என் மலர்
நீங்கள் தேடியது "மினி பஸ்"
- பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- பல மினிபஸ்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்
தென்காசி:
பாவூர்சத்திரம் காமராஜர் பஸ் நிலையத்தில் இருந்து சுற்று வட்டார கிராம பகுதிகளான கீழப்பாவூர், மேலப்பாவூர், ஆவுடையானூர், கடையம், பூலாங்குளம், கழுநீர்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் பல மினிபஸ்கள் அனுமதி பெறப்பட்ட வழித்தடங்களில் இயக்கிடாமல் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து பலமுறை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தென்காசி வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும் தெரி விக்கின்றனர்.
உடனடி யாக அனுமதிக்கப் பட்ட வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்கிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மினிபஸ் வருவதற்கு அப்பகுதியில் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- பொது மக்கள் மறியல் செய்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கன்னியாகுமரி :
இரணியல் அருகே நெய்யூர் பால்தெரு, கிறிஸ்துமஸ் தெரு வழியாக திங்கள் நகர் தக்கலைக்கு தனியார் மினிபஸ் சென்று வருகிறது.
அப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்கு இடையூறாக இருப்பதால் மினிபஸ் வருவதற்கு அப்பகுதியில் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார் அளித்தும் பலனின்றி உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை அவ்வழியே வந்த மினி பஸ்சை தக்கலை ஒன்றிய கவுன்சிலர் மெல்பா ஜேக்கப் தலைமையில் பொது மக்கள் மறியல் செய்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும் இது குறித்து இரணியல் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்ததின் பேரில் இரணியல் போலீஸ் விசாரணை நடத்தி மினிபஸ் இந்த தடத்தில் வராது என்று உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
- மேட்டூர் வழித்தடத்தில் இயங்கும் ஒரு மினி பஸ் உடைந்த படிக்கட்டுகளுடன் இயங்கி வருகிறது.
- கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் படிக்கட்டுகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கடையம்:
பாவூர்சத்திரத்திலிருந்து மேட்டூர் வழித்தடத்தில் இயங்கும் மினி பஸ் ஒன்று பராமரிப்பின்றி, உடைந்த நிலையில் உள்ள படிக்கட்டுகளு டன் ஆபத்தான நிலை யில் இயங்கி வருகிறது. சில மாதங்களாக இந்த நிலையிலே இயங்கி வருவதாக தெரிய வரு கிறது.
பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் படிக்கட்டு களில் நின்றவாறு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படு கிறது. இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே போக்குவரத்துதுறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 மினிபஸ்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
- ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி பகுதியில் மினிபஸ்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை.
சென்னை:
சென்னையில் மாநகர பஸ்கள் செல்ல முடியாத குறுகிய இடங்கள், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. 72 வழித் தடங்களில் 146 மினி பஸ்கள் இயக்க அனுமதி உள்ளன.
ஆனால் டிரைவர் பற்றாக்குறை மற்றும் உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தால் ஒரு சில மினி பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளன. மினி பஸ்களால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பயணிகள் குறைந்த அளவில் பயன்படுத்துகின்றனர். ஒரு சில வழித்தடங்களில் மட்டுமே மினி பஸ்கள் நிரம்பி செல்கின்றன.
டெப்போக்களில் ஓடாத, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு சில மினி பஸ்களை வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமம் மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு அனுப்பி பஸ், ரெயில் நிலையங்களுக்கு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அருகில் உள்ள நகரப்பகுதிகள், மாவட்ட தலை நகரங்களுக்கு மினிபஸ்களை இயக்கினால் கிராமப் பகுதி மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 மினிபஸ்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் காலியாக ஓடக்கூடிய மினிபஸ்களால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதனால் பிற மாவட்டங்களுக்கு கொடுத்தால் அதன் மூலம் வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'சென்னையில் இயக்கக்கூடிய மினி பஸ்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. 146 மினி பஸ்களில் 120, 125 பஸ்கள் தினமும் இயக்கப்படுகிறது. 10 சதவீதம் 'ஸ்பேர்' பஸ்கள் உள்ளன.
போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் டிரைவர்கள் சிலர் உடல் சார்ந்த நோய் பிரச்சினைகள் காரணமாக அவர்களுக்கு மினி பஸ்களில் பணி ஒதுக்கப்படுகிறது. வெளிமாவட்டங்களுக்கு மினி பஸ்களை மாற்றும் திட்டம் இல்லை' என்றனர்.
இதற்கிடையில் ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி பகுதியில் மினிபஸ்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை என்றும் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
உதிரி பாகங்கள் இல்லாமலும் பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியாமல் ஒரு சில மினி பஸ்கள் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- 15-க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் வந்து செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
- அரசு பஸ்கள் ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
கன்னியாகுமரி :
திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் அனுமதி பெற்ற 6 மினி பஸ்களுக்கு மட்டுமே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இங்கு 15-க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் வந்து செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதேபோன்று பஸ் நிலையத்திற்குள் ஏற்றிய பயணிகளை வெகுநேரமாக காக்கவைப்பதும், பயணிகளுடன் பஸ் நிலையம் வெளியில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதும் நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்தும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும் மினி பஸ்களை ஒழுங்கு படுத்த வேண்டும். அரசு பஸ்கள் ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக் டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்து போலீசார் பஸ் நிலையத்திற்குள் திடீர் வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது பஸ் நிலையம் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக நின்று பயணிகளை ஏற்றிய மினி பஸ்சிற்கு அபாராதம் விதித்தார். உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட ஒரு மினி பஸ்சை ஆவணங்களை காண்பித்து எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தி குளச்சல் போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். போக்குவரத்து போலீசாரின் அதிரடி சோதனையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அரசு பஸ் மற்றும் மினிபஸ் டிரைவர்களுக்குள் பஸ் நிறுத்தம் தொடர்பாக தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது.
- மினிபஸ் உரிமையாளர்கள்,அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கன்னியாகுமரி :
திங்கள் நகர் பஸ் நிலையத்தில் இருந்து குமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், சென்னை உட்பட பல இடங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன.
பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர்களுக்கும், மினிபஸ் டிரைவர்களுக்கும் பஸ் நிறுத்தம் தொடர்பாக தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது.
நேற்று மதியம் மினிபஸ் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரமுடியாத படி அரசு பேருந்து மறித்து நின்றதால் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து திங்கள் நகர் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தலைமையில் பேரூராட்சி தலைவர் சுமன், வர்த்தக சங்க நிர்வாகிகள் மினிபஸ் உரிமையாளர்கள்,அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரசு பஸ் மினிபஸ் மணவாளக்குறிச்சி, மண்டை க்காடு, குளச்சல் வழி செல்லும் பஸ்கள் சமய குறிப்பு அலுவலகம் அருகே இருந்து புறப்பட்டு செல்ல வேண்டும் என்று மினிபஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தினர். புறக்காவல் நிலையத்தில் அருகே நாகர்கோவில் நோக்கி சுற்றி செல்லும் அரசு பேருந்து நின்று செல்ல வேண்டும் என்று வர்த்தகர்கள் வலியுறுத்தினர்.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், மினிபஸ் டிரைவர்கள் அரசு பஸ் செல்ல விடா மல் மறித்து நிற்பதாக புகார் கூறினர். அவ்வாறு செய்தால் இனி அபராதம் விதிக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் எச்சரிக்கை செய்தார்.
தனியார் வாகனங்கள் பேருந்து நிலையத்தில் உள்ளே வரக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்க பேரூராட்சி தலைவர் சுமனிடம் பொது மக்கள் கூறினார். இதனை அடுத்து பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டது. அடுத்து பஸ்கள் அதற்கு உரிய இடங்களில் நிறுத்த நடவடிக்கை எடுக்கபட்டது.
- திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலைய பயணிகளுக்காக தொடங்கப்பட்டு உள்ளது.
- ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை:
மெட்ரோ ரெயில் பயணிகள் தங்களது இருப்பிடத்தில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையம் வந்து செல்லவும், மெட்ரோ நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்லவும் பல்வேறு இணைப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது மாநகர போக்குவரத்து கழகத்தின் இணைப்பு மினி பஸ் சேவை மற்றும் ஆட்டோ இணைப்பு சேவை, திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலைய பயணிகளுக்காக தொடங்கப்பட்டு உள்ளது.
இவற்றை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் மெட்ரோ பயணிகள் திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள இடங்களுக்கு பயணிக்க முடியும். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநகரப் போக்குவரத்துக்கழக மினி பஸ் திருமங்கலம் மற்றும் கொரட்டூர் வாட்டர் கேனல் சாலை இடையே இயக்கப்படுகிறது.
- மின் பஸ் ஹாரன் அடித்தபடி வந்தது.
- நிறுத்திய கும்பல் பஸ் கண்ணாடியை உடைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுக்கா பூ.கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 19). இவர் தனது நண்பர்கள் 10 பேருடன் சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மின் பஸ் ஹாரன் அடித்தபடி வந்தது. இதனால் பயந்து போன ஒரு சிலர் சாலையில் தடுமாறி விழுந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மினி பஸ் மீண்டும் வரும் வரை சாலையிலேயே காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து மினி பஸ் அதே சாலையில் வந்தது. அதனை நிறுத்திய இந்த கும்பல் பஸ் கண்ணாடியை உடைத்தனர். மேலும், பஸ்சின் ஹாரனை அடித்து நொறுக்கினர். இது குறித்து மினி பஸ் டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிவப்பிரகாசம், அவருடன் வந்த 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- சுற்றுலா இடங்களை காண வசதியாக ராமேசுவரத்தில் மினி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உள்ளுர் பொதுமக்கள் ஆட்டோக்க ளில் ஏற்றுவதை அதிகளில் தவிர்த்து வருகின்றனர்
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 21 வார்டுகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். மேலும் நாள் தோறும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் அரசு பஸ்களின் மூலம் 5 ஆயிரம் பயணிகள் வருகின்றனர். ராமேசுவரத்தில் அரசு பஸ்சை தவிர தனியார் பஸ் வசதிகள் இல்லை.
பஸ் நிலையம் முதல் கோவில் வரை,கோவில் முதல் தனுஷ்கோடி வரை பஸ்கள் சென்று வருகிறது. இதில் பழைய பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் பஸ்சில் செல்ல அதிக ஆர்வம் காட்டுவது இல்லை.
மேலும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆட்டோ, வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் பணம் செலுத்தி செல்கின்றனர். வெளியூர் நபர்களை மட்டுமே குறிவைத்து ஆட்டோக்கள் இயக்கப்படு கிறது. இதனால் உள்ளுர் பொதுமக்கள் ஆட்டோக்களில் ஏற்றுவதை அதிகளில் தவிர்த்து வருகின்றனர். இதனால் உள்ளூர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து பகுதிகளுக்கும் மினி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ராமேசுவரம் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கோவில், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, கோதண்டராமர் கோவில், கெந்தமான பர்வதம், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் குந்துகால் விவேகானந்தர் மணி மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து சுற்றுலா பேருந்து இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குளச்சல் போக்குவரத்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
- போலீசார் திங்கள்நகர் பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
இரணியல்:
குளச்சல் டி.எஸ்.பி. தங்க ராமன் உத்தரவுபடி போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் மற்றும் போலீசார் திங்கள்நகர் பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் பட்டரிவிளை வழியாக வெள்ளிச்சந்தை வழித்தடத்தில் இயக்கப்பட்ட மினி பஸ்சினை நிறுத்த கூறினார். ஆனால் மினி பஸ் டிரைவர் வாகனத்தில் பிரேக் பிடிக்கவில்லை என்று கூறி நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் இரணியல் பகுதியில் மினி பஸ்சை மடக்கி பிடித்தார். அப்போது மினி பஸ்சை கல்லுக்கூட்டத்தை சேர்ந்த ஜெபின் (வயது 29) என்பவர் குடிபோதையில் இயக்கியது பிரீத் அனலைசர் கருவி மூலம் கண்டு பிடிக்கப்பட்டு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மினி பஸ்சை பறிமுதல் செய்து குளச்சல் போக்குவரத்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
இந்நிலையில் திங்கள்நகர் பேருந்து நிலையத்திலிருந்து யார் முதலில் புறப்பட்டு செல்வது என்பதில் மினி பஸ் ஓட்டுநர் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு பயணிகள் முகம் சுழிக்கும் வண்ணம் அவதூறாக வசைபாடி வருவது அடிக்கடி நடந்து வருகிறது. மேலும் திங்கள் நகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களும் குடித்து விட்டு பணிக்கு வந்து உள்ளனரா? என்று பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் புறக்காவல் நிலையம் அருகே உள்ள பாதை வழியாக மினி பஸ் வெளியே செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பரமத்திவேலூர் நோக்கி 15- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் சென்று கொண்டிருந்தது.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் அருகில் இருந்த கோரை புற்கள் குவியலாக முளைத்திருந்த வயலுக்குள் கவிழ்ந்தது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா பொன்மலர் பாளையத்திலிருந்து மினி பஸ் ஒன்று பரமத்திவேலூர் நோக்கி 15- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் சென்று கொண்டிருந்தது. மினி பஸ் கொந்தளம் அருகே உள்ள கருக்கம்பாளையத்தில் சென்றபோது எதிரே சைக்கிளில் வந்தவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் மினி பஸ்சை இடது புறமாக திருப்பினார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் அருகில் இருந்த கோரை புற்கள் குவியலாக முளைத்திருந்த வயலுக்குள் கவிழ்ந்தது. இதனால் உள்ளே இருந்த பள்ளி மாணவிகள் மற்றும் பெரியவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் அடியில் மாட்டிக் கொண்டு அலறினர். அவர்களது அலறல் கேட்டு அங்கு விவசாயம் நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து பஸ்சில் மாட்டிக் கொண்டவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் மினி பஸ் டிரைவர் சந்தோஷ், பாண்டமங்கலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் பொன்மலர்பாளையத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி (17), தேசிகா (15), உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் டிரைவர் சந்தோஷ், மாணவி ஸ்ரீமதி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பார்மசி பயிலும் கொந்தளத்தை சேர்ந்த மகிமா(21), லலிதா(42), சின்னத்தம்பி(21), கனகா(26), ஜோதி(26), அண்ணாமலை(32), மற்றும் நாகம்மாள் (21) ஆகியோர் லேசான காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்குவது என ஆர்.டி.ஓ-க்கள் முடிவு செய்யலாம்.
- பொதுமக்கள் ஜூலை 14ம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் சேவை இயக்கப்பட்டு வந்தாலும் குறுகிய தெருக்கள், ஊர்களுக்குள் பேருந்துகள் சேவை இல்லாத நிலை நீடித்தது. இதன் காரணமாக மக்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மினி பஸ்களுக்கான அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக 25 கி.மீ தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும். அனைத்து மினி பஸ்களிலும் GPS வசதி பொறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோளிங்கநல்லூர் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படும். அதே நேரத்தில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்குவது என ஆர்.டி.ஓ-க்கள் முடிவு செய்யலாம். இது தொடர்பாக பொதுமக்கள் ஜூலை 14ம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.