search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாக்கி"

    • சேலம் கொண்டலாம்பட்டி கோழிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சக்தி இவர் மின்சாரம் தாக்கி காயமடைந்தார்.
    • அப்போது அருகில் சென்ற மின் கம்பி அவர் மீது உரசி தூக்கி வீசப்பட்டு கருகினார்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி கோழிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (வயது 21). இவர் அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள ஒரு பருப்பு மில் தொழிற்சாலை வேலை பார்த்து வருகிறார்.

    சக்தி இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்துள்ளார். அப்போது அருகில் சென்ற மின் கம்பி அவர் மீது உரசி தூக்கி வீசப்பட்டு கருகினார்.

    அவரது சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் ஓடி வந்து மீட்டு அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சக்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆடுகளுக்கு தழை போடுவதற்கு வீட்டருகில் உள்ள பலாமரத்தில் இரும்பு கம்பி மூலம் இலை பறித்துக்கொண்டிருந்த போது விபத்து
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே கல்லுக்கூட்டத்தை சேர்ந்தவர் சூசை மிக்கேல் (வயது 67). இவர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரீத்தம்மாள் (60). கடந்த சில ஆண்டுகளாக சூசைமிக்கேல் வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று காலை இந்த ஆடுகளுக்கு தழை போடுவதற்கு வீட்டருகில் உள்ள பலாமரத்தில் இரும்பு கம்பி மூலம் இலை பறித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்ப்பாராமல் அருகில் சென்று கொண்டிருந்த மின் கம்பி மீது உரசியது. இதில் இரும்பு கம்பி வழியே மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கினார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சூசைமிக்கேல் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி ரீத்தம்மாள் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பால் வியாபாரம் செய்யும் ரங்கநாதன் வெகு நேரமாகியும் வராததால் பாலகுமார் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தார்.
    • மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடந்த ரங்கநாதனை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். இவரது மகன் ரங்கநாதன்(வயது 47).இவர் பரமத்திவேலூர் தாலுகா சானார்பாளையத்தில் ஒரு வீட்டில் தனியாக தங்கி பாலகுமார் என்பவரிடம் பால் வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் பால் வியாபாரம் செய்யும் ரங்கநாதன் வெகு நேரமாகியும் வராததால் பாலகுமார் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடந்த ரங்கநாதனை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் காப்பாற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரங்கநாதன் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், ரங்கநாதனின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். பால் வியா பாரி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டுக்கொட்டையில் விளையாடியபோது அங்கிருந்த இரும்பு பைப்பை சிறுமி பிடித்துள்ளார். அப்போது அதில் மின்சாரம் தாக்கி சிறுமி சுதேசனா மயக்கமடைந்தார். ன்னர் மேல்சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
    • இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு:

    பவானி லட்சுமி நகர் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தாமரைகண்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களது ஒரே மகள் சுதேசனா (6). சம்பவத்தன்று சுதேசனா அருகே உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது ஆட்டுக்கொட்டையில் விளையாடியபோது அங்கிருந்த இரும்பு பைப்பை சிறுமி பிடித்துள்ளார். அப்போது அதில் மின்சாரம் தாக்கி சிறுமி சுதேசனா மயக்கமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, உப்புக்குளம் பகுதியில் வசித்து வந்தவர் பிரகாஷ்(வயது 22). இவர் தனியார் கல்லூரியில் பி.ஈ., இறுதியாண்டு படித்து வந்தார்.

    இவரது உறவினர் வீட்டு கிரஹபிரவேச நிகழ்ச்சிக்காக வீட்டில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.எஸ்.ஐ. தன்ராஜ் வழக்குபப்திவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    ×