என் மலர்
நீங்கள் தேடியது "பலத்த காற்று"
- கீழவைப்பாறு பகுதியை சேர்ந்த 4 பேர் வந்து கொண்டிருந்த பைபர் படகு பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்தது.
- மற்ற படகுகளில் சென்ற மீனவர்கள், கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றினர்.
தூத்துக்குடி:
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியை சே்ாந்த மீனவர்கள் பைபர் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அவர்கள் கரை திரும்பினர். இன்று அதிகாலை கீழவைப்பாறு பகுதியை சேர்ந்த 4 பேர் வந்து கொண்டிருந்த பைபர் படகு பலத்த காற்று காரணமாக கடலில் கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்த 4 பேரும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். அதனை பார்த்த மற்ற படகுகளில் சென்ற மீனவர்கள், கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றினர். தொடர்ந்து அவர்கள் தங்கள் படகுகள் மூலம் அவர்களை கரைக்கு அழைத்து வருகின்றனர்.
மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் மீனவர்களை கரைக்கு அழைத்து வரும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இன்று பிற்கலில் தூத்துக்குடிக்கு வருவார்கள் என கூறப்பட்டுள்ளது.
- திண்டிவனத்தில் பலத்த சூறை காற்று வீசியது.
- விபத்தில் அங்கு இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்நேற்று இரவு பலத்த காற்று வீசியது. திண்டிவனம் கிடங்கல் - 1 பகுதியில் பல ஆண்டுகளாகஅரசுக்கு சொந்தமான பட்டுப்போன புளிய மரம் உள்ளது.இந்த புளிய மரத்தை அகற்றக்கோரி பல மாதங்களாக அந்த பகுதி பொதுமக்கள் திண்டிவனம் தாசில்தார் அலுவலகம் மற்றும் 29-வது வார்டு கவுன்சிலர் அரும்பு குணசேகரனிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
ேநற்று திண்டிவனத்தில் பலத்த சூறை காற்று வீசியபோது கிடங்கல் - 1 ல் இருந்த பட்டுப்போன புளியமரம் திடீரென சாய்ந்து விழுந்தது. அந்த மரம் அருகில் உள்ளமின் கம்பத்தின் மீதும் அருகே இருந்த பாலகுரு என்பவருக்கு சொந்தமானமினி லாரி, இருசக்கர வாகனம் ஆகியவை மேல் விழுந்து வாகனங்கள் சேதம் அடைந்தது.மேலும் மின்கம்பம் மீது சாய்ந்ததால் அருகே இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த விபத்தில் அங்கு இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் 29 -வது வார்டு கவுன்சிலர் அரும்பு குணசேகரனி டம்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த வருவாய் துறை மற்றும் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பல்லடம் சுற்றுவட்டரா பகுதிகளில் பலத்த காற்று வீசியது.
- அரசு மருத்துவமனை அருகே ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது விழுந்தது.
பல்லடம்:
பல்லடம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு அருகே இருந்த மரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றின் காரணமாக, அரசு மருத்துவமனை அருகே ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆட்டோக்கள் மீது மரம் விழுந்ததால் சேதமடைந்தன. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடம் வந்து ஆட்டோக்கள் மீது விழுந்த மரத்தை அகற்றினர்.
இந்த நிலையில் அதே பகுதியில் காய்ந்த நிலையில் இருந்த மற்றொரு மரம் நேற்று முன்தினம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற தீயணைப்புத் துறையினர் மரங்களை வெட்டி அகற்றினர்.ஆபத்தான நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- எழும்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
- சென்னை புறநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் லேசான மழை.
சென்னை கோயம்பேடு, மதுரவாயில், நெற்குன்றம், ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இதேபோல், அண்ணாசாலை, புதுப்பேட்டை, எழும்பூர், சேப்பாக்கம், கிண்டு, ஈக்காட்டுத்தாங்கள், வடபழனி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், கோட்டூர்புரம், ஆயிரம் விளக்கு, வள்ளுவர் கோட்டம், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
மந்தவெளி, பட்டினம்பாக்கம், சாந்தோம், ராயப்பேட்டை, அடையார், கோடம்பாக்கம், சூளைமேடு, தி.நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
கொரட்டூர், வில்லிவாக்கம், நியூ ஆவடி சாலை, கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
மாதவரம், பெரம்பூர், வியாசர்பாடி, புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
ராமாபுரம், ஆலப்பாக்கம், வானகரம், திருவேற்காடு, பூந்தமல்லி, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் லேசான மழை பெய்து வருகிறது.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசிவருகிறது. ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது.
சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஜூலை மாதத்தில் சென்னையில் சராசரியாக 10 சென்டிமீட்டர் மழை பெய்யும்.
- 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் ஜூன் மாதம் அதிக அளவு மழை பெய்துள்ளது.
நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த காற்றுடன் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சென்னை குளிர்ந்து. அதே சமயம் இரவுநேரத்தில் பெய்ய கனமழையால் பணி முடிந்து வீட்டிற்கு சென்ற பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு ஒரு மணிநேரத்தில் 6 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்ததாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், "ஜூலை மாதத்தில் சென்னையில் சராசரியாக 10 சென்டிமீட்டர் மழை பெய்யும். அதில் நேற்றிரவு ஒரு மணி நேரத்தில் மட்டுமே 6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது" என்றும் 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் ஜூன் மாதம் அதிக அளவு மழை பெய்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
- சென்னையில் நேற்றிரவு கிட்டத்தட்ட 5 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது.
- கடந்த ஒரு வாரத்திலேயே சென்னையில் 10 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது.
நேற்று இரவு சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த காற்றுடன் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சென்னை குளிர்ந்து.
இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு கிட்டத்தட்ட 5 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்ததாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதீப்ஜானின் எக்ஸ் தள பதிவில், "ஜூலை மாதத்தில் சென்னையில் சராசரியாக 10 சென்டிமீட்டர் மழை பெய்யும் நிலையில், கடந்த ஒரு வாரத்திலேயே சென்னையில் 10 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது.
1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் ஜூன் மாதம் அதிக அளவு மழை பெய்துள்ள நிலையில், ஜூலை மாதமும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்ட்ரல், அடையார், கோட்டூர்புரம், கிண்டி, தாம்பரம், சேலையூர், செம்மஞ்சேரி, சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
- 30 அடி உயரமுள்ள பனை மரங்களும் உள்ளன.
- 4 கூலித் தொழிலாளர்களின் வீடுகளும் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்து விட்டன.
பல்லடம் :
பல்லடம் பனப்பாளையம் ஏ.டி. காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்தநிலையில் அங்கு சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட சுமார் 30 அடி உயரமுள்ள பனை மரங்களும் உள்ளன.
இந்நிலையில் நேற்று வீசிய பலத்த காற்றின் காரணமாக 30 அடி உயரமுள்ள பனைமரம் ஒன்று அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்தது இதில் ரமேஷ்,சரவணகுமார்,உள்ளிட்ட 4 கூலித் தொழிலாளர்களின் வீடுகளும் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்து விட்டன.மேலும் வீட்டினுள் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன.இந்த சம்பவம் நடந்தபோது வீடுகளில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
- தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.
- போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி இல்லத்தார் தெருவை சேர்ந்தவர் முகமது மைதீன் (வயது48). ஆட்டோ டிரைவர்.
மின்சாரம் தாக்கியது
இந்நிலையில் முகமது மைதீன் இன்று காலை திருமலாபுரம் தோப்பு பகுதிக்கு சென்றார். தற்போது தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.
இதில் திருமலாபுரத்தில் மின்வயர் ஒன்று அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காத முகமது மைதீன் அதனை மிதித்ததால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அச்சன்புதூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த முகமது மைதீனுக்கு ஆமினாள் (45) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.
சேலம்:
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் சூறைக்காற்றினால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.
சேலம் அருகே பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதில் கடந்த வாரம் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் பல்வேறு இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட விவசாயி–களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் பொருட்டு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். மேலும், விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காற்று, மழையினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிர்கள் தற்காத்துக்கொள்ளும் தொழில்நுட்பங்கள் குறித்தும், தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்களை பெற தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிப் பயன் பெறுமாறு விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
முதுகுளத்தூர்:
கஜா புயல் நேற்று கரையை கடந்த பின்பு உள் மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை காற்றும் மழையுமாக இருந்தது. முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத் தூவலைச் சேர்ந்தவர் பதினெட்டாம்படியான் (வயது70).
இவர் நேற்று மழை பெய்தபோது வெளியே சென்றார். அப்போது பலத்த காற்று வீசியது. இதில் பதினெட்டாம்படியான் வீட்டின் அருகே உள்ள கட்டிடத்தின் சாரம் சரிந்து அவர் மீது விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.