என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தண்டனை"
- கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாராளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் ஒழுக்கக்கேடானவை மட்டுமல்ல, மனிதகுலத்தின் மீதான முழுமையான தாக்குதல்.
கம்பாலா:
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகி றார்கள். அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.
அதே வேளையில் சில நாடுகளில் ஓரினச் சேர்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன.
இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாபடி ஓரின சேர்க்கையாளர் என அடையாளப்படுத்தப்படுவது குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் கடும் விதி மீறல்களில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
ஏற்னவே உகாண்டா உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே பாலின உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கையாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது, அதில் ஈடுபடுவதற்கான திட்டம் தீட்டுவது ஆகிய வற்றுக்கு இச்சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர் அசுமான் பசலிர்லா, ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.
அவர் கூறும்போது, இந்த மசோதா நமது தேவாலய கலாச்சாரத்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த மசோதாவின் நோக்கம் நமது பாரம்பரிய குடும்ப விழுமியங்கள், பன்முக கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றை பாதுகாக்க ஒரு விரிவான மற்றும் மேம்பட்ட சட்டத்தை நிறுவுவதாகும் என்றார்.
இந்த மசோதா பாராளுமன்றததில் 389 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. தற்போது மசோதா, ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதற்கிடையே ஓரின சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். இது வெறுக்கத்தக்க சட்டம் என்று தெரிவித்தனர்.
மனித உரிமை ஆர்வலர் சாரா கசண்டே கூறும்போது, "உகாண்டாவின் வரலாற்றில் இன்று ஒரு சோகமான நாள். வெறுப்பை ஊக்குவிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க முயல்கிறது" என்றார்
ஓரினச் சேர்க்கை ஆர்வலர் எரிக் நடாவுலா கூறும் போது, "பாராளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் ஒழுக்கக்கேடானவை மட்டுமல்ல, மனிதகுலத்தின் மீதான முழுமையான தாக்குதல். எங்கள் எம்.பி.க்களின் தீர்ப்பு வெறுப்பு மற்றும் ஓரினச் சேர்க்கையால் மழுங்கடிக்கப்பட்டது பயமாக இருக்கிறது. இந்தக் கொடூர சட்டத்தால் யாருக்கு லாபம்?" இந்த மசோதா சட்டமாக கையொப்பமிடப்பட்டால், "கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமை, சமத்துவம் மற்றும் பாகுபாடு காட்டான உரிமைகள் உள்பட பல அடிப்படை உரிமைகளை மீறும்" என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
- பாலியல் வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டது
- மேலும் ரூ.1 லட்சத்து 10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார்.
அரியலூர்:
அரியலூர் அருகே உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம் மகன் லட்சுமணன்(வயது22). இவர் கடந்த ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து லட்சுமணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளித்தது.
இதில் குற்றவாளி லட்சுமணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து 10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு அரசு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் லட்சுமணன் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ராஜா ஆஜரானார்.
- மேலக்காவேரி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதியது.
- அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் அருண்மொழி (வயது 23).
கும்பகோணம் செக்கடி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்.
கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி அருண்மொழி தனது நண்பரை பார்ப்ப தற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது மேலக்காவேரி அருகே வந்து கொண்டி ருந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன், அருண்மொழியின் மோட்டார் சைக்கிளில் மோதி அவரை கீழே தள்ளினார்.
மேலும் அவரை மணிகண்டன் தாக்கினார்.
இதுகுறித்து அருண்மொழி கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதித்துறை நடுவர் எண் .1-ல் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், மோட்டார் சைக்கிளால் மோதி அருண்மொழியை கீழே தள்ளி தாக்கிய மணிகண்டனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறினார்.
- திருச்சி-திண்டுக்கல் சாலையில் வையம்பட்டி அருகே இந்த கொடூர இரட்டை கொலை சம்பவம் நடைபெற்றது
- இந்த வழக்கில் மொத் தம் 50 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர்.
திருச்சி:
திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் துரைராஜ். இவரது டிரைவர் சக்திவேல். இவர்கள் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு காருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். திருச்சி-திண்டுக்கல் சாலையில் வையம்பட்டி அருகே இந்த கொடூர இரட்டை கொலை சம்பவம் நடைபெற்றது.
இந்த வழக்கு தொடர்பாக முதலில் வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் துப்பு எதுவும் துலங்கவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டது .
புலன் விசாரணையின் அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சாமியார் கண்ணன், அவரது கள்ளக்காதலி யமுனா, யமுனாவின் தாயார் சீதாலட்சுமி ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தொழில் அதிபர் துரைராஜ் யமுனாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதால் ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வயது முதிர்வு மற்றும் நோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீதாலட்சுமி மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து மற்ற இருவர் மீதும் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. அவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் மொத்தம் 50 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்கள். அவர்களில் டி.எஸ்.பி. மலைச்சாமி, கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அரசு டாக்டர் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்கள். இந்த வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் வக்கீல்கள் வாதம் நடைபெற்றது.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்களின் வாதம் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (25-ந்தேதி) வழங்கப்படும் என நீதிபதி ஜெயக்குமார் அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் திருச்சி மத்திய சிறை மற்றும் திருச்சி மகளிர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சாமியார் கண்ணன் மற்றும் யமுனா ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். அப்போது, கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கொலையாளிகளான சாமியார் கண்ணன், யமுனா ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் தடயங்களை மறைத்த குற்றத்திற்காக சாமியார் கண்ணனுக்கு மட்டும் 5 ஆண்டுகள் சிறை, கூட்டு சதியில் ஈடுபட்டதற்காக இருவருக்கும் தலா 7 ஆண்டுகளும், கார் எரிக்கப்பட்டதற்கு தலா 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பு வழங்கினார்.
- மதுரை சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி விடுதலை செய்யப்பட்டார்.
- இவரது தண்டனை காலம் வருகிற 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந் தேதி வரை உள்ளது.
மதுரை
மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் மணி என்ற நயினார் (வயது 64). இவர் ஒரு வழக்கில் கைதாகி 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந் தேதி ஜாமீன் கிடைத்தது. ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இருந்த போதிலும் அவருக்கான ஆயுள் தண்டனையை கோர்ட்டு உறுதி செய்தது.
இதனைத் தொடர்ந்து மணி என்ற நயினார் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ந் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரது தண்டனை காலம் வருகிற 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந் தேதி வரை உள்ளது.
மதுரை மத்திய சிறையில் நயினார் 3 ஆண்டு, 7 மாதம் வரை சிறை தண்டனை அனுபவித்து வந்தார். 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவரை விடுதலை செய்வது என்று சிறை நிர்வாகம் முடிவு செய்தது. 60 வயதுக்கு மேல் இருக்கும் சிறைவாசிகள் சில குறிப்பிட்ட வழக்குகளில் 50 சதவீதம் தண்டனை அனுபவித்து இருந்தால் அவரை விடுதலை செய்யலாம் என்ற அடிப்படையில் மணி என்ற நயினார் மதுரை மத்திய ஜெயலலிதா இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
- கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை சுரேஷுக்கு பரோல் விடுப்பு வழங்கப்பட்டது.
- தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி சுரேஷ் என்கின்ற சத்யராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுக்கூர்:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சிராங்குடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கின்ற சத்யராஜ் வயது 34. இவர் கரூர் மாவட்டம் மாயனூர் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் மாயனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நடைபெற்ற விசாரணையில் நீதிமன்றம் சுரேஷ் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நிலையில் சுரேஷ் கடந்த 17.4.2014 ஆம் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை சுரேஷுக்கு பரோல் விடுப்பு வழங்கப்பட்டு மூன்று ஆயுதப்படை காவலர்கள் வழி காவலாக நியமிக்கப்பட்டு பட்டுக்கோட்டை அருகே உள்ள சிராங்குடி வடக்கு கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்த சுரேஷ் தப்பி ஓடிவிட்டார்.
இதை அடுத்து வழி காவலர்களாக வந்த அந்த மூன்று ஆயுதப்படை காவலர்களும் இது பற்றி மதுக்கூர் காவல் நிலையத்தில் தெரிவித்தனர். இதை அடுத்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி சுரேஷ் என்கின்ற சத்யராஜை போலீசார் தேடி வருகின்றனர். ஆயுள் தண்டனை கைதி தப்பித்து ஓடிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வெயில் தாங்க முடியாமல் துடிக்கும் சிறுமியை பக்கத்து வீட்டு தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
- சிறுமியின் தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி கஜூரிகாஸ் பகுதியை சேர்ந்த பெண்ணின் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் மகள் (5) சரிவர வீட்டு பாடம் செய்யவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், மகளின் கை மற்றும் கால்களை கயிறால் கட்டி வீட்டின் கூரையில் சுட்டெரிக்கும் வெயிலில் விட்டு சென்றுள்ளார்.
வெயில் தாங்க முடியாமல் துடிக்கும் சிறுமியின் நிலையை பக்கத்து வீட்டு நபர் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சிறுமி வெயிலில் துடிக்கும் வீடியோவைக் கண்டு சிறுமியின் தாயை மக்கள் திட்டி தீர்க்கின்றனர்.
இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரியவந்ததை அடுத்து, சிறுமியின் தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டு பாடம் செய்யாததால் பெற்ற பிள்ளைக்கே கொடூர தண்டனை வழங்கிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்