என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வரத்து"
- நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் மழை கொட்டி தீர்த்தது.
- திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் மழை கொட்டி தீர்த்தது. கொட்டாரம், சுசீந்திரம், தக்கலை, இரணியல், குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது.
விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவி வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 29.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வந்த நிலையில் தற்பொழுது உயர தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் 5¾ அடி உயர்ந்த நிலையில் நேற்று மேலும் 2¾ அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 25.95 அடியாக உள்ளது. அணைக்கு 301 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 35.71 அடியாக உள்ளது.
அணைக்கு 826 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 646 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-பேச்சிப்பாறை 6.6, பெருஞ்சாணி 14.6, சிற்றாறு 1-12, சிற்றார் 2-16.8, களியல் 6, கன்னிமார் 3.6, கொட்டாரம் 1.2, குழித்துறை 4, மயிலாடி 5.4, நாகர்கோவில் 2.2, சுருளோடு 9.6, தக்கலை 5.3, குளச்சல் 4.6, இரணியல் 6.2, திற்பரப்பு 14.2, கோழிப்போர்விளை 10.2, அடையாமடை 2, முள்ளங்கி னாவிளை 9.6, ஆணைக்கிடங்கு 4.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குலசேகரம் தடிக்காரன்கோணம், கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்க ளில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
- 80 விவசாயிகள் 20டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்,
- மரம் முருங்கை ரூ.6முதல் 7வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.14 முதல் 15வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
நேற்று 80 விவசாயிகள் 20டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர், இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.8க்கும், மரம் முருங்கை ரூ.6முதல் 7வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.14 முதல் 15வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.
- வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்பூசணி ஆகியவற்றை மக்கள் அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர்.
- சேலம் மார்க்கெட்டுக்கு முலாம் பழம் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.25 என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
ேசலம்:
சேலம் மாவட்டத்தில் தினமும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. முழுமையான கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே 97 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. மதிய நேரங்களில் வெயில் தாக்கம் அதிகளவில் இருப்பதால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்ப டுகிறது.
முலாம் பழம்
வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்பூசணி ஆகியவற்றை மக்கள் அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர்.
நடப்பாண்டில் ஆந்திரா மாநிலம் கடப்பாவில் முலாம்பழம் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அங்கு முலாம் பழம் அறுவடை செய்து லாரிகளில் லோடு ஏற்றி சேலம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால் சேலம் மார்க்கெட்டுக்கு முலாம் பழம் வரத்து அதிகரித்துள்ளது.
குவிப்பு
ஒரு கிலோ ரூ.25 என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். அதேபோல் சாலையோர கடைகளிலும் முலாம்பழம் அதிகளவில் குவித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகை சீசன் சமயத்தில் வெல்லத்தின் தேவை அதிகரித்து வரும்.
- சேலம் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 டன் வரை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
அன்னதானப்பட்டி:
சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி சேலத்தில் வெல்லம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காமலாபுரம், நாலுகால்பாலம், டேனிஷ்பேட்டை, கருப்பூர், வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, பேளூர், தும்பல், உள்ளிட்ட பகுதிகளில் 130–-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை அதன் விவசாயிகள் சேலம் அன்னதானப்பட்டி, மூலப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள வண்டிக்காரன் நகர் பகுதியில் கரும்பு வெல்லம் உற்பத்தி விவசாயிகள் சங்கத்தில் பொது ஏலத்தில் விட்டு வருகிறார்கள். இங்கு ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் ஏலம் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் சபரிமலை கோவில் சீசன் கடந்த மாதம் 16- ம் தேதி தொடங்கியது. அய்யப்ப சாமிக்கு அரவணை, அப்பம், பாயாசம், பஞ்சாமிர்தம், பானகம் போன்ற பிரசாதங்கள் நிவேதிக்கப்படுகிறது. இதனால் வெல்லத்தில் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் சேலம் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் வெல்லம் உற்பத்தி வழக்கத்தைவிட 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
மேலும் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகை சீசன் சமயத்தில் வெல்லத்தின் தேவை அதிகரித்து வரும். இதனால் உற்பத்தியாளர்கள் வெல்லம் உற்பத்தியை அதிகரித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் உற்பத்தியாகி இங்கு வரும் வெல்லத்தை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஏலம் மூலம் வாங்கிச் செல்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 டன் வரை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 முதல் 70 டன் வரை வெல்லம் விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக 80 முதல் 100 டன் வரை வெல்லம் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.
நேற்றைய விலை நிலவரப்படி 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் குண்டு வெல்லம் ரூ.1230 முதல் ரூ.1290 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ வெல்லம் ரூ.41- ரூ.43 என விற்கப்படுகிறது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை வெல்லம் விற்பனை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை சீசன் வரை விற்பனை மும்முரமாக நடைபெறும். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
- வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
- மரம் முருங்கை ரூ.20முதல் 25 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.65முதல் 70வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
மடத்துக்குளம்,அக்.31-
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம்-இந்திராணி தம்பதியரின் மகள் பட்டீஸ்வரி (வயது 19). சற்று காது கேட்கும் திறனை இழந்த மாற்றுத்திறனாளியான இவர் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிப்பை முடித்து, மருத்துவ படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வு எழுதினார். இதில் 720க்கு 117 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாற்றுத்திறனாளி மாணவி
மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்க தேர்வாகி உள்ளார். ஆனால் படிப்பதற்கு போதிய பண வசதி இல்லாததால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். பட்டீஸ்வரியின் தந்தை கூலி வேலையும், தாய் தூய்மை பணியாளராகவும் பணியாற்றி வரும் நிலையில் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்துவதற்கே போதுமானதாக இல்லை. இதனால் அரசு தனக்கு மருத்துவ படிப்பு படிக்க தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பட்டீஸ்வரி மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
மருத்துவம் படிக்க வேண்டும் என்பது எனக்கு சிறு வயது முதலே விருப்பம். இதனால் சிறுவயதில் இருந்தே நன்றாக படித்து வந்தேன். 10-ம்வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண்ணும், பிளஸ்-2 தேர்வில் 512 மதிப்பெண்ணும் பெற்றேன். மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வு எழுதினேன்.கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 104 மதிப்பெண்கள் பெற்றேன். இதனால் எனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. 2-வது முறையாக 2022ம் ஆண்டு நீட் தேர்வு எழுதினேன். இதில் 117 மதிப்பெண்கள் பெற்றேன். இதன் மூலம் எனக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஆனால் போதிய பண வசதியில்லாததால் மருத்துவம் படிக்க முடியாத நிலையில் உள்ளேன்.
ஆசிரியர்கள் உதவி
எனது தந்தை தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறார். தாய் தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார். அண்ணன் காளீஸ்வரன் காட்டுவேலைக்கு சென்று வருகிறார். இதன் மூலம் எங்களுக்கு குறைந்த வருமானமே கிடைக்கிறது. எனது தாய்க்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு மாதந்தோறும் மருந்து மாத்திரைகள் வாங்க செலவு ஆகிறது. இதனால் மருத்துவம் படிக்க சீட் கிடைத்தும் என்னால் படிக்க முடியாத நிலை உள்ளது.
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கு கூட எங்களது குடும்பத்திடம் பணம் கிடையாது. நான் படித்த மடத்துக்குளம் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் வசூலித்து தந்தார்கள். மருத்துவம் படிக்க புத்தகம், தங்குவதற்கான விடுதி கட்டணம் என நிறைய செலவாகும். அந்த அளவுக்கு எங்களால் பணத்தை புரட்ட முடியவில்ைல. மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் உதவிகள் செய்வதாக கூறியுள்ளார்.
தாய்க்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதால் நான்தான் வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. முதலில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாததால் ஒரு வருடம் வீட்டில் இருந்தவாறே அடுத்த நீட் தேர்வுக்கு தயாரானேன். மாநில பாட புத்தகங்களை வைத்தே படித்தேன். யூ-டியூப் மூலம் ஆசிரியர்கள் கற்றுகொடுத்தவற்றையும் பார்த்து தேர்வுக்கு தயாரானேன். தாய்க்கு உடல் நிலை பாதிப்பால் வீட்டில் உள்ள ஆடு-மாடுகளை நான்தான் மேய்த்து விட்டு வருகிறேன். அதனை பராமரிக்கவும் செய்கிறேன். சமையல் வேலைகளையும் செய்கிறேன். தம்பி யுவபாரதி(10) 5-ம்வகுப்பு படிக்கிறான். அவனையும் கவனிக்க வேண்டியது உள்ளது.
வீட்டுவேலைகள்
வீட்டு வேலைகளையும் பார்த்து விட்டு நீட் தேர்வுக்கு தயார் ஆனேன்.தினமும் அதிகாலை 4மணிக்கு எழுந்து படிப்பேன். இரவு வீட்டு வேலைகள் முடிந்ததும் 8-30மணி முதல் 11-30 மணி வரை படிப்பேன்.
எனக்கு காது லேசாக கேட்காது. இதனால் என்னை சிலர் ஏளனமாக கூட பேசுவார்கள். அதையெல்லாம் மனதில் வைக்காமல் தேர்வுக்கு தயாரானேன். தற்போதைய செலவுக்காக வீட்டில் உள்ள ஆடு, மாடுகள் சிலவற்றை விற்று விட்டோம். மீதி செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறேன். தற்போது பலர் உதவி செய்து வருகிறார்கள். மடத்துக்குளம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் , வேடப்பட்டி பள்ளி ஆசிரியர்கள் , வேடப்பட்டி ஊராட்சி தலைவர் ஆகியோர் நிதி அளித்துள்ளார்கள். இருப்பினும் அரசு எனது மருத்துவ படிப்புக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது.
- 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம் வரத்து , தற்போது 100 டன்னாக அதிகரித்துள்ளது.
அன்னதானப்பட்டி:
சேலம் மார்க்கெட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் கர்னூல், கர்நாடகா மாநிலம் தரிக்கெர, சித்ரதுர்கா உள்ளிட்ட இடங்களிலிருந்து வெங்காய மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் விளைச்சல் அதிகமாக இருப்பதால் சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. சேலம் கடைவீதி ,ஆற்றோரம் தெரு, ஆனந்தா காய் மார்க்கெட், பால் மார்க்கெட் பகுதிகளில் கடந்த மாதம் தினமும் 40 முதல் 60 டன்னாக இருந்த வெங்காயம் வரத்து , தற்போது 100 டன்னாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பெரிய வெங்காயம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
தற்போது பெரிய வெங்கா யத்தில் சிறிய அளவு 1 கிலோ ரூ.25-30 எனவும், பெரிய அளவு ரூ.35-40 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.15-20 வரை விற்பனை ஆன தற்போது ரூ.40-60 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.
- மரம் முருங்கை ரூ.65முதல் 70 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.75முதல் 80 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
- வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்,
நேற்று 25 விவசாயிகள் 1 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.70 முதல் 80 வரைக்கும், மரம் முருங்கை ரூ.65முதல் 70 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.75முதல் 80 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும், சில வாரங்களுக்கு முன்பு முருங்கை பூ பூத்த நிலையில் மழை பெய்ததால் முருங்கைக்காய் வரத்து தற்போது மிகவும் குறைந்துள்ளதாகவும். இன்னும் ஒரு வாரத்திற்கு வரத்து குறைவாக தான் இருக்கும்.தற்போது தென் மாவட்டங்களில் இருந்து தான் மார்க்கெட் மற்றும் ஓட்டல்களுக்கு முருங்கைகாய் வந்து கொண்டு உள்ளது என்று முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.
- கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது.
- இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சேலம்:
ஆந்திராவில் ராஜமுந்திரி, புலிவேந்தலா, கடப்பா, நந்திமண்டல், நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் சாத்துக்குடி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் சாத்துக்குடி இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு வழக்கத்தை விட, வரத்து அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் கடந்த ஒரு மாதமாக சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. சேலத்திற்கு வழக்கமாக 30 டன் சாத்துக்குடி விற்பனைக்கு வரும். ஆனால் சில நாட்களாக 50 டன்னுக்கு மேல் விற்பனைக்கு வருகிறது. ஆயுதபூைஜக்கு முந்தைய நாள் இதன் வரத்து 70 முதல் 80 டன்னாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது அளவு பொறுத்து சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது.
- இதைத் தொடர்ந்து இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சீத்தா பழங்களை அறுவடை செய்து பழ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. மேலும் இங்கு சிறு கரடுகள் குன்றுகள் மலைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. கரடு பகுதியில் சிறு குன்று பகுதியில் மற்றும் தோட்டங்களில் ஓரங்களில் அதிகளவில் சீத்தா மரங்கள் உள்ளன.
இதில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால் அதிகளவில் சீத்தாப்பழம் விளைச்சல் கண்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சீத்தா பழங்களை அறுவடை செய்து சின்ன திருப்பதி பழ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
ஒரு கிரேடு 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து இங்கு அறுவடை செய்யப்படும் சீத்தா பழங்களை மொத்தமாக வியாபாரிகள் வாங்கி கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைத்து விற்பனை செய்கின்றனர். இந்த ஆண்டு சீதாப்பழம் விற்பனை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கடந்த சில மாதங்களாக பருத்தி மூட்டைகள் வரத்து அதிக அளவில் இருந்தது.
- இந்த வாரம் ஆயிரம் மூட்டைகள் மட்டும் பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டது.
அந்தியூர்:
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதிர்ப்புறம்அமைந்துள்ளது. இங்கு விவசாயிகளின் விளை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும்.
இந்த நிலையில் அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்தி நகர், சங்கரா பாளை யம், எண்ணமங்கலம், சின்னத்தம்பி பாளையம், பச்சம் பாளையம், கள்ளி மடை குட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டு உள்ளனர்.
இதையொட்டி வெள்ளிக்கிழமை முதல்திங்கட்கிழமை வரை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடத்தில் பருத்தி வைக்கப்பட்டு அதன் ஏலம் திங்கட்கிழமை காலை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெறும்.
இந்த ஏலத்தில் புளியம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்தியமங்கலம், அவிநாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலம் எடுத்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக பருத்தி மூட்டைகள் வரத்து அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் பருத்தி விளைச்சல் குறைவானதை யொட்டி அந்தியூர் ஒழுங்கு முறை கூடத்துக்கு பருத்தி வரத்து குறைந்தது.
இதையடுத்து இந்த வாரம் ஆயிரம் மூட்டைகள் மட்டும் பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டது.
- கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது.
- இதன் காரணமாக அங்கிருந்து நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 டன் சாத்துக்குடி சேலம் மாவட்டத்துக்கு விற்பனைக்கு வருகிறது.
சேலம்:
ஆந்திரா கடப்பா, நந்திமண்டல் உள்பட பல இடங்களில் சாத்துக்குடி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் சாத்துக்குடி இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 டன் சாத்துக்குடி சேலம் மாவட்டத்துக்கு விற்பனைக்கு வருகிறது. இங்கு விற்பனைக்கு வரும் சாத்துக்குடியை சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
சாத்துக்குடி வரத்து அதிகரிப்பால் சேலம் மாநகரில் விலை சரிந்துள்ளது. கடந்த கோடையில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.70 முதல் ரூ.100க்கு விற்றது. தற்போது வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30 முதல் ரூ.50 என சரிந்துள்ளது. விலை சரிந்துள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
- நேற்று 90 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- வட மாநிலங்களில் கனமழை காரணமாக வரத்து குறைவானதால் இங்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை கூடி இருப்பதாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.நேற்று 90 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ - 11 க்கும், மரம் முருங்கை ரூ.9 க்கும், கரும்புமுருங்கை ரூ.13க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், சட்டீஸ்கர், மும்பை, நாக்பூர், பூனே, கொல்கத்தா ஆகிய பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்க வாங்கி சென்றனர். வட மாநிலங்களில் கனமழை காரணமாக வரத்து குறைவானதால் இங்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை கூடி இருப்பதாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்