சையாப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைவர்களுக்கும் மாதாந்திர படி வழங்கியது, மற்றும் ஊராட்சிக்கு தேவையான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் திருமால்வளவன் நன்றி கூறினார்.
- கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. மகாத்மா தேசிய ஊரக வளர்ச்சித் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம், டெங்கு காய்ச்சல் தடுப்பு, தூய்மை பாரத இயக்கம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சி பொது செலவினம், ஜல் ஜீவன் இயக்கம், சாலை விரிவாக்கம் ஆகிய வளர்ச்சி பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார், ஊர் முக்கியஸ்தர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா, ஊராட்சி உறுப்பினர்கள் பொன்னையா, மகாலட்சுமி, சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.
- மாநில இளைஞரணி செய லாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் உத்தர வின் பேரில் குமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் வருகிற 16-ந்தேதி சுசீந்திரம் செல்வம் திருமண மண்டபத் தில் காலை 9 மணிக்கும், குளச்சல் தொகுதிக்கு குளச் சல் எஸ்.எஸ்.ஆடிட்டோரி யத்தில் மாலை 4 மணிக்கும் திராவிட மாடல் பயிற்சி பாச றைக் கூட்டம் நடைபெற உள்ளது.
- இதில் நிர்வாகிகள் அனைவரும் ஏராளமான இளைஞர் அணியினரை பங் கேற்கச் செய்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாகர்கோவில், அக்.13-
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க.மாநகர, நகர, ஒன்றிய,பேரூர், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நாகர் கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் எப்.எம். ராஜரெத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம். எல்.ஏ. ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரைபா ரதி, பார்த்தசாரதி, பொதுக் குழு உறுப்பினர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், பாபு, செல்வம், பிராங்கிளின், சுரேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் பேசும்போது கூறியதா வது:-
விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றவேண்டும். தனித்து நின்றாலும் தி.மு.க. வெற்றி பெறும் அளவுக்கு உங்களின் அனைவரது உழைப்பும் இருக்க வேண்டும். கட்சி நிர் வாகிகளுக்குள் என்ன பிரச் சினை இருந்தாலும் அவற்றை எல்லாம் மறந்து கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்றார்.
நடந்து முடிந்த கட்சியின் 15-வது பொதுத்தேர்தலில் கட்சித் தலைவராக 2-வது முறையாக தேர்ந் தெடுக்கப்பட்ட, திராவிட மாடல் தத்துவம் மூலமாக தமிழகத்தில் பொற் கால ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கும், தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனை களை ஏழை, எளிய மக்களை சென்றடையும் வகையில் மாவட்டம், ஒன்றியம், மாநக ரம், நகரம், பேரூர், ஊராட்சி மற்றும் கிளைக்கழக பகுதி களில் சாதனை விளக்க பொதுக்கூட்டம், தெரு முனை கூட்டங்கள், கவிய ரங்கம், பட்டிமன்றம் நடத்த வேண்டும்.
மாநில இளைஞரணி செய லாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் உத்தர வின் பேரில் குமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் வருகிற 16-ந்தேதி சுசீந்திரம் செல்வம் திருமண மண்டபத் தில் காலை 9 மணிக்கும், குளச்சல் தொகுதிக்கு குளச் சல் எஸ்.எஸ்.ஆடிட்டோரி யத்தில் மாலை 4 மணிக்கும் திராவிட மாடல் பயிற்சி பாச றைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் நிர்வாகிகள் அனைவரும் ஏராளமான இளைஞர் அணியினரை பங் கேற்கச் செய்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
- பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்பட்டது
கன்னியாகுமரி:
திங்கள் நகர் பேரூராட்சி யின் சாதாரண கூட்டம் தலைவர் சுமன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர் கள் கலந்து கொண்டனர்.
ரூ. 15 லட்சம் செலவில் எலக்ட்ரிக் வேலை மேற்கொள்வது, ரூ.1 கோடி செலவில் மீன் சந்தை புதிய கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், கூடுதல் செலவாக ரூ. 50 லட்சம் செய்ய வேண்டும்.
பஸ்நிலையத்தில் வேகத்தடை உயரத்தை குறைப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் வைக்கப்பட்டன. ஆனால் ஏற்கனவே முடிவு பெற்ற பணிகளுக்கு மீண்டும் செலவு செய்ய இருப்ப தாகவும், மதிப்பீடு செலவு கள் அதிகமாக இருப்ப தாகவும் கூறி மொத்த தீர்மானங்களையும் நிறைவேற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஜெயசேக ரன், சரவணன், முத்துக் குமார், கவுதமி, சுஜாதா, காங்கிரஸ் கட்சி கவுன்சி லர்கள் பீட்டர் தாஸ், சுகன்யா மற்றும் ஹேமா ஆகிய 8 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அவர்களுடன் செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் பேச்சு வார்த்தை நடத்தினார். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. மதியம் தொடங்கிய போரா ட்டம் இரவு 7 மணி வரை நீடித்தது. இது தொடர்பாக இரணியல் போலீஸ் நிலைய த்திற்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், பேரூராட்சி அலுவலகம் வந்து போரா ட்டத்தில் ஈடுபட்ட கவுன்சி லர்கள் மற்றும் செயல் அலுவலர் எட்வின் ஜோசி டம் தனித்தனியாக பேசினார். செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் கூறும் போது, தீர்மானம் ரத்து செய்ய வேண்டும் என்று கவுன்சிலர்கள் கேட்கி றார்கள். நாங்கள் ஓத்தி வைக்கலாம் என்று கூறு கிறோம் என்றார்.
உள்ளிருப்பு போராட்ட த்தில் ஈடுபட்ட கவுன்சில ர்கள் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பின்னர் தங்களுக்குள் பேசி முடிவு சொல்கிறோம் என்று கூறினர். தொடர்ந்து பேச்சு வார்த்தை யில் முடிவு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் திங்கள் நகர் பேரூராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கடலூர் அரசு பாலிடெக்னிக்- மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்துகின்றன.
- ஜனவரி 2022 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் வட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 4-வது வட்ட மாநாடு தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. சங்க கொடியை வட்டத்துணைத்தலைவர்கிருஷ்ணமூர்த்தி ஏற்றினார். மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்ட துணைத்தலைவர்ராமதாஸ் வரவேற்புரை ஆற்றினார். வட்ட செயலாள ர்கல்யாணசுந்தரம் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
மாநாட்டை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் புருஷோத்தமன் தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில் அறிக்கையின் மீது விவாதத்தை வாழ்த்திஓய்வு பெற்ற துணைப்பதிவாளர் குருமூர்த்தி த ேபசினார். ஊரக வளர்ச்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர்நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் காசிநாதன், குந்தைவேலு, மாவட்ட துணைத்தலைவர்கள் கருணாகரன், ஆதவன், சிவப்பிரகாசம், மாவட்ட இணைச்செயலாளர்கள் பாலு, பச்சையப்பன், வி.சுந்தர்ராஜன், வேளாண்மை துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர்.ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், ஆகியோர் பேசினார்கள்.
மாநாட்டில் தீர்மானங்களை முன்மொழிந்து வட்ட துணைத்தலைவர்கள்பஷீர், சந்திரசேகரன். ரவிச்சந்திரன். வட்ட இணைச்செயலாளர் ஜோதி ஆகியோர் பேசினார்கள்.
மாநாட்டில் புதிய வட்டக்கிளை நிர்வாகிகளாக தலைவராக பத்மநாபன். செயலாளராக ராமதாஸ். பொருளாளராக குலசேகர மணவாள ராமானுஜம், துணைத்தலைவர்களாக கிருஷ்ணமூர்த்தி, பஷீர், சந்திரசேகரன்ர, விச்சந்திரன், ராமசாமி. இணைச்செயலாளர்களாக ஜோதி, விஸ்வலிங்கம், முருகேசன்,அரிக்குமார் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாநில செயலாளர்மனோகரன் பேசினார். வட்ட இணைச்செயலாளர்ரா மசாமி நன்றி கூறினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-ஜனவரி 2022 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்க வேண்டும்.
கடலூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைத்திட வேண்டும்.கடலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்திட வேண்டும் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நாகர்கோவில் தென்குமரி நாட்டுப்புற கலைஞர்கள் கழகத்தின் சிறப்பு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.
- பேராசிரியர் பெருமாள் தலைமை தாங்கினார். பேராசிரியர் கலையரசு, சிலம்பக் கலைஞர் சிலம்பொலி ஜெயராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் தென்குமரி நாட்டுப்புற கலைஞர்கள் கழகத்தின் சிறப்பு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.
பேராசிரியர் பெருமாள் தலைமை தாங்கினார். பேராசிரியர் கலையரசு, சிலம்பக் கலைஞர் சிலம்பொலி ஜெயராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி நடத்தும் ஊரார்கள் கலை ஞர்களுக்கு தங்கும் இடமும், உணவும் நல்ல முறையில் கொடுக்கப்பட வேண்டும், கிராமிய கலை ஞர்களை வரன் முறைப் படுத்தப்பட்ட கலையின் கலைஞர்களை போல் நடத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்களை கலைஞர்கள் சங்க தலைவர் தங்கமணி வாசித்தார்.
முன்னதாக இசை ஆசிரியர் கிருஷ்ணன் இறைவணக்கம் பாட, வில்லிசைக் கலைஞர் தர்மலிங்கம் வரவேற்றார். முடிவில் பரதநாட்டிய ஆசிரியை மெரினா மஜு நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்