search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோட்டார்"

    • இன்று ஹோம வழிபாட்டுடன் விழா தொடங்கியது.
    • 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பட்டாரியர் புதுதெருவில் புங்கையடி விநாயகர் ஆலயம் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவில் கோட்டாறு பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செப்பிட்ட சாஸ்தா டிரஸ்ட் மூலம் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.

    இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் படி இன்று (வெள்ளிக்கிழ மை) காலை தொடங்கி 3 நாட்கள் விழா நடைபெறு கிறது. இன்று காலை 7 மணிக்கு மங்கல இசை, நாதஸ்வரம் ஆகியவற்றுடன் விழா தொடங்கி தேவார பண்ணிசை பாடப்பட்டது.

    தொடர்ந்து மகா கணபதி ஹோமம், புண்யாக வாசனம், நவகிரக ஹோமம், கோ பூஜை செய்யப்பட்டு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இரவு 8.30 மணிக்கு நைட் பேர்ட்ஸ் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கி றது. 2-ம் நாள் நிகழ்ச்சியாக நாளை (22-ந்தேதி) யும் சிறப்பு வழி பாடுகள், அன்னதானம் போன்றவை நடக்கிறது. மாலை 6 மணிக்கு வேதிகார்ச்சனை, விநாயகர் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டு விமானம், கோபுரம் கலச ஸ்தானம் செய்யப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு கடலூர் டாக்டர் சிவாஜி கண்ணன் வழங்கும் பல் சுவை நிகழ்ச்சி நடக்கிறது.

    23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழ மை) காலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெறுகிறது. அதன்பிறகு ராஜகோபுரம், முலாலய கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து புங்கையடி விநாயகருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை, கோ பூஜை நடக்கிறது.

    அதன் பிறகு சிவானி சிவமித்ரா சகோதரர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு மாபெரும் அன்னதானம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நாதஸ்வர மேளதாளம் முழங்க விசேஷ அலங்காரத்துடன் மூசிக வாகனத்தில் புங்கையடி விநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா குழு தலைவர் நாகராஜன், செயலா ளர் முருகப்பெரு மாள், பொருளாளர் ரவி மற்றும் கவுரவ ஆலோச கர்கள், செயற்குழு உறுப்பி னர்கள், நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ள னர்.

    விழாவையொட்டி கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    • போலீசாரின் அதிரடி சோதனையில் 7 கஞ்சா வியாபாரிகள் சிக்கினர்
    • கஞ்சா பொட்டலங்களை மாணவர்களுக்கு சப்ளை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இதன் காரணமாக தற்பொழுது கஞ்சா விற்பனை ஓரளவு குறைந்து உள்ள நிலையில் ஒரு சில இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படு வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இதை கண்காணிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கோட்டார் பகுதியில் போன் மூலமாக கஞ்சா விற்பனை நடை பெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் இன்று காலை கஞ்சா வியாபாரி ஒருவரை பிடித்தனர்.

    அவரை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு கஞ்சா சப்ளை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து மற்ற கஞ்சா வியாபாரிகளையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    பிடிபட்ட கஞ்சா வியா பாரி உதவியு டன் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிடிபட்ட கஞ்சா வியாபாரியை மற்ற வியாபாரிகளுடன் போனில் பேச வைத்து பொறிவைத்து போலீசார் அவர்களையும் மடக்கி பிடித்தனர். இன்று காலை முதல் மதியம் வரை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 7 கஞ்சா வியாபாரிகள் சிக்கி உள்ளனர்.

    அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் கஞ்சா பொட்டலங்களை மாணவர்களுக்கு சப்ளை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    பிடிபட்ட 7 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததை யடுத்து அவர்களை பிடிக்க வும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் கோட்டார் பகுதி யில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • போலீஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி சோதனை
    • சம்பள பணத்தை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என்று கூறி கதறி அழுதார்.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் லிடியா (வயது 28).

    இவர், நாகர்கோவிலில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை லிடியா வழக்கம்போல் வேலைக்கு வந்தார். மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல தயாரானார். இதையடுத்து அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் சம்பள பணம் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. பணத்தை லிடியா தனது கைப்பையில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.

    வடசேரியில் இருந்து கூட்டப்புளி செல்லும் பஸ்சில் லிடியா ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் லிடியா கைப்பையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. இதையடுத்து அவர் கூச்சலிட்டார் தனது பணத்தை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என்று கூறி கதறி அழுதார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

    பின்னர் பஸ் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து போலீசார் பஸ்சில் இருந்த பயணிகள் ஒவ்வொருவரிடமும் சோதனை செய்தனர்.ஆனால் பணம் கிடைக்க வில்லை. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு பஸ் மீண்டும் கூட்டபுளிக்கு புறப்பட்டு சென்றது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி லிடியாவிடம் பணம் பறித்தது பெண் கொள்ளையர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஏற்கனவே கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு அண்ணா பஸ் நிலையத்தில் ஓடும் பஸ்சில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தது.

    இது தொடர்பாக சில பெண்களை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் மீண்டும் ஓடும் பஸ்சில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

    எனவே இந்த சம்பவத்தில் பழைய கொள்ளையர்க ளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • ஆயுர்வேத மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று சிகிச்சை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மூலிகை கண்காட்சி இன்று தொடங்கியது. தொடர்ந்து வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியை மேயர் மகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் கிளாரன்ஸ் டெவி, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், கவுன்சிலர்கள் அனந்த லட்சுமி, சொர்ணதாய், மாநகர செயலாளர் ஆனந்த், செயற்குழு உறுப்பினர் சதாசிவம், பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்ட னர். இதை தொடர்ந்து மேயர் மகேஷ் மூலிகை கண்காட்சியை பார்வையிட்டார்.

    மேலும் பள்ளி மாணவ- மாணவிகளும் கண்காட்சி யை பார்வையிட்டனர்.முன்னதாக நாகர்கோவில் மாநகராட்சி நான்காவது வார்டுக்குட்பட்ட பெருவிளை பகுதியில் ஆயுர்வேத மருத்துவ முகாம் நடந்தது. அந்த முகாமை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். ஆயுர்வேத மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று சிகிச்சை மேற்கொண்டனர்.

    • கல்வி அதிகாரிகள் மீது பரபரப்பு புகார்
    • சுமூக தீர்வு காணப்பட்டது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஏராளமானோர் இன்று கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    அவர்கள் போலீஸ் நிலைய நுழைவாயில் முன்பு அமர்ந்து திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், துப்புரவு பணியாளர்களான எங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோர்ட்டு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டும், குமரி மாவட்ட கல்வி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனை கண்டித்து போராட்டம் நடத்திய போது கல்வி அதிகாரிகள் சிலர் எங்களை ஆபாசமாக திட்டினார். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதுதொடர்பாக நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி கோட்டார் போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து இந்த முற்றுகை போராட்டம் நடக்கிறது என கூறினர்.

    இதனைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இதில் சுமூக தீர்வு காணப்பட்டதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டாறு வைத்தியநாதபுரம் வட்ட விளை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), தொழிலாளி.

    இவர் நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.இதை யடுத்து சுரேஷை அவரது பெற்றோர் பல்வேறு இடங் களில் தேடினார்கள். ஆனால் சுரேஷ் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் உள்ள கோவிலின் பின்புறம் உள்ள கால்வாயில் சுரேஷ் பிணமாக கிடப்பதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கால்வாயில் பிணமாக கிடந்த சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக சுரேஷ் தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 8 மாதங்களில் 56 பேர் மீது நடவடிக்கை
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்ததன் பேரில் நடவடிக்கை.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவ டிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    ஆனால் தற்போது கஞ்சா புழக்கம் கட்டுக்குள் இருந்து வருகிறது. கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகளும் முடக் கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து குற்ற செயல்கள் ஈடுபடுபவர்களை போலீ சார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 8 மாதங்களில் 55 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் இச்சட்டச்சத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதை யடுத்து குண்டர் சட்டத் தில் கைது செய் யப் பட்டவர்க ளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

    நாகர்கோவில், வடிவீஸ் வரம் பகுதியைச் சேர்ந்த வர் கிஷோர் என்ற கிஷோர்குமார் (வயது 21) சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் கிஷோர்குமார் கஞ்சா வழக்கு ஒன்றில் கோட்டார் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்திலும் வழக்குகள் இருந்தது. ஆனால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கலெக்டர் அரவிந்த், பிரபல ரவுடி கிஷோர்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து கிஷோர் குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவரை பாளையங்கோட்டை ஜெயி லில் போலீசார் அடைத்தனர்.

    • சொந்த நிதியில் இருந்து விஜய்வசந்த் எம்.பி. வழங்கினார்
    • வருகிற 7-ந் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடை பயணத்தை தொடங்குகிறார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டா ரில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்ப த்திரி செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரிக்கு விஜய்வசந்த் எம்.பி. தனது சொந்த நிதியிலிருந்து 300 நாற்காலிகளை வழங்கி இருக்கிறார். இதனை ஆஸ்பத்திரியில் ஒப்ப டைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    கல்லூரி டீன் டாக்டர் கிளாரன்ஸ் டேவி தலைமை தாங்கினார்.விஜய் வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவரிடம் நாற்காலிகளை வழங்கினார்.

    பின்னர் விஜய்வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ-மாணவிகள் வந்து படிக்கிறார்கள். மேலும் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரிக்கு நாற்காலிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தி ருந்தனர். அதன்படி தற்போது 300 நாற்காலிகள் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் புறநோயாளி களுக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அந்த கோரிக்கையும் நிறை வேற்றி தரப்படும்.

    வருகிற 7-ந் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடை பயணத்தை தொடங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூடிய விரைவில் இது தொடர்பான முழு அறிவிப்பு வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நாகர்கோ வில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார், மாநில பொதுக்குழு உறுப்பி னர் ரெத்தினகுமார், கண்ண னூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஜோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொருட்களை எதுவும் திருடப்படவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    கோட்டார் இளங்கடை வேதநகர் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்மான் யூசுப் (வயது 27). இவர் பெருவிளையில் உள்ள தனது மனைவி வீட்டிற்கு குடும்பத்தோடு சென்றிருந்தார்.நேற்று வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்களை எதுவும் திருடப்படவில்லை. ஆனால் மர்ம நபர்கள் வீட்டை உடைத்து திருட முயன்றிருந்தனர்.

    இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • குடோன் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த கலெக்டர் அரவிந்த் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் இன்று கோட்டார் பஜார் பகுதியில் பிளாஸ்டிக் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் தலைமையில் நகர்நல அதிகாரி விஜய் சந்திரன், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் ஆகியோர் ஒரு கடையில் சோதனை நடத்தினர்.

    கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய போது பக்கத்தில் உள்ள குடோனில் பிளாஸ்டிக் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    அங்கு சோதனை செய்த அதிகாரிகள் 4 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

    குடோன் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் கோட்டாறு பகுதியில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ரெயில் மறியல் போராட்டத்தை கைவிட்டு விட்டு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ரெயில்வே பாலம் கட்ட வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நாகர்கோவில்:

    இரணியல் அருகே வடக்கு பேயன்குழி பகுதியில் உடனடியாக ரெயில்வே பாலம் கட்ட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனிஸ்டு (விடுதலை) சார்பில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் 7-ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி முத்து தலைமையில் ஏராள மான நிர்வாகிகள் ரெயில் நிலையத்தில் திரண்டனர்.

    முன்னதாக ரெயில் மறியலில் ஈடுபட முயல்ப வர்களை தடுப்பதற்காக ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ரெயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையில் 50-க் கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    எனினும் தடையை மீறி மறியல் போராட்டம் நடத்துவதற்காக மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக வந்தனர்.

    அவர்களை ரயில் நிலையத்துக்குள் செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தை கைவிட்டு விட்டு மார்க்சிஸ்ட் லெனி னிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயில்வே பாலம் கட்ட வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் ரெயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    ×