என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தூய்மைபணி"
- சட்டநாதர் சுவாமி கோயிலில் 32ஆண்டுகளுக்கு பிறகு வரும் 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடை பெற உள்ளது.
- வடக்குகோபுர வாசல் பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 32ஆண்டுகளுக்கு பிறகு வரும் 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடை பெறவுள்ளது.
இதற்கான திருப்பணிகள் தொடங்கி தற்போது நிறைவ டைந்துவருகிறது.
இதனிடையே சட்டநாதர் சுவாமி கோயில் வடக்கு கோபுர வாசல் பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. நகராட்சி தூய்மை பணியாளர்கள் பலர் இப்பணியில் ஈடுப்பட்டனர்.
அங்கிருந்த தேங்காய் மட்டைகள், குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டுவருகிறது.
மேலும் கும்பாபிஷேத்திற்கு பல முக்கிய பிரமுகர்கள் வரயிருப்பதால் வடக்கு கோபுர வாசல் எதிரே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிட நகராட்சி நிர்வாகம் கடை நடத்துபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தூய்மை பணிகள் நடைபெறுவதை நகர்மன்ற தலைவர் துர்காபர மேஸ்வரி, ஆணையர் வாசுதேவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- பொதுமக்கள்அதிகமாக வந்து செல்வதால் தேவனாம்பட்டினம் கடற்கரையில் அதிக அளவில் குப்பை அதிகரித்து வந்தது.
- இன்று காலையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் தூய்மை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்
கடலூர்:-
கடலூரில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து தற்போது கோடை விடுமுறை தொடங்கியதை முன்னிட்டு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளுடன் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு நேரில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக தற்போது அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்வதால் தேவனாம்பட்டினம் கடற்கரையில் வழக்கத்தை விட அதிக அளவில் குப்பை அதிகரித்து வந்தன.
இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் சுகாதார ஆய்வாளர் அப்துல் ஜாஃபர் முன்னிலையிலும் தூய்மை பணியாளர்கள் இன்று காலையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் தூய்மை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து பாதுகாப்பாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு கடலூர் வசந்தராயன் பாளையம் பகுதிக்கு கொண்டு சென்றனர். மேலும் ஏற்கனவே விடுமுறை நாட்களிலும் , விழா நாட்களிலும் டன் கணக்கில் குவிந்திருந்த குப்பைகளை மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின்பேரில் உடனடியாக அகற்றி சுத்தமாக வைத்து நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
- சீர்காழி தென்பாதி பகுதிகளில் நெகிழி பை போன்ற குப்பைகளை தூய்மைபணியாளர்கள் எடுத்துசெல்வதில்லை.
- தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், மண்வெட்டி, அரிவாள் போன்றவற்றை புதிதாக வாங்கிதர வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் அவைகூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராஜகோபால், மேலாளர் காதர்கான், நகரமைப்புஆய்வாளர் நாகராஜன், வருவாய்ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற தீர்மானங்களை அலுவலர் ராஜகணேஷ் வாசித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் பேசியதாவது,
வேல்முருகன்: சீர்காழி தென்பாதி பகுதிகளில் நெகிழி பை போன்ற குப்பைகளை தூய்மைபணியாளர்கள் எடுத்துசெல்வதில்லை. அதேபோல் சாலைகளில் வாழைமரங்கள், கீற்றுகள் போன்ற குப்பைகள் அகற்றபடாமல் மாதகணக்கில் கிடக்கிறது.
சாமிநாதன்: ஈசானியத்தெரு எரிவாயு தகண மேடை டெண்டர் விடாமல் ஏன் காலதாமதமாகிறது. முன்பு நடத்தி அனுபவம் உள்ளவருக்கு முன்னுரிமை அளித்து எரிவாயு தகணமேடை நடத்திட வேண்டும்.
ஆணையர் ராஜகோபால்: எரியாயு தகண மேடை டெண்டர் விரைவில் விடப்படும்.
ராஜசேகரன்: அரசு மருத்துவமனை கழிவுநீர் பாசன வாய்க்காலில் விடப்படுகிறது என பல முறை கூறியும் நடவடிக்கை இல்லை. தூய்மைபணியாளர்களுக்கு கையுறைகள், மண்வெட்டி, அரிவாள் போன்றவற்றை புதிதாக வாங்கிதர வேண்டும்.
கிருஷ்ணமூர்த்தி: எனதுவார்டில் புதிதாக மின்விளக்குகள் அமைத்திடவேண்டும்.
முபாரக் : சீர்காழி மணிகூண்டு பகுதி, பழைய பஸ் நிலையம் பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. தற்காலிகமாக பேட்ஜ் பணியாவது செய்து அதனை நிரப்பவேண்டும்.
ராஜேஷ்: சீர்காழி நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக அரசு, தனியார் பஸ்கள் பயணிகளை இறக்கவிட்டு செல்வதை தடுத்திட தீர்மானம் கொண்டுவரவேண்டும்.
தலைவர் துர்காபரமேஸ்வரி: சீர்காழி நகரில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்ல தடைவிதிக்கவும், புறவழிச்சாலை வழியாக பஸ்கள் இயக்கப்படாமல் நடவடிக்கை எடுத்திடவும் கலெக்டர், கோட்டாட்சியர், போக்குவரத்து துறை அதிகாரிகளை அனைத்து உறுப்பினர்களும் நேரில் சென்று வலியுறுத்துவோம். அனைத்து வார்டுகளிலும் வாரம் 1 முறை மெகா தூய்மைபணி நடத்தப்படும். நகரை தூய்மையாக வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
- கொசவம்பட்டியில் சிறப்பு தீவிர தூய்மைப் பணி பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபு தலைமையில் நடந்தது.
- தூய்மைப் பணி குறித்தும் மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பையை தரம் பிரித்தல் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகம் நடைபெற்றது.
திருச்சி :
திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு கொசவம்பட்டியில் சிறப்பு தீவிர தூய்மைப் பணி பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபு தலைமையில் நடந்தது.
பேரூராட்சி செயலாளர்கள் கரு.சண்முகம் இளநிலை உதவியாளர்கள் கண்ணன், கதிரேசன், 3-வார்டு கவுன்சிலர் செந்தமிழ்ச்செல்வன் 9-வார்டு பி.ரவி முன்னாள் வார்டு கவுன்சிலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இதில் கோவில் வளாகம் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி சுற்றியுள்ள பகுதிகள், பள்ளி வளாகம், அனைத்து வீதிகளும் தூய்மை பணி கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்தல், தூய்மைப் பணி குறித்தும் மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பையை தரம் பிரித்தல் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் வரி தண்டலர்கள் செல்வராஜ், கோகிலா, டிரைவர்சுகுமார், எலக்ட்ரீசியன் சின்னத்தம்பி, கணினி பணியாளர் கார்த்தி, மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பேரூராட்சிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- தூய்மைபணி விழிப்புணர்வு பிரசாரத்தில் தூய்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார்
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பேரூராட்சியில் ''எனது குப்பை, எனது பொறுப்பு'' என்ற தூய்மைபணி விழிப்புணர்வு பிரசாரத்தில் தூய்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது. வாடிப்பட்டி பஸ்நிலையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார்.
போலீஸ்இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, சுகாதாரஆய்வாளர் பொன்.முத்துகுமார் முன்னிலை வகித்தனர்.
செயல் அலுவலர் சண்முகம் வரவேற்றார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, ேபரூராட்சிதுணைத் தலைவர் கார்த்திக், முன்னாள்கவுன்சிலர்செல்வராஜ், பிரகாஷ், திரவியம், இளநிலை உதவியாளர்கள் ஆறுமுகம், கார்த்திக் உள்பட தூய்மைபணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர். சுகாதாரபணி மேற்பார்வையாளர் திலிபன்சக்ரவர்த்தி நன்றிகூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்